"தமிழ்சினிமாவின் அவதார் " டிசம்பரில் தொடங்குகிறது பொன்னியின் செல்வன் - இயக்குனர் மணிரத்னம்

"தமிழ்சினிமாவின் அவதார் " டிசம்பரில் தொடங்குகிறது பொன்னியின் செல்வன் - இயக்குனர் மணிரத்னம்

இயக்குனர் மணிரத்னம் என்கிற பெயரை கேட்டாலே நெஞ்சுக்கூட்டுக்குள் சிறகுகள் படபடக்கும் சிலிர்ப்புகள் சினிமா ரசிகர்களுக்கு நிச்சயம் ஏற்பட்டுதான் ஆக வேண்டும். அந்த அளவிற்கு அழகான அற்புதமான தமிழ் சினிமா படைப்புகளை இயக்குனர் மணிரத்னம் (manirathnam) கொடுத்திருக்கிறார்.

அவரது நீண்ட நெடுங்கால கனவு அமரர் கல்கியின் நாவலான பொன்னியின் செல்வன் நாவலைத் திரைப்படம் ஆக்க வேண்டும் என்பதுதான். அது பல வருடங்களாகத் தள்ளிப் போடப்பட்டபடியே இருந்தது. இயக்குனர் மணிரத்னம் மட்டும் அல்லாமல் எம்ஜிஆர் கமல்ஹாசன் போன்றோரும் இந்த நாவலைத் திரைப்படமாக்க ஆசைப்பட்டு கைவிட்டவர்கள்தான்.

இதற்கு அடிப்படைக் காரணம் அமரர் எழுத்தாளர் கல்கி அவர்கள் பொன்னியின் செல்வன் எனும் கறபனைக் கதையில் கையாண்ட ப்ரம்மாண்டங்கள்தான். இந்த நாவலைப் படித்தவர்களுக்கு அவர் எப்படிப்பட்ட கற்பனைகளை எழுத்தில் கையாண்டிருக்கிறார் என்பது விளங்கும்.

வாவ் ! பொன்னியின் செல்வனில் வந்திய தேவனாகும் கார்த்தி !

நெஞ்சுக்குள் நுழைந்தாய்.. மூச்சினில் கலந்தாய்.. தமிழின் தேவதூதன் கவிஞர் நா.முத்துக்குமார்

Youtube

எழுத்தாக மாறியிருக்கும் அந்த பிரம்மாண்டத்தை திரையாக்க முயலுமா என்பது மிகப்பெரிய சவால்தான். பொன்னியின் செல்வன் நாவலைத் திரைப்படம் ஆக்க வேண்டும் என்பது இயக்குனர் மணிரத்னத்தின் நீண்ட நாள் கனவாக இருந்தது. ஆனால் இதனைத் திரையில் காட்ட பலகோடி பட்ஜெட் ஆகும் என்பதால் அமைதியாக இருந்தார் மணிரத்னம்.

இதனிடையில் தெலுங்கில் வெளியான பாகுபலி சரித்திரத் திரைப்படம் பல மொழிகளில் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. அதன்பின் இயக்குனர் மணிரத்னத்துக்கு பொன்னியின் செல்வனை திரைப்படமாகும் நம்பிக்கை உறுதியாகப் பிறந்தது.

அதற்கான முதற்கட்ட வேலையான நடிகர்கள் தேர்ந்தெடுக்கும் வேலை நடந்து முடிந்திருக்கிறது. அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய்,கார்த்தி , திரிஷா, நயன்தாரா, விக்ரம், பார்த்திபன், கீர்த்தி சுரேஷ், ஜெயம் ரவி எனப் பல முன்னணி நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடிப்பதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் சினிமாவில் சிறந்த பெண் இயக்குனர்கள்

Youtube

இதில் யார் எந்தக் கதாபாத்திரத்துக்கு தேர்வாவர்கள் என்பதே இன்னமும் நம்மை சுவாரஸ்யப்படுத்தும் ரகசியமாக இருக்கிறது. புகழ்பெற்ற நந்தினி யாக த்ரிஷா வா ஐஸ்வர்யாவா எனத் தெரியவில்லை. பூங்குழலியாக வரப்போகிறவரின் துடுக்குத்தனங்களை யோசித்தால் கீர்த்தி சுரேஷ் அல்லது அமலா பாலுக்கு அது கிடைக்கலாம் எனத் தோன்றுகிறது.

பெரிய பழுவேட்டரையராக நிச்சயம் அமிதாப் தான் என்று உள்ளுணர்வு சொல்கிறது. வந்தியத்தேவனாக கார்த்தி நடிக்கிறார் என செய்திகள் சொன்னது. அருள்மொழிவர்மன் யார் என யோசித்தால் விக்ரமா அல்லது வேறு யாருமே எனப் புரியாமல் மணிரத்ன கல்கி ரசிகர்கள் சந்தோஷமாக தலையைப் பிய்த்துக் கொள்கிறார்கள்.

ஆங்கிலத்தில் எடுக்கப்பட்ட அவதார் திரைப்படம் போல மிகப்பெரிய பட்ஜெட்டில் இந்தப் பொன்னியின் செல்வன் திரைப்படமாக இருக்கிறது. 1000 கோடி ரூபாய் பட்ஜெட் என முடிவாகி இருக்கிறது. லைகா நிறுவனமும் இந்த தயாரிப்பில் பெரும்பங்கு வகிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Youtube

இந்நிலையில் திரைப்படத்தின் அடுத்த கட்ட நடவடிக்கையாக இயக்குனர் மணிரத்னம் அவர்கள் பாகுபலி இயக்குனர் எஸ் எஸ் ராஜமௌலியை சந்திக்க இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. பாகுபலியின் பிரம்மாண்டம் போர்காட்சிகள் போன்றவை பற்றி அறிந்து கொள்ள இருப்பதாகவும் அதற்காக ஏற்கனவே இயக்குனர் மணிரத்னம் குழுவில் சிலர் ராஜமௌலியை சந்தித்து பேசி வருவதாக கூறப்படுகிறது.

தற்போதைய லேட்டஸ்ட் செய்தியாக பொன்னியின் செல்வன் நமக்கு தருவது என்ன என்றால் இந்த திரைப்படத்திற்கு 12 பாடல்களை கவிஞர் வைரமுத்து எழுத்துவதாகவும் இசை ஏ ஆர் ரஹ்மான் எனவும் முடிவாகி இருக்கிறது.

வருகின்ற டிசம்பர் மாதம் இந்தத் திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எப்போதும் தன்னுடைய திரைப்படங்களை ரகசியமாக எடுத்து முடிக்கும் வழக்கம் கொண்டவர் இயக்குனர் மணிரத்னம். இந்த முறை டிசம்பரில் பூஜையன்று பொன்னியின் செல்வனுக்கான அதிகார்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார் எனக் கூறப்படுகிறது.

காத்திருக்கிறோம் தலைவரே! தமிழ் சினிமாவின் 'அவதார்' ஆன பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்காக!

Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!                                     

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.