புது மணத்தம்பதிகள் ஆல்யா மானஸா சஞ்சீவ் ஜோடியின் ரிசப்ஷன் கொண்டாட்டங்கள்!

புது மணத்தம்பதிகள் ஆல்யா மானஸா சஞ்சீவ் ஜோடியின் ரிசப்ஷன் கொண்டாட்டங்கள்!

விஜய் டிவி என்றாலே அது பிரபலம் எனும் ஒரு சூழல் இருக்கிறது. அந்த அளவிற்கு மற்ற சேனல்களுடன் போட்டி போட்டிக் கொண்டு விஜய் டிவி வித்யாசமான நிகழ்ச்சிகளை கொடுத்து வந்திருக்கிறது.

பொழுதுபோக்கு சேனல் என்பதற்கேற்ப ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் தொகுப்பாளர்கள் செய்யும் அரட்டை மற்றும் வால்தனங்கள் தான் சேனலின் ஹைலைட். அப்படி மக்களால் கொண்டாடப்பட்ட ஒரு நிகழ்ச்சிதான் ராஜா ராணி சீரியல்.

ஏழைப் பெண் சந்தர்ப்பவசமாக தான் வேலை செய்யும் வீட்டிலேயே மணமகளாக நேர்ந்தால் என்னென்ன சோதனைகளை அவள் எதிர்கொள்ள வேண்டி வரலாம் என்பதான ஒரு கதை. இதன் கதைக்களம் மக்களுக்குப் பிடித்துப் போக அதில் நடித்த செம்பா (ஆல்யா மானஸா) வும் சின்னய்யா (சஞ்சீவ்) வும் பிரபலம் ஆனார்கள்.                                  

ஆல்யா வீட்டுல பேசிப் பார்த்தோம்.. ஒத்துக்கல..இப்போ ஆல்யா எங்க வீட்டுலதான் இருக்கா -சஞ்சீவ்

அதன் பின்னர் சீரியலில் நடிக்கும்போதே இருவருக்கும் காதல் தீ பற்றிக் கொள்ள அவர்கள் சீரியல் வளர்ந்தது போலவே காதலும் வளர்ந்தது. இந்த ஜோடி எங்கே சென்றாலும் ஒன்றாகவே சென்றார்கள். சமூக வலைத்தளம் எங்கும் தங்களுடைய புகைப்படங்களை பகிர்ந்து தங்கள் காதலை மெளனமாக உறுதி செய்தார்கள்.

சமீபத்தில் நடந்த விஜய் டிவி விருது வழங்கும் விழாவில் கூட இருவரையும் மேடையிலேயே மாலை மாற்றிக் கொள்ள செய்தனர் அவர்கள் நண்பர்கள். இந்நிலையில்தான் கடந்த வாரம் ஆல்யா மானஸா -சஞ்சீவ் ஜோடிக்கு திருமணம் ஆனதாகத் தகவல்கள் பரவியது.                               

தர்ஷனின் நண்பரை மணந்த பிக் பாஸ் போட்டியாளர் ரம்யா! தர்ஷனின் காதலி சனம் ஷெட்டி வாழ்த்து !

அதனை உண்மைதான் என்று ஒப்புக் கொண்ட சஞ்சீவ் அதற்கான ஒரு புகைப்படத்தையும் இன்ஸ்டாக்ராமில் பகிர்ந்து திருமண தகவலை சொல்ல முடியாததாக மன்னிப்பு கேட்டு கொண்டார். கூடவே ரிசப்ஷன் (reception) வைக்கப் போகும் தகவலையும் சொன்னார்.

அதன் அடுத்த கட்டமாக ஆல்யா மானஸா சஞ்சீவ் ஜோடியின் ரிசப்ஷன் அலங்காரங்கள் பற்றி சஞ்சீவ் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருக்கிறார். அனேகமாக இந்த செய்தி உங்கள் கண்களில் படுகிற நேரம் அவர்களுடைய ரிசப்ஷன் முடிந்திருக்கலாம்.

காதல் ஜோடிகளுக்கு மீண்டும் வாழ்த்துக்கள்!                                                                  

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!