சீக்ரெட் ரூம் ஆஃப்சனுக்கு நோ சொல்லிவிட்டு பிக் பாஸில் இருந்து வெளியேறினார் நடிகை கஸ்தூரி!

சீக்ரெட் ரூம் ஆஃப்சனுக்கு நோ சொல்லிவிட்டு பிக் பாஸில் இருந்து வெளியேறினார் நடிகை கஸ்தூரி!

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து 60 நாட்களைக் கடந்திருக்கும் நிலையில் இந்த வாரம் கஸ்தூரி (kasthuri) குறைந்த வாக்குகள் பெற்றதால் வெளியேற்றப்பட்டுள்ளார். முன்னதாக இந்த வாரம் முதன் முறையாக சேரன் வீட்டின் தலைவராகியிருக்கிறார். இந்த வாரம் நடந்த பிக் பாஸ் ஸ்கூல் லக்ஸுரி பட்ஜெட் டாஸ்கில் சிறப்பாக விளையாடியவர்களாக சேரன், சாண்டி, லாஸ்லியா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து வழக்கம் போல் சிறப்பாக விளையாடியவர்கள் தலைவர் பொறுப்புக்கு நாமினேட் செய்யப்பட்டனர். இதற்கான தலைவர் போட்டி நடத்தப்பட்டது. இதில் ஹவுஸ்மேட்ஸின் அதிக ஆதரவை பெற்று சேரன் வெற்றிப் பெற்றார்.

பிக் பாஸில் முதல்முறையாக நாமினேஷனில் சாண்டி, தர்ஷன் : இந்த வாரம் வெளியேறப்போவது யார்?

 

twitter

போட்டியாளர்களுக்கு கமல் அறிவுரை

வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை கமல் பிக் பாஸ் வீட்டில் நடைபெற்ற பிரச்னைகள் குறித்து விவாதிப்பார். பிக் பாஸ் போட்டியாளர்கள் தங்களது வெற்றியை நோக்கி பயணிக்காமல் இருப்பதை உணர்ந்த கமல் இந்த வாரம் அதுகுறித்து பேசினார். பிக் பாஸ் நிகழ்ச்சி தனிப்பட்ட நபருக்கான போட்டி. ஆனால் அந்த மனநிலையில் போட்டியாளர்கள் யாரும் கிடையாது. பெரும்பாலான ஹவுஸ்மேட்ஸ் இங்கே தங்களுடைய தனித்த அடையாளத்தை பதிவு செய்யாமல் இருக்கிறார்கள் என ஆதங்கத்தை தெரிவித்தார் கமல். 

இதனை தொடர்ந்து ஹவுஸ்மேட்ஸ் ஒவ்வொருவரையும் கன்ஃபெஷன் ரூமுக்குள் அழைத்து தனித்தனியாக பேசினார். தனிப்பட்ட நபருக்கான பிக் பாஸ் போட்டியில், போட்டியாளர்கள் பலரும் வெற்றியை மற்றொருவருக்கு விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுடன் இருப்பதாக தெரிகிறது. அப்படியில்லாமல் உங்களுடைய வெற்றிக்காக நீங்கள் பாடுபட வேண்டும். மற்ற நாட்டில் இருந்து வந்திருப்பவர்களுக்கு இந்த பொறுப்பு கூடுதலாக இருக்கிறது. தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை மறந்துவிட்டு, வெற்றியை குறிக்கோளாக கொண்டு விளையாட வேண்டும் என பல்வேறு கருத்துக்களை கமல் தெரிவித்தார். லாஸ்லியாவிடம் பேசிய போது அவன் கவினுடன் நெருங்கி பழகியது குறித்து விவாதித்தார்.

 

twitter

அதற்கு பதிலளித்த லாஸ்லியா, நான் நிறைய விஷயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருக்கிறேன், ஃபீலிங்ஸ். அது எந்த அளவுக்கு உண்மையாக இருக்கிறது என்பது சந்தேகமாக உள்ளது. ஒரு விஷயத்தை பொதுவாக சொன்னால் நான் ஏற்றுக் கொள்வேன் என்று லாஸ்லியா கூற கமல், பொதுவாகத் தான் சொன்னேன், நான் பெயர் எதுவுமே சொல்லவில்லையே என்று கூற பார்வையாளர்கள் கை தட்டி ஆரவாரம் செய்தனர். மேலும் பிக் பாஸ் என்பது போட்டிதளம் இதை ஒரு சுற்றுலாத்தலமாக மாத்திக்காதீங்க . உள்ளே போகும் போது யாரையுமே தெரியாது அல்லவா, அப்படியே நினைத்துக் கொண்டு செயல்படுங்க, பொதுவாக சொல்கிறேன் என்று கமல் தெரிவித்தார். 

பின்னர் வனிதாவிடம் பேசினார் கமல். அப்போது “தன்னுடைய வழக்கு வரும் போது வழக்கறிஞராகி விடும் வனிதா, மற்றவர் பிரச்னை என்றால் நீதிபதியாகிவிடுகிறார்” என்று தெரிவித்தார். இதை கேட்டதும் பார்வையாளர்கள் அனைவரும் சிரித்தனர். முகெனிடம் எதற்காக வெற்றியை தர்ஷனுக்கு விட்டுக்கொடுக்க நினைக்கிறீர்கள் என கேள்வி எழுப்பினார் கமல். அதற்கு பதிலளித்த முகென் 19 வயது வரை எவ்வித சந்தோஷத்தையும் அனுபவிக்காத தர்ஷன் இந்த வெற்றியை பெற விரும்புவதாக பெருந்தமையாக தெரிவித்தார். எனினும் நீங்களும் வெற்றி பெற போராட வேண்டும் என கமல் அறிவுரை கூறினார். முந்தைய நிகழ்ச்சியில் பேசிய போட்டியாளர்கள் தங்களுக்கு பிடித்த ஆசிரியர்கள் குறித்து பேசி இருந்தனர். 

பிக் பாஸ் மீம்ஸ் : சண்டைகளையும் குழப்பங்களையும் வீழ்த்தி நின்ற சில நகைச்சுவையான மீம்ஸ்!

கண் கலங்கிய முகென்

அதற்கு நன்றி கூறும் விதமாக, ஹவுஸ்மேட்ஸ் குறிப்பிட்டு பேசிய ஆசிரியர்கள் சர்பரைஸாக தொலைப்பேசியில் இணைந்து பேசினர். இது நிகழ்ச்சியில் மிகவும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக தன்னுடைய மகனும், மகளும் போனில் பேசியதை கேட்ட கஸ்தூரி உடனே வெளியே விட்டும் விடும் படி அழுதது கண்களில் தண்ணீரை வரவழைத்தது. இறுதியாக சேரனிடம் பேசிய கே.எஸ். ரவிக்குமார் அனைத்து போட்டியாளர்களையும் நலம் விசாரித்தார். லாஸ்லியா மற்றும் தர்ஷனுக்காக தமிழ் திரையுலகினர் காத்திருப்பதாக கூறி அனைவருக்கும் வாழ்த்து கூறினார். 

முகென் ராவ், லாஸ்லியா, தர்ஷன் ஆகியோரின் ஆசிரியர்கள் பேசினர். அதில் பேசிய முகென் ஆசிரியை, வகுப்பில் ஏதாவது செய்துவிட்டு ஆசிரியர் என் அறைக்கு முகெனை அனுப்பிவிடுவார். அவர் ஏன் அடிக்கடி இப்படி வருகிறார் என்று பார்த்துபோது அவர் அன்பை தான் தேடி வந்தார் என்கிற அந்த பெண்ணின் குரலை கேட்டதும் முகென் ராவ் கண் கலங்கினார். வாய்ப்பு கொடுக்க மறுத்தவர்கள் முன் நீ வாழ்ந்து காண்பித்தால் மட்டும் பத்தாது, வளர்ந்தும் காண்பிக்க வேண்டும் என கவினுக்கு அவரது ஆசிரியை அறிவுரை வழங்கினார்.

twitter

சாண்டிக்கு கமல் அறிவுரை

பின்னர் வரம்பு மீறி செயல்பட்ட சாண்டிக்கு அறிவுரை வழங்கினார் கமல். ஸ்கூல் டாஸ்கின் சத்துணவு ஆயா மாதிரி கஸ்தூரி இருப்பதாக சாண்டி கூறியிருந்தார். இந்த கருத்துக்கு சமூக வலைத்தளத்தில் பல்வேறு நபர்கள் எதிர்ப்பு தெரிவித்திருத்தனர். இதனையடுத்து சாண்டிக்கு அறிவுரை வழங்கிய கமல், வசதியில்லாத பல குழந்தைகள் பட்டதாரியாக உருவாக காரணம் இந்த சத்துணவு. 

அது மட்டுமில்லாமல் சத்துணவு பரிமாறும் தாய்மார்களும் தான், மாதா, பிதா, குரு, தெய்வம் இவைகளில் இவர்களுக்கு தான் முதலிடம். மற்றவர்கள் குழ்ந்தையை தங்களது குழந்தையாக எண்ணி அவர்களுக்கு சமைத்து உணவு பரிமாறுவதோடு, கல்வியும் கற்றுக்கொடுக்கும் அவர்கள் வெறும் மாதா அல்ல. ஜகன்மாதா. அவர்களை கிண்டல், நகைச்சுவைக்கு பயன்படுத்தக் கூடாது. இது தான் வரம்பி மீறிய செயல். இனிமேல் இது போன்று செய்ய வேண்டாம் என்று அறிவுரை வழங்கியுள்ளார்.

கமல் - லாஸ்லியா குறும்படம்

இதனை தொடர்ந்து லக்‌ஷூரி பட்ஜெட் 500 மதிப்பெண்கள் குறைந்ததற்கு காரணம், மைக்கை கழற்றிவிட்டு பேசிய கவின் மற்றும் லாஸ்லியா ஆகியோருக்கு குறும்படம் போட்டுக் காண்பிக்கப்பட்டது. யாரும் பார்க்கவில்லை என்று நினைக்க வேண்டாம் என்பதற்காவும், விதி மீறி விளையாட்டில் யாரும் வெற்றி பெற முடியாது என்பதற்காகவும் விளக்கப் படம் போடப்பட்டது. ஆங்கிலம் பேசியதாக சிலரை ஜெயிலுக்கு அனுப்பிய நீங்கள், அதைவிட பெரிய தவறு செய்துவிட்டீர்கள். டிவியில் பேச வேண்டாம் என்று நினைத்தால் வெளியில் சென்று பேசிக்கொள்ளலாம். இதனை ஒரு எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ளுங்கள் என கமல் கோவமாக கூறினார். 

லாஸ்லியாவிற்கு இதைவிட சிறந்த தண்டனை வேறு என்ன இருக்க முடியும்? பாரபட்சம் காட்டும் Biggboss

twitter

பிக் பாஸில் இருந்து வெளியேறிய கஸ்தூரி

அதை தொடர்ந்து நிகிழ்ச்சியில் எலிமினேஷனுக்கான நடைமுறை வந்தது. இதில் தர்ஷன், சாண்டி, சேரன் மற்றும் கஸ்தூரி (kasthuri) ஆகியோர் நாமினேஷனில் இருந்தனர். தர்ஷன், சாண்டி காப்பாற்றப்பட்டதாக கூறிய கமல், கஸ்தூரி (kasthuri)  வெளியேற்றப்படுவதாக அறிவித்தார். போட்டியாளர்களிடம் ப்ரியா விடை கொடுத்த போது கவினிடம் பேசிய அவர், கூடிய விரைவில் அவரை வெளியில் சந்திப்பதாக கூறி நக்கல் அடித்தார். பிறகு வெளியில் வந்த அவர் போட்டியாளர்களை சந்தித்துப் பேசினார். அனைவருக்கும் தன்னுடைய வாழ்த்துக்களை அவர் கூறிக்கொண்டார். twitter

தனிப்பட்ட முறையில் முகெனின் வெற்றியை எதிர்நோக்கியுள்ளதாக கூறி அவரை தனது செல்லப்பிள்ளை என தெரிவித்தார். பின்னர் கஸ்தூரிக்கு ‘சீக்ரெட் ரூம்’ வாய்ப்பை வழங்கினார் கமல். ஆனால் அதை ஏற்க மறுக்க கஸ்தூரி தன்னுடைய குழந்தைகளை குரலை கேட்ட பின்பு பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்க முடியாது என்று கூறி திட்டவட்டமாக மறுத்துவிட்டார். தொடர்ந்து பேசிய கமல் ஹாசன் பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் எவிக்‌ஷன் நடைமுறை கிடையாது. ஆனால் உள்ளே இருக்கும் போட்டியாளர்களுக்கு இது தெரியாது. நாளை எலிமினேஷன் நடைமுறை நடக்கும். ஆனால் அதன் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது என தெரிவித்தார். 

பிக் பாஸ் இன்றைய நிகழ்ச்சியின் முதல் புரொமோ வெளியாகியுள்ளது. இதில் வழக்கம் போல் வாரத்தின் முதல் நாளுக்கான நடைமுறைப்படி நாமினேஷன் நடைபெறுகிறது. அதில் முகென், தர்ஷன், சேரன் ஆகியோர் கவினை நாமினேட் செய்கின்றனர். அபி பிரச்சினையில் தனக்கு அட்வைஸ் செய்த கவின், தற்போது லாஸ்லியாவுடன் அதே தவறை செய்வதாக முகென் கூறுகிறார். கவின் மைக்கை ஆஃப் செய்தது மட்டுமின்றி லாஸ்லியாவையும் அப்படி செய்ய சொன்னது தவறு என்கிறார் தர்ஷன்.சேரனும் கவினையே நாமினேட் செய்துள்ளார். வழக்கம் போல் தனது மகளின் எதிர்காலம் கருதி இந்த முடிவை எடுப்பது போல் அவர் பேசுகிறார்.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.