தாய்மை தயாரிக்கும் உயிர் உணவு தாய்ப்பால் - நீங்கள் அறியாததை அறிந்து கொள்ளுங்கள் !

தாய்மை தயாரிக்கும் உயிர் உணவு தாய்ப்பால் - நீங்கள் அறியாததை அறிந்து கொள்ளுங்கள் !

தாய்ப்பால் இதைப் பற்றி பல வருடங்களாக பேசி வருகிறது உலகம். திடீரென இந்த 10 அல்லது 15 வருடங்களாகத்தான் தாய்ப்பாலுக்கான விழிப்புணர்வு பிரச்சாரங்கள் உலகெங்கிலும் பரவ ஆரம்பித்தன.
காரணம் ஒரு குறிப்பிட்ட காலத்தின் போது பெண்கள் அனைவரும் தாய்ப்பால் தருவதால் தங்கள் மார்பகங்களின் வடிவம் மாறி அழகு குறைவதை விரும்பவில்லை என்பதுதான். இது சுயநலமான செயல் தன்னை நம்பி பிறந்த உயிரை அலட்சியப்படுத்தும் செயல் என்பதையும் புறக்கணித்து இந்த விஷயங்கள் தொடர்ந்து நடந்தன.

இதனைத் தடுக்கவே தாய்ப்பால் பற்றிய விழிப்புணர்வுகள் ஆரம்பமாகின. உலகில் 120 நாடுகள் ஆகஸ்ட் 1 முதல் 7 வரையான நாட்களை தாய்ப்பால் வாரமாக கொண்டாடுகிறது. இதற்கான விதை 1992ல் வேர்ல்ட் அலையன்ஸ் பிரஸ்ட் ஃபீடிங் ஆக்‌ஷன்’ (வாபா) எனும் அமைப்பு மூலம் போடப்பட்டது.

 

youtube

குழந்தை பிறந்த உடன் பெண்ணின் மார்பில் சுரக்கும் பால் சீம்பால் எனப்படுகிறது. இந்தப் பால் அவசியம் குழந்தைக்கு புகட்டி ஆக வேண்டும். இதில் குழந்தைக்கு தேவைப்படும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும்.

ஆறு மாதங்கள் தொடர்ந்து பால் கொடுப்பதன் மூலம் குழந்தையின் நுண்ணறிவுத் திறன் அதிகரிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. அடிப்படை ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் குழந்தைக்கு கிடைக்கிறது.

தாய்ப்பால் (breastfeeding) கொடுக்கும் தாய்மார்களுக்கு வழக்கத்தை விட அதிகமான கலோரிகள் செலவாவதால் அவர்கள் கூடுதலாக புரதசத்து உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். மாவுசத்து உணவுகளை அளவாக எடுக்க வேண்டும்.

பால் கொடுக்கும்போது காற்றோட்டமான அறையில் வைத்து பால் கொடுப்பதே நல்லது. குழந்தையின் வாய்ப்பகுதி காம்பு பகுதியில் நன்றாக அழுந்தி இருக்க வேண்டும். கீழ்த்தாடை மார்போடு ஒட்டி இருக்க வேண்டும். இல்லாவிட்டால் மார்பக காம்பில் வெடிப்புகள் ஏற்படலாம்.

pinterest

வேலைக்கு செல்லும் தாய்மார்கள் பிரேஸ்ட் பம்ப் முறையில் தாய்ப்பாலை எடுத்து வைத்து தேவைப்பட்ட நேரங்களில் கொடுக்கலாம். அறை வெப்ப நிலையில் எட்டு மணி நேரம் வைத்து கொடுக்கலாம். குளிர்சாதனப்பெட்டியில் வைத்தால் 24 மணி நேரம் வரை கெடாது. ஆனால் குளிர்சாதனப் பெட்டியில் வைத்த பாலை நார்மல் வெப்பம் வரும்வரை வெளியே வைத்திருந்து அதன்பின்னரே குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் சமயம் தாய்மார்கள் தங்கள் மார்பகங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். காலை மற்றும் மாலை வேளைகளில் காட்டன் துணியால் வெதுவெதுப்பான நீரில் நனைத்து மார்பகங்களைத் துடைத்து விட வேண்டும்.

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் உள்ளாடை அணியக் கூடாது என்பது தவறான நம்பிக்கை. சரியான அளவுகளில் அணிவதன் மூலம் நல்ல சப்போர்ட் ஏற்படும். இறுக்கமான உள்ளாடைகள் தவிர்க்கப்பட வேண்டும்.                                                                           

pinterest

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!                                    

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.