ரம்புட்டான் (rambutan) பழம் லேசான புளிப்பு கலந்த இனிப்புச் சுவையினை உடையது. ரம்புட்டான் பூக்கள் நல்ல மணத்துடன் வெள்ளை மற்றும் பச்சை நிறங்களில் காணப்படுகின்றன. இப்பூக்களிலிருந்து காய்கள் பச்சை வண்ணத்தில் தோன்றுகின்றன. இக்காய்கள் பழங்களாக மாறும்போது சிவப்பு மற்றும் மஞ்சள் கலந்த வண்ணத்தில் மேற்புறத் தோலினைக் கொண்டுள்ளன. தோலின் மேற்புறத்தில் ரப்பர் போன்ற முடிகள் காணப்படுகின்றன. பழத்தின் உட்புறம் வெள்ளை அல்லது இளஞ்சிவப்பு வண்ணத்தில் முட்டை வடிவ சதைப்பகுதி உள்ளது. இச்சதைப்பகுதி நுங்கு போன்று வழுவழுப்பாகவும், மென்மையாகவும் புளிப்பு கலந்த இனிப்பு சுவையுடன் நீர்சத்து மிகுந்து காணப்படுகிறது.
வீகென்ட் ஸ்பெஷல் : ரெஸ்டாரெண்ட் ஸ்டைல் ருசியான சிக்கன் பகோடா செய்வது எப்படி?
pixabay
இது பெரியவர்கள் முதல் சிறியவர்கள் அனைவரையும் கவர்ந்திழுக்கும். தமிழ்நாட்டில் குற்றால சீசன் மாதங்களான ஜீலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் அதிக அளவு கிடைக்கும். தற்போது சீசன் காலம் தொடங்கியிருப்பதால் இப்பழம் அனைத்து கடைகளிலும் அதிகளவு கிடைக்கிறது. ரம்புட்டானில் (rambutan) புரோடீன்கள், கார்போஹைட்ரேட்டுகள், நார்சத்துகள், அதிக அளவு நீர்சத்து, கால்சியம், மெக்னீசியம், இரும்புச் சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம், துத்தநாகம் போன்ற தாதுஉப்புக்கள், விட்டமின் சி, விட்டமின் பி1(தயாமின்), விட்டமின் பி3(நியாசின்), விட்டமின் பி6(பைரிடாக்ஸின்) போன்ற ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன.
மருத்துவ குணங்கள் நிறைந்த ரம்புட்டான்
- ரம்புட்டானின் (rambutan) இலை, பட்டை, வேர் மற்றும் பழம் போன்றவை மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றன. மலேசியா மற்றும் இந்தோனேசியாவில் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி உள்ளிட்டவைகளுக்கு ரம்புட்டான் மருந்தாகப் பயன்படுத்தப்பட்டது.
பூக்களை பயன்படுத்தி சருமத்தை பாதுகாப்பது எப்படி : தெரிந்து கொள்ளுங்கள்!
- இப்பழத்தில் காப்பர் இருப்பதால், இதனை தொடர்ந்து உணவில் சேர்த்து வருவதால் ரத்தத்தில் சிவப்பு மற்றும் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை குறிப்பிடத் தகுந்த அளவில் உயர்கிறது. உடல் சீரான வளர்ச்சி பெறுவதற்கு, இந்தப் பழம் முக்கிய பங்காற்றுகிறது என ஊட்டசத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
- ரம்பூட்டான் பழத்தில் வைட்டமின் பி-3 அதிகம் உள்ளது. உடலின் உள்ள கொழுப்பின் அளவை குறைத்து, இதயக் குழாய்களில் கொழுப்பு படிவதைத் தடுப்பதால் மாரடைப்பிலிருந்து பாதுகாக்கிறது. மேலும் செக்ஸ் ஹார்மோன் உற்பத்திக்கு காரணமான அட்ரினல் சுரப்பியின் வேலையைத் தூண்டுகிறது.
- நியாசின் எனும் சத்துப்பொருள் இந்த பழத்தில் காணப்படுகிறது. இது நீரிழிவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. ஆன்ட்டி ஆக்சிடென்டுகளும் மிகுந்துள்ள இந்த பழம் உடல் பருமனைக் குறைக்க நினைப்பவர்கள் டயட்டில் சேர்த்துக் கொள்ளலாம். இதில் இருக்கும் வைட்டமின் ‘சி’ கண் பார்வையை மேம்படுத்துவதோடு, ஆஸ்துமா நோயையும் கட்டுப்படுத்த உதவுகிறது.
- நம்முடைய உடல் உறுப்புக்களில் பெரும்பாலானவற்றைப் பாதுகாப்பதில் இதன் பங்கு குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி நமது அழகை பாதுகாக்கவும் பயன்படுகிறது. ரம்பூட்டான் பழத்தை தொடந்து சாப்பிட்டு வந்தால் தலைமுடி, நகம் மற்றும் சருமத்துக்கு மினுமினுப்பைக் கொடுக்கிறது.
- நாம் அன்றாடம் உபயோகப்படுத்தும் பழ வகைகளிலேயே, ஏராளமான வைட்டமின்களைக் கொண்டதாக இந்த பழம் திகழ்கிறது. அதாவது, 83 வகையான வைட்டமின்கள் இதில் உள்ளதாக கண்டறியப்பட்டு உள்ளது. இந்த வைட்டமின்கள் தாம்பத்ய வாழ்வு சிறக்க துணை செய்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
pixabay
- நம்முடைய உடல் உறுப்புகள் அனைத்தும் சீராக இயங்க வைக்கிற இரும்புச்சத்து இதில் ஏராளமாக காணப்படுகிறது. இதன் காரணமாக, ஹீமோகுளோபின் உற்பத்தி அதிகளவில் இருக்கிறது. இது நுரையீரலில் இருந்து ஆக்சிஜனைப் பல திசுக்களுக்கு அனுப்பும் வேலையைத் திறம்பட செய்கிறது.
- நீர்ச்சத்து அதிகம் இருப்பதால், நாக்கு வறண்டு போவதை உடனடியாக நிவர்த்தி செய்கிறது. எனவே, விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு ஏற்ற பழமாகவும் ரம்பூட்டான் திகழ்கிறது.
- புற்றுநோய் பரவுவதைத் தடுத்து, அந்நோயின் பாதிப்புக்கு உள்ளானவர்களைக் குணப்படுத்துவதில் சிறந்த மருந்தாக இந்தப் பழம் திகழ்கிறது.
- இப்பழமரத்தின் இலைகளை அரைத்து நெற்றியில் பற்றுப் போட நரம்புகளை அமைதி படுத்தி தலைவலியை குறையச் செய்யும். இம்மரத்தின் மரப்பட்டையை அரைத்து வாய்புண்ணுக்கு மருந்தாகப் போடப்படுகிறது. இம்மரவேரினை அரைத்து பற்றிட காய்ச்சல் குறையும்.
பழத்தை வாங்கும் போது கவனிக்க வேண்டியவை!
- ரம்புட்டானை வாங்கும்போது புதிதாகவும், மேல்தோலின் நிறம் அடர்ந்த மஞ்சளுடன் கூடிய சிவப்பு நிறத்தில் இருக்க வேண்டும். தோலில் காயங்கள் உள்ள பழங்களை நீக்கிவிட வேண்டும். மேற்புறத்தில் உள்ள ரப்பர் போன்ற முடியானது விறைப்பாக இருக்க வேண்டும்.
- சாதாரண வெப்பநிலையில் இரண்டு நாட்கள்வரை வைத்திருந்து இப்பழத்தினைப் பயன்படுத்தலாம். குளிர்பதனப் பெட்டியில் ஒரு வாரம்வரை இப்பழத்தினை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
நாவூரும் மில்க் ஸ்வீட்ஸ் இனி வீட்டிலேயே செய்து அசத்தலாம்!
pixabay
சாப்பிடும் முறை
- ரம்புட்டான் பழத்தை சாப்பிடும் முன்னர் பழத்தை பழங்களை நன்கு அலசிக் கழுவ வேண்டும். இரண்டு தடவைகளாவது கழுவ வேண்டும். கழுவிய பின்னர் கத்தியினால் தோலை வெட்டி அகற்றிய பின்னர் மீண்டும் கைகளை நீரினால் கழுவி அதன் பின்னரே சுளைகளை உண்ண வேண்டும்.
- இவ்வாறு சுத்தப்படுத்திய பின்னர் நாம் சாப்பிடுவதால் நோய்கள் எதுவும் வராது. உள்ளிருக்கும் சுளைகள் சுத்தமானவை. இப்பழத்தை மதிய வேளையில் சாப்பிட்டு வருவது நல்லது. இரவு நேரங்களில் சாப்பிட்டால் ஜலதோஷம் பிடிக்கும் என்பதால் இரவில் இப்பழம் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன