இனி வீட்டிலேயே சுலபமாக தயாரிக்கலாம் - பட்டர் நாண்!

இனி வீட்டிலேயே சுலபமாக தயாரிக்கலாம்  - பட்டர் நாண்!

எந்த ஹோட்டலுக்கு போனாலும் உதடுகள் முதலில் உச்சரிப்பது இந்த பட்டர் நாண் உணவைத்தான். 10 பேர் ஒன்றாக சாப்பிட போனால் அதில் இருவராவது பட்டர் நாண் (Butter naan) கேட்பார்கள்.


இந்த பட்டர் நாணை எப்போதும் ஹோட்டலில் மட்டுமே சாப்பிட முடியும் அதற்கான தந்தூரி அடுப்புகள் அங்குதான் இருக்கின்றன என்பது போன்ற மாயைகளை உடைத்து இப்போது வீட்டிலேயே இந்த நாணை சுலபமாக தயாரிக்க முடியும்.இதற்கு தேவையான பொருள்கள்


மைதா மாவு - 2 கப்
ட்ரை ஈஸ்ட் - 1 டீஸ்பூன்
வெண்ணை - 5 டீஸ்பூன்
சர்க்கரை - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் -2/3 கப்


மேத்தி - சிறிதளவுசெய்முறை


ஓரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வெது வெதுப்பாக சுட வைத்து அதில் ஈஸ்ட் மற்றும் சர்க்கரையை சேர்த்து கலக்க வேண்டும்.


இன்னொரு பாத்திரத்தில் மைதா , தயிர், உப்பு, பாதி வெண்ணெய் , மேத்தி இலைகள் மற்றும் கரைத்த ஈஸ்ட் சேர்த்து நன்றாக பிசைய வேண்டும். சப்பாத்தி மாவுக்கு தயார் செய்வது போலத்தான் இதனை தயார் செய்ய வேண்டும். அதன் பின்னர் 2 மணி நேரத்துக்கு இதனை மூடி வைக்கவும்.இரண்டு மணிநேரம் கழித்து பார்த்தல் ஈஸ்ட் போட்டதால் மாவு நன்றாக உப்பி வந்திருக்கும். இதனை நீங்கள் மீண்டும் ஒருமுறை பிசைந்து சப்பாத்தி போல தேய்த்து (கொஞ்சம் தடிமன் இருக்க வேண்டும்) தயாராக வைத்து கொள்ளுங்கள்.


அடுப்பை சிம்மில் வைக்கவும். அதன் பின்னர் தேய்த்து வைத்துள்ள நாணை நேரடியாக தீயில் காட்ட வேண்டும். மாவு உப்பி வரும்போது அதன் மேல் பாகத்தில் வெண்ணெய் தடவி திருப்பி போடுங்கள். இதற்கு தேவையான இடுக்கி போன்ற உபகரணங்கள் உடன் இதனை செய்யவும்.


இவ்வளவுதான் சுவையான பட்டர் நாண் இனி வீட்டிலேயே தயார் செய்யலாம். இதன் மீது லேசாக வெண்ணெய் தடவி கிரேவி உடன் பரிமாறவும்.புகைப்படங்கள் பிக்ஸா பே பாக்ஸெல்ஸ்


---                                                                                                                  


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!                                                    


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.