பெண் என்பதால் 3 வயதில் விட்டு சென்ற தந்தை : ஷெரின் வாழ்க்கையில் நடந்த சோகம்

பெண் என்பதால் 3 வயதில் விட்டு சென்ற தந்தை : ஷெரின் வாழ்க்கையில் நடந்த சோகம்

தமிழ் திரைப்பட உலகில் 20வது காலங்களில் நடித்த முன்னணி நடிகைகளில் ஒருவரான ஷெரின், கன்னடம், தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய பல மொழி படங்களில் நடித்துள்ளார். கர்நாடகத்தில் பிறந்த இவர் பெற்றோருக்கு ஒரே மகள் ஆவார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் சக போட்டியாளர்களிடம் மிக அன்பாக பழகக்கூடிய நபர் என்பது தெரியவந்தது. 

இதன்மூலம் தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தையே ஷெரின் (sherin) உருவாக்கியுள்ளார். பிக் பாஸ் வீட்டில் ஷெரின் மிகவும் மகிழ்ச்சியான பெண்ணாக இருந்தாலும், அவரது வாழ்வில் மிகவும் துயரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இதுகுறித்து ஷெரின் ஒருமுறை பிக் பாஸ் நிகழ்ச்சில் கூறினார். என் அப்பா எனக்கு 3 வயது இருக்கும் போதே என்னை விட்டு சென்று விட்டார்.

twitter

எனது அம்மா தான் என்னை சிங்கள் மதராக என்னை வளர்த்தார் என கூறியிருந்தார். இதனை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரீஸ் டாஸ்க் நடைபெற்றது. அந்த டாஸ்க்கில் போட்டியாளர்களின் குடும்பத்தினர் பிக் பாஸ் வீட்டிற்கு வந்தார்கள். ஷெரினை பார்க்க அவரது அம்மா மற்றும் தோழி வந்திருந்தனர். அப்போது ஷெரின் தனது தாயிடம் சேரன் சார் என்னிடம் ஒரு அப்பா போல பாசமாக நடந்து கொள்கிறார். 

புது மணத்தம்பதிகள் ஆல்யா மானஸா - சஞ்சீவ் ஜோடியின் ரிசப்ஷன் கொண்டாட்டங்கள் !

எனக்கு அறிவுரை வழங்கி வருகிறார். அவரை பார்த்த பிறகுதான் அப்பா பாசம் என்றால் இப்படிதான் இருக்குமோ என்று தோன்றுகிறது. எனக்கு இந்த உணர்வும், பாசமும் பிடித்திருக்கிறது. இப்போதுதான் அப்பாவை பார்க்க வேண்டும் என தோன்றுகிறது என்று கூறி உருக வைத்தார். அதற்கு ஷெரினின் அம்மா நீ என்னிடம் சொல்லியிருந்தால் நான் அழைத்து வந்திருப்பேனே என்றார். 

அப்பா என்றால் இப்படிதான் இருப்பார்களா என்றே எனக்கு இங்கு வந்து சேரன் சாரை பார்த்தப் பிறகுதான் தெரிந்தது என்று கூறினார். ஏற்கனவே சிறு வயதில் இருந்தே தான் தனது அப்பாவுடன் வளரவில்லை. அந்தப் பாசம் என்னவென்று இதுவரை உணர்ந்ததே இல்லை என்று ஷெரின் கூறியிருந்த நிலையில் இந்த நிகழ்வு அனைவரையும் உணர்ச்சியில் ஆழ்த்தியது.

twitter

எனினும் ஷெரினின் அப்பா யார், அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார், எதற்காக மூன்று வயதில் ஷெரினை விட்டு சென்றார் என்ற கேள்விகள் எழுந்தன. ஆனால் இது குறித்து எந்த தகவலும் வெளிவராமல் இருந்த நிலையில் சமீபத்தில் ஷெரின் அப்பாவின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் ஷெரின் (sherin) குழந்தையில் அம்மா-அப்பாவுடன் இருக்கிறார். 

இந்நிலையில் ஷெரினின் சித்தி, இதுகுறித்து தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேட்டியளித்துள்ளார். அதில், ஷெரினின் அம்மா கர்ப்பமாக இருந்த போது அவரது குடும்பத்தினர் அனைவரும் ஆண் குழந்தை தான் பிறக்கும் என எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் ஷெரின் பெண்ணாக பிறந்ததால் அவரது குடும்பத்தினருக்கு அவரை பிடிக்கவில்லை. அதற்கு முக்கிய காரணம் அவர் பெண் குழந்தையாக பிறந்தது மட்டுமே.

twitter

மூன்று வயது வரை ஷெரின் அவரது அப்பா குடும்பத்தினருடன் இருந்தார். தொடர்ந்து ஆண் குழந்தை பிறக்காததால் வேறொரு திருமணம் செய்து கொள்ளப்போவதாக ஷெரினின் அப்பா கூறினார். இதனால் ஷெரினின் அம்மா ஒரு கட்டத்திற்கு மேல் அங்கு இருக்க முடியாமல் எனக்கு என் பெண் தான் முக்கியம் எனக்கூறி விட்டு அவரது அம்மா வீட்டிற்கு வந்துவிட்டார். 

தர்ஷனுடனானஉறவை விமர்சனம் செய்ய உனக்கு உரிமையில்லை : வனிதாவை வெளுத்து வாங்கிய ஷெரின்!

ஷெரினை (sherin) வளர்க்க அவரது அம்மா வீட்டுவேலைகள் கூட செய்து மிகவும் கஷ்டப்பட்டார். எனக்கு குழந்தை இல்லாததால் ஷெரின் தான் எனக்கு தாய் மற்றும் குழந்தை என அவர் சித்தி வாணி நிகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார். பிக் பாஸ் வீட்டில் வனிதா எழுப்பிய பிரச்சனையின் போது ஷெரின் அழுதது மிகவும் வருத்தமாக இருந்தது. இதற்கு முன்னர் அவர் அப்படி அழுது நான் பார்த்ததில்லை. 

twitter

சிறு வயது முதல் நான் தான் அவளுடன் பெரும்பாலான நேரங்களில் இருந்தேன். மேலும் அவளுக்காக தனது படிப்பையே விட்டுவிட்டதாக ஷெரினின் சித்தி கூறியுள்ளார். இதனை ஷெரினும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஷெரின் மற்றும் தர்ஷன் நல்ல நண்பர்கள், ஷெரினுக்கு அவரது வாழ்க்கை குறித்து அவரே முடிவெடுக்க உரிமை உள்ளதாகவும், 

மேலும் ஷெரினின் அப்பா ஒரு அழகான தேவதையை மிஸ் செய்துவிட்டார் என அவர் சித்தி தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து பேசிய ஷெரினின் தோழி ஸ்ரீஜா, அப்பாவின் பாசம் என்ன என்பதை சேரனிடம் தான் ஷெரின் உணர்ந்துள்ளார். அதனால் தான் அவர் தன் அப்பாவை பார்க்க விரும்புவதாக கூறியுள்ளார்.

இதற்கு முன்னர் ஒரு நாள் கூட அவர் அப்படி கூறியதில்லை, சேரன் அப்பா பாசம் என்றால் என்ன என்பதை ஷெரினுக்கு உணர்த்தியுள்ளதாக அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஷெரின் வனிதாவால் மிகவும் கஷ்டப்பட்டார் அதனால் தான் வனிதாவை நான் நம்பாதே என கூறிவிட்டு வந்தேன் என ஸ்ரீஜா விளக்கம் அளித்துள்ளார். 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!