கர்ப்ப காலத்தில் அணிய வேண்டிய கலக்கலான உடைகள் மற்றும் அதற்கான கடைகள் !

கர்ப்ப காலத்தில் அணிய வேண்டிய கலக்கலான உடைகள் மற்றும் அதற்கான கடைகள் !

தாய்மை அடைவது என்பது மனிதர்களை பொறுத்தமட்டிலும் மிக சாதாரணமான விஷயம் இல்லை. பல்வேறு பொறுப்புகளை சுமக்கும் பெண்கள் குழந்தையை சுமக்க நேரும்போது நிறைய தடைகள் மற்றும் அசௌகரியங்களை அவர்கள் சந்திக்க நேரிடும்.


வேலைக்கு செல்லும் பெண்கள் கார்பரேட்களில் உயர்பதவியில் இருக்கும் பெண்கள் என பலரும் வெளியே செல்லும் அத்யாவசிய பணியில் இருக்கலாம். அவர்களுக்கு தங்கள் வயிறு பெரிதாக இருப்பதால் எந்த உடை அணிந்தாலும் அவஸ்தையாக இருக்கும். கிறிஸ்துமஸ் தாத்தாவின் பாண்ட் போல ஒரு உடையை மாட்டி கொள்ள நேரிடும். அல்லது வயிற்றின் சுற்றளவு காரணமாக கணுக்கால்களை மேல் போன புடவை மற்றும் சுடிதார்களை அணிந்து கொண்டு இருக்க வேண்டி வரும்.


உடைகள் பற்றிய கவலைகள் விடுங்கள். உங்கள் தாய்மை பூரிப்பை கொண்டாடுங்கள். அதே சமயம் கர்ப்ப காலத்தில் என்ன உடை அணியலாம் என்பதில் உங்களுக்கு ஐடியா இல்லாமல் இருந்தால் நல்ல நாகரிக தேடல்கள் உங்களுக்கு இருந்தால்இந்த இடம் அதற்கானதுதான். (Pregnancy outfits)


ஸ்ட்ராப்லெஸ் மாக்சி 


நீங்கள் புகைப்படத்திற்கு தயாராகும் சமயம் மற்றும் பார்ட்டி சமயங்களில் இந்த வகை உடைகளை தேர்ந்தெடுங்கள். உங்கள் வயிற்றின் மீதான கவனம் சிதறி உங்கள் தோள்கள் மற்றும் ஸ்டராப்லெஸ் உடையின் ஸ்டைலில் மற்றவர்கள் பார்வை பதியும்.ருபாய் 629ல் இருந்து கிடைக்கிறது. இதனை இங்கே வாங்கவும்.


 


நூடில் ஸ்ட்ராப் உடை Noodle Strap Dress


உங்களுக்கு பிடித்தமான உடைகளை நீங்கள் அணிய முடியாமல் போய் விட்டதே என்று வருத்தமா.. இதற்காகவே நீங்கள் நூடில் ஸ்ட்ராப் உடையை தேர்ந்தெடுக்கலாம். அடர்நிறங்களில் தேர்ந்தேடுப்பதும் பூக்கள் வடிவம் இருப்பதும் மேலும் உங்கள் தாய்மையை அழகாக காட்டும்.இதன் விலை 549ல் இருந்து ஆரம்பிக்கிறது. இதனை இங்கே வாங்கவும்.


ஷார்ட் டாப்ஸ்


நீங்கள் தாய்மை அடைந்தாலும் க்யூட் ஆகவும் சிக்கெனவும் உங்களை அடையாளப்படுத்த விரும்புகிறீர்களா அப்போது உங்களுக்கு அவசியமான உடை இந்த ஷார்ட் மற்றும் லாங் டாப்ஸ்கள். ஸ்ட்ரெச்சபிள் மெட்டிரியல் இருப்பின் இன்னமும் நல்லது. இந்த வகை டாப்ஸ் மட்டும் அணிந்து கால்களில் உடைக்கு நேர்மாறான ஷூக்களை அணிந்தீர்கள் என்றால் நீங்கள் தாய்மை அடைந்தவர் என்பதே யாருக்கும் தெரியாது.இதன் விலை 1395ல் இருந்து ஆரம்பிக்கிறது. இதனை இங்கே வாங்கவும்.சாதாரண மிடி மற்றும் ஒரு ஓவர்கோட்


கர்ப்பமடைந்திருக்கும் காலத்தில் மிடியை எப்படி அணிவது என்பது பலரின் கேள்வியாக இருக்கும். அதனால்தான் அதனை ஒரு ஓவர்கோட் உடன் போடும்போது உங்கள் வயிறு பெரிதாக தெரியாது என்கிறோம். கவனித்திருப்பீர்கள் நிறைய நடிகர்கள் தங்கள் தொப்பையை மறைக்க ஓவர்கோட் அணிந்திருப்பார்கள். இதே ரகசியம்தான் உங்களுக்கும் பொருந்தும்.இதன் விலை 699ல் இருந்து ஆரம்பிக்கிறது. இதனை இங்கே வாங்கவும்.


கிமினோ - ஷார்ட் ஜீன்


கடற்கரையில் சென்று காலாற நடக்க நினைக்கிறீர்கள் அல்லது உங்கள் நண்பர்களுடன் ஒரு மாலையை கழிக்க விரும்புகிறீர்கள் என்றால் இந்த கிமினோ ஒரு சிறந்த தேர்வு. தொளதொளப்பான கிமினோவுடன் அதனுடன் ஷார்ட் ஜீன் இணையும்போது பியூஷன் பாஷனில் உங்கள் தாய்மை தன்மை கொஞ்சம் மறைந்து உங்கள் பேரழகு ஜொலிக்கும்.இதன் விலை 399ல் இருந்து ஆரம்பிக்கிறது. இதனை இங்கே வாங்கவும்


பொஹீமியன் உடை


இது ட்ரெண்ட் மற்றும் பாஷன் இரண்டும் இணைந்த நவீன நாகரிக உடையாகும். கர்ப்ப நேரத்தில் உங்களை எங்கு சென்றாலும் அற்புதமாக காட்டும். அம்மா ஆக போகும் பெண்களுக்கான அற்புத தேர்வு இந்த பொஹீமியன் உடைகள்தான்.இதன் விலை 900ல் இருந்து ஆரம்பிக்கிறது. இதனை இங்கே வாங்கவும்


ஜம்ப் சூட்


ஜம்ப் சூட்ஸ் எப்போதும் தன்னை குழந்தையாகவே பாவிக்கும் பெண்களுக்கான பிரத்யேக உடை. தான் இன்னொரு குழந்தையை சுமந்தாலும் இந்த உடை அவர்களை இன்னமும் குழந்தையாகவே காட்டும் மாயம் செய்ய வல்லது. இந்த உடை தாய்மை அடைந்துள்ள பெண்களுக்கான ஒரு வரும். இதற்கேற்ற ஒரு சுவாரஸ்யமான ட்யூனிக்ஸ் அல்லது டாப்ஸை தேர்ந்தெடுப்பது உங்களிடம் இருக்கிறது.


இதன் விலை 1600ல் இருந்து ஆரம்பிக்கிறது. இதனை இங்கே வாங்கவும்


ஃபுளோரல் ஷிஃபான் உடை


மென்மையான உடலோடு ஓட்டும் தன்மை இல்லாத ஷிஃபான் உடைகள் உங்கள் கர்ப்ப காலத்தில் அணிய ஏற்ற உடை. தொடை வரைக்குமான கவுன் அல்லது முழங்கால் வரைக்குமான கவுன் இதனை நீங்கள் முடிவு செய்து கொள்ளலாம். இதனுடன் கணுக்கால் வரையிலான சாக்ஸ் அல்லது முழங்கால் வரையிலான சாக்ஸ் அணிவது உங்களை மேலும் அழகாக்கும்.இதன் விலை 1600ல் இருந்து ஆரம்பிக்கிறது. இதனை இங்கே வாங்கவும்


போல்கா டாட்ஸ் உடை


கர்ப்ப காலத்தில் கருப்பு நிற உடை இல்லாமல் இருந்தால் அது நன்றாக இருக்காது. தாய்மை பெண்களுக்காகவே தனிப்பட்ட டிசைனை கொண்டது போல்கா டாட்ஸ் உடைகள். இந்த மாதிரி என்றும் க்ளாஸிக் உடைகள் அணிவதை நீங்கள் மறக்காதீர்கள். அணிந்த பின்னர் உங்களுக்கான பாராட்டுக்கள் உறுதியாகி விடும்.இதன் விலை 1600ல் இருந்து ஆரம்பிக்கிறது. இதனை இங்கே வாங்கவும்


டிஷர்ட்


கர்ப்ப காலத்தில் பெண்மைக்கு பொருந்த கூடிய உடைகளில் டி ஷர்ட்களும் ஒன்று. முழங்கால் வரைக்குமான டிஷர்ட் மற்றும் பெரிய டிரௌசர்கள் அதற்கேற்ற ஸ்னீக்கர்கள் உங்கள் தாய்மையை மற்றவர் அறியாவண்ணம் மறைக்கும். அருகில் இருந்தால் மட்டுமே தெரியும். சாதாரண இடங்களுக்கு ஏற்றது.இதன் விலை 1600ல் இருந்து ஆரம்பிக்கிறது. இதனை இங்கே வாங்கவும்


வெயிலுக்கு இதமா எப்படி டிரஸ் பண்ணிக்கறதுனு யோசனையா ! இதோ சம்மர் ட்ரெண்டிங் பேஷன் டிப்ஸ் !


சேலை கட்டும் வாசனை பெண்களுக்கான பிரத்யேக புடவைகள் ! சம்மர் ஸ்பெஷல் !


படங்கள் ஆதாரம் பிக்ஸ்சா பே , பாக்ஸெல்ஸ்


---


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.