logo
ADVERTISEMENT
home / ஆரோக்கியம்
வாய் துர்நாற்றத்தில் இருந்து எப்படி விடுபடுவது? உங்களுக்காக சில பயனுள்ள குறிப்புகள்

வாய் துர்நாற்றத்தில் இருந்து எப்படி விடுபடுவது? உங்களுக்காக சில பயனுள்ள குறிப்புகள்

எவ்வளுதான் முயற்சிகள் எடுத்தாலும், பலரும் இன்று அவதிப்படுவது, வாய் துர்நாற்றம். நீங்கள் அழகாக ஆடை அணிந்து, அனைவரும் மதிக்கும் வகையில் நல்ல தோற்றத்தோடு இருந்தாலும், உங்கள் வாயில் இருந்து வரும் துர்நாற்றம், இவை அனைத்தையும், ஒரே நொடியில் பயனில்லாமல் செய்து விடுகின்றது.

வாய் துர்நாற்றம் ஒருவரது தன்னம்பிக்கையை பெரிதும் பாதிக்கின்றது. இதனால், அலுவலகத்திலும், பொது இடங்களிலும், அவர் தன்னம்பிக்கையோடு பேச மிகவும் அஞ்சுகிறார். இது அவரது உத்தியோகம் மற்றும் செல்வாக்கையும் பாதிக்கும்.

வாய் துர்நாற்றம் ஏற்பட பல காரணங்கள்(bad breath cause) இருக்கலாம். அது ஒருவர் எடுத்துக் கொள்ளும் உணவு வகைகள், வாழ்க்கை முறை, உடல் ஆரோக்கியம் என்று எந்த காரனத்தளும் (causes) உண்டாகலாம். எனினும், இந்த பிரச்சனைக்கு சரியான தீர்வை காணவில்லை என்றால், அது, உங்களுக்கு மனதளவில் பாதிப்புகளை உண்டாக்குவதோடு, உடலில் பிரச்சனைகளையும் உண்டாக்கலாம். மேலும், நீங்கள் ஒன்றை மறந்து விடக் கூடாது. இந்த வாய் துர்நாற்றம், உடலில் இருக்கும் வேறு ஏதாவது பிரச்சனையின் அறிகுறியாகவும் இருக்கலாம். அதனால், இதற்கு தக்க சிகிச்சை அல்லது வீட்டு வைத்தியம் எடுத்துக் கொண்டு விரைவாக குணப்படுத்துவது முக்கியம்.

உங்களுக்கு உதவ, இங்கே சில பயனுள்ள குறிப்புகள்(remedy). தொடர்ந்து படியுங்கள்!

ADVERTISEMENT

வாய் துர்நாற்றம் ஏற்பட காரணம்(Causes of Bad Breath)

Pixabay

  1. பெரும்பாலும், வாய் துர்நாற்றம், வாயில் இருந்தே உருவாகின்றது. மேலும், இது தவிர்த்து நீங்கள் எடுத்துக் கொள்ளும் உணவின் வகை, மது அருந்துதல், புகை பிடித்தல், வாயை சுத்தமாக வைத்துக் கொள்ளாமல் இருப்பது, ஈர்களில் பிரச்சனை, நீரழிவு நோய், வறண்ட வாய், தொண்டையில் தொற்று, நுரையீரலில் தொற்று, என்று பல காரணங்கள் உள்ளன.
  2. இது மட்டுமல்லாது, உங்கள் சிறுநீரகம் அல்லது கலீரல் அல்லது வயிற்றில் பிரச்சனை இருந்தாலும் வாய் துர்நாற்றம் உண்டாக வாய்ப்பு உள்ளது.
  3. நீங்கள் அதிகம் காரமான உணவு, பூண்டு மற்றும் வெங்காயம் அதிகம் சேர்க்கப்பட்ட உணவு, அசைவ உணவு, போன்றவற்றை எடுத்துக் கொண்டால், வாயில் துர்நாற்றம் உண்டாக வாய்ப்பு உள்ளது.
  4. மேலும் சாப்பிட்ட பின், வாயை சுத்தமாக கழுவ வேண்டும். அப்படி செய்யாவிட்டால், உணவு பற்களில் சிக்கிக் கொண்டு, சில நிமிடங்களில் வாயில் துர்நாற்றத்தை உண்டாக்கக் கூடும்.
  5. புகையிலை, மது, மற்றும் இது போன்ற பொருட்கள் வாய் துர்நாற்றத்தை அதிகம் உண்டாகும். இது ஈர்களை பாதிப்பதோடு, வாயில் புற்றுநோயையும் உண்டாக்கக் கூடும்.
  6. நீங்கள் சரியாக பல் துலக்கவில்லை என்றாலும், துர்நாற்றம் உண்டாகக் கூடும்.
  7. சைனஸ், நிமோனியா, வறண்ட தொண்டை, தண்டியில் புண், சளி, சுரம், டான்சில், அஜீரணம், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பிரச்சனை, போன்ற பாதிப்புகள் கூட வாயில் துர்நாற்றத்தை உண்டாக்கக் கூடும்.
  8. ஒரு சில மருந்துகள் கூட உங்களுக்கு வாயில் ஒவ்வாமையை உண்டாக்கி, துர்நாற்றத்தை உண்டாக்கக் கூடும்.
  9. ஈர்களில் பிரச்சனை மற்றும் துவாரங்களில் பிரச்சனை இருந்தாலும், துர்நாற்றம் உண்டாகலாம்.
  10. காலை எழுந்தவுடன், வாயில் நாற்றம் உண்டாது இயல்பே. இது குறிப்பாக, தூங்கும் போது வாயில் உமிழ் நீர் சுரப்பதில்லை, இதனால் வாயில் பக்டீரியா உருவாகி, காலையில் துர்நாற்றத்தை உண்டாக்குகின்றது.
  11. இதுமட்டுமல்லாது, வைட்டமின் மற்றும் தாது சத்துக்கள் குறைபாடுகளும், துர்நாற்றத்தை வாயில் உண்டாக்கக் கூடும்.
  12. செரிமானம் சரியாக நடக்காமல், இதன் காரணமாக வாந்தி, புளித்த ஏப்பம் போன்றவை ஏற்பட்டாலும், வாயில் துர்நாற்றம் உண்டாகலாம்.
  13. சளி மற்றும் சுவாச பிரச்சனை இருப்பவர்களுக்கு, துர்நாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
  14. நுரையீரலில் வீக்கம் அல்லது சுவாச குழாயில் பிரச்சனை எதாவது ஏற்பட்டாலும், துர்நாற்றம் உண்டாகலாம்.

ADVERTISEMENT

வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கான அறிகுறிகள்(Signs and Symptoms of bad breath)

வாயில் துர்நாற்றம் ஏற்பட பல காரணங்கள் இருந்தாலும், அதன் அறிகுறிகளை நீங்கள் தெரிந்து கொள்வதும் அவசியம். இதனால், சரியான நேரத்தில், இந்த பிரச்சனை மேலும் அதிகரிக்காமல், உடனடியாக இதற்காண தீர்வை காணலாம். உங்களுக்கு உதவ, இங்கே சில அறிகுறிகள்;

  • துர்நாற்றத்தின் காரணத்திற்கு ஏற்றவார துர்நாற்றம் வேறுபாடும்
  • பல தருணங்களில் பிறருடன் நீங்கள் பேசிக்கொண்டிருக்கும் போது அவர்களுக்கு உங்கள் வாயில் இருந்து துர்நாற்றம் வீசும். இதனால் அவர்கள் உங்கள் அருகில் இருந்து பேச சற்று தயக்கம் காட்டுவார்கள்
  • அனேக நேரங்களில், நீங்களே உங்கள் வாயில் இருந்து வரும் நாற்றத்தை அறிந்து கொள்ளலாம்
  • உங்கள் நாவில் எந்த உணவை சுவைத்தாலும், அதன் சுவை முழுமையாக தெரியாது
  • வாய் அதிகம் வறண்டு போகும்
  • நாக்கில் ஏதோ இருப்பது போலத் உணர்வு இருக்கும்
  • பற்கள் பலமிழந்து காணப்படும்
  • ஈர்கள் பலமிழந்து காணப்படும்

எப்போது மருத்துவரை அணுக வேண்டும்? (When to see the dentist)

Pixabay

ADVERTISEMENT

பல சமயங்களில் நீங்கள் வாய் துர்நாற்றத்தை வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே குணப்படுத்தி விடலாம். ஆனால், அது அதிகமாகும் போது, உங்களுக்கு நிச்சயம் மருத்துவ உதவி தேவைப்படும். நீங்கள் எப்போது மருத்துவரை அணுக வேண்டும் என்பதற்கு, சில ஆலோசனைகள் இங்கே:

  • பல முயற்சிகளுக்கு பிறகும் வாயில் துர்நாற்றம் நிற்கவில்லை என்றால், மருத்துவரை அணுக வேண்டும்
  • வாய் அதிகம் வறண்டு போனால் மருத்துவரை அணுக வேண்டும்
  • வாயில் வலி, வீக்கம், மற்றும் உணவை மெல்லும் போது வாயில் வலி ஏற்பட்டால் மருத்துவரை அணுக வேண்டும்
  • நாக்கில் அதிகம் வெள்ளை படிவம் தோன்றினால் மருத்துவரை அணுக வேண்டும்
  • சுரம் அல்லது மயக்கம் ஏற்பட்டால், மருத்துவரை அணுக வேண்டும்

துர்நாற்றத்தை போக்க செய்ய வேண்டிய குறிப்புகள்(Things to do to Stop bad breath)

வாயில் துர்நாற்றம் ஏற்பட்டால் அதனை போக்க நீங்கள் சில முயற்சிகளை எடுக்க வேண்டும். இது பலருக்கும் உடனடி தீர்வாக அமையும். மேலும், இந்த முயற்சிகளை நீங்கள் தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் போது, நல்ல, நிரந்திர பலனை பெறுவீர்கள். உங்களுக்கு உதவ, இங்கே சில குறிப்புகள். இவை நிச்சயம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்;

1. பல் துலக்குவது

 பற்களை நீங்கள் தினமும் துலக்கவில்லை என்றால், வாயில் பக்டீரியா உருவாகி, வாய் துர்நாற்றத்தை உண்டாக்கக் கூடும். பல் துலக்கும் போது வர்களுக்கு இடையே ஒட்டிக் கொண்டிருக்கும் உணவு பொருட்கள் வெளியே சென்று விடும். இதனால், வாய் துர்நாற்றத்தை தவிர்க்கலாம். மேலும், ஒரு நாளைக்கு காலை மற்றும் இரவு படுக்க செல்லும் முன், என்று இரு வேளை பல் துலக்க வேண்டும்.

ADVERTISEMENT

2. வாயை கொப்பளிக்கவும்

Pixabay

பற்களை துலக்கினால் மட்டும் போதாது, நீங்கள் உங்கள் வாயில் பக்டீரியா அதிகம் தோன்றாமல் இருக்க, அவ்வப்போது வாயை கொப்பளித்துக் கொண்டே இருக்க வேண்டும். குறிப்பாக உணவு உண்ட பின், பழச்சாறு, தேநீர், காபி அல்லது வேறு பானங்கள் அருந்திய பிறகு, என்று அவ்வப்போது வாயை கொப்பளித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

3. நாக்கை சுரண்டி விடவும்

தினமும் பல் துலக்கியதும், இதற்கென்று இருக்கும் கருவியை பயன் படுத்தி, நாக்கை சுரண்டி விடவும். இது நாக்கில் வெள்ளைப் படிவம் சேராமலும், வேறு பக்டீரியா ஒட்டிக் கொண்டிருந்தாள், அதனை அகற்றவும் உதவும். மேலும் நாக்கில் ஏதாவது இறந்த அணுக்கள் இருந்தால், அதனை அகற்றவும் உதவும். இப்படி செய்வதால், உங்கள் வாய் எப்போதும் சுத்தமாக இருக்கும். மேலும் துர்நாற்றமும் குறையும்.

ADVERTISEMENT

4. புகையிலை பொருட்களை தவிர்க்கவும்

புகையிலை பொருட்கள் மற்றும் புகை பிடித்தல் போன்ற பழக்கங்களை முற்றிலுமாக நிறுத்தி விடுவது வாய் துர்நாற்றத்தை தவிர்க்க உதவுவதோடு மட்டுமல்லாது, வாயில் புற்றுநோய் வராமலும் தடுக்க உதவும். அதனால், புகையிலை பொருட்களை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.

5. சுவாசத்தை பாதிக்கும் உணவை தவிர்க்கவும்

Pixabay

சில உணவுகள், குறிப்பாக பூண்டு, வெங்காயம், போன்ற உணவு பொருட்கள், உங்கள் சுவாசத்தை பெரிதும் பாதிக்கக் கூடும். இவை அதிக துர்நாற்றத்தை உண்டாக்கும். பூண்டு, வெங்காயம் போன்ற பொருட்கள் உடலுக்கு நல்லது என்றாலும், அதனை சரியான முறையில் சமைத்து உண்ண வேண்டும். அப்படி செய்தால், துர்நாற்றம் ஏற்படாது.

ADVERTISEMENT

6. ஈர்களை பலமாக வைத்துக் கொள்ளுங்கள்

வாய் துர்நாற்றத்திற்கு ஈர்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. உங்கள் பற்களிலும், ஈர்களிலும் பக்டீரியா அதிகம் தோன்றினால், வாய் துர்நாற்றம் அதிகம் ஏற்படும். மேலும் இது ஈர்களில் நோயையும் உண்டாக்கும். அதனால் எப்போதும் ஈர்களை நல்ல பலத்தோடும், ஆரோக்கியத்தோடும் வைத்துக் கொள்ள வேண்டும்.

7. வாயை எப்போதும் ஈரத்தன்மையோடு வைத்துக் கொள்ள வேண்டும்

முடிந்த வரை வாய் வறண்டு போகாமல் பார்த்துக் கொள்வது நல்லது. இதற்கு நீங்கள் அதிகம் தண்ணீர் அருந்த வேண்டும். மேலும், அவ்வப்போது, ஒரு வாய் தண்ணீராவது அருந்தி, வாயை ஈரத்தன்மையோடு வைத்துக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும். இது துர்நாற்றத்தை பெரிதும் குறைக்க உதவும்.

8. சுவிங் கம்

Pixabay

ADVERTISEMENT

சர்க்கரை இல்லாத மற்றும் உடலுக்கு உபாதை உண்டாக்காத சுவிங் கம்மை அவ்வப்போது மென்று கொண்டே இருங்கள். இது உங்கள் ஈர்களுக்கும், பற்களுக்கும் வேலை தருவதோடு, வாய் துர்நாற்றத்தை குறைக்கவும் உதவும். மேலும் இது உங்கள் முக தசைகளுக்கு வேலை கொடுப்பதால், முகமும் இளமையான தோற்றம் பெரும்.

9. வறண்ட வாயை தவிர்க்கவும்

எப்போதும் உங்கள் வாய் ஈரத்தன்மையோடு இருக்க வேண்டும். இதற்கு நீங்கள் அதிகம் தண்ணீர் குடிப்பதோடு, உங்கள் வாயில் உமிழ் நீர் போதுமான அளவு சுரக்கின்றதா என்றும் பார்க்க வேண்டும். எனினும், தேநீர் மற்றும் காபியை வாயில் ஈரத்தன்மை உண்டாக்க அருந்துவதை தவிர்ப்பது நல்லது.

10. உணவு பழக்கத்தில் மாற்றங்களை உண்டாக்குங்கள்

நீங்கள் உண்ணும் உணவு வாய் துர்நாற்றத்திற்கு ஒரு முக்கிய காரணமாக அமைகின்றது. அதனால், உங்கள் உணவு பழக்கத்தை மாற்ற வேண்டியது அவசியம். மேலும் பலர் இன்று ஐ டி நிறுவனங்களில் வலை பார்ப்பதால், இரவு நேரங்களில் அதிகம் வேலை பார்க்க வேண்டிய சூழல் உண்டாகின்றது. இதனால் சரியான நேரத்திற்கு உணவை எடுத்துக் கொள்ள முடியாமல் போகலாம். இதுவும் வாய் துர்நாற்றம் ஏற்பட ஒரு முக்கிய காரணமாக உள்ளது. அதனால், சரியான நேரத்தில் உணவை எடுத்துக் கொண்டு, சரியான உணவு பழக்கத்தை கடைபிடிப்பது நல்லது.

11. தக்க இடைவேளையில் உங்கள் பல் துலக்கும் தூரிகையை மாற்ற வேண்டும்

ADVERTISEMENT

Pixabay

சில பல மாதங்கள் ஒரே தூரிகையை பல் துலக்க பயன்படுத்துவார்கள். இது ஆரோக்கியம் இல்லை. மேலும் வாய் துர்நாற்றம் ஏற்பட இதுவும் ஒரு முக்கிய காரணமாக ஆகலாம். அதனால், முடிந்த வரை சரியான கால இடைவேளையில், தூரிகையை மாற்றி விடுவது நல்லது.

12. மருத்துவ பரிசோதனை

தக்க இடைவேளையில் பற்களை பரிசோதனை செய்து கொள்வது நல்லது. ஆண்டுக்கு இரண்டு முறையாவது பற்களை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அப்படி செய்யும் போது, ஏதாவது பிரச்சனை இருந்தால், அதனை உடனடியாக குணப்படுத்தி, வாயை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளாம். மேலும் இது துர்நாற்றம் ஏற்படாமலும் தடுக்க உதவும்.

ADVERTISEMENT

வாய் துர்நாற்றத்தை போக்க எளிய குறிப்புகள்(Quick tips to stop bad breath)

  • நீங்கள் வாய் துர்நாற்றத்தில் இருந்து உடனடி தீர்வு பெற விரும்பினால், உங்களுக்காக இங்கே சில எளிய குறிப்புகள்:
  • நீங்கள் செயற்கை பற்களை அணிந்திருந்தாள், இரவில் தூங்க போகும் முன் அதனை கழற்றி வைத்து விடுவது நல்லது
  • உணவு உண்ட பின் அல்லது இரவு பால் போன்ற பானங்கள் அருந்திய பின், உடனடியாக வாய் கொப்பளித்து சுத்தம் செய்து விட வேண்டும்
  • அதிக அளவு தண்ணீர் அருந்த வேண்டும். முடிந்த வரை அதிகம் சுடு தண்ணீர் அருந்தலாம்.
  • ஒரு நாளைக்கு காலை மற்றும் இரவு தூங்க செல்லும் முன் பற்களை துலக்க வேண்டும்
  • இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை புது தூரிகையை மாற்ற வேண்டும்
  • சரியான கால இடைவெளியில் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்
  • நாக்கில் இருக்கும் வெள்ளைப் படிவத்தை சுரண்டி விட வேண்டும்
  • கிராம்பு, சோம்பு அல்லது சீரகம், எதையாவது ஒன்றை சிறிதளவு எடுத்துக் கொண்டு நன்கு பற்களால் மெல்ல வேண்டும். இது வாயில் இருக்கும் பக்டீரியாவை போக்கி விடும்
  • சிறிது எலுமிச்சை பழத் துண்டு அல்லது கமலாப்பழ தோல், எதையாவது ஒன்றை வாயில் போட்டு மெல்ல வேண்டும். இது நல்ல மனத்தை தரும், துர்நாற்றத்தை போக்கி விடும்
  • புதினா, துளசி, கற்பூரவள்ளி போன்ற மனம் தரக்கூடிய இலைகளை அவ்வப்போது வாயில் போட்டு மெல்ல வேண்டும். இது துர்நாற்றத்தை போக்கி புத்துணர்ச்சியைத் தரும்
  • சுடு தண்ணீரில் சிறிது கல் உப்பு சேர்த்து வாயை நன்கு கொப்பளிக்க வேண்டும். இது நல்ல தீர்வைக் கொடுக்கும்

வாய் துர்நாற்றத்தை போக்க இயற்கை முறைகள்(Natural remedies for bad breath)

நீங்கள் எளிதான முறையில் வாய் துர்நாற்றத்தை போக்க விரும்பினால், உங்களுக்காக சில எளிதான, மற்றும் இயற்கையாக கிடைக்கும் பொருட்களை கொண்டு செய்ய சில குறிப்புகள்.

1. எண்ணை இழுத்தல் (ஆயில் புல்லிங்)

இது மிகவும் பிரபலமான ஒரு முறை. இதை பல ஆண்டு காலமாக மக்கள் செய்து வருகின்றனர். இந்த முறை வாயில் இருக்கும் துர்நாற்றத்தை போக்குவதோடு, பற்களை பலமாக்கவும், ஈர்களை பலமாக்கவும், மற்றும் உடல் உறுப்புகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் உதவுகின்றது. இதற்கு நல்லெண்ணெய் பெரும்பாலும் பயன் படுத்தப் படுகின்றது. காலையில் அல்லது இரவு தூங்க செல்வதற்கு முன், சிறிதளவு நல்லெண்ணெய் எடுத்து வாயில் ஊற்றி, நன்கு சிறிது நிமிடம் வாயை கொப்பளிக்க வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் நீங்கள் நல்ல மாற்றத்தை காண்பீர்கள்.

2. வாயை சுத்தமாக வைத்துக் கொள்வது

ஒரு நாளைக்கு இரண்டு முறை பற்களை துலக்கினால் மட்டும் போதாது. நீங்கள் குறைந்தது 6 மாதங்களுக்கு ஒரு முறையாவது மருத்துவ பரிசோதனை செய்து, வாய் மற்றும் பற்கள் ஆரோக்கியமாக உள்ளதா என்று உறுதி படுத்திக் கொள்ள வேண்டும். உங்கள் வாயை அசுத்தம் செய்யும் பழக்கங்களை தவிர்ப்பது நல்லது. குறிப்பாக புகையிலை பொருட்கள் பயன்படுத்துவது மற்றும் மது அருந்துவது போன்ற பழக்கங்களை தவிர்ப்பது நல்லது.

ADVERTISEMENT

3. சிட்ரஸ் பழங்களை அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள்

Pixabay

உங்கள் வாயை எப்போதும் ஈரத்தனமையோடு வைத்துக் கொள்வது முக்கியம். இதற்கு நீங்கள் அதிகம் தண்ணீர் அருந்துவதோடு, சிட்ரஸ் பழச்சாறுகளை அதிகம் அருந்துவதும் அவசியம். குறிப்பாக எழுமிச்சைபழ சாறு மற்றும் கமலாப் பழச்சாறு போன்றவை உங்களுக்கு வாய் துர்நாற்றத்தை போக்க உதவும்.

4. அதிகம் தயிர் எடுத்துக் கொள்ளுங்கள்

தினமும் சிறிதளவு தயிர் எடுத்துக் கொள்வதால், வாய் துர்நாற்றத்தை போக்கலாம். தயிர் ஹைட்ரஜென் சல்பைடு அளவை குறைக்க உதவுகின்றது. இதனால் துர்நாற்றம் பெரிய அளவு குறைக்கப்படுகின்றது.

ADVERTISEMENT

5. சோம்பு

சோம்பில் அண்டி பக்டீரியா தன்மை உள்ளது. அதனால், இது வாயில் பக்டீரியா உற்பத்தி ஆவதை தடுகின்றது. சோம்பை பச்சையாக மென்று உண்ணலாம், அல்லது சோம்பு தேநீர் செய்து அருந்தலாம். இது வாயில் உமிழ் நீர் உற்பத்தியையும் அதிகரிக்க உதவும்.

6. பட்டை

Pixabay

பட்டை மற்றுமொரு நல்ல பொருள். இதனை பொடி செய்து, ஏலக்காய் மற்றும் பிரிஞ்சு இலை ஆகியவற்றுடன் சேர்த்து சுடு தண்ணீரில் கொதிக்க விட்டு, பின் மிதமான சூட்டிற்கு தண்ணீர் வந்தவுடன், வாயை நன்கு இந்த நீரை பயன்படுத்தி கொப்பளிக்க வேண்டும். இது வாயில் இருக்கும் பக்டீரியாவை கொன்று, உடனடி தீர்வு தரும்.

ADVERTISEMENT

7. கிராம்பு

இதில் அண்டி பக்டீரியா குணங்கள் அதிகம் உள்ளது. இதை பச்சையாக நன்கு பற்களால் மென்று முழுங்கலாம் அலல்து தேனீர் போன்று செய்து அருந்தலாம். இது வாய் துர்நாற்றத்தை போக்க ஒரு நல்ல தீர்வாக இருக்கும்.

8. பார்ஸ்லி (கொத்தமல்லி வகை)

இதில் அதிகம் க்லோரோபில் உள்ளது. இதை நீங்கள் பச்சையாக நன்கு மென்று விழுங்கலாம், அல்லது சிறிது வினிகரில் நனைத்து பின் மெல்லலாம். அல்லது இதன் சாறை எடுத்து குடித்து விடலாம். இது நல்ல ஜீரனதிற்கும் உதவும்.

9. உப்பு தண்ணீர்

Pixabay

ADVERTISEMENT

இது மற்றுமொரு எளிய மற்றும் பயனுள்ள தீர்வு. சிறிது சுடு தண்ணீரில் கல் உப்பை சேர்த்து, நன்கு கலந்து, வாயை நன்கு கொப்பளிக்க வேண்டும். இது உங்களுக்கு நல்ல மற்றும் உடனடி தீர்வைத் தரும் என்பதில் சந்தேகம் வேண்டாம். நீங்கள் இதனை தொடர்ந்து செய்து கொண்டு வந்தால், நல்ல பலனைப் பெறுவீர்கள்.

10. செரிமான நொதிகள்

வாய் துர்நாற்றம் சரியான உணவு செரிமானம் ஆகவில்லை என்றாலும் ஏற்படலாம். அதனால் நீங்கள் ஜீரணத்தை சரி செய்ய வேண்டும். இதற்கு நீங்கள் செரிமான நொதிகளை பயன்படுத்தலாம். செரிமான நொதிகள் பல வகைகளில் கிடைக்கும். அவற்றில் உங்களுக்கு ஏற்ற ஒன்றை தேர்வு செய்து பயன்படுத்தலாம்.

11. கிரீன் டீ

இதில் அண்டி பக்டீரியா மற்றும் மனம் நீக்கும் தன்மை உள்ளதால், வாய் துர்நாற்றத்தை போக்க பெரிதும் உதவியாக உள்ளது. மேலும் இதில் ஆக்சிஜனேற்றம் அதிகமாக உள்ளது. இதுவும் உங்களுக்கு புத்துணர்ச்சியைத் தர ஒரு முக்கிய காரணமாக உள்ளது.

12. சோற்று கற்றாளை

ADVERTISEMENT

Pixabay

இதில் பூஞ்சை மற்றும் பக்டீரியா எதிர்ப்பு சக்திகள் அதிகம் உள்ளது. இதனை நீங்கள் சரியான முறையில் பயன்படுத்தும் போது, வாய் துர்நாற்றம் பெரும் அளவு குறையும். கடைகளில் கற்றாளை மவுத் வாஷ் என்று கேட்டால் கிடைக்கும். இது உங்களுக்கு உடனடி தீரு பெற உதவும்.

13. அத்தியாவசிய எண்ணை

இது அனைத்து தாது பொருட்கள் கொண்ட எண்ணையை குறிக்கும். இந்த எண்ணையை பயன்படுத்தி நீங்கள் வாயை கொப்பளித்து வந்தால், வை துர்நாற்றத்தை பெரும் அளவு குறைக்க உதவும். இதற்கு நீங்கள் நல்லெண்ணெய், தேங்காய் எண்ணை போன்ற எண்ணைகளை பயன்படுத்தலாம். மின்ட் எண்ணை, கிராம்பு எண்ணை, ஆரஞ்சு எண்ணை, யுகலிப்டஸ் எண்ணை மற்றும் லெமன் கிராஸ் எண்ணை ஆகிய எண்ணைகளையும் பயன்படுத்தலாம்.

14. ஈரத்தன்மையோடு வைத்துக் கொள்ளவும்

அவ்வப்போது தண்ணீர் குடிக்க, வேண்டும். வாயில் உமிழ் நீர் நன்கு சுரப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். அப்படி சுரக்கவில்லை என்றால், மருத்துவரை அணுகி, சரியான சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

ADVERTISEMENT

பிற தீர்வுகள்(Other remedies)

Pixabay

வாய் துரனாற்றத்தை போக்க மேலே கொடுக்கப்பட்ட குறிப்புகள் மட்டுமல்லாது, மேலும் பல விடயங்களை நீங்கள் பின்பற்ற வேண்டும். அப்படி செய்தால், நீங்கள் நல்ல மற்றும் நிரந்திர பலனைப் பெறலாம். உங்களுக்காக, இங்கே அவை:

ADVERTISEMENT

1. நல்ல தூக்கம்: இன்றைய அவசர வாழ்க்கை முறையில், பலர் சரியாக தூங்குவதில்லை. பலர் இரவு நேரங்களில் அலுவலகம் செல்கின்றனர். இதனால், பகலிலும், சரியான தூக்கம் கிடைபதில்லை. இது உணவு பழக்கங்களையும் மாற்றி விடுகின்றது. அதனால், முடிந்த வரை போதுமான மற்றும் சரியான நேரதிர்ல் தூங்குவது என்று உங்களை நீங்கள் முறை படுத்திக் கொள்ள வேண்டும். இது வாய் துர்நாற்றத்தை போக்க பெரிதும் உதவியாக இருக்கும்.

2. மன அழுத்தத்தை குறைக்க வேண்டும்: மன அழுத்தம் உண்டானால், வாய் துர்நாற்றம் ஏற்பட வாய்புகள் உள்ளன. வாய் துர்நாற்றம் உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து இருப்பதையும் குறிக்கும். மேலும் சில உறுப்புக்கள் சரியாக வேலை செய்யவில்லை என்பதையும் உணர்த்தும். இதற்கு முக்கிய காரணாம் மன அழுத்தம் மற்றும் மன உளைச்சல் தான். அதிக மன அழுத்தத்துடன் இருப்பவருக்கு அதிக வியர்வை உண்டாகும்,. அது போல, வாய் துர்நாற்றமும் உண்டாகும். அதனால், மன அழுத்தத்தை குறைத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்

3. பிராண வாய்வு: அதிக பிராண வாயுவை உள் எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக மொக்கு நாசில் வழியாக மூச்சை உள் எடுக்க வேண்டும். வாய் வழியாக நீங்கள் சுவாசிக்கக் கூடாது. இது வறண்ட காற்றை உங்கள் வாய், சுவாச குழாய் போன்றவற்றிகுள் அனுப்பும், அதனால் வாய் விரைவாக வரண்டு, வாய் துர்நாற்றம் உண்டாகலாம். மேலும் தேவையற்ற பக்டீரியா மற்றும் தூசிகளும் உங்கள் வாய் மற்றும் சுவாச குழாயில் படிய நேரிடலாம். இது ஆரோக்கியம் இல்லை. சுத்தமான பிராண வாயுவை மூக்கின் வழியாக உள் எடுக்க வேண்டும்.

4. சுவாச பயிற்சி: அனைவரும் சில நிமிடங்களாவது சுவாச பயிற்சி செய்ய வேண்டும். இதை செய்யும் போது, சுத்தமான காற்று உடலின் உள் சுழற்சி ஆகின்றது. இது அணுக்களுக்கு உயிரோட்டத்தைத் தருகின்றது. அதனால் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாகின்றது. பக்டீரியா வாயில் படிவதும் தடுக்கப்படுகின்றது. இதனால் வாய் துர்நாற்றம் குறைகின்றது.

ADVERTISEMENT

 

கேள்வி பதில்கள்(FAQ)

1. வாய் துர்நாற்றத்தை போக்க ஒரு சிறந்த தீர்வு என்ன?
ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் துலக்குவது சிறந்த வழியாகும். குறிப்பாக, உணவு உண்ட பின் மற்றும் இரவு தூங்க செல்லும் முன் பல் துலக்க வேண்டும். இது பக்டீரியா உருவாவதை தடுத்து, உங்கள் வாய் மற்றும் பற்கள் ஆரோக்கியத்தோடு இருக்க உதவும். மேலும் உணவு பொருட்கள் பல் இடுக்குகளில் சிக்காமல் அகற்றி விடவும் உதவும்.

2. பல் துலக்கினாலும் வாய் துர்நாற்றத்தை உண்டாக்குவது எது?
பலருக்கும் இந்த கேள்வி எழும். முறையாக மற்றும் ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் துலக்கினாலும், வாயில் துர்நாற்றம் ஏற்படும். இதற்கு வாயில் பற்களுக்கு இடையே பக்டீரியா இருப்பது தான். மேலும் ஈர்களில் ஏதாவது நோய் ஏற்பட்டிருக்கலாம். அதனால, இவ்விரண்டையும் சரி செய்ய முயற்சி செய்ய வேண்டும்.

ADVERTISEMENT

3. வாய் துர்நாற்றத்தை குணப்படுத்த முடியுமா?
நிச்சயம் முடியும். ஆனால் அதற்கான மூல காரணத்தை கண்டறிய வேண்டும். அப்போது தான் சரியான சிகிச்சை கொடுத்து, நிரந்தர தீர்வு காண முடியும்.

4. பேகிங் சோடா வாய் துர்நாற்றத்தை போக்க உதவுமா?
பேகிங் சோடா அல்லது சோடியம் பிகார்போநேட் வாயில் இருக்கும் பக்டீரியாவை திடமுடன் கொள்ள உதவும். அதனால் நீங்கள் பயன்படுத்தும் பற்பசையில் பேகிங் சோடா உள்ளதா என்று பார்த்து வாங்கி பயன் படுத்தலாம். இது நல்ல பலனைத் தரும்.

5. காலையில் எப்படி வாய் துர்நாற்றத்தை போக்குவது?
உங்கள் வாயை சுத்தமாக வைத்துக் கொள்வது மிக முக்கியம். காலையில் வாய் துர்நாற்றத்தை போக்க வேண்டும் என்றால், நீங்கள் இரவில் படுக்க செல்லும் முன் பற்களை துலக்க வேண்டும். இதனால், வாயில் அதிக பக்டீரியா நீங்கள் தூங்கும் போது உண்டாகும் வாய்ப்பு குறையும். மேலும் நாக்கில் படிந்திருக்கும் வெள்ளை படிவத்தை அகற்ற வேண்டும். இப்படி செய்தால், காலையில் வாய் துர்நாற்றம் பெரும் அளவு குறையும்.

6. மன அழுத்தம் வாய் துர்நாற்றத்தை உண்டாக்குமா?
நீங்கள் சரியான உணவை எடுத்துக் கொள்ளவில்லை என்றால், வயிற்றில் அமிலம் உண்டாகி வாயி துர்நாற்றத்தை உண்டாக்கக் கூடும். அது போல, மன அழுத்தம் ஏற்பட்டால், வாய் வறண்டு போகும். இதனால் வயிற்றில் அதிக அமிலம் உண்டாகும். இது மேலும் வாய் துர்நாற்றத்தை அதிகப்படுத்தும். அதனால் மன அழுத்தத்தை குறைக்க முயற்சி செய்ய வேண்டும்.

ADVERTISEMENT

பட ஆதாரம்  – Pixabay

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன் பெறுங்கள். விழாக்கால கொண்டாடத்திற்காக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshop ல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்! 

19 Sep 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT