logo
ADVERTISEMENT
home / அழகு
சன் டேனிலிருந்து உடனடியாக விடுபெற  சில சிறந்த வழிகள் !!

சன் டேனிலிருந்து உடனடியாக விடுபெற சில சிறந்த வழிகள் !!

சூரிய கதிர்களால் சருமக்கருமை(சன்டேன்) ஏற்படுவது ஒரு இயற்கையான விஷயம்தான். ஆனால் நம் அழகு போய்விட்டதே! இப்போதுதான் முக்கியமான விசேஷங்கள் வரப்போகிறது, என்ன செய்வது என்று கவலை கொள்கிறீர்களா? உடனே இரசாயன கிரீம், சன்ஸ்கிரீன் லோஷன் தேட ஆரம்பித்து விட்டீர்களா? சற்று பொறுங்கள். இந்த இரசாயன கிரீம்களால் எத்தனை உபாதைகள் வரப்போகிறது என்று அறியாமல் கண்மூடித் தனமாக ஏதாவதொரு கிரீம் பயன்படுத்த ஆரம்பிக்காதீர்கள். உங்களுக்கு உடனடியாக நல்ல தீர்வு கிடைக்கும், ஆனால் குடிப்பழக்கத்தைவிட இந்த கிரீம்கள் உங்களை அடிமைப்படுத்திவிடும். ஏன்னெனில், நாளடைவில் கிரீம் பயன்படுத்துவதால் உங்கள் சருமம் வறண்டு ஜீவன் இல்லாமல் ஆகி விடும். பிறகு கிரீம் இல்லாமல் எப்போதுமே இருக்க முடியாத நிலை வந்துவிடும். பிறகு அதற்கு வைத்தியம் பார்க்க ஆரம்பித்து விடுவீர்கள். இது இறுதியில் உங்களை மிகுந்த மன உளச்சலுக்கு ஆளாக்கிவிடும். 

முதலில் சருமம் ஏன் கருமை அடைகிறது ?

சூரிய ஒளியில் இருக்கும் யூவி கதிரானது நம் சருமத்தில் பட்டு தோளை சேதப்படுத்தும்போது, சருமத்தை பாதுகாக்க மெலனின் அதிகமாக உற்பத்தி ஆகும். அப்போது சருமம் (skin) கருமை அடைகிறது.

சன்டேன்(sun tan) எந்த காலத்திலும் ஏற்படும். கோடை வெயில் மட்டும்தான் கரணம் என்று கிடையாது. மழை பொழியும் காலத்திலும், குளிர்காலத்திலும் கூட 80 சதவிகிதம் யூவி கதிரானது சன்டேன் ஏற்படுத்தும்.

சன்டேன் என்றாலே தயிர், தக்காளி ஆகியவை தான் நினைவிற்கு வரும். இவை தவிர, சில சிறந்த பயனுள்ள வழிகளை (remedy) காண்போம். 

ADVERTISEMENT

சரும கருமையை போக்க சில சிறந்த வழிகள் (sun tan natural home remedies)

1. ஓட்ஸ் கலவை

Pixabay

ஓட்ஸ் கலவை செய்ய தேவையான  பொருட்களை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

ADVERTISEMENT
  • கடலை மாவு 1 தேக்கரண்டி,
  • அரை தக்காளி,
  • அரை உருளைக்கிழங்கு,
  • வெள்ளரி கால் பகுதி தோள் நீக்கியது,
  • அரைப்பழத்தின் எலுமிச்சை சாறு,
  • மஞ்சள் தூள் சிறிது,
  • தேன் 1 தேக்கரண்டி,
  • தேங்காய் எண்ணெய் சிறிது,
  • ஓட்ஸ் 2 முதல் 3 தேக்கரண்டி 

செய்முறை: 

  1. ஓட்ஸ் தவிர மேலே கூறிய  அனைத்தையும் மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்துக்கொள்ளுங்கள். 
  2. பிறகு இந்தக் கலவையில் ஓட்ஸ் 2 தேக்கரண்டி(தேவையான அளவு) சேர்த்து கலந்து உங்கள் முகத்திற்கு, கை, கால் போன்ற எல்லா இடங்களிலும் எங்கெல்லாம் சன்டேன் உள்ளதோ அங்கெல்லாம் தடவிக்கொள்ளுங்கள். 
  3. 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவிக்கொள்ளுங்கள். உங்கள் டேன் மறைவது மட்டுமின்றி உங்கள் சருமம் மிகவும் மிருதுவாக இருப்பதாக உணர்வீர்கள்.

இது எவ்வாறு இயங்குகிறது : ஓட்ஸ் உங்கள் சருமத்திற்கு ஒரு நல்ல ஸ்ரப்பாக, நிறம் குறைந்த செல்களை உரித்துக்கொண்டு வருவதற்காக சேர்க்கப்படும் பொருள். கடலைமாவு சருமத்தை சுத்தம் செய்து எண்ணெய்ப் பதத்தை நீக்க பயன்படுகிறது. தக்காளி மற்றும் எலுமிச்சையில் இருக்கும் புளிப்புத்தன்மை கருப்பு நிறத்தை நீக்கும்.

2. அரிசி மாவு/கோதுமை மாவு

Pixabay

ADVERTISEMENT

என்ன இது சமையல் குறிப்பு போல இருக்கிறது என்று  நினைக்கிறீர்களா? அரிசி மாவும், கோதுமை மாவும் சருமத்திற்கு சரியான ஒரு பேக்காக அமையும்.

தேவையான பொருட்கள்:

  • அரிசி மாவு/கோதுமை மாவு 3 தேக்கரண்டி,
  • மஞ்சள்தூள் சிறிது,
  • அதிமதுரம் சிறிது,
  • ரோஸ் வாட்டர் 3 அல்லது 4 தேக்கரண்டி

செய்முறை:

மேலே குறிப்பிட்ட பொருட்களை நன்றாக கலந்து சன்டேன் இருக்கும் இடங்களில் தினமும் பூசி வந்தால் நல்ல மாற்றங்களைக் காணலாம்.

ADVERTISEMENT

இது எவ்வாறு இயங்குகிறது :  அரிசி மாவில் அலந்தோயின் மற்றும் பெரூலிக் அமிலம் இருக்கிறது. அது சூரியக் கதிரில் இருந்து உங்கள் சருமத்தை பாதுகாக்கும். கோதுமை மாவில் சருமத்திற்குத் தேவையான வைட்டமின் ஈ சக்தி இருக்கிறது. அது சருமத்தின் தன்மையை நன்றாக வைத்துக்கொள்ளும். அதிமதுரம் சருமத்திற்கு நல்ல நிறத்தைத் தரும். ரோஸ் வாட்டர் குளிர்ச்சியைத் தரும்.

3. உப்பு மற்றும் எலுமிச்சை சாரு

Pixabay

தேவையான பொருட்கள்:

ADVERTISEMENT
  • கல் உப்பு – 1 தேக்கரண்டி
  • எலுமிச்சை – ½ துண்டு
  • பாசிப்பருப்பு/பயத்தம் பருப்பு மாவு – 3 தேக்கரண்டி

கல் உப்புடன் எலுமிச்சை சாரு சேர்த்து நன்றாக கறையும்படி கலந்து கைகளில் மூன்று நிமிடம் தேய்த்து அப்படியே விடவும். மூன்று நிமிடங்களுக்கு பிறகு கழுவிக்கொள்ளுங்கள். 

பின்பு பாசிப்பருப்பு மாவை தண்ணீர்/ரோஸ் வாட்டர்/எலுமிச்சை சாரு இவற்றில் ஏதாவது ஒன்றோடு கலந்து பூச்சிக்கொள்ளுங்கள். 20 நிமிடம் கழித்து ஒரு மிருதுவான ஈரத் துணியினால் துடைத்து எடுங்கள். பின்னர் கழுவிக்கொள்ளுங்கள்.

இது எவ்வாறு இயங்குகிறது : கல் உப்பு கருப்பு நிறத்திற்கு எதிராக சிறப்பாக செயல்படும் பொருள். அதோடு புளிப்புள்ள எலுமிச்சை சாரை சேர்த்து தடவும்போது நல்ல விளைவைப் பார்க்கலாம். பாசிப்பருப்பு(பயத்தம்பருப்பு) மாவும் கரிய நிறத்தைக் குறைத்து நல்ல தெளிவான நிறம் வர உதவும்.

என்ன உங்கள் சருமம் தானா என்று வியப்பாக இருக்கிறதா? விளம்பரங்களில் வருவது போல உங்களைத் தொட்டுத் தொட்டுப் பார்க்கப்போகிறார்கள். ஜாக்கிரதை!

ADVERTISEMENT

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பொருள் ஒவ்வாமை ஏற்படுத்தும். அதனால், மேலே சொன்ன கலவைகளை உங்கள் கைகளில் ஒரு சிறிய பகுதியில் பயன்படுத்திப் பார்த்துவிட்டு, உங்களுக்கு எந்தவித எரிச்சலோ, அரிப்போ இல்லை என்று உணர்ந்தபின் உடலின் மற்ற பகுதிகளுக்கு பயன்படுத்துங்கள்.

மேலும், உங்கள் உடலுக்கு தேவையான தண்ணீர் அருந்தி உடலை நீரோட்டமாக வைத்துக்கொள்ளுங்கள். எப்போதும் இயற்கை முறையை பின்பற்றி ஆரோக்கியமாக வாழ வாழ்த்துக்கள்!

 

மேலும் படிக்க – உங்கள் சருமத்திற்கு ஏற்ற சன் ஸ்கிரீன் லோஷனை தேர்ந்தெடுப்பதற்கான முழுமையான வழிகாட்டி ! மேலும் படிக்க – வெயிற்பட்ட மேநிறத்திலிருந்து பாதுகாக்க 5 சிறந்த சன்ஸ்கிரீன் லோஷன்கள்

பட ஆதாரம் – Instagram

ADVERTISEMENT

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.

16 Sep 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT