விநாயகர் சதுர்த்தி பூஜைகள் மற்றும் நிவேதனப் பொருட்கள் செய்யும் முறைகள்! | POPxo

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் : பூஜைகள் மற்றும் நிவேதனப் பொருட்கள் செய்யும் முறைகள்!

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் : பூஜைகள் மற்றும் நிவேதனப் பொருட்கள் செய்யும் முறைகள்!

விநாயகர் என்றால் "தனக்கு மேலே வேறொரு தலைவன் இல்லாதவன்” என்று பொருள். விநாயகர் முழுமுதற் கடவுள் ஆவார். குணங்களின் தலைவரான கணபதியை உள்ளன்போடு வணங்குபவர்களுக்கு வருகின்ற வில்லங்கங்கள், இடர்கள், இடையூறுகள் அனைத்தும் விலகி நன்மை கிட்டும். எனவே தான் ஆண்டுதோறும் ஆவணி மாதம் அனைவரும் விநாயகர் சதுர்த்தியை (ganesh chathurthi) ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றோம்.  விநாயகர் சதுர்த்தியன்று செய்யவேண்டிய பூஜைகள் குறித்து இங்கே காண்போம்.

twitter
twitter

  • விநாயகர் சதுர்த்தியன்று அதிகாலையிலேயே பெண்கள் எழுந்து வீட்டைத் தூய்மை செய்து மாக்கோலமிட வேண்டும். நீராடிய பின்னர் பூஜை அறையில் மணைப்பலகையை வைத்து அதன்மேல் தலை வாழையிலையை அதன் நுனி வடக்குப் புறமாக இருக்கும்படி வைத்து அதில் அரிசியைப் பரப்ப வேண்டும். 
  • அரிசியின் மேல் நம் வலதுகை மோதிர விரலால் பிள்ளையார் சுழியிட்டு அதன்கீழ் ஓம் என எழுத வேண்டும். மணையின் இருபுறமும் குத்துவிளக்கை வைத்து தேவையான பூஜைப் பொருட்கள், நிவேதனப் பொருட்கள், அபிஷேகப் பொருட்களை தயாராக வைக்க வேண்டும். 

விநாயகர் சதுர்த்தியன்று பிள்ளையார்பட்டி சென்று வழிபடுவதால் உண்டாகும் நன்மைகள்!

  • களிமண்ணால் செய்யப்பட்ட வலஞ்சுழி விநாயகரை வாங்கி வந்து அதற்கு சந்தனம், குங்குமம் இட்டு, தொப்பையில் காசு வைக்க வேண்டும். பின்னர் பூமாலை,அறுகம்புல் மாலை அணிவித்து மணை பலகையில் வைக்க வேண்டும். பின்னர் விளக்குகளை ஏற்றி பூஜையைத் தொடங்க வேண்டும். 
  • கொழுக்கட்டை, சுண்டல், வடை முதலிய நிவேதனப் பட்சணங்கள், அர்ச்சனை மலர்கள், பழங்கள் 21 எனும் எண்ணிக்கையில் இருப்பது சிறப்பு. இல்லாவிட்டாலும் நம்மால் முடிந்ததைக்கொண்டு பூஜை செய்யலாம். தூபதீபம் காட்டி அர்ச்சனை செய்யவேண்டும். பூஜையின் பொழுது சாதம், கல்கண்டு, பழம், வெற்றிலை, பாக்கு படைத்து  காலை-மாலை இருவேளையும் பூஜை செய்வது நல்லது. 
twitter
twitter

  • விநாயகர் வீட்டில் இருக்கும்வரை அவருக்கு இருவேளை பூஜை நைவேத்தியம் செய்ய வேண்டும். விநாயகர் சதுர்த்தி (ganesh chathurthi) நாளில் ஒருவேளை உணவு உண்டு, இரவில் பால், பழம் மட்டும் சாப்பிட வேண்டும். அன்று மாலையில் சந்திரனை பார்த்தல் கூடாது. 
  • ஆனால் விநாயகருக்கு பூஜை முடிந்த பின் சந்திரனையும் வணங்குதல் நல்லது. பின்னர் மூன்றாவது நாளில் பிள்ளையார் சிலையை குளம், ஆறு, கடல் போன்று நீர் நிலைகளில் கரைக்க வேண்டும்.

விநாயகர் சதூர்த்தி கொலக்கட்டை செய்வது எப்படி

  • தொப்பையில் பதித்த காசை எடுத்து வீட்டில் வைத்து பூஜை செய்தால் செல்வம் பெருகும், லட்சுமி கடாட்சம் கிட்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விரதத்தை பக்திபூர்வமாக அனுஷ்டித்தால் எண்ணிய செயல் எண்ணியபடி நிறைவேறும்.
twitter
twitter

பூஜை பொருட்கள்

விநாயகர் சதுர்த்தியன்று (ganesh chathurthi) கணபதிக்கு படைக்கும் பூஜை பொருட்கள் யாவும்  21 என்ற கணக்கில் இருக்க வேண்டும் என கூறுவார். அதாவது விநாயகருக்கு படைக்கப்படும் இலை, பூ, அறுகம்புல், அதிரசம், அப்பம், கொழுக்கட்டை, பழம், பலகாரங்கள் போன்ற ஒவ்வொன்றும் 21 என்னும் எண்ணிக்கையில் இருக்க வேண்டும் என்பர். ஏனெனினில் ஞானேந்திரியங்கள்-5, கர்மேந்திரியங்கள்-5, அவற்றின் காரியங்கள் மொத்தமாக 10, மற்றும் மனம் - 1, ஆக மொத்தம் 21. விநாயகரை பூஜிக்கும்போது ஞானேந்திரியங்களும், கர்மேந்திரியங்களும் ஒன்றுபட வேண்டும்.  இதன் காரணமாகவே 21 பொருட்கள் படைக்கின்றோம். 

வினை தீர்க்கும் நாயகனே ! விநாயகரிடமிருந்து கற்றுக்கொள்ள 8 முக்கியமான வாழ்க்கைப் பாடங்கள்

அபிஷேகப் பொருட்கள் 21 : தண்ணீர், எண்ணெய், சீயக்காய், சந்தனாதித்தைலம், மாப்பொடி, மஞ்சள் பொடி, திரவியப் பொடி, பஞ்சகவ்யம், ரஸப்பஞ்சாமிர்தம், பழப்பஞ்சாமிர்தம், நெய், பால், தயிர், தேன், கருப்பஞ்சாறு, பழ ரகங்கள், இளநீர், சந்தனம், திருநீறு, குங்குமம், பன்னீர்.

மலர்கள் 21: புன்னை, மந்தாரை, மகிழம், பாதிரி, தும்பை, அரளி, ஊமத்தை, சம்பங்கி, மாம்பூ, தாழம்பூ, முல்லை, கொன்றை, எருக்கு, செங்கழுநீர், செவ்வரளி, வில்வம், குருந்தை, பவளமல்லி, ஜாதிமல்லி, மாதுளம், கண்டங்கத்திரி.

twitter
twitter

இலைகள் 21 : முல்லை இலை, கரிசலாங்கண்ணி இலை, வில்வம் இலை, அறுகம்புல், இலந்தை இலை, ஊமத்தை இலை, வன்னி இலை. நாயுருவி, கண்டங்கத்தரி, அரளி இலை, எருக்கம் இலை, மருதம் இலை, மாதுளை இலை, தேவதாரு இலை, மருக்கொழுந்து இலை, அரசம் இலை, ஜாதிமல்லி இலை, தாழம் இலை, அகத்தி இலை, தவனம் ஜகர்ப்பூரஸ இலை. 

நிவேதனப் பொருட்கள் 21 : மோதகம், அப்பம், அவல், பொரிகடலை, கரும்பு, சுண்டல், சுகியன், பிட்டு, தேன், தினை மாவு, பால், பாகு, கற்கண்டு, சர்க்கரைப் பொங்கல், பாயசம், முக்கனிகள், விளாம்பழம், நாவற்பழம், எள்ளுருண்டை, வடை, அதிரசம். 

விநாயக சதுர்த்தியன்று மேற்கண்ட 21 வகையான  பொருட்களை கொண்டு பூஜித்தால் சகல நன்மைகளும் கிடைக்கும். 

OPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.

 

Read More from Lifestyle

Load More Lifestyle Stories