இதனால்தான் விஷால் - அனிஷா திருமணம் நிச்சயதார்த்ததுடன் முறிந்தது! | POPxo

இதனால்தான் விஷால் - அனிஷா திருமணம் நிச்சயதார்த்ததுடன் முறிந்தது - வைரலாகும் செய்தி !

இதனால்தான் விஷால் - அனிஷா திருமணம் நிச்சயதார்த்ததுடன் முறிந்தது - வைரலாகும் செய்தி !

நடிகர் விஷால் - அனிஷா திருமணம் நிச்சயதார்த்ததோடு நின்று போனதாக சொல்லப்படுகிறது. வாரிசு நடிகை ஒருவரை விஷால் காதலித்து வந்ததாக கிசுகிசுக்கப்பட்ட சமயத்தில் அனிஷா என்கிற பெண்ணோடு திருமண உறவில் நுழைய இருப்பதாக விஷால் கூறினார். 


விஷாலுக்குப் பெற்றோர் பார்த்து நிச்சயம் செய்த பெண் அனிஷா என்கிற நிலையில் விஷால் தான் அனிஷாவை முதல் பார்வையிலேயே காதலிக்க ஆரம்பித்ததாக கூறி இது காதல் திருமணம் என்று எல்லோரையும் ஆச்சர்யப்படுத்தினார்.


விஷால் (vishal) தனது சமூகத்தை சார்ந்த அனிஷா அல்லா ரெட்டியை கடந்த மார்ச் மாதம் 16ம் தேதி நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். இந்த நிகழ்வு பெரிதாக பேசப்பட்டது. மிகப் பிரம்மாண்டமாக நடந்தது. அதே சமயம் அவருக்கு நெருக்கமான ஆர்யாவிற்கும் சாயிஷாவுடன் மார்ச் 10ம் தேதி திருமணமே நடந்து முடிந்திருந்தது. 

விஹான் இனி தனி ஆள் இல்லை ! ஸ்னேஹாவிற்கும் ப்ரசன்னாவிற்கும் பிறக்க போகுது அடுத்த குழந்தை!

instagram
instagram

நடிகர் சங்க கட்டிட பொறுப்பை முடித்த பின்னரே திருமணம் என்று விஷால் கூறி வந்தார். இதனிடையில் வரூவின் அப்பா சரத்குமார் மீது விஷால் (vishal) வீண் பழி சுமத்தவே பிரச்னை பெரிதானது. நடிகர் சங்க தேர்தலில் தனது வாக்கை விஷால் இழந்து விட்டதாக வரலக்ஷ்மி சாடியிருந்தார்.


இந்நிலையில் விஷாலின் எதிர்கால மனைவியாகப் போகும் அனிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ள நிச்சயதார்த்த புகைப்படங்களை நீக்கி இருக்கிறார். அதனை பார்த்த பின்னர் இந்த திருமணம் நின்று போயிருக்கலாம் (called off) என்கிற சந்தேகம் அனைவருக்கும் எழுந்தது. ஆனால் விஷால் தனது பக்கத்தில் புகைப்படங்களை நீக்காமல் இருந்தார். 

"ஒருவருக்கொருவர் உண்மையாக இருக்க வேண்டும்".. காதலில் இருக்கிறாரா அக்ஷரா ஹாசன் ?

instagram
instagram


இது குறித்து இருவருமே வெளிப்படையாக எந்த தகவலும் சொல்லாத நிலையில் விஷாலின் நண்பர்கள் இவர்கள் திருமணம் நின்று போனது உண்மைதான் என்று கூறியிருக்கின்றனர். விஷாலும் அனிஷாவும் ஏன் பிரிந்தார்கள் என்பதற்கான காரணமும் தற்போது ஊடகங்களில் வெளியாகி இருக்கிறது. 


விஷாலுக்கும் அனிஷாவுக்கும் இடையே நிறைய கருத்து வேறுபாடுகள் இருந்ததாக சொல்லப்படுகிறது. கண்டதும் காதல் பின்னர் அவசரமாக நிச்சயதார்த்தம் என முடிந்த நிலையில் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள நேரம் கிடைக்காததால் உணர்வு வேறுபாடுகள் அதிகம் இருப்பதால் இந்த திருமணம் முறிந்துள்ளதாக விஷாலின் நெருங்கிய வட்டாரங்கள் சொல்கின்றனர். 

 

 

instagram
instagram

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!                                                    

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.