பிக் பாஸில் முதல்முறையாக நாமினேஷனில் சாண்டி, தர்ஷன் : இந்த வாரம் வெளியேறப்போவது யார்?

பிக் பாஸில் முதல்முறையாக நாமினேஷனில் சாண்டி, தர்ஷன் : இந்த வாரம் வெளியேறப்போவது யார்?

பிக் பாஸ் (biggboss) வீட்டில் தற்போது போட்டியாளர்கள் இரண்டு அணிகளாக உள்ளனர். சாண்டி, கவின், தர்ஷன், முகென் மற்றும் லாஸ்லியா ஒரு அணியாகவும், சேரன், வனிதா, கஸ்தூரி ஒரு அணியாகவும் உள்ளனர். ஷெரீன் இருதரப்பிலும் நட்பு பாராட்டி வருகிறார். சேரனிடம் கவின், சாண்டி கேங் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறது. இந்த வரிசையில் லாஸ்லியாவும் இணைந்துவிட்டதால் ரசிகர்களின் வெறுப்பை லாஸ்லியா சம்பாதித்து வருகிறார். நேற்றைய நாமினேசனிலும் இரு அணிகளும் மாறி மாறி எதிர் அணிகளில் இருப்பவர்களை நாமினேட் செய்தனர்.

twitter

அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் லாஸ்லியா, சேரனை நாமினேட் செய்தார். பிக்பாஸ் வீட்டில் பிரச்னை ஏற்பட்ட போதெல்லாம் சேரன் தனக்கு ஆதரவாக நிற்கவில்லை என்று கூறி அவரை லாஸ்லியா நாமினேட் செய்திருப்பது பார்வையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிக்பாஸ் சீசன் 3 தொடங்கிய புதிதில் இலங்கைத் தமிழில் கொஞ்சலாக பேசி அனைவர் மனதிலும் சட்டென இடம் பிடித்தவர் லாஸ்ஸியா. தன்னுடைய சொந்த அப்பா, இயக்குநர் சேரன் போலவே இருப்பார் என்று கூறிக்கொண்டு, அவரை சேரப்பா... சேரப்பா என்று அழைக்க தொடங்கினார். 

இதனை தொடர்ந்து நடைபெற்ற முக்கோண காதல் பிரச்னையில் சேரன், லாஸ்லியா இடையே விரிச்சல் ஏற்பட்டது. கடந்த சனிக்கிழமை சேரன் - லாஸ்லியாவுக்கு இடையே ஏற்பட்ட உரசல் குறித்து விசாரித்தார் கமல்ஹாசன். அப்போது பேசிய சேரன், தன்னுடைய மகள் லாஸ்லியாவுக்கு அனைவரிடமும் பழகும் முழு சுதந்திரம் உண்டு. சமயம் கிடைக்கும் போது அவருடைய சமீபத்திய நடவடிக்கை குறித்து பேசுவேன் என்றார். அவ்வாறு நிகழ்ச்சி முடிந்தவுடன், லாஸ்லியாவிடம் மனம் விட்டு பேசினார் சேரன்.

பிக் பாஸில் ஆண்களாக வேடமணிந்து கலக்கிய மதுமிதா, அபிராமி.. அதிரடியாக நுழையும் கஸ்தூரி!

twitter

இதனால் இருவரும் சமரசம் ஆனார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் லாஸ்லியா, சேரனை நாமினேட் செய்துள்ளார். இதனால் இரண்டு அணிகளில் இருந்தும் தலா இரண்டு பேர் நாமினேட் ஆகியுள்ளனர். அதன்படி சாண்டி, தர்ஷன், சேரன் மற்றும் கஸ்தூரி நாமினேட் செய்யப்பட்டார்கள். இதில் சாண்டி, தர்ஷன் நாமினேட் செய்யப்படுவது இதுவே முதல்முறை. இவர்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருப்பதால் இவர்கள் வெளியேறுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு தான் என முன்பே கணிக்கப்பட்டுவிட்டது. 

மேலும் கவின் மற்றும் லாஸ்லியா ஆதரவாளர்கள் சாண்டி, தர்ஷன் ஆகியோருக்கு வாக்களித்து வருகின்றனர். இதனிடையே சாண்டியை வெளியேற்ற வேண்டும் என வனிதா திட்டமிடுகிறார். சாண்டி அணியில் இருப்பவர்கள் இளைஞர்கள் என்பதால் எப்போதும் பிக் பாஸ் வீடு ஆட்டமும், பாட்டமும் கொண்டாட்டமுமாக இருக்கிறது. இது வனிதா அணிக்கு பெரும்பாலும் பிடிப்பதில்லை. இந்நிலையில் நேற்று இரவு வனிதா, சேரன் மற்றும் கஸ்தூரி மூவரும் கார்டன் பகுதியில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் வீடியோ ஒன்று சமூகவலைதளத்தில் வைரலாகியுள்ளது. இதில் சாண்டி அணியை எப்படி உடைப்பது என அவர்கள் திட்டம் போட்டுக் கொண்டிருக்கின்றனர். 

பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் மாஸ் எண்ட்ரி கொடுத்த வனிதா : போட்டியாளர்கள் திணறல்!

twitter

அப்போது வனிதா, முதலில் இந்த அணியின் முதுகெலும்பை உடைக்கணும் என்கிறார். அந்த அணியின் முதுகெலும்பு என்பது சாண்டி மாஸ்டர் ஆவார். அவரை பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றி விட்டால், மற்றவர்கள் அடங்கி விடுவர் என்பது அவரது திட்டம். ஆனால் கஸ்தூரியோ அந்த அணியின் பலமில்லாத ஒருவரை டார்கெட் செய்யச் சொல்கிறார். அவர் யாரை குறிப்பிடுகிறார் என்பது தெரியவில்லை. ஒருவேளை கவினை பற்றி அப்படி கூறலாம் எனத் தெரிகிறது. ஏனெனில் எப்போதுமே கஸ்தூரியின் டார்கெட் கவின் தான். அவருக்கும் கஸ்தூரிக்கும் அடிக்கடி பிரச்சனைகள் ஏற்படுகிறது. 

கவினை எப்படியும் வெளியில் அனுப்பியே ஆக வேண்டும் என்பதில் கஸ்தூரி தெளிவாக இருக்கிறார். இந்த உரையாடலின் போதும் சேரன் நடுநிலையாகவே பேசினார். மக்கள் முடிவு செய்து கொள்வார்கள் என அவர் கூறினார். தற்போதைய நிலவரப்படி நாமினேஷனில் உள்ள சேரன், தர்ஷன் மற்றும் சாண்டிக்கு இணையான வாக்குகளை பெற்றுள்ளார். கஸ்தூரி கடைசி இடத்தில் இருக்கிறார். இதனிடையே கடந்த வாரம் தற்கொலை முயற்சி செய்த மதுமிதாவின் செயல் பப்லிசிட்டி ஸ்டண்ட் என முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரான நடிகை காஜல் பசுபதி ட்வீட் செய்துள்ளார்.

நடிகை மதுமிதா பிக் பாஸ் (biggboss) வெற்றியாளராக வரும் வாய்ப்பில் இருந்தார். ஆனால் கடந்த வாரம் அவர் தற்கொலை முயற்சி செய்ததால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இது ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சிஏற்படுத்தியுள்ளது. மதுமிதா எடுத்து தவறான முடிவு என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் மதுமிதாவுக்கு என்ன நடந்தது என்ற வீடியோவை வெளியிட வேண்டும் என்றும், அவரது தற்கொலை முயற்சிக்கு காரணமானவர்கள் குறித்து தெரிவிக்க வேண்டும் என்றும் மதுமிதா ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

பிக் பாஸில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்டார் அபிராமி : கதறி அழுத ஷெரீன், லாஸ்லியா!

இந்நிலையில் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரான நடிகை காஜல் பசுபதி ட்விட்டரில் மதுமிதா செய்தது தற்கொலை முயற்சியே இல்லை என கூறியுள்ளார். தன்னுடைய கருத்தை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதற்காக இப்படி செய்துள்ளார் என தெரிவித்துள்ளார். மேலும் மதுமிதா செய்தது பப்லிசிட்டி ஸ்டண்ட் எனவும் காஜல் பசுபதி குறிப்பிட்டுள்ளார். இதனிடையே இரண்டு வருடங்களுக்கு முன்னர் கர்நாடகாப் பிரச்சினை ஒன்றை மது சந்தித்துள்ளார். அப்போது பக்கத்து வீட்டுப் பெண் உஷா என்பவரின் கையைக் கடித்து அவர் பரபரப்பை ஏற்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இன்று காலை வெளியாகியுள்ள பிக் பாஸ் வீடு பிக் பாஸ் (biggboss) பள்ளியாக மாறியுள்ளது. கஸ்தூரியும் சேரனும் ஆசிரியர்களாகவும், மற்ற ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் மாணவர்களாகவும் மாறியுள்ளனர். அதில் சாண்டி, தர்ஷன் உள்ளிட்டோர் குறும்பு செய்யும் மாணவர்களாகவும், ஆசிரியர் கஸ்தூரியை ஆயம்மா கஸ்தூரி என்று கலாய்ப்பது போன்றும் அந்த வீடியோவில் உள்ளது.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.