விடா முயற்சியில் கவின், முகென் : டிக்கெட் டு பினாலே டாஸ்க்கில் வெற்றி பெறப்போவது யார்?

விடா முயற்சியில் கவின், முகென் : டிக்கெட் டு பினாலே டாஸ்க்கில் வெற்றி பெறப்போவது யார்?

பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக 86 நாட்களை நிறைவு செய்துள்ளது. இன்னும் இரண்டு வாரமே உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியில் யார் இறுதிப்போட்டிக்கு செல்வார்கள் என்று அடுத்த வாரம் தெரிந்துவிடும். இந்நிலையில்  நேரடியாக இறுதி போட்டிக்கு செல்லும் டிக்கெட் டு பினாலே டாஸ்க் தொடங்கி நடைபெற்று வருகிறது. டிக்கெட் டு பினாலே டாஸ்க்கில் போட்டியாளர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். 

முதல் கட்டமாக நடந்த இரண்டு டாஸ்க்குகளில் தனி நபராக தர்ஷனும், இரண்டாவது டாஸ்கில் குழுவாக தர்ஷன், ஷெரின், கவின் ஆகிய மூவரும் வெற்றி பெற்றுள்ளனர். இந்நிலையில் பிக் பாஸ் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் புரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதில் யாருக்கு எந்த இடம் என்ற தரவரிசைப் படுத்துதலில் சேரன் (cheran) முதலில் பங்கேற்கிறார்.

அப்போது பேசும் போது, ஃபஸ்ட்ன்னா நான் தான் முதல்ல இருக்கனும். அப்போ தானே அது ஃபஸ்ட். இங்க இருக்குற எல்லாரையும் விட எனக்கு வயசு கொஞ்சம் அதிகம், அனுபவங்களும் அதிகம். எல்லாரும்  என்ன கேட்டாங்க, பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு நீ போகிறாயா? அந்த நிகழ்ச்சியில் இளைஞர்கள் தானே ஜெயிப்பாங்கன்னு. எல்லாருக்கும் தனி தனியா பாலோயர்ஸ் இருக்காங்க, ஃபேன்ஸ் இருக்காங்க, ஆர்மி இருக்காங்க. 

ஆனால்  எல்லாருடைய  பாலோயர்ஸ், ஆர்மியும் எனக்கும் பாலோயர்ஸ். அதனால நான் கண்டிப்பா ஜெயிப்பேன்னு சொன்னேன் அது கண்டிப்பா நடந்துருக்கு என்று சேரன் கூறியுள்ளார். நான் இந்த போட்டியில் நிச்சயம் ஜெயிப்பேன், என்று தன்னம்பிக்கையுடன் சேரன் கூறும் புரோமோ வெளியாகியுள்ளது.

இரண்டாவது புரோமோவில் சுயசிந்தனையும், தனித்தன்மையும் இல்லாமல் கூட்டத்தில் ஒளிந்து வாழ்பவர்கள் யார் என்ற கேள்விக்கு கவினையும், லாஷ்லியாவையும் தர்சன் குறிப்பிடுகிறார். அடுத்ததாக மக்களின் அனுதாப அலைக்காக நடிக்கும் பரிதாபங்கள் என சேரனையும் மீண்டும் கவினையும் குறிப்பிடுகிறார் தர்ஷன்.

அதற்கு ஏன் எங்களை இப்படி குறிப்பிடுகிறாய் என சிரித்துக்கொண்ட சேரன் விளக்கம் கேட்கிறார். ஆனால் தர்சன் விளக்கம் தர மறுக்கிறார். கூட்டத்தில் ஒளிந்து வாள்பவர், மக்களின் அனுதாபத்தை தேடுபவர் என தர்சன் கவினை குறிப்பிடும் போது கவினின் முகமே சற்று மாறுகிறது. மேலும் இதனால் சேரனுக்கும், தர்ஷனுக்கும் இடையே மோதல் உருவானாகவும் வாய்ப்புள்ளது. இந்த மோதல் எவிக்ஷனிலும் எதிரொலிக்கலாம்.

மூன்றாவது புரோமோவில் மற்றொரு டிக்கெட் டு பினாலே டாஸ்க் நடக்கிறது. அதில் ஒரு கட்டை மீது சில பெட்டிகள் அமைக்கப்ட்டு அதனை போட்டியாளர்கள் கீழே விழாமல் ஒற்றை காலில் பேலன்ஸ் செய்ய வேண்டும். இந்த டாஸ்கில் முதலில் சேரன் கால் வலிக்கிறது என கூறி கட்டையை விட்டு விடுகிறார். பின்னர் சாண்டி, ஷெரின், தர்ஷன் என ஒவ்வொருவராக வெளியேறுகின்றனர். லாஸ்லியா சற்று தடுமாற்றத்தில் இருக்கிறார். இறுதியாக முகென் மற்றும் கவின் இறுதி வரை நிலைத்து நிற்கின்றனர். இதில் யார் வெற்றி பெறுவார் என இன்றைய நிகழ்ச்சியில் தெரிய வரும்.

twitter

டிக்கெட் டு பினாலே நிச்சயம் சேரனுக்கு கிடைக்க வாய்ப்பில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. அதனால் இந்த வாரம் அவர் வெளியேறினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. கடந்த வாரம் வனிதா வெளியேற நிலையில், இந்த வாரத்திற்கான நாமினேஷன் பட்டியலில் சேரன், கவின், லாஸ்லியா, ஷெரின் இடம் பெற்றுள்ளனர். தற்போது நிகழ்ச்சியில் உள்ள ஏழு போட்டியாளர்களுமே முக்கியமானவர்கள் என்பதால் அடுத்து யார் வெளியேறப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

பிக் பாஸ் டிக்கெட் டு பினாலே டாஸ்க் தொடங்கியது : இறுதிப்போட்டிக்கு நேரடியாக செல்வது யார்?

அதிலும் இந்த வாரம் டிக்கெட் டு பினாலேவுக்காக டாஸ்க்குகள் நடத்தப்படுகின்றன. முந்தைய சீசன்களில் எல்லாம் தரப்பட்டதோடு ஒப்பிடுகையில் இம்முறை மிகவும் எளிதான போட்டிகளே தரப்படுகின்றன. ஆனால் அவற்றில் கலந்து கொள்வதற்கே சேரன் (cheran) திணறுவது வெளிப்படையாக தெரிகிறது. அவரது வயது மற்றும் உடல்நிலை ஒரு காரணமாக அவரால் விளையாட்டுகளில் இயல்பாக கலந்து கொள்ள இயலவில்லை.

twitter

அதனால் நேற்று காலில் பலூன் கட்டிக்கொள்ளும் டாஸ்க்கிலேயே மிகவும் கஷ்டப்பட்டார் சேரன். அவரே தன் காலால் தன்னுடைய பலூனை எதிர்பாராத விதமாக உடைத்து விட்டார். அவருக்கு அந்த விளையாட்டை எப்படி விளையாடுவதென்று தெரியவில்லை. அதோடு மற்ற அனைத்து போட்டியாளர்களுமே இளைஞர்கள் என்பதால்,  அவர்களோடு மோதுவது சேரனுக்கு நிச்சயம் சவாலான விசயம் தான் இருக்கிறது. 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ட்விஸ்ட் : முதன் முறையாக ரகசிய அறைக்கு அனுப்பப்பட்ட சேரன்!

இதை வைத்துப் பார்க்கும் போது நிச்சயம் இனி வரும் டாஸ்க்குகள் இதை விடக் கடினமாகத்தான் இருக்கும். எனவே அவற்றை சேரன் (cheran) விளையாடி ஜெயிப்பது ரொம்ப கஷ்டம். ஒருவேளை பிக் பாஸ் வழக்கம் போல் ஏதாவது தில்லாலங்கடி வேலை பார்த்து சேரனுக்கு டிக்கெட் டு பினாலே தருவதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது.

twitter

அப்படி தரும் பட்சத்தில் அவர் இனி வரும் கடினமான டாஸ்க்குகள் எதிலும்  விளையாடாமல் நேரடியாக பைனலுக்கு சென்றுவிடலாம். இது நடக்காதபட்சத்தில் இந்த வாரம் சேரன் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவதற்கு வாய்ப்புகள் அதிகம். ஏனென்றால் கடந்த வாரத்திற்கு முந்தைய வாரம் அவரோடு நாமினேசனில் இருந்தவர்களே இம்முறையும் உள்ளனர். 

அப்போதும் ஷெரினைவிட குறைவான வாக்குகளைப் பெற்றே சேரன் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். ஆனால் அப்போது சீக்ரெட் ரூம் டாஸ்க் மூலம் சேரனை பிக் பாஸ் காப்பாற்றி விட்டார். ஆனால் மீண்டும் அதே போல் இம்முறையும் செய்ய வாய்ப்புகள் குறைவு. எனவே சேரனுக்கு டிக்கெட் டு பினாலே கிடைக்காத பட்சத்தில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து அவர் வெளியேறுவது ஏறக்குறைய உறுதியாக உள்ளது.

twitter

இதனிடையே கவின் மற்றும் லாஸ்லியா  மீண்டும் தங்கள் காதலை தொடங்கியுள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சில் கவின், லாஸ்லியா பழகி வந்தனர். ஆனால் கடந்த வாரம் லாஸ்லியாவின் பெற்றோர் பிக் பாஸ் வீட்டுக்கு வந்தபோது அவர்கள் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். நீ நீயா இரு என லாஸ்லியாவிற்கு அவரது அம்மா அறிவுரை வழங்கினார். இதனை தொடர்ந்து இனி விளையாட்டுகளில் மட்டுமே கவனம் செலுத்துவேன் என லாஸ்லியா முடிவெடுத்து தனது வேலைகளில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். 

குவியும் அதிர்ஷ்ட வாய்ப்புகள்!லாஸ்லியாவுக்காக அவர் அப்பாவிடம் சூசகமாக சம்மதம் வாங்கிய கமல்

இந்நிலையில் நேற்று கமலிடம், லாஸ்லியா சொன்ன ஒரு விஷயம் குறித்து கவின் பேசினார். கமல் சார் கிட்ட பேசும்போது, பிக்பாஸ் வந்ததில் இருந்து சில பழக்கங்கள் ஏற்பட்டது. அது உண்மையா, பொய்யா? தெரியவில்லை என லாஸ்லியா கூறியது குறித்து கவின் கேள்வி எழுப்பினார். அதற்கு லாஸ்லியா "நான் உன்னைப்பற்றி சொல்லவில்லை. சேரன் அப்பா குறித்து இதற்கு முன் கூறியதை தான் மீண்டும் கூறினேன். உண்மையை பொய்யா என்கிற கேள்வி ஆரம்பத்தில் இருந்தே இருப்பது பற்றித்தான் பேசினேன்" என பதில் அளித்தார்.

இதனால் கடந்த சில நாட்களாக பேசமால் இருந்த இருவரும் தற்போது மீண்டும் பேச தொடங்கியுள்ளனர். குடும்பத்தினர் வந்து போன பிறகு லாஸ்லியாவிடம் ஒரு தெளிவு பிறந்திருப்பது கண்கூடாக தெரிகிறது. இருப்பினும் கவின் உணர்வுப்பூர்வமாக பிளாக் மெயில் செய்துக் கொண்டிருக்கிறார் என பிக் பாஸ் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இது ஒருபுறம் இருக்க இன்றைய நிகழ்ச்சியில் யார் டிக்கெட் டு டாஸ்கில் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு வெகுவாக நிலவுகிறது. 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.