மழைக் காலத்தில் நீங்கள் திருமணம் செய்து கொள்ளப் போகிறீர்கள் என்றால் நீங்கள் தேர்வு செய்யும் உடையில் (dress) அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.ஏனெனில் மழையோடு திருமண மண்டபங்களும் நிறைந்திருக்கும். வீட்டில் உறவினர்கள், நண்பர்கள் சூழ்ந்திருக்க விருந்தினர்களின் வருகையால் மனநிறைவு பெற்றிருந்தாலும் மணப்பெண்ணிற்கு அவரது திருமண உடை குறித்து கவலை இருக்கும். மழையால் உடை சேதமாகிவிடுமோ என்ற கவலை அதிகம் மனதில் எழும். குளிர்காலத்திற்கு உடைகளை எப்படி தேர்வு செய்வது என இங்கு காணலாம்.
முழுநீள பிளவுஸ்
மழைக்காலத்தில் குளிரினால் அடிக்கடி உடல் சிலிர்த்துக்கொள்ளும். அதிலும் மணப்பெண்ணாக ஜொலித்துக் கொண்டிருக்கும் சமயத்தில் இதுபோன்ற தருணங்களை சமாளிப்பது கடினம்தான். இதற்கு முழுநீளக்கை பிளவுஸ் பெரிதும் உதவும். சமீபத்தில் ஸ்லீவ் போன்ற பிளவுஸ்களை தான் பெண்கள் திருமணத்திற்காக பெரும்பாலும் தேர்ந்தெடுக்கின்றனர். ஆனால் கற்கள் பதித்த முழுநீளக்கை பிளவுஸ் வித்தியாசமான தோற்றத்தோடு அதிகப்படியான குளிரையும் கட்டுப்படுத்தும். பிரின்ட்ஸ், எம்ப்ராய்டரி என எந்த வகை பேட்டர்னாகட்டும், வெல்வெட், சிபான் போன்று எந்தத் துணி வகையாகட்டும் முழுநீளக்கை குளிருக்கு கைகொடுக்கும்.
மணப்பெண் ஆகப் போகிறீர்களா! தேர்ந்தெடுங்கள் உங்களுக்கான சிறந்த மணப்பெண் அலங்கார பார்லரை!
துணியில் கவனம் தேவை
மழைக்காலத்தில் சரியான துணியை (dress) தேர்ந்தெடுப்பது அவசியம். ஒரு நாள் முழுவதும் ஈரமாக இருப்பதற்கும் அல்லது ஒரு மணி நேரத்தில் உங்கள் ஈரத்தை உலர்த்துவதற்குமான வித்தியாசம் துணியில் இருக்கிரது. சூட், டெனிம் மற்றும் தோல் போன்ற துணிகள் ஈரப்பதத்தை தக்கவைப்பதோடு அவை விரைவாக உலர்ந்தும் போகாது. ஆனால் பாலியஸ்டர் மற்றும் காட்டன் போன்ற துணிகள் மிகவும் வசதியாக இருப்பதோடு விரைவாகவும் உலர்ந்துவிடும். இதனால் திருமணத்தின் போது தவிர்க்க முடியாமல் மழையில் நனைய நேர்ந்தாலும், விரைவில் உலர்ந்து விடும்.
குளிர்கால மணப்பெண்ணுடைய உடை கனமான துணி வகையிலானவையாக இருப்பது முக்கியம். அதிகப்படியான காற்றோட்டத்தோடு இருந்தால் குளிர் தாங்க முடியாத நிலை ஏற்படும். எனவே கனமான வேலைப்பாடுகள் நிறைந்த வெல்வெட் ஆடைகளை தேர்ந்தெடுக்கலாம். லெஹெங்கா முதல் அனார்கலி வரை எந்தவித உடையானாலும் வெல்வெட் துணிவகை உடலை வெதுவெதுப்பாக வைத்துக்கொள்ளும். பட்டு மற்றும் நெட் லெஹெங்காவைவிட வெல்வெட் குளிர்காலத்திற்கு ஏற்றது. மேலும் சேலை அல்லது லெஹெங்கா முந்தியை உடுத்தும் பிளவுஸ் அல்லது துப்பட்டாவோடு இணைத்துத் தைப்பதன்மூலம் குளிரிலிருந்து தற்காத்துக் கொள்ள முடியும்.
அழகை அதிகரிக்க இந்த ஒரு வாதுமைப் பழத்தை சாப்பிட்டால் போதும்!
pixabay
திருமணத்திற்கு முன்னர் உங்கள் திருமண உடையின் துணி வகை இக்குறித்து ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தியுங்கள். மிகவும் நீளமான தரையை தொடும் அளவிற்கான உடைகளை தவிருங்கள். இது போன்ற ஆடைகள் ஈரம் அல்லது சேற்றில் சிக்கிவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதற்கு மாற்றாக சரியான அளவு உடையை தேர்வு செய்யுங்கள். தரை வரை நீண்டிருக்கும் உடையாக இருந்தால், ‘பூட்ஸ்’ வகை காலணிகளைத் தேர்ந்தெடுக்கலாம்.
தங்கம் விலையில் திடீர் உயர்வு ஏன்? முக்கிய காரணங்கள் குறித்து விரிவான தகவல்!
டார்க் நிறங்களை தேர்வு செய்யுங்கள்
மழை காலத்தில் லைட் கலர் உடைகளை (dress) விட டார்க் நிற உடைகள் நல்லது. டார்க் நிறங்களைவிட ஃபேன்ஸி நிறங்களை தேர்ந்தெடுக்கலாம். பிங்க், ஆரஞ்சு, நீலம், பச்சை, மஞ்சள் போன்ற நிறங்களில் பேஸ்டல் டோன்களை தேர்வு செய்யலாம். அல்லது ‘நியூட்’ ஷேடுகளைத் தேர்ந்தெடுக்கலாம். இவை காலநிலைக்கு ஏற்றதுபோல சாந்தமான மனநிலையையே உருவாக்கும். மேலும் குறிப்பாக வெள்ளை நிற உடைகளை தவிர்க்க முயலுங்கள். சிறியதாக சேற்று நீர் பட்டால் கூட உடை வீணாக வாய்ப்புள்ளது.
அதற்கு பதிலாக நீல நிறங்கள், கறுப்பு, பழுப்பு மற்றும் ஊதா போன்ற டார்க் நிறங்களை தேர்வு செய்யுங்கள். அனார்கலி, லெஹெங்கா, சோலி, கவுன், புடவை என எந்த திருமண உடை அணிந்தாலும் அவற்றை நிறத்தை கவனமாக தேர்வு செய்யுங்கள். மேலும் அனைத்து உடைகளுக்கும் முழங்கால் வரை நீண்டிருக்கும் பிளவுசை போடலாம். பெரும்பாலும் ஒர்க் சாரி மற்றும் டிசைனர் பிளவுஸ் வகைகளை மழைக்கால திருமணத்திற்கு தேர்வு செய்வது நல்லது.
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.