அடர்த்தியான முடி வளர்சிக்கு இஞ்சி – பெறுங்கள் நல்ல அடர்ந்த கூந்தலை!

அடர்த்தியான முடி வளர்சிக்கு இஞ்சி – பெறுங்கள் நல்ல அடர்ந்த கூந்தலை!

இஞ்சியில் (ginger) அதிக மருத்துவ குணங்கள் உள்ளன என்பதை பற்றி அனைவரும் அறிவார்கள். இஞ்சி பெரும்பாலான உணவுகளில் பயன்படுத்தப்படுகின்றது. இது நல்ல உடல் நலத்தையும், ஆரோகியத்தையும் கொடுக்கின்றது. மேலும் சமைத்த உணவிற்கு நல்ல மனத்தையும் தருகின்றது.

ஆனால், எத்தனை பேருக்குத் தெரியும், இஞ்சி தலைமுடி நன்கு வளரும் உதவும் என்று?

நீங்கள் முயற்சித்து பார்க்கலாம்!

இஞ்சியில் அதிக மருத்துவ குணங்கள் உள்ளன. இது உங்கள் தலைமுடி நல்ல நீளமாகவும், அடர்த்தியாகவும் வளர உதவுகின்றது. எனினும், இதனை சரியான முறையில் பயன்படுத்துவது முக்கியம். இந்த வகையில், இஞ்சியை எப்படி தலைமுடி நன்கு வளர பயன்படுத்தலாம் என்று சில குறிப்புகள், உங்களுக்காக இங்கே: 

pixabay

ஏன் தலைமுடி வளர்ச்சிக்கு இஞ்சியை பயன்படுத்த வேண்டும்?

சில முக்கிய காரணங்கள்:

 • இஞ்சியில் (ginger) இரத்த ஓட்டத்தை தூண்டும் பண்புகள் உள்ளன. இதனால் வேர்களுக்கு போதிய இரத்த ஓட்டமும், போஷாக்கும் கிடைகின்றது. 
 • இது நல்ல ஆரோக்கியமான தலைமுடி வளர்ச்சியை தூண்டுகின்றது.
  மேலும் இது மிதமான உஷ்ணத்தை தடவிய இடத்தில் உண்டாக்குவதால், அந்த இடம் தூண்டப்பட்டு விரைவாக சத்துக்களை உள்வாங்கிக்கொள்ளும் தன்மையையும் பெறுகின்றது.
 • இஞ்சியில் அதிக ஆக்சிஜனேற்றம் இருப்பதால், ப்ரீ ராடிகல்ஸ்கலை எதிர்க்கும் பண்புகள் கொண்டிருகின்றது. இதனால் உங்கள் தலைமுடிக்கு பாதிப்பை உண்டாக்கும் ப்ரீ ராடிகல்ச்களை போக்க உதவுகின்றது. இதனால் முடி உதிர்வு குறைகின்றது.

ஆரோக்கியமான உணவு முறைகளால் சருமத்தின் காவலன் கொலாஜனை அதிகரிக்கும் வழிமுறைகள்!

pixabay

 • இஞ்சியில் அதிக தாது பொருள்கள் மற்றும் தேவையான எண்ணை சத்து இருப்பதால், தலைமுடிக்கு நல்ல போஷாக்கைத் தருகின்றது. 
 • அழற்சி எதிர்ப்பு மற்றும் கிருமி நாசினியாக இஞ்சி இருப்பதால் அரிப்பு, வறண்ட வேர் பகுதி மற்றும் புண் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கின்றது. 

இஞ்சியை எப்படி தலைமுடி வளர்ச்சிக்கு பயன்படுத்துவது?

1. இஞ்சி தைலம்: இதை மிக எளிதாக செய்து, தினமும் உங்கள் தலைமுடிக்கு பயன்படுத்தி வரலாம்.   

தேவையான பொருட்கள்

 • இஞ்சி (ginger) சிறிதளவு
 • தேங்காய் எண்ணை 1௦௦ மில்லி கிராம்

செய்முறை

 • இஞ்சியை நன்கு சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
 • ஒரு சிறிய பாத்திரத்தில் தேங்காய் எண்ணையை ஊற்றி அதில் இஞ்சியை சேர்த்து
 • சிறிது நேரம் மிதமான சூட்டில் நன்கு காய வைக்க வேண்டும்.
 • கொதிக்கும் பதம் வரை காய வைக்க வேண்டும்.
 • பின் அடுப்பில் இருந்து இறக்கி நன்கு குளிர விட வேண்டும்.
 • இதனை வடிகட்டி ஒரு குப்பியில் ஊற்றி வைத்துக் கொண்டு தினமும் தலைமுடிக்கு பயன்படுத்தி வரலாம்.

சரும பொழிவை அதிகரிக்கும் சிவப்பு சந்தனம் : நன்மைகள் மற்றும் பயன்படுத்தும் முறைகள்!

2. இஞ்சி சாறு: இஞ்சி சாற்றை நேராக தலையில் தேய்த்து பயன்படுத்தி வந்தால், தலைமுடி வளர்ச்சி அதிகரிக்கும். இதை எப்படி செய்வது என்று இங்கே பார்க்கலாம்:

தேவையான பொருட்கள்

 • இஞ்சி

செய்முறை

 • தேவையான இஞ்சியை எடுத்து அம்மியில் வைத்தோ, அல்லது மிசியில் போட்டு நன்கு அரைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
 • தண்ணீர் சேர்க்காமல் சாறு எடுத்துக் கொள்வது நல்லது
 • இந்த சாற்றை தலைமுடி வேர்களில் நன்கு தேக்க வேண்டும்
 • சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்
 • பின் சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் தலை முடியை அலசி விட வேண்டும்

இப்படி வாரம் இரண்டு முறையாவது செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும். உங்கள் தலைமுடியும் விரைவாக நல்ல வளர்ச்சிப் பெரும். நல்ல அடர்ந்த தலைமுடியை நீங்கள் சில நாட்களில் வளருவதை காணலாம்.

pixabay

3. இஞ்சி மற்றும் எலுமிச்சைப் பழம்:

தேவையான பொருட்கள்

 • சிறிது இஞ்சி
 • ஒரு எலுமிச்சைப் பழம்

செய்முறை

 • தேவையான இஞ்சியை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
 • இதனை அம்மியில் வைத்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
 • இதனுடன் தேவையான எலுமிச்சைப் பழச்சாறு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
 • இந்த கலவையை தலைமுடியின் வேர் பகுதியில் நன்கு தேய்க்க வேண்டும்.
 • சிறிது நேரம் அப்படியே விட்டு விட வேண்டும்.
 • பின் குளிர்ந்த நீரில் சீயக்காய் தேய்த்து தலைமுடியை நன்கு அலசி விட வேண்டும்.

மணப்பெண் ஆகப் போகிறீர்களா! தேர்ந்தெடுங்கள் உங்களுக்கான சிறந்த மணப்பெண் அலங்கார பார்லரை!

4. இஞ்சி மற்றும் சின்ன வெங்காயம்

தேவையான பொருட்கள்

 • இஞ்சி சிறிதளவு
 • சின்ன வெங்காயம் 5

செய்முறை

 • இஞ்சி  மற்றும் சின்ன வெங்காயத்தை சுத்தம் செய்து அம்மியில் வைத்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
 • தண்ணீர் விடாமல் அரைப்பது நல்லது.
 • பின் ஒரு பருத்தி துணியில் இந்த அரைத்த இஞ்சி மற்றும் வெங்காயத்தை  வைத்து பிழியவும்.
 • இதில் கிடக்கும் சாற்றை எடுத்து தலைமுடி வேர்களில் நன்கு தேய்க்கவும்.
 • சிறிது நேரம் மிதமாக மசாஜ் செய்யவும்.
 • பின், சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் தலைமுடியை அலசி விடவும்.
  இது தலைமுடி வளர்ச்சியை அதிகப்படுத்தி, நல்ல அடர்ந்த கூந்தல் கிடைக்க உதவும்.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.