சுவையான பால் கொழுக்கட்டை செய்யலாம் வாருங்கள் !

சுவையான பால் கொழுக்கட்டை செய்யலாம் வாருங்கள் !

பால் கொழுக்கட்டை - பெயரைக் கேட்டாலே நாவூறும் சுவை கொண்ட இந்த பலகாரம் வெளியே அரிதான உணவகங்களில் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கும். மற்றபடி நாமாக செய்து கொண்டாலோ அல்லது யாராவது செய்து தந்தாலோ மட்டுமே இதன் சுவையை நாம் சுவைக்க முடியும்.

நகரத்தார்கள் சமையலில் முக்கிய இடம் இந்த பால் கொழுக்கட்டை  (paal kolukattai) எனும் பலகாரத்திற்கு இருக்கிறது. இந்தப் பால் கொழுக்கட்டை என்பது மாலை நேர சிற்றுண்டி. கடவுளுக்கு நைவேத்யம் செய்ய ஏற்றதும் கூட. இந்தக் கொழுக்கட்டையை எளிமையான முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

இனி வீட்டிலேயே சுலபமாக தயாரிக்கலாம் - பட்டர் நாண்!

பால் கொழுக்கட்டை  செய்ய தேவையான பொருட்கள்

பச்சரிசி மாவு – 400 கிராம்
மண்டை வெல்லம் – 400 கிராம்
சுக்கு – 5 கிராம்
தேங்காய் (சிறியது) – 1 மூடி
தண்ணீர் – தேவையான அளவு

பால் கொழுக்கட்டை செய்முறை

முதலில் வெல்லம் எடுத்து நன்கு உடைத்து வைத்துக் கொள்ளவும். தேங்காயைத் துருவி வைக்கவும். சுக்கைத் தட்டி வைக்கவும்.

பச்சரிசி மாவினை தேவையான அளவு நீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ள வேண்டும்.
பின்னர் அந்த மாவினை அளவான உருண்டைகளாக பிடித்துக் கொள்ளவும் . சிறு உருண்டைகளாக இருப்பது அவசியம். அல்லது நீளம் நீளமாகவும் இருக்கலாம்.

அதன் பின் துருவி வைத்துள்ள தேங்காயை எடுத்து நன்கு கெட்டியான பால் பிழிந்து எடுத்துக் கொள்ள வேண்டும். வெல்லத்தூளை தனியாக அழுக்கு போக வடிகட்டி எடுக்கவும். அதனை தேங்காய்ப்பாலுடன் சேர்க்கவும். இந்தக் கலவையை அடுப்பில் வைத்துக் கொதிக்க விட வேண்டும்.

 

 கோளா உருண்டை சாப்பிட ஹோட்டல் எதுக்கு? மணக்கும் மட்டன் கோளா உருண்டையை வீட்டிலேயே செய்யலாம் வாங்க !

 

நன்கு கொதிக்கும்போது பிடித்து வைத்துள்ள அரிசி உருண்டைகளை அதில் சிறிது சிறிதாக போட வேண்டும். அதன் பின்னர் 2 நிமிடம் உள்ளே கரண்டி விடாமல் மிதமான தீயில் வேக விடுங்கள். மாவு வேகாமல் நீங்கள் கரண்டியை உள்ளே விட்டால் மாவு உருண்டைகள் உடைந்து விடும்.

மாவு உருண்டைகள் வெந்து மேலே வர ஆரம்பிக்கும் போது சுக்குத் தூள் சேர்த்து இறஙகி விடவும். சுக்குக்கு பதிலாக ஏலக்காய் சேர்க்கலாம். அதிக நேரம் கொதிக்க விடக் கூடாது. மாவு உருண்டைகளை நேரடியாகத் தேங்காய்ப்பாலில் போடத் தெரியாதவர்கள் தனியாக அந்த உருண்டைகளை இட்லித்தட்டில் வைத்து ஆவியில் வேக வைத்து இறக்கி கொதிக்கின்ற தேங்காய்ப்பாலில் சேர்க்கலாம்.

நல்ல வாசனையுள்ள தேங்காய்ப்பால் இப்போது தயார். ஆன்மிகத்திற்கு சிறந்த நாளான ஆடி 18ம் பெருக்கு அன்று இந்தப் பால் கொழுக்கட்டை பலகாரத்தை இறைவனுக்கு நைவேத்யம் செய்து குடும்பத்தார் அனைவருக்கும் கொடுங்கள். உங்கள் மீதான உங்கள் குடும்பத்தாரின் பிரியத்தை இதன் சுவை மேலும் அதிகரிக்கும்.

 

 

 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.