ரிஷப ராசி பெண்களை நேசிக்க 1௦ காரணங்கள்! - Things You Need To Know About Taurus Women

ரிஷப ராசி பெண்களை நேசிக்க 1௦ காரணங்கள்!  - Things You Need To Know About Taurus Women

ஏப்ரல் 2௦ - மே 21க்குள் பிறந்த ரிஷப ராசி பெண்கள் இந்த பூமியில் ஒரு முக்கிய அடையாளமாக இருப்பார்கள். சுக்கிரனின் ஆதிக்கம் பெற்ற இந்த பெண்கள் “காதல் மற்றும் இன்பம் குறித்த அனைத்து நடவடிக்கைகளும் என் சடங்குகள்” என்ற பொன்மொழியை பின் பற்றுபவர்கள். அழகான காதலர்கள், இயற்கையாகவே கவர்ச்சியானவர்கள், சொல்லப்போனால் ரிஷப ராசிகாரர்களுக்கு துலாம் ராசிக்காரர்களை அதிகம் பிடிக்கும், அவர்கள் வாழ்க்கையின் அற்புதமான விடயங்களை போற்றுபவர்கள். எனினும் காற்றின் அடையாளமான துலாம் ராசி போன்று இல்லாமல், பூமியின் அடையாளமான ரிஷப ராசியில் பிறந்தவர்கள் தாழ்மையான குணம் கொண்டவர்கள். எனினும் அவர்கள் உயர்ந்த குணங்களான தைரியம் மற்றும் தன்னம்பிக்கை உடையவர்களாகவும் இருப்பவர்கள்.


ரிஷப ராசிப் பெண்களை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சுவாரசியமான சில விடயங்கள் இங்கே!


பண்புகள்


ரிஷாப ராசி பெண்களின் வீட்டு வாழ்க்கை


குடும்பம்


உத்தியோகம் மற்றும் பணம்


கேள்விகள்


1 all-about-taurus-women-gal-gadot


ரிஷப ராசி பெண்கள்: பண்புகள் (Traits Of A Taurus Women)


2 all-about-taurus-women-audrey-hepburn


குணம் (Character)


அக்கறை மற்றும் இளகிய மனம் கொண்டவர்கள். ரிஷப ராசி பெண்கள் புரிந்து கொள்ளும் மற்றும் திடமான மனம் கொண்டவர்கள். விவேகம் மற்றும் பொறுமை குணம் படைத்த இவர்களை குடும்பத்தினர்கள் அதிகம் நேசிப்பார்கள். மேலும் அவர்கள் அனைவரிடத்திலும் நல்ல உறவை வளர்த்துக் கொள்வார்கள்.


மனம் (Mind)


ரிஷப ராசி பெண்கள் வாழ்க்கையின் அனைத்து விடயங்களையும் நிதானமாகவும் தெளிவோடும் கையாளுபவர்கள். அரிதாகவே அவர்களுக்கு கோபம் வரும். பிரச்சனைகள் இருக்கும் இடத்தை விட்டு அவர்கள் விலகி செல்ல எண்ணுவார்களே தவிர அத்தகைய சூழலை விரும்ப மாட்டார்கள். பிடித்த விடயங்களில் அதிகம் ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள.


விருப்பு / வெறுப்பு (Likes/Dislikes)


ரிஷப ராசி பெண்கள் அதிகம் பாதுகாப்பு உணர்வோடு இருப்பவர்கள். பொறுமையாக காத்திருந்து தொலைவில் நடக்கும் சூழ்நிலையை புரிந்து கொண்டு பின் முன்னேற எண்ணுவார்களேத் தவிர அவசரப் பட மாட்டார்கள். சாகசத்தை அவ்வளவாக விரும்ப மாட்டார்கள். சில சமயங்களில் சற்று சோர்ந்தோ அல்லது ஆர்வம் குறைந்தோ வாழ்க்கையில் இருப்பார்கள். இதனால் அதிக வாய்ப்புகளை வாழ்க்கையில் எடுக்கத் தவறுவார்கள்.  
வாழ்நாள் முழுவதும் நல்ல உறவு: முன்பே குறிப்பிட்டது போல, ரிஷப ராசி பெண்கள் நல்ல உறவை தங்கள் வாழ்நாள் முழுவதும் தக்க வைத்துக் கொள்வார்கள். இது முக்கியமாக அவர்கள் இயற்கையாகவே அதிக பொறுமை மற்றும் பண்புகள் மிகுந்தவர்களாக இருப்பதால்தான் இத்தகைய குணம் கொண்டவர்களாக இருக்கின்றனர்.


எளிதாக பழகுபவர்கள்


ரிஷப ராசி பெண்கள் எதையும் தீவிரமாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். அவர்களிடத்தில் அன்போடு பழகுவது சுவாரசியம் மற்றும் வேடிக்கையாகவும் இருக்கும். அவர்கள் விளையாட்டுத்தனமானவர்கள். மேலும் அதிக நகைச்சுவையோடு பேசக் கூடியவர்கள்.  


பிடித்த துணை:


ரிஷப ராசி பெண்கள் அமைதியானவர்கள், அதனாலேயே அவர்கள் அதிகம் உணர்ச்சிவசப் படும் குணத்தோடும் சில கட்டுப்பாட்டோடும் இருக்கிறார்கள். அவருடைய வாழ்க்கைத்துணை அவரிடத்தில் நேர்மையான எண்ணங்களையும், திடமான மற்றும் நேர்மையான எண்ணங்களையும் காணலாம்.  அதனாலேயே அவர்கள் எந்த பாசாங்கமும் இல்லாமல் உண்மைத் தன்மையோடு இருக்கிறார்கள்.


உதவும் குணம்:


ரிஷப ராசி பெண்கள் அதிகம் அக்கறை கொண்டவர்கள். மேலும் யாருக்கும் எளிதில் உதவக் கூடியவர்கள். அவர்கள் தன்னை சுய மையப் படுத்தி தங்களது உறவுகளிடத்தில் இருந்தாலும் தன்னுடைய விருப்பத்திர்க்குரியவர்களின் தேவைகளுக்கு முதல் இடம் கொடுப்பார்கள்.


ரிஷப ராசி பெண்கள்: செக்ஸ் வாழ்க்கை (Sex Life Of A Taurus Women)


உணர்ச்சி மிகுந்த (Passionate)


ரிஷப ராசி பெண்கள் அதிகம் உணர்ச்சி மிகுந்தவர்களாக இருப்பார்கள். தங்களது செக்ஸ் வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். குறும்புத்தனமும் மற்றும் அனைத்துக் கொள்ளும் விருப்பம் உடையவர்கள். இந்த கவர்ச்சியான பெண்கள் எப்பொழுதும் காதலுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். அவர்கள் தன்னுடைய வாழ்க்கைத்துணையோடு பரஸ்பர தேவைகளை பூர்த்தி செய்வது அன்யுனியத்தோடு வாழ்வதற்கான சிறந்த வழி என்று நினைப்பார்கள்.


முக்கியத்துவங்கள் (Potentialities)


அவர்கள் அதிகம் உணர்ச்சிமிக்கவர்களாக இருந்தாலும் ஒரு ஆண் பொறுப்பை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதில் அதிகம் முக்கியத்துவம் கொடுப்பார்கள். தன்னுடைய நேரத்தை  தன் வாழ்க்கைத்துணை கூச்சத்தில் இருந்து வெளி வர என்ன செய்வது என்று பயன் படுத்தி வீணாக்குவதை விட தானே எவ்வாறு அதனை சரி செய்வது என்று எண்ணி முயர்ச்சிப்பார்கள்.


செக்ஸ் நோக்குநிலை (Sex orientation)


படுக்கை அறையில் சாகசம் மிக்கவர்களாக இருப்பார்கள். ரிஷப ராசி பெண்களின் சக்தி மற்றும் தீவிரத்தை கண்டு உங்களுடையவர் ஆச்சரியப் படுவார். செக்ஸ் மற்றும் உணர்ச்சிகளை இணைத்து உரையாடலுடன் தன்னுடைய உண்மையான பாசத்தையும் காட்டுவார்கள்.


உணர்வுகளால் பாதிக்கப் பட்டவர்கள்:


மற்ற சூரிய ராசிகளை காட்டிலும், ரிஷப ராசி பெண்கள் தொடுவதற்கு சுலபமானவர்கள் இல்லை. அவர்களுக்கு தங்களுடைய ஆண்மகன் தொடுவதில் ஈடுபாடு இல்லை அல்லது மனதிற்கு ஏற்றதாக இல்லை என்றால் அவர்களிடம் அதற்க்கு மேல் முயற்ச்சிக்க முடியாது. ரிஷப ராசி பெண்கள் நேர்மையான உறவையே விரும்புபார்கள். அவர்கள் அவசரப் பட மாட்டார்கள். பொறுமையாகவே தன்னுடையவருடன் நெருக்கத்தை உணர விரும்புவார்கள்.


ரிஷாப ராசி பெண்களின் வீட்டு வாழ்க்கை ( Life Of A Taurus Women At Home)


3 all-about-taurus-women-katherine-langford


வாழும் இடம் (Living Place)


ஒரு ரிஷப ராசி பெண்களை பற்றி அவர்கள் வாழும் இடத்தை வைத்தே சொல்லி விடலாம். தங்களை சுற்றி இருக்கும் பொருட்களை சீராக வைத்து வரும் விருந்தினர்களை சௌகரியமாக உணர செய்வார்கள்.


பொருள் பொக்கிஷங்கள் மற்றும் அலங்காரம்:


உணர்வுகளுக்கும் பொருட்களுக்கும் இடையில் ஒரு சம நிலையில் இருப்பார்கள். அவர்களுடைய உடைமைகள் நன்றாக தெரியும். வீட்டில் உள்ள பொருட்கள் மற்றும் அலங்காரங்கள் எதார்த்தமானவையாகவும் தேவைக்கேர்ப்பவும் இருக்கும். தரமான பொருட்களை வீட்டில் வைத்திருப்பார்கள். மேலும் அதனை நன்கு பராமரிப்பார்கள். மரத்தால் ஆன பொருட்கள், செடிகள், படிகங்கள் மற்ற இயற்க்கை சார்ந்த பொருட்களை அதிகம் விரும்புவார்கள்.


சுற்றுசூழல்:


ரிஷப ராசி பெண்கள் இயற்கையையும் வெளி புற சூழலையும் அதிகம் நேசிப்பார்கள். அவர்களுடைய இடத்தில் ஒரு அழகிய தோட்டத்தை நீங்கள் காணலாம். காய் வகைகள், பழங்கள் மற்றும் அழகிய மலர்கள் அவரது தோட்டத்தில் இருக்கும். அவர் நகரத்தில் வசிப்பவராக இருந்தாலும்


ரிஷப ராசி பெண்கள்: குடும்பம் (Family Life)


4 all-about-taurus-women-megan-fox


குழந்தைகள் (Children)


அதிகம் அக்கறை குணம் கொண்டவர்கள். அற்புதமாக சமைப்பார்கள். ஆரோக்கியமான வாழ்க்கையை நோக்கி செல்வார்கள். வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வார்கள். ரிஷாப ராசி பெண்களை தாயாக பெற்ற குழந்தைகள் நிச்சயம் சிறப்பான உணவுகளை பள்ளிக்கு கொண்டு செல்லலாம். அவர்கள் நம்பிக்கைக்குரிய தாயாக இருப்பார்கள். தங்களது குழந்தைகளிடம் கலந்து உரையாடுவார்கள். எனினும் சில கட்டுப்பாடையும் ஒழுக்கத்தையும் தன் குழந்தைகளிடம் இருந்து எதிர் பார்ப்பார்கள்.


பெற்றோர்கள் மற்றும் உடன் பிறந்தவர்கள் (Parents And Siblings)


ஒரு ரிஷப ராசி பெண்ணை நீங்கள் கண்டால், அவர்கள் தன்னுடைய சிறு வயது சம்பவங்களை எவ்வாறு நினைவில் வைத்திருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்வீர்கள். தன் குடும்பத்தின் பாரம்பரியத்தை காப்பதில் அதிகம் கவனம் செலுத்துவார்கள். தன்னுடைய குடும்பத்தினர்களுக்கு அவர்கள் அதிகம் முக்கியமானவர்கள்.


மனைவி (Wife)


ரிஷப ராசி பெண்கள் குடும்பத்தை முன்னுக்கு கொண்டுவருவதில் தங்களது பொறுப்புகளை உணர்ந்து பலத்தோடு செயல் படுவார்கள். தங்களது வாழ்க்கைத் துணையோடு சேர்ந்து எந்த பிரச்சனையை வந்தாலும் அதனை சுலபமாக சமாளிப்பார்கள்.


ரிஷப ராசி பெண்கள்: உத்தியோகம் மற்றும் பணம்- (Professional Life And Career)


செய்யும் வேலை (Job)


ரிஷப ராசி பெண்கள் அதிக மன உறுதி கொண்டவர்கள். நிறைய புது விடயங்களை கற்றுக் கொண்டு தங்களது உத்தியோகத்தில் வளர்ச்சியை காண விரும்புவார்கள். எந்த பதவி கொடுத்தாலும் அதனை தைரியத்தோடு ஏற்றுக் கொண்டு தீவிரமாக பனி புரிவார்கள். ரிஷப ராசி பெண்கள் வடிவமைப்பு துறைகளில் அதிகம் பனி புரிபவர்களாக இருப்பார்கள். கிராபிக்ஸ், கட்டுமானப் பனி, உட்புற அலங்காரம் அல்லது பேஷன் போன்ற துறைகளில் அதிகம் பனி புரிவார்கள். அவர்கள் கவிஞராகவும், இசை அமைப்பாளராகவும், நடிகர்களாகவும் இருப்பார்கள்.


உறுதியான குறிக்கோள்(Firm Goal)


ரிஷப ராசி பெண்கள் தங்களுடைய உத்தியோகத்தில் தீவிர குறிக்கோளுடன் இருப்பார்கள். அவர்கள் தங்களது குறிக்கோளை அடைய தீவிரமாக உழைப்பார்கள். அவர்கள் நம்பகமானவர்கள் மேலும் தங்களது வேலையை அதிகம் நேசிப்பவர்கள்.


பணம் (Money)


ரிஷப ராசி பெண்கள் பணத்தை சிறப்பாக கையாளுவார்கள். அவர்களுக்கு எப்படி பணத்தை சேமிக்க வேண்டும் மற்றும் செலவு செய்ய வேண்டும், வரவு செலவை எப்படி சம நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று நன்கு தெரிந்து வைத்திருப்பார்கள். அவர்கள் கடினமாக உழைப்பதே தங்களது வாழ்க்கையில் சிறப்பான விடயங்களை பெற வேண்டும் என்பதற்குத் தான். எனினும் அவர்கள் பேராசை பிடித்தவர்கள் இல்லை. ஆனால் தங்களது செல்வத்தையும் முதலீட்டையும் எப்படி கையாளுவது என்று தெரிந்தவர்கள்.


உத்தியோகம் (Occupation)


 சில நல்ல விடயங்கள் ரிஷப ராசி பெண்களிடம் உள்ளது. அவர்கள் எப்படி தங்களது நிதி நிலையை உயர்த்துவது, நீண்ட கால மற்றும் எதார்த்தமான வாழ்க்கையை நோக்கி செல்வது என்று அனைத்திலும் சிறப்பாக சிந்திக்கக் கூடியவர்கள். எதார்த்தமான வாழ்க்கையை வாழும் ரிஷப ராசி பெண்கள் தங்களது உத்தியோகத்திலும் அதிகம் அக்கறை கொண்டவர்கள். தரமான வேலை எவ்வளவு முக்கியம் என்று உணர்ந்தவர்கள். தேவைப் பட்டால் அதிக நேரம் வேலை பார்த்து தன்னுடைய கடமையை சிறப்பாக முடிப்பார்கள்.


சமூக அந்தஸ்த்து (Social status)


ரிஷப ராசி பெண்கள் கண்டுபிடிப்பாலர்களோ அல்லது தலைவர்களாகவோ இருக்க அதிகம் விரும்புவதில்லை. எனினும் அவர்கள் கடுமையாக உழைக்கக் கூடியவர்கள். நம்பகமானவர் மற்றும் விடா முயற்சி கொண்டவர். பொதுவான குறிக்கோளை தன்னுடைய குழுவினருடன் சேர்ந்து திட்டமிட்டபடி முடிப்பவர்கள். கற்பனை வளம் கொண்டவர்களாக இருப்பதால் அவர்கள் எந்த பிரச்சனை வந்தாலும் சிறப்பாக தீர்வு பெறுவதில் திறமை வாய்ந்தவர்கள்.


ரிஷப ராசி பெண்கள்: கேள்விகள் (FAQ's)


எண்கேள்விகள்பதில்கள்
1
எந்த மாதிரியான பெண்கள் ரிஷப ராசிக் காரர்கள்?

ரிஷப ராசி பெண்கள், எதார்த்தம், நம்பகத்தன்மை, குறிக்கோள் உடைய மற்றும் உணர்ச்சிபூர்வமானவர்களாக இருப்பார்கள்.கலை, படைப்பாற்றல்  மற்றும் அழகில் அதிகம் ஆர்வம் காட்டுவார்கள். பணத்தை சிறப்பாக கையாளுவார்கள். தன்னுடைய வாழ்க்கைத் துணைக்கு உறுதுணையாக எப்போதும் இருப்பார்கள். தங்களுடைய குடும்பத்தினர்களுக்கும் நண்பர்களுக்கும் உண்மையாக இருப்பார்கள்.
2
ரிஷப ராசி பெண்களின் பண்புகள் என்ன?
ரிஷப ராசி பெண்களிடம் அதிகம் வெற்றி பெரும் தகுதிகள் உள்ளது. அவர்கள் உணர்வுபூர்வமானவர்கள், வலுவானவர்கள், சக்திவாய்ந்தவர்கள், மன உறுதி கொண்டவர்கள், விசுவாசமானவர்கள், கலைத்திரன் கொண்டவர்கள், உண்மையானவர்கள், குறும்புத்தனம் மிக்கவர்கள்.
4
எந்த ராசிக்காரர்கள் ரிஷப ராசி பெண்களுக்கு ஏற்றவர்களாக இருப்பார்கள்?

ரிஷப ராசி பெண்கள் கடகம், துலாம், மற்றும் மீன ராசிக்காரர்களை அதிகம் நேசிப்பார்கள். சோதிட ஆலோசனைப் படி அவர்கள், மிதுனம், கும்பம் மற்றும் சிம்ம ராசிக் காரர்களை தவிர்ப்பது நல்லது.
5
ரிஷப ராசி பெண்களின் ஆளுமை/குணங்களை எப்படி விவரிப்பது?

ரிஷப ராசி பெண்கள் கவர்ச்சியாகவும் அழகான தோற்றம் உடையவர்களாகவும் இருப்பார்கள். தங்களது பொருட் தேவை மற்றும் சௌகரியமான வாழ்க்கைக்காக கடினமாக உழைக்கக் கூடியவர்கள். ஆழ்ந்த புரிதலோடும், எதையும் சமாளிக்கும் திறனோடும் உணர்வு பூர்வமாகவும் இருப்பவர்கள்.