ஸ்டார்டர் முதல் - மெயின் டிஷ் வரை:செட்டிநாடு மட்டன் கோலா உருண்டை குழம்பு,செய்வது எப்படி?

 ஸ்டார்டர் முதல் - மெயின் டிஷ் வரை:செட்டிநாடு மட்டன் கோலா உருண்டை குழம்பு,செய்வது எப்படி?

மட்டன் சாப்பிடும் அனைவருக்கும் தெரியும், மட்டன் கோலா உருண்டைகள் (mutton kola balls) ஒரு அருமையான சுவையான உணவு என்று . எதையுமே பொறித்துக்கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் என்றதால் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு உணவு இது . ஆட்டுக்கறியில் புரதச்சத்து நிறைந்திருக்கும். அனைத்து அசைவ உணவகங்களிலும் மட்டன் கோலா உருண்டைகள் கிடைக்கும்.

இது செட்டிநாடு உணவு வகையை சார்ந்தது. எனவே மதுரை அசைவ உணவகங்களில் இது மிகவும் பிரபலமாக கிடைக்கும். இதை எப்படி வீட்டிலேயே சுவையாக செய்து சாப்பிடுவது (recipe) என்று பார்க்கலாமா?! 

செட்டிநாடு மட்டன் கோலா உருண்டை

தேவையான பொருட்கள்:

மட்டன் கொத்துக்கறி - ¼ கிலோ 

சோம்பு - 1 தேக்கரண்டி 

இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி 

பெரிய வெங்காயம் - 1

பச்சை மிளகாய் - 6

தேங்காய்ப் பால் - 1 தேக்கரண்டி 

கடலைமாவு - தேவையான அளவு 

கொத்தமல்லி இலை - சிறிது 

Instagram

செய்முறை

 1. ஆட்டுக்கறியை நன்றாக கொத்தி, எலும்பு இல்லாதவாறு வாங்கிக் கொள்ளுங்கள். அதை நன்றாகத் தண்ணீர்விட்டு சுத்தம் செய்து கொள்ளுங்கள்.
 2. கொத்துக்கறியை உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து, தண்ணீர் விடாமல் குக்கரில் மூன்று விசில் விட்டு வேக வைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
 3. வேகவைத்த கொத்துக்கறியை ஆரிய பின், அதில்  தண்ணீர் இருப்பின் பிழிந்து விட்டு மிக்ஸி ஜாரில் போட்டு ஒரு சுத்து விட்டு எடுத்துக்கொள்ளுங்கள்.
 4. அதோடு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், சோம்பு, இஞ்சி பூண்டு விழுது, தேங்காய் பால், கொத்தமல்லி இலை ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து பிசைந்து கொள்ளுங்கள்.
 5. இந்தக் கலவையில் கடலை மாவை சேர்த்து உருண்டைகளாக உருட்டிக்கொள்ளுங்கள்.
 6. பின்பு எண்ணையைக் காய வைத்து உருண்டைகளை அதில் சேர்த்து பொறிக்கவும். 

குறிப்பு

 • கொத்துக்கறி என்பதால் கறி மிகவும் சிறிய துண்டுகளாக இருக்கும், கழுவும்போது ஓடி விடும், அதனால் சற்று நிதானமாக சுத்தம் செய்யுங்கள்.
 • இந்தக் கலவையில் முட்டை சேர்த்தும் செய்யலாம். முட்டை சேர்த்தால் நுரைத்துக்கொள்ளும். தேங்காய் எண்ணெய் சேர்த்தால் நுரை வராது. 
 • இந்தக் கலவையை பிரிட்ஜ்ஜில் வைத்து பின்னர் பயன்படுத்தப் போகிறீர்கள் என்றால், முட்டை சேர்க்காதீர்கள்.
 • ஆட்டுக்கறியை வாங்கும்போது கொழுப்பு இல்லாமல் வாங்கிக்கொள்ளுங்கள். ஏன்னெனில், கொழுப்பு இருந்தால் உருண்டைகளை பொறிக்கும்போது சிதைந்து விடும்.
 • கடலைமாவிற்கு பதிலாக பொட்டுக்கடலையை அரைத்து அந்த பொடியை சேர்த்தும் உருண்டைகள் செய்யலாம். கடலை மாவை விடவும் சுவையாக இருக்கும். 
 • இப்படி அற்புதமாக செய்த உருண்டைகளை ஒரு குழம்பு செய்து அதில் சேர்த்து உண்டால், ஸ்டார்டர் உருண்டை மெயின் டிஷ் ஆகிவிடும்.

அது எப்படி செய்வது என்று பார்ப்போமா?

செட்டிநாடு மட்டன் கோலா உருண்டை குழம்பு

Youtube

தேவையான பொருட்கள்:

மட்டன் கோலா உருண்டைகள் - 10

பெரிய வெங்காயம் - 1

தக்காளி - 2

இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி 

தேங்காய் பால் - ½ கப் 

சிக்கன்/மட்டன் மசாலா - 3 தேக்கரண்டி 

பச்சை மிளகாய் - 4

கொத்தமல்லி இலை - சிறிது 

தாளிக்க சிறிதளவு எண்ணெய், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை.

செய்முறை

 1. அடுப்பில் ஒரு கடாயை வைத்து, காய்ந்ததும் சிறிதளவு(3 தேக்கரண்டி) எண்ணெய் ஊற்றவும். 
 2. எண்ணெய் காய்ந்ததும் கடுகு சேர்க்கவும். கடுகு புரிந்தவுடன் சிறிதளவு உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்து வறுக்கவும். பின்னர் ஒரு கொத்து கறிவேப்பிலைகளை உருவி சேர்த்து வதக்கவும்.
 3. நறுக்கிய பெரிய வெங்காயத்தையும், பச்சை மிளகாயையும் சேர்த்து நன்றாக வதக்கவும். பின் சிறு துண்டுகளாக நறுக்கிய தக்காளி பழத்தை சேர்த்து வதக்கவும். 
 4. இதோடு சிக்கன்/மட்டன் மசாலா சேர்த்து, தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும். 
 5. இதோடு தேங்காய்ப்பாலை சேருங்கள். தேவையான உப்பு சேர்க்கவும். குழம்பு உங்களுக்கு தேவையான பதத்தில் இருக்குமாறு தண்ணீர் ஊற்றி ஒரு கொதி விடுங்கள். 
 6. பின்னர் ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்த மட்டன் கோலா உருண்டைகளை அதோடு சேர்த்து 5 நிமிடம் கொதி விடுங்கள்.
 7. கடைசியாக கொத்துமல்லி இலைகளை கிள்ளிப்போட்டு அடுப்பை அணைக்கவும். சுவையான மட்டன் மசாலா சாப்ஸ் ரெடி!
மேலும் படிக்க - ம்ம்ம்... சுவையான மனமனக்கும் சிக்கன் கிரேவி ரெசிபி!

பட ஆதாரம் - Shutterstock

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.