வீகென்ட் ஸ்பெஷல் : ரெஸ்டாரெண்ட் ஸ்டைலில் ருசியான சிக்கன் பகோடா செய்வது எப்படி?

வீகென்ட் ஸ்பெஷல் : ரெஸ்டாரெண்ட் ஸ்டைலில் ருசியான சிக்கன் பகோடா செய்வது எப்படி?

சிக்கெனில் பல வகை ரெசிபிகள் உள்ளது . அதில் சிக்கன் பக்கோடா (chicken pakoda) என்பது ஒரு வகையான ஸ்டார்ட்டர் அல்லது ஸ்னேக்ஸ் என்று கூறலாம். இதில், ரெஸ்ட்டாரெண்ட் ஸ்டைல், ஸ்ட்ரீட் புட் ஸ்டைல், ஆந்திரா ஸ்டைல், பஞ்சாபி ஸ்டைல் சிக்கன் பகோடா என்று பல வகை உள்ளது. இருப்பினும் இதில் அடிப்படையான ஒரு விஷயம் என்றால் அது மேரினேஷன் தான். அதாவது சிக்கனை ஊற வைக்க உங்கள் மசாலாவை எந்த அளவிற்கு தயார் செய்கிறீர்களோ அதற்கேற்ப உங்கள் சிக்கன் பக்கோடா ருசியாகவும் மிருதுவாகவும் இருக்கும்.

சரி! இதை ரெஸ்ட்டாரெண்டில் மட்டுமில்லாமல் நாம் எளிதில் எளிய படிகளை கொண்டு (recipe) வீட்டிலேயே தயார் செய்யலாம். அதை எவ்வாறு செய்வது என்று இங்கு பார்க்கலாம்.

சிக்கன் பகோடா சமைக்க தேவையான பொருட்கள்

 • எலும்பு இல்லாத மென்மையான சிக்கன் துண்டுகள் (250 கிராம்)
 • இஞ்சி மற்றும் பூண்டு விழுது (1 டேபிள் ஸ்பூன்)
 • சிவப்பு மிளகாய் தூள் (2 டேபிள் ஸ்பூன்)
 • கொத்தமல்லி தூள் (1 டேபிள் ஸ்பூன்)
 • மஞ்சள் தூள் (1 டேபிள் ஸ்பூன்)
 • கரம் மசாலா (1 டேபிள் ஸ்பூன்)
 • எலுமிச்சை சாறு(½ டேபிள் ஸ்பூன்)
 • சோள மாவு (2 ½  டேபிள் ஸ்பூன்)
 • கோதுமை /அரிசி மாவு  (2 டேபிள் ஸ்பூன்)
 • முட்டை - 1
 • நறுக்கப்பட்ட கொத்தமல்லி இலைகள் 
 • வெட்டப்பட்ட பச்சை மிளகாய் 
 • சுவைக்க உப்பு
 • முந்திரி (1 கப்) 
 • தயிர் (1-2 டேபிள் ஸ்பூன் தேவைப்பட்டால்) 

சிக்கன் பகோடா செய்முறை ( Chicken pakoda recipe)

Instagram

இதற்கான மூன்று எளிதான படிகள்  - மசாலாவில் கலப்பது,  மாரினேட் செய்து, வறுப்பது ! 

 1. முதலில் சிக்கன் துண்டுகளை நன்றாக கழுவிக்கொண்டு, அதில் இஞ்சி பூண்டு விழுது, சிவப்பு மிளகாய் தூள் (காரத்திற்கு ஏற்ப ) மற்றும் கொத்தமல்லி தூள் சேர்க்கவும். 
 2. பின்னர் அதில் கரம் மசாலா தூளை சேர்த்து ஒரு ஸ்பூன் தயிரை சேர்க்கவும்.
 3. ருசிக்க உப்பு சேர்த்து கலவையை நன்றாக கிளறவும்.
 4. இதில், 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து தொடர்ந்து கிளறவும்.
 5. இப்போது அதில் சோள மாவு சேர்க்கவும். சிக்கன் அதிக மொருவலாக வேண்டுமானால் அதில் அரிசி மாவை சேர்க்கவும்.
 6. இப்போது இதில் தேவைப்பட்டால்  ஒரு முட்டையைச் சேர்த்து கலக்கிக் கொள்ளுங்கள். 
 7. இந்த கலவையில், இன்னும் சிறிது காரசாரமான ருசிக்கு, கொத்தமல்லி மற்றும் பச்சை மிளகாய் சேர்க்கவும்.  
 8. கலவையை மசாலாப் பொருட்களுடன் ஊறவைத்த பின், அதில் சிறிது எண்ணெயைச் சேர்த்து நன்கு கிளறவும்.
 9. இதை மாரினேட் அதாவது ஒரு மணி நேரம் (அணைத்து மசாலா கலவையுடன்) நன்கு ஊற வைக்கவும்.

இப்போது ஒரு கடாயில்  3/4 வது எண்ணெய் நிரப்பி சிக்கன் துண்டுகளை வறுக்கவும். இது கோல்டன் பிரவுனாக வெந்தவுடன் இறக்கிவிடலாம். 

ஆஹா!! உங்கள் பசியை கிளப்பிவிடும் , சுவையான சூடான சிக்கன் பக்கோடா தயார் !! 

இப்போது, ​​அதே வாணலியில், சிறிது கறிவேப்பிலை, பச்சை மிளகாய் துண்டுகள் மற்றும் முந்திரி ஆகியவற்றை லேசாக வறுக்கவும். பின்னர் அவற்றை  வறுத்த சிக்கன் பகோராக்களின் மேல் அலங்கரித்து சூடாக பரிமாறவும்.

இதை இப்போதே சாப்பிட தோன்றுமே?  இந்த பருவமழை காலங்களில், இதை சமைத்து சாப்பிட்டு மகிழுங்கள்.

 

சிறந்த ருசியான சிக்கன் பக்கோடாவை எளிதில் சமைக்க சில உதவிக்குறிப்புகள் -

Youtube

 

 1. சிக்கன் பக்கோடாவின் ருசிக்கான முக்கிய குறிப்பு - நீங்கள் கலக்கும் மசாலாவில் தான்  இருக்கிறது.இதை உங்கள் தேவைக்கேற்ப தயார் செய்யவும் . 
 2. அவசரம் வேண்டாம். மசாலாவில் நன்கு ஊறவைத்த பிறகு இதை வறுக்கவும். 
 3. சிக்கன் வெந்துவிட்டதா என்று தெரிந்துகொண்டு  (கோல்டன் பிரவுன் நிறத்தில் இருக்கும்) அதை கீழே இறக்கவும். 
 4. சிக்கன்  நன்கு வெந்துவிட்டால்  குமிழ்கள் வருவது நின்று விடும்.
 5. வறுக்க, எண்ணெய் சரியான சூட்டில் இருப்பது அவசியம்.
 6. தயிருக்கு பதிலாக 1  டேபிள் ஸ்பூன் வினிகர் மற்றும் தண்ணீரை சேர்க்கலாம். 

ஹாப்பி குக்கிங் ! 

 

மேலும் படிக்க - உங்கள் பிரியாணி ஆசையை நிறைவேற்ற சென்னையில் 8 சிறந்த உணவகங்கள் !

பட ஆதாரம் - Instagram 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி !

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.