விஜய் டிவி பொய் புகார் விவகாரத்தில் கமலஹாசன் தலையிட வேண்டும் : நடிகை மதுமிதா அதிரடி!

விஜய் டிவி பொய் புகார் விவகாரத்தில் கமலஹாசன் தலையிட வேண்டும் : நடிகை மதுமிதா அதிரடி!

பிக் பாஸ் சீசன் தொடங்கி 61 நாட்களைக் கடந்துள்ளது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இதில் இது வரை பாத்திமா பாபு, மோகன் வைத்யா, ரேஷ்மா, சரவணன், சாக்ஷி அகர்வால் மற்றும் அபிராமி ஆகியோர் வெளியேறியுள்ளனர். மதுமிதா (madhumitha) தற்கொலைக்கு முயன்றதால் வெளியேற்றப்பட்டார். இந்த பிரச்னை தற்போது பெரிதாகியுள்ளது. நிலுவையில் உள்ள சம்பள பாக்கியை தரவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என மதுமிதா மிரட்டுவதாக விஜய் டிவி நிர்வாகம் சார்பில் மதுமிதா மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு மதுமிதா மறுப்பு தெரிவித்துள்ளார். 

தற்கொலை மிரட்டல் விடுத்த புகார் : சட்டரீதியாக எதிர்கொள்ள தயார் என நடிகை மதுமிதா விளக்கம்!

youtube

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்தது விளக்கமளித்துள்ள மதுமிதா (madhumitha), நான் அமைதியாக இருந்தால் என் பெயர் கெட்டுவிடும் என்பதால் தான் தெளிவுபடுத்து விரும்புகிறேன். என் மீது புகார் உண்மையில்லை. விஜய் டிவி எதற்காக என்மீது புகார் அளித்தார்கள் என்றே தெரியவில்லை. இது தொடர்பாக பேச விஜய் டிவியை தொடர்பு கொள்ள முயற்சித்தேன். ஆனால் அவர்கள் பதிலளிக்கவில்லை. விஜய் டிவியை நான் எப்போதும் மிரட்டவில்லை. இன்றுவரை விஜய் டிவி வகுத்த வழிமுறைப்படியே நடக்கிறேன். 

இதுவரை நிகழ்ச்சி குழு அனுமதித்த மருத்துவர்தான் எனக்கு மருத்துவம் பார்த்து வருகிறார் என்று கூறியுள்ளார். திரைத்துறையில் இருக்கும் என்மீது இதுவரை எந்த புகாரும் வந்ததில்லை. விஜய் டிவியும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் கமல்ஹாசன் இந்த விவகாரத்தில் தலையிட்டு சுமூகமாக முடித்து வைக்க வேண்டும். நான் ஏன் வெளியேறினேன் என்ற காட்சியை ஒளிப்பரப்பாதது எனக்கு வருத்தமாக உள்ளது என மதுமிதா (madhumitha) கூறியுள்ளார். 

twitter

இவ்வளவு பிரச்சனைகள் வெளியில் நடைபெற்று கொண்டிருக்கும் போதிலும், பிக் பாஸ் நிகழ்ச்சி தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டு வருகிறது. உள்ளே இருப்பவர்களுக்கு வெளியே என்ன நடந்து கொண்டிருக்கிறது என தெரிய வாய்ப்பில்லை என்பதால் அவர்களும் இயல்பாகவே உள்ளனர். இந்த வார நாமினேஷனில் சாண்டி, தர்ஷன், கஸ்தூரி மற்றும் சேரன் ஆகியோர் உள்ளனர். கஸ்தூரி தான் குறைத்த வாக்குகள் பெற்றுள்ளதால் தற்போது கடைசி இடத்தில் இருக்கிறார். இந்நிலையில் இந்த வாரத்திற்கான ஸ்கூல் டாஸ்க் முடிவடைந்துள்ளது. 

இதனையடுத்து ஹவுஸ்மேட்ஸிடம் பேசிக் கொண்டிருந்த கஸ்தூரி. அப்போது ஷெரீன் மொக்கையாக கதை கூறுவதாக கஸ்தூரி கூறினார். இதனால் மனமுடைந்த ஷெரீன் அழுதார். பின்னர் ஹவுஸ்மேட்ஸ் அவரை சமாதானம் செய்தனர். அதைத் தொடர்ந்து சமையலறையில் இருந்த கஸ்தூரி தும்மியதற்கு அவர் சுத்தமாக இல்லை என்று சண்டை போட்டார் வனிதா. ஏற்கனவே கஸ்தூரி கையை கழுவாமல் சாப்பாட்டில் கை வைத்தார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது. நேற்றும் அதே போல ஒரு பிரச்சனையை வனிதா கிளப்பினார். கஸ்தூரியும் கையை மடக்கி கொண்டு மறைத்து தான் தும்பினேன், இப்படி தும்புவது சிறந்த முறை தான் என அமெரிக்கா மருத்துவமனையிலேயே கூறியுள்ளனர் என எப்படி எப்படியோ சமாளித்து பார்த்தும் வனிதா விடாமல் சண்டை செய்தார்.

பிக் பாஸ் மீம்ஸ் : சண்டைகளையும் குழப்பங்களையும் வீழ்த்தி நின்ற சில நகைச்சுவையான மீம்ஸ்!

twitter

இதனால் கோவமானா கஸ்தூரி நான் சமைக்க மாட்டேன் என கிச்சனில் இருந்து வெளியே சென்றார். பிக் பாஸ் வீட்டில் மதுமிதாவிற்கு மட்டுமே சமைக்க தெரியும். தர்ஷன் சில சமையல்கள் மற்றும் செய்வார். மதுமிதா கடந்த வாரம் வெளியேற்றப்பட்ட நிலையில், கஸ்தூரியே சமையல் செய்து வந்தார். அவரும் செய்யவில்லை என்ற சாப்பாடு கிடைத்து என உணர்ந்த வீட்டின் தலைவர் ஷெரீன், ஒருவழியாக கஸ்தூரியை சமாதானம் செய்து சமைக்க வைத்தார். கடந்த சில நாட்களாக கவின், மற்றும் லாஸ்லியா நெருங்கி பழகி வருகின்றனர். 

இதனை பார்த்த சாண்டி மீண்டும் பிரச்சனையில் சிக்கி கொள்ளாதீர்கள் என எச்சரித்துள்ளார். மேலும் அவர்கள் பழகுவது சேரனுக்கு பிடிக்கவில்லை. இதனை தர்ஷனிடம் நேரடியாகவே சேரன் கூறினார். ஆனால் அது கதைக்கு ஆகாத நிலையில் இருவரையும் நேரே கூப்பிட்டு பேசலாம் என சேரன் முடிவு செய்து, கவினிடமும், லாஸ்லியாவிடமும் தனித்தனியாகப் பேசினார். இந்த உறவு அடுத்தக்கட்டத்திற்கு செல்லும் போது, அதில் நிதானமாக இருக்க வேண்டும் என இருவருக்கும் அறிவுரை வழங்கினார். இதை லாஸ்லியாவிடம் கூறும் போது ஒரு தந்தையின் பொறுப்புடன் அவர் கூறினார்.

பிக்பாஸ் ஸ்கூல்... பள்ளிக் குழந்தைகளாக மாறிய போட்டியாளர்கள் : ஆசிரியர்களாக கஸ்தூரி, சேரன்!

twitter

பின்னர் கவின், மற்றும் லாஸ்லியா இதுகுறித்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது தன்னை ஒரு குழந்தை போல லாஸ்லியா பார்த்து கொள்வதாக கவின் கூறினார். இருவரும் ஒருவரை ஒருவர் விரும்புவது நன்றாகவே தெரிந்தது. அவர்கள் ஒன்றாக அமர்ந்து பேசி கொண்டிருந்த புகைப்படங்களை அவர்களது ரசிகர்கள் வைரல் ஆக்கி வருகின்றனர். அதனை தொடர்ந்து லக்ஸுரி பட்ஜெட் டாஸ்கில் சிறப்பாக விளையாடியவர்களை தேர்வு செய்யும் நடைமுறை வந்தது. இதில் பலரும் சேரன் பெயரை குறிப்பிட்டனர். அப்போது, தன்னுடைய பெயரையும் கூற வேண்டும் என அனைத்து ஹவுஸ்மேட்ஸையும் கட்டாயப்படுத்தினார் வனிதா. 

ஆனால் இறுதியில் சேரன், லாஸ்லியா மற்றும் சாண்டி ஆகியோர் சிறப்பாக விளையாடியதாக போட்டியாளர்கள் ஒருமனதாக தேர்வு செய்தனர். அப்போது, இந்த வாரம் சரியாக விளையாடாதவர்களை தேர்வு செய்யும் நடைமுறை இல்லை என்று பிக்பாஸ் அறிவித்தார். இதனால் ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் நிம்மதி அடைந்தனர். ஏனெனில் வாரந்தோறும் இந்த கேள்வி வரும் போது ஒரு பெரிய பிரச்னை வெடிப்பது வழக்கம். பின்னர் சாண்டி, கவின், கஸ்தூரி, தர்ஷன், லாஸ்லியா, முகின் ஆகிய 6 பேரும் விளையாடி கலகலப்பூட்டினர். 

 

twitter

பிறகு கார்டன் பகுதியில் ஹவுஸ்மேட்ஸுக்கு ஒரு டாஸ்க் வழங்கப்பட்டது. அதில் ஒரு போட்டியாளரை குறித்து மற்றவர்கள் சுற்றி அமர்ந்து பேச வேண்டும். இதில் அனைவரும் ஒவ்வொருவரையும் பற்றி பேசினர். கவின் முறை வந்த போது அவரை குறித்து மற்ற போட்டியாளர்கள் சிரிப்பு வரும் விதமாக பேசினர். லாஸ்லியா  மற்றும் சேரன் கவின் குறித்து உணர்வுப்பூர்வமாக பேசினார்கள். கவின் நல்லவர் தான் என சேரன் கூறியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதில் முகென், லாஸ்லியா குறித்து பேசினார். 

லாஸ்லியா குழந்தை மனசுல்ல பிள்ள, நிறைய கேர்பன்னிக்கும், நண்பர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பெண் என்று கூறினார். சாண்டி, கஸ்தூரி, ஷெரீன் ஆகியோர் குறித்து மற்றவர்கள் பேசியது நெகிழ்ச்சியை வரவழைத்தது. இந்நிலையில் தற்போது தான் உண்மையான டாஸ்க் ஆரம்பமாகவுள்ளது என்பதை மக்களுக்கு அறிவிக்கும் வகையில் இன்றைக்கான புரோமோ வெளியாகியுள்ளது. அதில் பிக்பாஸ் வீட்டில் இன்று சாப்பாட்டு போட்டி நடத்தப்படுகிறது. 

இதில் சாண்டியும், தர்ஷனும் பங்கேற்கின்றனர். அதற்காக அவர்களுக்கு லட்டு கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நேரத்தில் அதிக லட்டுகளை சாப்பிடுபவர்கள் வெற்றியாளர்கள் என அறிவிக்கப்படுவார்கள் என தெரிகிறது. இந்த போட்டியின் நடுவராக சேரன் உள்ளார். போட்டியின் படி தர்ஷனும் சாண்டியும் தலா 25 லட்டுகளை மீதம் வைத்து போட்டியை நிறைவு செய்துள்ளனர். இருவரும் சமமாக சாப்பிட்டுள்ளதால் போட்டியில் யார் வெற்றிப்பெற்றார்கள் என்பது இன்று இரவு தெரியவரும்.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.