வினை தீர்க்கும் நாயகனே ! விநாயகரிடமிருந்து கற்றுக்கொள்ள 8 முக்கியமான வாழ்க்கைப் பாடங்கள்

வினை தீர்க்கும் நாயகனே ! விநாயகரிடமிருந்து கற்றுக்கொள்ள 8 முக்கியமான வாழ்க்கைப் பாடங்கள்

"சரணு சித்தி  விநாயகா , சரணு வித்யா ப்ரதாயகா ... "

என்று அனைத்து காரியங்களுக்கும் நாம் வணங்கும் முதற்கடவுளான விநாயகரின் பண்டிகையாகும் விநாயகர் சதுர்த்தி(vinayagar chaturthi). ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் இரண்டாம் தேதி கொண்டாடப்படும் இவ்விழா விநாயகரின் பிறந்த நாளாக கருதி கொண்டாடப்படுகிறது. 

விநாயகர் அனைத்து தடைகளையும் நீக்கி நாம் தொடங்கும் ஒவ்வொரு பணியிலும் வெற்றியை அளிப்பதாக நம்பி அவரை வழிபடுவது வழக்கம். அவர் ஞானம் மற்றும் அறிவின்  பிரதிநிதி ஆவர். எனவே எந்த ஒரு பணியையும் தொடங்குவதற்கு முன்னதாக அவரை நாம் வணங்குவது வழக்கம் . மேலும் அவருடைய வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக் கொள்ளக்கூடிய பல படிப்பினைகள் (பாடங்கள்) நம் அன்றாட வாழ்க்கைக்கு தேவைப்படும் ஒன்றாகும். இது நிச்சயமாக உங்கள் சொந்த சுயத்தை மேம்படுத்த உதவும்.அத்தகைய வாழ்க்கைப் பாடங்களை தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்.

 

1. பொறுப்புணர்வு வேண்டும்

கடமையும் அர்ப்பணிப்பும்  எப்பொழுதும் முக்கியமான ஒன்றாகும் . புராண ரீதியாக விநாயகர் தலை துண்டிக்கப்பட்டு அதன்பின் யானையின் தலையை பெற்றார் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு கதையாகும். இந்த முழு கதையும் ஒருவரின் கடைமையை குறிக்கிறது . இது எவ்வளவு முக்கியமானது என்பதையும், விநாயகர் தனது தாயார் பார்வதிக்கு கொடுத்த சொற்களை (கடமையை) எவ்வாறு கடைபிடித்து  உயிரை பணையம் வைத்து தனது கடமையை செய்துள்ளார் என்பதையும் கூறுகிறது.

வாழ்க்கைப் பாடம்: 

 • உங்கள் கடமைகளை முழு மனதுடன் முழுமையாக்குங்கள்
 •  உங்கள் பாதையில் வரும் எந்த அச்சுறுத்தலுக்கும் அஞ்சாதீர்கள்
 • நீங்கள் உண்மையிலேயே உங்களுக்கு  தகுதியான வெகுமதியைப் பெறுவீர்கள்

2. எல்லோரையும் (உயிரினங்களையும்) மதிக்க வேண்டும்

வேறுபாடுகள் நிறைந்த இந்த உலகில், அனைவரும் 'வாழ' வந்திருக்கிறோம் என்றது நினைவில் இருக்கட்டும்!  நாம் அனைவரும் பெரிதோ சிறிதோ , மனித அல்லது பிற உயிரினங்களை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். பிள்ளையார் ஒரு சிறிய எலியின் திறமைகளை கண்டறிந்து அதை தனது வாகனமாக கருதினார்.

 இதுவே மற்றவர்களை எவ்வாறு மதிக்க வேண்டும் என்பதற்கான உச்சகட்ட உதாரணமாகும். மற்றவர்களை மதிப்பது நம்மை வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு கொண்டுசெல்லும் என்றது நினைவில் இருக்கட்டும். 

 வாழ்க்கைப்பாடம் :

 • மற்றவர்களை மரியாதையுடனும் , அன்புடனும் , இறக்கத்துடன் நடத்தவேண்டும்.
 • மற்றவர்களை தோற்றத்தை வைத்து  இழிவுபடுத்த கூடாது 

3. கவனிக்கும் திறன்

விநாயகரின் பிரமாண்டமான காதுகள் அவரது பக்தர்கள் கூறும் அனைத்து கோரிக்கைகளையும் கவனிக்கும் ( கேட்பார் ) என்று நம்பப்படுகிறது.  அவர் மற்றவர்கள் சொல்வதை கவனிக்கும் கலையில்  சிறந்த வல்லுனராக கருதப்படுகிறார். எத்தகைய தகவல் தொடர்பு கலையாக இருந்தாலும் அதில் பேசுவது மட்டுமல்லாமல் கவனிப்பதும் அடங்கியுள்ளது. கொடுக்கப்பட்ட சூழ்நிலையை புரிந்துகொண்டு முழுமையான ஞானத்துடன், கவனத்துடனும் அற்புதமாக பதில் அளிக்கும் திறன் கொண்டவர் விநாயகர். 

வாழ்க்கை பாடம்:

 • பேச்சு மட்டும் இல்லாமல் கவனிக்கும் கலையையும் கற்றுக் கொள்ளுங்கள்
 •  இது நேரத்தையும் சக்தியையும் மிச்சப்படுத்தும்
 • தேவையற்ற மோதல்களை தவிர்க்க உதவும்

4. சுய மரியாதை

ஒரு சமயம்,  அனைத்து தேவர்களும் விநாயகரின் பாரிய உணவுப்பழக்கத்தை பார்த்து அவரை ஏமாற்றி ஸ்வர்கலோகத்தை  கவனித்துக் கொள்ள வைத்து விட்டு, பகவான் விஷ்ணு மற்றும் லக்ஷ்மி தேவியின் திருமண ஊர்வலத்தில் சென்றிருக்கின்றனர் . இதை அறிந்த விநாயகர் அவர்களின் வழியில் சில தடைகளை உருவாக்கி பின்னர் அவரின் முக்கியத்துவத்தையும் குணாதிசயங்களையும் அவர்களுக்கு உணர்த்தி உள்ளார்.

 வாழ்க்கை பாடம் : 

 •  உங்களை மதிப்பிடாத  சூழ்நிலை / நபர்களிடமிருந்து விலகிச் செல்லுங்கள் 
 • மேலும் ஒரு நபரின் தோற்றத்தை வைத்து ஒருபோதும் குறைத்து மதிப்பிடாதீர்கள்

5. தியாகம்

புராணங்கள் கூறுவது போல், ஒரு முறை வேத வியாசகர்  விநாயகரை, மனித குலத்தின் மிக முக்கியமான காவியமான மகாபாரதத்தை அவர் கூறும் படி எழுத கூறியிருக்கிறார். விநாயகர் எழுதத் தொடங்கியதும் அவரது பேனா உடைந்து போக, அவர் தனது ஒரு தந்தத்தை உடைத்து தொடர்ந்து எழுதி முடித்திருக்கிறார்.  அவரது இந்த குணம் ஒரு நல்ல காரணத்திற்காக அவரது அர்ப்பணிப்பையும் தியாகத்தையும் காட்டுகிறது.

வாழ்க்கை பாடம் : 

 • பிற நன்மைக்காக தியாகம் செய்ய கற்றுக்கொள்ளுங்கள் 
 • எந்த ஒரு வேலையாக இருந்தாலும் அதில் அர்ப்பணிப்புடன் கடைசிவரை செய்து முடிக்க வேண்டும்

 

6. உங்கள் பெற்றோரை நேசிக்கவும்

விநாயகர் தனது சகோதரர் கார்திகேயனுடன் போட்டியிட்டு அற்புதமாக வென்ற ஞானப்பழத்தின் கதையை நாம் அனைவரும் அறிவோம். தனது பெறோர்கள் கூறியதுபோல் , கார்த்திகேயன் தனது வாகனமான மயிலுடன் உலகத்தை மூன்று முறை சுற்றி வர கிளம்பியபோது, விநாயகரோ தனது பெற்றோரை உலகமாக கருதி சுற்றிவந்து புத்திசாலித்தனமாக அந்த ஞானப்பழத்தை வென்றார். இதுவே அவரது பெற்றோர் மீதான அன்பையும் மரியாதையையும் காட்டுகிறது.

வாழ்க்கைப்பாடம் : 

 • பெற்றோரை எப்பொழுதும் நேசிக்க கற்றுக்கொள்ளுங்கள்  ஏனெனில் அவர்களால் மட்டுமே நாம் இங்கு உள்ளோம் 
 • பெற்றோர்களுக்கு கடைசி வரை சேவை செய்ய வேண்டும் 
 • இது இக்காலகட்டத்தில்  அனைவருக்கும் தேவையான ஒரு முக்கியமான பாடமாகும்! 

 

7. மற்றவர்களை மன்னிக்கும் கலை

ஒரு முறை  விநாயகர் அதிர்ஷ்டத்தின் அதிபதியான குபேரன் வழங்கிய விருந்துக்கு சென்றிருந்ததாகவும் அவர் திரும்பி வந்துகொண்டிருந்தபோது சந்திரன் அவரது கனமான வயிற்றைப் பார்த்து கேலி செய்யப்பட்டதாகவும் கருதப்படுகிறது. கோவம் அடைந்த விநாயகர் சந்திரனைப் பார்த்து அன்றிலிருந்து காணாமல் போய் விடுவாய் என்று சபித்திருக்கிறார்.  சந்திரனோ மன்னிப்பு கேட்க, விநாயகர் அவரை முழு மனதுடன் மணித்தொருக்கிறார். மேலும் சாபத்தை மாற்றியமைக்க முடியாததால் ஒரே ஒருநாள் கண்ணுக்குத் தெரியாமல் சந்திரன் இருப்பார் என்று தனது சாபத்தை குறைத்திருக்கிறார் விநாயகர்.

 வாழ்க்கைப் பாடம் :  

 • குற்ற உணர்ச்சியுடன் மன்னிப்பு கேட்போரை முழுமனதுடன் மன்னியுங்கள்
 • உங்கள் கோபத்தை கட்டுப்படுத்த கற்றுக் கொள்ளுங்கள் இல்லாவிட்டால் அது உங்களை கட்டுப்படுத்தி இதுபோல் அவசரமான தவறான முடிவுகளை எடுக்கத் தூண்டும்

8. சக்தியின் மீது கட்டுப்பாடு தேவை

விநாயகரின் பிரமாண்டமான காதுகள் அவரது ஆழ்ந்து கவனிக்கும் / கேட்கும் திறனை பற்றி எவ்வாறு கூறுகிறதோ அதை போலவே அவரது ஒரு பக்கம் மடிந்திருக்கும் தண்டு அவரது சக்தியை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதை குறிக்கிறது. ஒருவரின் சக்தியை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு வாழ்கையில் சீராக நகர வேண்டும் என்பதே இதன் கருத்தாகும். 

வாழ்க்கை பாடம் : 

 • தாழ்மையுடன் இருந்து பழகுங்கள் 
 • நன்றியுடன் இருங்கள் 
 • பலருக்கு உதவி செய்து பழகுங்கள் 
 • தலைக்கனம் வேண்டாம் 
 • எந்த சக்தியும் உங்கள் எண்ணங்களையும் வாழ்க்கையையும் கட்டுப்படுத்துவதை தவிர்க்கவும்.

 

மேலும் படிக்க - விநாயகர் சிலை கரைக்கப்படுவதன் அறிவியல் காரத்தை தெரிந்துகொள்ளுங்கள் !

பட ஆதாரம் - Giffy, Pexels

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.