குளிர்க்காற்று உடலை தழுவும்போது ஏற்படும் சுகானுபவமே தனிதான். கொட்டும் மழையின் போது சூடாக, மொறுமொறுவென்று ஸ்நாக்ஸ் (snacks) கிடைக்குமா என அனைவரும் எதிர்பார்ப்பார்கள். பெரும்பாலும் மாலை நேரத்தில் எடுத்துக்கொள்ளும் உணவுப்பொருள்கள் எண்ணெய்யில் பொரித்தவையாகவே இருக்கும். அவை கலோரிகளை அதிகரித்து உடல்நலத்துக்குக் கேடு விளைவிக்கலாம். அப்படியில்லாமல் உங்கள் குழந்தைகளுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய சத்தான ஸ்நாக்ஸ் (snacks) வகைகளை எப்படி ஈஸியாக செய்யலாம் என இங்கு காண்போம்.
மிக்ஸ்டு வெஜ் பக்கோடா
தேவையானவை :
கேரட், வெங்காயம், உருளைக்கிழங்கு – தலா ஒன்று,
கோஸ் – 100 கிராம்,
காலிஃப்ளவர்– 1,
கடலை மாவு, அரிசி மாவு – தலா 4 டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு, தேவையான அளவு,
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்.
செய்முறை :
வெங்காயம், உருளைக்கிழங்கை பொடியாக நறுக்கவும். இதனுடன் கேரட் துருவல், கோஸ் துருவல், காலிஃப்ளவர் துருவல், உப்பு, மிளகாய்த்தூள், கடலை மாவு, அரிசி மாவு ஆகியவற்றை சேர்த்து, லேசாக தண்ணீர் தெளித்துபிசையவும். கடாயில் எண்ணெயை காய வைக்க வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் பிசைந்த காய்றி, மாவு கலவையை பக்கோடா போல உதிர் உதிராக போட்டு பொரித்து எடுக்கவும். காய்கறி சாப்பிட மறுக்கும் குழந்தைகள்கூட இதை விரும்பிச் சாப்பிடுவார்கள்.
மகத்துவம் நிறைந்த தேனின் ஆரோக்கிய மற்றும் அழகு பலன்கள்!
மசாலா பொரி
தேவையானவை :
பொரி – ஒரு கப்,
வேர்க்கடலை – கால் கப்,
பொட்டுக் கடலை – சிறிதளவு,
காய்ந்த மிளகாய் – 2,
பூண்டு – 6 பல்,
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை,
கடுகு, எண்ணெய் – சிறிதளவு,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை :
வாணலியில் சிறிதளவு எண்ணெயை காயவிட்டு கடுகு, காய்ந்த மிளகாய் தாளித்து, தோலுடன் பூண்டை தட்டிப் போட்டவும். இதனுடன் மஞ்சள்தூள், பொட்டுக்கடலை, வேர்க்கடலை, பொரி, உப்பு சேர்த்துப் புரட்டி இறக்கவும். காரம் தேவைப்படுபவர்கள் மிளகாய் தூள் அல்லது பச்சை மிளகாய் பயன்படுத்தலாம்.
சேனைக்கிழங்கு டிக்கி
தேவையானவை :
சேனைக்கிழங்கு துண்டுகள் – ஒரு கப்,
பொட்டுக்கடலை மாவு – கால் கப்,
இஞ்சி, பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை :
முதலில் சேனைக்கிழங்கு துண்டுகளை குக்கரில் வேகவிடவும். ஆறியபின் நன்கு மசித்து, அதனுடன் உப்பு, மிளகாய்த்தூள், இஞ்சி, பூண்டு விழுது, பொட்டுக்கடலை மாவு சேர்த்துப் பிசையவும். இந்தக் கலவையை சிறுசிறு வடைகள் போல தட்டி, சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும். சேனைக்கிழங்கு டிக்கி ரெடி.
சுவையான பால் கொழுக்கட்டை செய்யலாம் வாருங்கள் !
மசாலா நட்ஸ்
தேவையானவை :
வேர்க்கடலை – ஒரு கப்,
முந்திரி – 10,
கடலை மாவு, அரிசி மாவு – தலா 2 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை :
அகலமான பாத்திரத்தில் வேர்க்கடலை ஒன்றிரண்டாக உடைத்த முந்திரி, உப்பு, மிளகாய்த்தூள், கடலை மாவு, அரிசி மாவு ஆகியவரை சேர்த்து நன்றாக கலக்கவும். இதனுடன் லேசாக தண்ணீர் தெளித்து பிசிறி வைக்கவும். வாணலியில் எண்ணெய்யை காய வைத்து, மசாலா தடவிய நட்ஸ்களை உதிர் உதிராக போட்டு பொரித்து எடுக்கவும்.
youtube
இன்ஸ்டன்ட் அவல் அடை
தேவையானவை :
அவல் – ஒரு கப்,
கடலை மாவு, அரிசி மாவு – தலா 4 டீஸ்பூன்,
பச்சை மிளகாய் – 5,
வெள்ளை எள் – ஒரு டீஸ்பூன்,
இஞ்சித் துருவல் – ஒரு டீஸ்பூன்,
கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை – சிறிது
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை :
அவலை நன்கு கழுவி பத்து நிமிடம் ஊற வைக்கவும். பிறகு நீரை வடிய வைத்து உப்பு, இஞ்சித் துருவல், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், எள், கடலை மாவு, அரிசி மாவு, சுத்தம் செய்து பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை சேர்த்துப் பிசையவும். ஒரு வாழை இலை அல்லது பிளாஸ்டிக் கவரில் எண்ணெய் தடவி பிசைந்த மாவில் இருந்து சிறிதளவு எடுத்து அடையாக தட்டி சூடான தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு இருபுறமும் வேக விட்டு எடுக்கவும்.
அம்மனுக்கு உகந்த ஆடி மாத ஸ்பெஷல் ரெசிபிகள் ஈஸியாக செய்யலாம்!
ரவா முந்திரி
தேவையானவை :
ரவை – 200 கிராம்,
பேக்கிங் பவுடர் – அரை டீஸ்பூன்,
வெண்ணெய் – தேவையான அளவு,
மைதா மாவு – தலா 50 கிராம்,
எண்ணெய் – 50 கிராம்,
சாட் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன்,
உப்பு – அரை டீஸ்பூன்,
எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை :
ரவை, மைதா, உப்பு ஆகியவற்றை ஒன்று சேர்த்துக் கலந்து இதனுடன் எண்ணெயை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்துக் கலக்கவும். பின்னர் சூடான தண்ணீர் எடுத்து இதில் தெளித்து பூரி மாவு பதத்துக்கு பிசைந்து உருட்டி ஒரு ஈரத்துணியால் அரை மணி நேரம் மூடி வைக்கவும். பின்னர் இந்த உருண்டையை கனமான ரொட்டியாக தேய்க்கவும். பின் ஏதாவது ஒரு சிறு பாட்டில் மூடியை கொண்டு மூடியின் பாதி அளவுக்கு ரொட்டியில் இருந்து முந்திரிப்பருப்பு மாதிரி வெட்டவும். எண்ணெயை சூடாக்கி அதில் வெட்டியவற்றை கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டுப் பொரிக்கவும்.
பேபி கார்ன் பெப்பர்
தேவையானவை :
பேபி கார்ன் – 6,
பெரிய வெங்காயம் – ஒன்று,
பூண்டு – 8 பல்,
பச்சை மிளகாய் – ஒன்று,
வெங்காயத்தாள் – 4,
ஆலிவ் ஆயில் – சிறிதளவு,
மிளகுத்தூள் – ஒரு சிட்டிகை,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை :
வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயத்தாள் ஆகியவற்றை மிகவும் பொடியாக நறுக்கவும். வாணலியில் சிறிதளவு ஆலிவ் ஆயில் விட்டு, நறுக்கிய பூண்டு, வெங்காயம், நறுக்கிய பேபி கார்ன், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து வதக்கவும். வெந்தவுடன் வெங்காயத்தாள், மிளகுத்தூள் தூவி பரிமாறவும்.
இவற்றை குழந்தைகளுக்கு (snacks) செய்து கொடுத்து மழை காலத்தை ஆரோக்கியமாக கழியுங்கள்!
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.