இன்றைய வர்த்தக உலகத்தில், ஏதாவது ஒரு காரணத்தை கூறி, அனைத்து மாதங்களிலும் மக்களை ஏதாவது ஒரு பொருளை வாங்கக் கவருவது, கடைகளின் நுட்பமாகும். தீபாவளி, மற்றும் பொங்கல் போன்ற பெரிய பண்டிகைகளுக்கு மட்டுமே துணிகளையும் மற்றும் இதர பொருட்களையும் மக்கள் வாங்கி வந்த நிலையில், இன்று ஏதாவது ஒரு சிறிய சாக்கு கிடைத்து விட்டால் போதும், உடனே தள்ளுபடியில் அள்ளிச் செல்லுங்கள் என்று கூவிக் கூவி கொப்பிடுவார்கள். மேலும் மக்களை கவர பல மதி மயங்க வைக்கும் விளம்பரங்களை செய்வார்கள்.
அது போன்று இன்று கோடை கால தள்ளுபடி (discount) , அக்ஷ்யதிரிதிகை தளுபடி, விநாயகர் சதுர்த்தி தள்ளுபடி, என்ற வரிசையில் ஆடித் தள்ளுபடி என்ற ஒன்றும் உள்ளது.
ஆடி (aadi) மாதம் நாம் எதற்கு துணிகளை வாங்க வேண்டும், எதற்கு தேவையற்ற வீட்டுப் பொருட்களை அவசியம் இல்லாமல் வாங்க வேண்டும் என்கின்ற சிந்தனை ஏதும் இல்லாமல் அனைவரும் கவர்சிகரமான தள்ளுபடிகளை பார்த்து, தேவை இருகின்றதோ இல்லையோ, பொருட்களை வாங்கி விட எண்ணுகின்றார்கள்.
நீங்கள் வாங்கும் பொருட்கள் உண்மையிலேயே தள்ளுபடி விலையில் தான் விற்கப்படுகின்றதா?
ஒரு கணம் சிந்தித்து பாருங்கள்!
உண்மை இதுதான்.
ஒரு உதாரணம் :
ஒரு கணம் நீங்கள் கடந்த முறை கடைக்கு சென்ற போது பார்த்த ஒரு புடவையின் விலை இன்று என்ன விலைக்கு தள்ளுபடியில் விற்கப் (sale) படுகின்றது என்று ஒப்பிட்டு பாருங்கள்.
சற்று யோசித்தால் உங்களுக்கு பதில் கிடைத்து விடும்.
ஏதாவது ஒரு காரணத்தை கூறி மக்களை கவர்ந்து தொழில் நடத்தி லாபம் பார்ப்பதே இத்தகைய பெரிய கடைகளின் நோக்கம்.
உதாரணத்திற்கு: ஒரு புடவையின் விலை சராசரி நாளில் Rs. 5௦௦/- என்றால், ஆடி மாத தள்ளுபடியில் அதன் விலையை Rs. 1௦௦௦/- என்று வைத்து, ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்று விற்ப்பார்கள். ஆக இரண்டு புடவைகளையும் நீங்கள் அதே பழைய விலைக்கே வாங்குகின்றீர்கள். இதில் உண்மையில் எந்த தள்ளுபடியும் இல்லை. உங்களது ஏமாளித்தனத்தை பயன் படுத்தி, கடைக்காரர் ஒரு புடவை விற்கும் இடத்தில் இரண்டு புடவைகளை விற்று விட்டார், லாபத்தை பார்த்து விட்டார்.
அது மட்டுமல்லாது, தள்ளுபடி விலை என்று கவர்ந்து, தரம் குறைந்த பொருட்களையும், அதிக விலைக்கு வியாபார யுக்தியோடு விற்கின்றனர்.
மேலும் நீங்கள் இப்படி தள்ளுபடியில் வாங்கும் (discount shopping)பொருட்களை, பார்த்து, தரமாக உள்ளதா என்று சரி பார்க்க உங்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படாது. மாறாக, நீங்கள் அதனை பணம் கொடுத்து வாங்கி விட்டால், அதனை திரும்ப கொடுக்கவும் முடியாது. வாங்கியது, வாங்கியது தான். ஒருவேளை, நீங்கள் வீட்டிற்கு சென்று பார்க்கும் போது அதில் ஏதாவது சேதம் இருந்தால், நீங்கள் மீண்டும் கடைகாரரிடம் கொடுத்து வேறு பொருளை மாற்றுக் கொள்ளவும் முடியாது. இந்த வகையிலும் கடைகாரருக்கே இரட்டிப்பு லாபம்.
இது மட்டுமல்லாது, மக்கள் எப்போதும் தள்ளுபடிக்கும், பரிசுகளுக்கும் மயங்கி பழகி விட்டனர். இந்த பலவீனத்தை பயன் படுத்தி வியாபார முதலைகள் சுலபமாக ஏமாற்றி உங்களிடம் இருந்து தரமற்ற பொருளை கொடுத்து அதிக பணத்தை கொள்ளை அடிக்கின்றனர். இதற்கு நீங்கள் முதல் காரனமாவீர்கள்.
இங்கே உங்களுக்காக சில குறிப்புகள்:
இந்த குறிப்புக்கள் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகின்றோம்!
பட ஆதாரம் - Pexels
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.