கோடிக்கணக்கில் ஃபோர்ஜரி..பாஸ்போர்ட் முடக்கம்..தாய்லாந்திலிருந்து வெளியேற்றப்படும் சிம்பு?

கோடிக்கணக்கில் ஃபோர்ஜரி..பாஸ்போர்ட் முடக்கம்..தாய்லாந்திலிருந்து வெளியேற்றப்படும் சிம்பு?

நடிகர் சிம்பு என்றாலே அனைவருக்கும் நினைவு வருவது வம்புதான். சர்ச்சைகளினாலேயே தன்னை சுற்றி ஒரு வேலி போட்டுக்கொள்ளும் அளவிற்கு சிம்புவிற்கு பல்வேறு சிக்கல்கள் தொடர்ந்து எழுகின்றன.

இயக்குனர் மணிரத்னம் திரைப்படமான செக்க சிவந்த வானம் திரைப்படத்தில் நடித்த பிறகு அனைவராலும் அவரது நேர மேலாண்மைகள் பாராட்டப்பட்டது. சிம்புவா இப்படி என அனைவருமே ஆச்சர்யப்படும் விதத்தில் அந்த திரைப்படத்திற்கு உழைத்துக் கொடுத்தார் சிம்பு (simbu).

அதன் பின்னர் வந்தா ராஜாவா வருவேன் திரைப்படம் முடிந்தது. அதிலும் நல்ல பேர் வாங்கிய சிம்பு மாறி விட்டதாக நம்பி அடுத்தடுத்து பல திரைப்படங்கள் புக் செய்யப்பட்டன.

ஆகாயத்திலேயே அஸ்தமனமான சௌந்தர்யா .. இறுதியாக சொன்ன ரகசியம்.. கண்ணீரில் இயக்குனர்..

Twitter

சிம்புவின் நண்பரான வெங்கட் பிரபு மாநாடு என்கிற படத்தை இயக்குகிறார். இதற்காக முன்பணமாக 2 கோடி கொடுக்கப்பட்டது. எதிர்பார்த்த மாதிரி சிம்பு நடக்கவில்லை எனவும் ஆரம்பத்தில் உடல் எடையைக் குறைத்து விட்டு வருவதாக அமெரிக்கா போனார் என்றும் அமெரிக்காவில் இருந்து வந்த உடன் ஞானவேல் ராஜாவின் மகா படத்தில் வேலை செய்யப் போய்விட்டார் என்றும் அவர் மீது புகார்களை வைக்கிறார் வெங்கட் பிரபு.

நடிகர் சூர்யாவின் உறவினரான ஞானவேல் ராஜாவிடம் 2 கோடி முன்பணம் வாங்கிய நிலையில் அந்த படப்பிடிப்பில் இருந்தும் சிம்பு இடையிலேயே வெளி வந்திருக்கிறார் சிம்பு. இதற்காக சமாதானம் பேச படக்குழுவினர் முற்பட்ட நிலையில் அதற்குரிய எந்த பதிலும் சிம்புவிடம் இருந்தோ அவரது உறவினர்களிடம் இருந்தோ கிடைக்கவில்லையாம்.

சிம்புவைப் போலவே அவரது அப்பா டி ராஜேந்தரும் போன் எடுப்பதில்லை என்கின்றனர். இதனால் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சிம்புவால் பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்கள் சிலரை அழைத்துக் கொண்டு தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்திருக்கிறார். அதன் அடுத்த கட்ட நடவடிக்கையாக சிம்புவின் மீது ஃபோர்ஜரி புகாரை சென்னை கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்திருக்கின்றனர்.

30 வயதை தாண்டி தமிழ் சினிமாவில் அழகாக இருக்கும் நடிகைகளின் ரகசியங்கள்

Youtube

தாய்லாந்திற்கு சுற்றுலா சென்ற சிம்புவை இங்கே வரவழைக்க வசதியாக அவரது பாஸ்போர்ட்டை முடக்கம் செய்ய வேண்டும் என்றும் கேட்டிருக்கின்றனர். இதனை ஏற்றுக் கொண்ட கமிஷனர் சிம்புவின் பாஸ்போர்ட் முடக்கம் செய்யப்படும் என சொல்லப்பட்டதாக தெரியவருகிறது. அப்படி நடக்கும் பட்சத்தில் தாய்லாந்தில் இருந்து உடனடியாக சிம்பு வெளியேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிம்பு முன்பணம் வாங்கி நடித்துக் கொடுக்காமல் இருக்கும் திரைப்படங்கள்

மாநாடு 2 கோடி
மகா 2 கோடி
விண்ணைத்தாண்டி வருவாயா 2 - 1 கோடி
கொரில்லா தயாரிப்பாளர் 3 கோடி முன்பணம் கொடுத்திருக்கிறார்.

வட்டிக்கு பணம் வாங்கி கொடுக்கப்பட்ட கோடிக்கணக்கான பணத்தை அபகரித்து விட்டதாக சிம்பு மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது. சிம்புவின் தனிப்பட்ட நடவடிக்கைகளால் படம் தொடங்க முடியாமல் மேலும் மேலும் வட்டி கட்டி கொண்டிருக்கும் தயாரிப்பாளர்கள் மனம் நொந்து இந்த முடிவை எடுத்ததாக தெரிய வருகிறது.

இதனால்தான் விஷால் - அனிஷா திருமணம் நிச்சயதார்த்ததுடன் முறிந்தது - வைரலாகும் செய்தி !

Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!             

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.