சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த பழம்பெரும் கலைஞர் என் எஸ் கே அவருடைய பேத்திதான் பாடகி ரம்யா. தன்னுடைய தாத்தா பெயரை விசிட்டிங் கார்டாக எங்கேயும் பயன்படுத்திக் கொள்ளாத ரம்யா பல அழகிய பாடல்களை தமிழ் சினிமாவிற்குத் தந்தார்.
சிறு வயது முதலே சங்கீதத்தின் மீதிருந்த ஆர்வத்தால் கர்னாடிக் இசையை கற்றுக் கொண்ட ரம்யா அதனை அடிப்படையாக வைத்து பியூஷன் முறையில் பல பாடல்களை அரங்கேற்றினார். குத்து பாடல்களையும் விடவில்லை.
ஆர்யாவை விட சூர்யாவிடம்தான் கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகிறது - தனி ரூட்டில் ஸாயிஷா !
அதில் ரம்யாவிற்கு முகவரியாக அமைந்த பாடல் நீதானே என் பொன் வசந்தம் படத்தில் வரும் "சற்று முன்பு பார்த்த மேகம் மாறி போக" பாடல்தான். தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் பாடல்கள் பாடியிருக்கிறார் ரம்யா.
பிக் பாஸ் (biggboss) இரண்டாவது சீசனில் கலந்து கொண்ட இவர் தன்னுடைய அமைதியால் அனைவரையும் கவர்ந்தவர். சண்டைகளை விரும்பாத ரம்யா எப்போதும் நிதானமாகவே இருப்பார். நடந்து கொள்வார் . பேசுவதும் நிறுத்தி நிதானமாகவே பேசுவது அவர் வழக்கம். இந்த குணம் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார்.
எனது பாடல் வரிகள் மயானத்தில் இருந்தே பிறக்கின்றன - 96 பாடலாசிரியர் கார்த்திக் நேதா!
இந்நிலையில் தர்ஷன் நண்பரும் சீரியல் கதாநாயகனும் ஆன சத்யாவைக் காதலித்துக் கரம் பிடித்திருக்கிறார் ரம்யா. "நீலக்குயில்" சீரியலில் கதாநாயகனாக நடித்தவர் சத்யா. அவர்தான் தற்போது ரம்யாவைக் கைப்பிடித்த அதிர்ஷ்டசாலி ! இவர் தற்போதைய பிக் பாஸ் போட்டியாளர் தர்ஷனின் நண்பர் ஆவார்.
இந்த திருமணத்திற்கு தர்ஷன் சார்பாக சனம் ஷெட்டி வந்து வாழ்த்து தெரிவித்திருக்கிறார். மேலும் பிக் பாஸ் சீசன் இரண்டு போட்டியாளர்களாக மும்தாஜ், ஜனனி போன்றோரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
கடந்த 2017ம் வருடம் பாடகர் அர்ஜுனை காதல் மணம் புரிந்தவர் ரம்யா.. மனக்கசப்பினால் விவாகரத்து பெற்று தற்போது இரண்டாவது திருமணம் செய்திருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.
குவியும் அதிர்ஷ்ட வாய்ப்புகள்!லாஸ்லியாவுக்காக அவர் அப்பாவிடம் சூசகமாக சம்மதம் வாங்கிய கமல்
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!