கேரளாவை தொடர்ந்து தமிழகத்தில் பிரபலமான ஃபுல்ஜார் சோடா : வீட்டிலேயே ஈஸியாக செய்யலாம்!

கேரளாவை தொடர்ந்து தமிழகத்தில் பிரபலமான ஃபுல்ஜார் சோடா : வீட்டிலேயே ஈஸியாக செய்யலாம்!

கேரளாவில் அனைவராலும் விரும்பி குடிக்கும் ஃபுல்ஜார் சோடா (fuljar soda) தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பன்னீர் சோடா, கோலி சோடா, லெமன் சோடா, குலுக்கி சோடா என பலவகை சோடாக்களை குடித்திருப்போம். அது என்ன ஃபுல்ஜார் சோடா? என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழலாம். யாரோ போஸ்ட் செய்த ஃபுல்ஜார் சோடா என்னும் வீடியோ சேலஞ் பலராலும் பின்பற்றப்பட்டு கேரளாவை மட்டுமின்றி தமிழகத்தையும் கலக்கி வருகிறது. கேரளாவில் தொடங்கிய இந்த ஃபுல்ஜார் சோடா மோகம் சென்னையையும் விட்டு வைக்கவில்லை.

சுவையான சூடான விதவிதமான முட்டை ஆம்பிளேட் கறி செய்வது எப்படி!

twiter

சென்னை நகரின் பல பகுதிகளில் இருந்தும் போரூர் நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர் ஃபுல்ஜார்  சோடா விரும்பிகள். காரணம் போரூரில் உள்ள கடை ஒன்றில் தான் இந்த ஃபுல்ஜார் சோடா விற்கப்படுகிறது. ஜிஞ்சர், ப்ளூ லைம், ஸ்ட்ராபெர்ரி லேஸ் ப்ளூ என 4 விதமான சுவைகளில் கிடைக்கும் ஃபுல்ஜார்  சோடாவை ரூசித்து பார்க்க செங்கல்பட்டு, பெரம்பூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து கல்லூரி மாணவர்களும், இளைஞர்களும், பெண்களும் ஆர்வமாக உள்ளனர். 

சென்னையைத் தொடர்ந்து மதுரை, திருச்சி, கோவை என்று  ஃபுல்ஜார் சோடா (fuljar soda) அலை பரவியுள்ளது. அதாவது ஒரு கண்ணாடி கிளாஸில் நிரம்பிய சோடாவுடன் பச்சை மிளகாய் , இஞ்சி, புதினா , எலுமிச்சை சாறு கலவையை கலந்து அதில் சப்ஜா விதையையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். பின் ஷாட் கிளாசில் அதை சேர்த்து தண்ணீர் நிரப்பி அப்படியே அந்த சோடா நிரம்பிய கிளாஸில் போட வேண்டும். பின் அது பொங்கி ஊற்ற தொடங்கும். உடனே அதை ஒரே வாயில் இடைவெளி விடாமல் குடித்து முடிக்க வேண்டும்.

மகத்துவம் நிறைந்த தேனின் ஆரோக்கிய மற்றும் அழகு பலன்கள்!

twiter

இதுதான் இந்த ஃபுல்ஜார் சோடா சேலஞ். ஃபுல் ஜார் என்பதற்கு ஜார் முழுவதும் சோடா (fuljar soda) என்று அர்த்தமாம். மொத்தத்தில் இது காரம் மற்றும் சோடா இணைந்து மண்டைக்கு ஏறும் விறுவிறு சேலஞ். இது இணையதளங்களில் பிரபலமான போதே இதன் சுவையை அனுபவிக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் வந்துவிட்டது. இத்தகைய ஃபுல்ஜார் சோடா எவ்வாறு தயாரிப்பது. அதற்கு தேவையான பொருட்கள் என்ன? அதை எப்படி செய்வது என்பது குறித்து இங்கே காணலாம். 

தேவையானவை : 

எலுமிச்சை - 1 
உப்பு  - தேவையான அளவு 
நன்னாரி சர்பத் - 1 கப் 
ஜீரா - 2 டேபிள் ஸ்பூன் 
சப்ஜா விதை - 1 கப் 
இஞ்சி பேஸ்ட்  - தேவையான அளவு 
புதினா பேஸ்ட் - தேவையான அளவு 

செய்முறை : 

முதலில் இஞ்சி, புதினா பேஸ்ட், எலுமிச்சை சாறு ஆகியவற்றை ஒன்றாக கலந்து வைத்து கொள்ள வேண்டும். இதனுடன் சர்பத், ஜீரா, சப்சா விதை, உப்பு ஆகியவற்றை தேவையான அளவு சேர்க்க வேண்டும். இந்த கலவையை ஒரு சிறிய கண்ணாடி டம்ளரில் எடுத்து கொள்ளவும். மற்றொரு பெரிய கண்ணாடி டம்ளரில் சோடாவை நிரப்பி கொள்ள வேண்டும். சாப்பிடும் போது கலவை வைத்துள்ள சிறிய டம்ளரை, பெரிய கண்ணாடி டம்ளரில் முழக்கடிக்க வேண்டும். சோடா நுரைத்து வரும் போது குடிக்க வேண்டும். 

தாய்மை சுரக்கும் உயிர் உணவு தாய்ப்பால் - நீங்கள் அறியாததை அறிந்து கொள்ளுங்கள் !

twiter

  • சோடாவில் சர்க்கரை அதிகமாக இருப்பதால் தொடர்ந்து சோடா குடிப்பதானால் உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்.
  • சோடாவின் வண்ணத்திற்காக பல கெமிக்கல் சேர்க்கப்படுகிறது. இவை குடல், கல்லீரல் புற்றுநோய் மற்றும் தைராய்டு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக  கூறப்படுகிறது.
  • சோடாவை தினமும் குடித்தால் முதுமையில் அல்சீமர் நோய்க்கு தள்ளப்படுவீர்கள் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கிறார்கள். இதனால் ஞாபக மறதி, மந்தத் தன்மை, வாய் குழறுதல் போன்றவை உண்டாகும் வாய்ப்புகள் உண்டு.
  •  அடிக்கடி சோடா குடிப்பதால் டைப் 2 சர்க்கரை நோய் மற்றும் மெட்டபாலிக் சிண்ட்ரோம் ஏற்படும் இடர்பாடு 36 சதவீதமாக உள்ளது. இதனோடு சேர்த்து  அதிகரிக்கும் குளுகோஸ், உயர் இரத்த அழுத்தம், கொழுப்பு மற்றும் இடுப்பு சுற்றளவு பெருக்கம் போன்ற பிரச்சினைகளும் ஏற்படும். 
  • எனவே அடிக்கடி சோடா குடிப்பதை தவிர்க்க வேண்டும். எப்போதாவது டிக் டாக் போன்ற சமூக வலைத்தளங்களில் பதிவிட விரும்பும் நேரங்களில் மட்டும் சாப்பிடலாம். 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.