ஆர்யாவை விட சூர்யாவிடம் தான் கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகிறது - தனி ரூட்டில் சாயிஷா!

ஆர்யாவை விட சூர்யாவிடம் தான் கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகிறது - தனி ரூட்டில் சாயிஷா!

ஆர்யா சாயிஷா ஜோடிக்கென்றே தனிப்பட்ட ரசிகர்கள் நிறைய பேர் இருந்ததை அவரது திருமணத்தன்று பார்க்க முடிந்தது. பலரிடம் நழுவி சாயிஷாவிடம் மாட்டிய ஆர்யாவிற்கு காதல் வாழ்க்கை சிறப்பாகவே அமைந்திருக்கிறது.

அவரது மனைவி வந்த பிறகு ஆர்யாவிற்கு நல்ல படங்கள் அமைவதாக மீடியாக்களிடம் சொல்லி பெருமை பட்டுக் கொண்டிருந்தார் ஆர்யா.

ரஜினியின் நெற்றிக்கண் இப்போது நயன்தாராவிடம்! விக்னேஷ் சிவனுக்கு முகம் காட்ட மறுத்த நயன் !

 

Youtube

இந்நிலையில் தற்போது ஆர்யா நடித்த அடுத்த திரைப்படமான காப்பான் ரிலீஸ் ஆக இருக்கிறது. அதன் ட்ரைலர் சமீபத்தில் தான் வெளியானது.

இந்த திரைப்படத்தில்தான் ஆர்யா சாயிஷா (arya sayisha) காதல் வளர்ந்து கல்யாணத்தில் முடிந்தது. ஆனாலும் காப்பான் திரைப்படத்தில் சாயிஷாவின் காதலர் ஆர்யா இல்லை என்றும் சூர்யா தான் சாயிஷாவின் ஜோடி என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

எனது பாடல் வரிகள் மயானத்தில் இருந்தே பிறக்கின்றன - 96 பாடலாசிரியர் கார்த்திக் நேதா!

Youtube

அதே சமயம் காப்பான் டிரெய்லரில் ஆர்யா சாயிஷாவுக்கு காதல் சொல்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. திரைப் படம் வந்த பிறகே கதை பற்றி தெரியும். ஆனால் பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது சாயிஷா தனக்கு சூர்யாவுடன் கெமிஸ்ட்ரி நன்றாக இருந்ததாக கூறி இருக்கிறாராம்.

பத்திரிகையாளர் சந்திப்பில் சாயிஷா பேசிய போது.. கே வி ஆனந்த் சாரின் இயக்கத்தில் நடிப்பது என்பது தனி அனுபவம், இந்தப் படத்தில் நடித்தது என்னால் மறக்க முடியாத நினைவுகளாக இருக்கும். சூர்யா பற்றி இதை நான் சொல்லியே ஆக வேண்டும்..

குவியும் அதிர்ஷ்ட வாய்ப்புகள்!லாஸ்லியாவுக்காக அவர் அப்பாவிடம் சூசகமாக சம்மதம் வாங்கிய கமல்

Youtube

ஒரு காட்சியில் கதவைத் திறந்து என்னுடன் அவர் ரொமான்ஸ் செய்ய வேண்டும். அந்த ரொமான்ஸ் காட்சி சரியாக வரும் வரை மீண்டும் மீண்டும் சூர்யா அந்தக் காட்சியை செய்து கொண்டே இருந்தார். அவர் ஒரு பர்பெக்ஷனிஸ்ட்.

அவருடன் நடித்தால் நிறையக் கற்றுக் கொள்ளலாம். இந்தப் படத்தில் ஆர்யாவை விட சூர்யாவுடன் தான் என்னுடைய கெமிஸ்ட்ரி பிரமாதமாக வந்திருக்கிறது என்று கூறியிருக்கிறார். இதை அருகிலேயே இருந்து கேட்டுக் கொண்டிருந்த ஆர்யா சிரிக்கவே அவர் அதனை தவறாக எடுத்துக் கொள்ள மாட்டார் என்கிறார் சாயிஷா.                                                                             

   

Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!                                                                                                                    

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!