வரலக்ஷ்மி பூஜை : அம்மனை அலங்கரிக்க சில அழகிய யோசனைகள்

வரலக்ஷ்மி பூஜை : அம்மனை அலங்கரிக்க சில அழகிய யோசனைகள்

ஆடி மாதத்தில் வரும் அனைத்து பண்டிகைகளும் விசேஷமானது தான். அதிலும் வரலட்சுமி நோன்பு (varalakshmi puja) பெண்களுக்கு மிக விசேஷமான நாளாகும்! இந்த வருஷம் வரலட்சுமி நோன்பை நீங்கள் பின்பற்ற போகிறீர்களா? அப்படியானால் அம்மனை எவ்வாறு அலங்காரம் செய்யலாம் என்ற அணைத்து யோசனைகளுடன் உங்கள் பூஜை அறையை அலங்கரிக்க (decor) தேவையான அனைத்து பொருட்களையும் உத்திகளையும் இங்கு காணலாம்.

வரலக்ஷ்மி அம்மனை அலங்காரம் செய்ய 8 அழகிய விதங்கள்

இந்த ஆண்டு வரலட்சுமி அம்மனை அலங்கரிக்க வளையல்கள், புடவைகள், தேங்காய், கலசம் இவை அனைத்தையும் கொண்டு சில வித்தியாசமான வழிகளை இங்கு காணலாம்.

1. கலசத்தில் தேங்காய்

Pinterest

இது மிகவும் எளிமையான ஒரு அலங்கார முறை ஆகும். ஏதேனும் ஒரு வெள்ளி அல்லது செம்பு குடத்தை/கலசத்தை  வைத்து அதற்கு புடவை கட்டி, இது போல் அதன் மேல் தேங்காயை வைத்து அலங்கரிக்கலாம் . தேவைப்பட்டால் கடைகளில் இருந்து அம்மனின் முகத்தை வாங்கி அதை குடத்தின் மேல் தேங்காய்க்கு பதிலாக அமைத்துக் கொள்ளலாம். 

2. கலசத்தில் முகம்

Pinterest

இதுபோன்ற அம்மனின் முகத்தை வெள்ளியில் பல கடைகளில் காணலாம். இதில் நீங்கள் தேவைப்பட்டால் முகத்தில் மஞ்சள் பூசியும் அலங்கரிக்கலாம் அல்லது இது போன்ற அம்மனின் முகத்தை மஞ்சள் மற்றும் சந்தனத்தை கலந்து வீட்டிலேயே செய்து அதை  கலசத்தில் வைக்கலாம். அம்மனின் முகத்தை  எவ்வாறு செய்யலாம் என்று இங்கு காணலாம் .

3. அம்மனின் முழு உருவம்

Pinterest

அம்மனை முழுமையாக அலங்கரிப்பதில் உங்களுக்கு  ஈடுபாடு உள்ளது என்றால் இது போன்ற முழு உருவத்தையும் நீங்கள் உருவாக்கலாம். முன்புறத்தில் முகத்தை வடிவமைத்து அதற்கேற்ப புடவை கட்டுவது போல் பின்பக்கம் தேவையான அலங்கார விவரங்களை இதில் பார்க்கலாம்.

4. அம்மனின் பொற்பாதங்கள்

Pinterest

கலசத்தில் தேங்காய் அல்லது அம்மனின் முக வடிவத்தை உங்களால் உருவாக்க முடியவில்லை என்றால் கவலை வேண்டாம். இது போன்ற பாதங்களை  வடிவமைத்து முகத்திற்கு பதிலாக தேங்காய்யை வைத்தும், எளிமையாக உங்கள் பூஜையின் வழிபாடுகளை பின்பற்றலாம்.

5. புடவை அலங்காரம்

Pinterest

உங்களுக்கு புடவை அணிவது மற்றும் மட்டப்பூவை  வைத்து அலங்கரிப்பதில் ஆர்வம் உள்ளது என்றால் இது போன்ற ஒன்றை முயற்சிக்கலாம். இதில் அம்மனின் முகம், தேங்காய் அல்லது சிறிய செடியையும் வைத்து பூஜை செய்யலாம். அம்மனுக்கு சேலையை எப்படி கட்டலாம் என்று தெரிந்துகொள்ள இங்கே பாருங்கள்.

6. வளையல் அலங்காரம்

Pinterest

பெரும்பாலும் பெண்களுக்கு வளையல் பிடித்த ஒரு  அணிகலன் ஆகும். அதிலும் இந்துக்களின் கலாச்சாரத்தில் மற்றும் இது போன்ற பூஜைகளில் வளையல்களுக்கு  ஒரு முக்கியத்துவம் உள்ளது. ஆகையால் வரலட்சுமி நோன்பின் போது நீங்கள் இதுபோல் கண்ணாடி வாளையல்களை வைத்தும்  வரலட்சுமி அம்மனை அலங்கரிக்கலாம். 

7. அமர்ந்திருக்கும் அம்மன்

Pinterest

மேல் கூறியிருக்கும் அலங்கார யோசனைகள் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால்   அம்மன் அமர்ந்திருக்கும் நிலையில் இதுபோன்ற ஒரு அலங்காரத்தை செய்யலாம். அல்லது அம்மனின் முகத்தை மட்டுமே வைத்து கீழ் பகுதிகளுக்கு சேலையை கட்டி அலங்கரிக்கலாம்.

8. ஆட்டுக்கல் பூஜை

Pinterest

இன்றைய  காலகட்டத்தில் நாம் அம்மனின் முகத்தை வைத்து இந்த வரலட்சுமி நோன்பை வழிபட்டு வருவதை போல் பழங்காலங்களில் முன்னோர்கள்  பெண்கள் இது போன்ற ஆட்டுக்கல்லை பயன்படுத்தி, அதை அம்மனாக கருதி, தனது வரலட்சுமி நோன்பை பின்பற்றி உள்ளார்கள். ஆகையால் நீங்களும் இதுபோல் செய்யலாம்.

வரலக்ஷ்மி பூஜையை (விரதம்) எவ்வாறு பின்பற்றுவது என்ற முழு விவரத்தையும் இங்கு  காணலாம். 

பூஜை அறையை அலங்கரிக்க சில யோசனைகள்

Pinterest

தாமரை - இதுபோன்ற தாமரையில் கலசத்தை அல்லது அம்மனின் வடிவத்தை நிறுத்தி வைத்தால் அழகாக இருக்கும்.

தேங்காய் - பூஜைக்கு தேவையான தேங்காய் மற்றும் பழங்களை இதுபோன்ற அலங்காரப் பொருட்களை கொண்டு அலங்கரிக்கலாம்.

 

அம்மனுக்கு மாலை - சாமந்திப்பூ, மல்லிகை பூ, அரளி, துளசி  என்று பல்வேறு பூக்களைக் கொண்டு அலங்கரித்தாலும் இதுபோன்ற ஒரு ரோஜா பூ மாலையும்  மிக அற்புதமாக இருக்கும்!

அலங்கார பொருட்கள் வாங்க நாங்கள் பரிந்துரைப்பது -

1. எஸ் எஸ் கிராப்ட் கிரியேஷன் ரங்கோலி செட் (ரூ 299)
2. உதகர்ஷ் பான்சி லேஸ் பார்டர் (ரூ 239)

 

Pinterest

தோரணை - இது போன்ற பூக்களை கொண்ட தோரணங்களும் உங்கள் பூஜை அறையை அழகாக மாற்ற உதவும்.அல்லது ரெடிமேட் தோரணங்களை வாங்க விரும்பினால், டீடல் க்ராப்ட்ஸ் சிம்பிள் கோன் டோர் செட் (ரூ 656)

 

மேலும் படிக்க - கண்ணை கவரும் கோலங்கள் : ஆடி மாத பூஜைகளை மேலும் அழகு படுத்த சில அழகிய கோலங்கள்!

பட ஆதாரம் - Pinterest, youtube, instagram

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.