கண்ணை கவரும் கோலங்கள் : ஆடி மாத பூஜைகளை மேலும் அழகு படுத்த சில அழகிய கோலங்கள்!

 கண்ணை கவரும் கோலங்கள் :  ஆடி மாத பூஜைகளை மேலும் அழகு படுத்த சில அழகிய கோலங்கள்!

கோலம் பெரும்பாலும் அனைவருக்கும் பிடித்த ஒரு கலை ஆகும். இது ஒரு வகையான உடல் மற்றும் மனதை சீராக்கும் கலை என்றும் கூறலாம்! வண்ணங்களுடனும் கற்பனைகளுடனும் விளையாடிக்கொண்டே இருக்கலாம். மனதை கவரும் அழகிய வண்ணங்கள் நிறைந்த கோலங்களில் பண்டிகை நாட்களை கொண்டாட, இங்கு சில எளிதில் வரையக்கூடிய கோலங்களை காட்டியுளோம். இவை அனைத்தையும் முயற்சித்து உங்கள் கற்பனை திறனை தட்டி எழுப்புங்கள்.

1. ஒரே வடிவம்

Instagram

ஒரே வடிவத்தில் எளிதில் வரையக்கூடிய  கோலம் இது. அரைவட்டத்தில் மலர்களைப் போல் வடிவம் கொண்ட இந்த கோலத்தை இது போல் ஒரே நிறத்தில் அழகு படுத்தலாம். அல்லது வெவ்வேறு வட்டங்களுக்கு வெவ்வேறு நிறங்களை கொடுத்தும் அழகுபடுத்தலாம். கோலம் போடுவது உங்களுக்கு புதிதாக இருந்தால், இது போல ஒரு சிம்பிளான கோலத்தை (kolam) முயற்சித்து பாருங்கள்.

2. வண்ண மயில்

Instagram

மயில் கோலம் வரைவது மிக சாதாரண ஒன்றாக இருந்தாலும் இதில் பல வகைகள் உள்ளன. மயிலின் அனைத்து அம்சங்களையும், நுணுக்கமான விவரங்களையும் உங்கள் கோலத்தில் காட்ட முடியாவிட்டாலும் இதுபோல் எளிதாக ஒரு மயில் கோலத்தை நீங்கள் வரையலாம்.இதில் முதலில் மயிலை வரைந்து முடித்த பிறகு அதை சுற்றியுள்ள சிறிய வடிவங்களை (design) உங்கள் தேவைக்கேற்ப வரையுங்கள். 

3. அழகிய பூ

Instagram

ஒரு அழகிய சாமந்திப் பூவின் வடிவத்தில் இருக்கும் இந்த கோலத்தில் நீங்கள் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் இதன் நிறம் ! எந்த நிறத்துடன் எந்த நிறம் சேர்ந்தாள் நன்றாக இருக்கும்  என்று புரிந்துகொண்டு இதை வரைய வேண்டும். மேலும், இந்த சிம்பிள் கோலத்தின் மேல் இருக்கும் வடிவங்களை உங்கள் கற்பனை திறனுக்கு ஏற்ப அமைத்துக்கொள்ளலாம். 

4. வட்டத்துக்குள் வரி கோலம்

Instagram

எளிமையான வடிவங்கள் கொண்ட மற்றுமொரு அற்புதமான கோலம் இது. முன்னதாக கோளங்களில் போடக்கூடிய வரி கோலங்களில் இருந்து ஆரம்பித்து அதை ரங்கோலி வடிவத்தில் முடித்திருக்கிறார்கள். நடுவில் இதுபோன்ற வரி கோலத்தை தவிர  சிக்கு கோலம் அல்லது ஏதேனும் ஒரு சிறிய புள்ளி வைத்து கோலம் போட்டு அதை ரங்கோலி (rangoli) உடன் இணைக்கலாம். 

 

5. மாங்கா வடிவம்

Instagram

அனைவருக்கும் கோலம் அல்லது மெஹந்தி என்றால் இதுபோல் ஒரு மாங்காய் வடிவம் மிகவும் பிடித்த ஒன்றாக இருக்கும். இது அனைத்து வடிவங்களிலும் மிக எளிதான ஒன்றாகும் .இது  போல் 4 அல்லது 6 வடிவங்களைக் கொண்டு இந்த கோலத்தை அழகுபடுத்தலாம். மேலும் இந்த வடிவத்தின் உள்ளே ஒரே நிறத்தில் நிரப்பி, கட்டங்களுக்கு பதிலாக நேர் கோடுகளைக் கொண்டு ஒரு புது வடிவத்தையும்  உருவாக்கலாம்! 

6. இலை கோலம்

Instagram

இலைகளில் பல வடிவங்கள் உள்ளன. அதில் உங்களுக்குப் பிடித்த ஒரு வடிவத்தைக் கொண்டு இதுபோல் ஒரு கோலத்தை வரையலாம்.  இந்த கோலத்தின் தனித்துவம் இதன் நிறம் தான். ஒரே நிறத்தில் இல்லாமல் ஒவ்வொரு இலைக்கும் தனித்தனி நிறங்களை கொண்டு அல்லது இரண்டு நிறங்களைக் கொண்டு இதை வண்ணமயம் ஆக்கலாம். 

7. ஸ்வஸ்திக் கோலம்

Instagram

ஸ்வஸ்திக் வடிவத்தை இதுபோல் ஆக்கப்பூர்வமாகவும் வரையலாம். இதை உங்கள் பூஜை அறையின் முன் அல்லது ஓரங்களில் வரைந்து பூஜை அறையை அலங்கரிக்கலாம். இதில் அடர் நீல நிறம் மற்றும் பச்சை நிற காம்பினேஷனும்  அற்புதமாக இருக்கும்.  

8. வெள்ளை நிற மயில்

Pinterest

எந்தவித நிறமும் தேவை இல்லை என்று நினைத்தால் இது போல் ஒரு வெள்ளை நிற மயிலை வரையலாம். வெள்ளை மற்றும் செம்மண் நிறத்தின் கலவை எப்பொழுதும் ஒரு நேர்த்தியான வடிவத்தை அளிக்கும். இந்த கோலத்தின்  கீழ் இருக்கும் குஞ்சம் கொண்ட வடிவங்களுக்கு பதிலாக பூக்கள் அல்லது இலைகளைக் கொண்டும் வரையலாம்.

டிப் - மயில் கோலங்களில் மயிலின் முகம் மற்றும் கழுத்து பகுதிகளை மட்டும் அழகாக வரைந்து விட்டால் போதும்.  மற்றதை உங்கள் கற்பனைக்கேற்ப அமைத்துக்கொள்ளலாம்.  

9. பார்டர் கோலம்

Instagram

கோலங்களை வாசல்களிலும், நடுவீட்டிலும் மட்டுமில்லாமல் இதுபோல் வீட்டின் ஓரங்களிலும் வரைந்து  பூஜை நாட்களில் வீட்டை முழுமையாக அழகுபடுத்தலாம். நாங்கள் முந்தியதாகக் சொல்லியது போல் கோலங்கள் வரைவதில் உங்கள் கற்பனை திறன் எல்லையற்றதாக இருக்க வேண்டும் .  இதுபோன்ற அலங்கரிக்கும் பொருட்களைக் கொண்டும் உங்கள் கோலங்களை வடிவமைக்கலாம். 

10. வானவில் நிறங்கள்

Instagram

மீண்டும்,  எளிதில் வரையக்கூடிய ஒரு  கோலத்தில் சில அற்புதமான நிறங்களின் கலவையை  இங்கு காணலாம்! இதன் தனித்துவம் இதில் உள்ள நிறங்களின் அமைப்பு  என்று கூறலாம். இத்தகைய நிறங்கள் கொண்ட இந்த கோலத்தை இப்போதே முயற்சித்து பார்க்க ஈர்த்திருக்கும் என்று நம்புகிறோம். 

11. வட்டத்தில் இது புதிது

Instagram

இதுவரை பார்த்த கோலங்கள் ஏதும் பிடிக்கவில்லை என்றால் இதை முயற்சித்து பாருங்கள். வட்டங்கள், அரை வட்டம், முக்கோணங்கள், சிறிய பூக்கள் என்று அனைத்தும் அடங்கி இருக்கும் இந்த கோலம் உங்கள் கற்பனை திறன் அனைத்தையும் தட்டி எழுப்பும். 

12. லட்சுமி கோலம்

Instagram

கடைசியாக, நீங்கள் கோலத்தில் மிகவும் ஆர்வம் உள்ளவராகவும் திறமைசாலியாகவும் இருந்தால்,  இது போன்ற அழகிய அம்பாள் முகம் கொண்ட ரங்கோலியை முயற்சித்து பாருங்கள். இந்த ஆடி மாதத்தில் வரும் அனைத்து பூஜைகளுக்கும் மற்றும் உங்கள் மனதை மகிழ்விக்கும்  ஒரு அற்புதமான கோலம் இது. 

கோலம் போடுவது : நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டிய விஷயங்கள்

1. கோலம் உங்களுக்கு புதிது என்றால், சிறிய டிசைன்களை மீண்டும் மீண்டும் முயற்சி செய்து பாருங்கள். 

2. இந்த வடிவங்களை நீங்கள் தினம்தோறும் பல இடங்களில் ( வீட்டில் / வெளியில் )  பார்த்து கவனித்து முயற்சிக்கலாம்.

3. நிறங்களை நிரப்பிய  பிறகு மீண்டும் வெள்ளை நிறத்தால் கடைசியாக ஒரு முறை வரைந்தால், கோலத்தின் பினிஷ் அட்டகாசமாக இருக்கும்.

4. டிசைனை நிறங்களால் நிரப்ப வடிகட்டி அல்லது ஏதேனும் ஒரு  ஜல்லடையை பயன்படுத்தலாம்.

5. வளையல், ஸ்பூன், தட்டு , சீப்பு என்று வடிவம் குடுக்கும் எந்த ஒரு பொருளாக இருந்தாலும் அதை பயன்  படுத்தி மேல் கூறியிருக்கும் வடிவங்களை வரைலயாம். 

இது போதாது என்றால்,  ரங்கோலி வரைய தேவைப்படும் கருவிகளை கொண்டு வரையுங்கள் 

ரேடி  டு ட்ரா  ரங்கோலி மேக்கிங் கிட் (ரூ 699)

ரங்கோலி ரவுண்டு ஸ்டென்சில் (ரூ 240)  

 

மேலும் படிக்க - அம்மனுக்கு உகந்த ஆடி மாத ஸ்பெஷல் ரெசிபிகள் ஈஸியாக செய்யலாம்!

பட ஆதாரம் - Instagrm 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.