தற்கொலை மிரட்டல் விடுத்த புகார் : சட்டரீதியாக எதிர்கொள்ள தயார் என நடிகை மதுமிதா விளக்கம்!

தற்கொலை மிரட்டல் விடுத்த புகார் : சட்டரீதியாக எதிர்கொள்ள தயார் என நடிகை மதுமிதா விளக்கம்!

கடந்த ஜூன் மாதம் விஜய் டிவியில் பிக் பாஸ் (biggboss) தமிழ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தொடங்கியது. 100 நாட்கள் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி தற்போது 58 நாட்களை கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டுள்ளது ஒவ்வொரு வாரமும் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்படுவார்கள் அவர்களுக்கு பார்வையாளர்கள் ஓட்டு போடுவார்கள் அதன்படி குறைவான வாக்குகள் பெற்ற நபர்கள் வெளியேற்றப்படுவார்கள் இந்நிலையில் கடந்த வாரம் நடந்த டாஸ்க் ஒன்றில் தனக்குத் தானே தீங்கு விளைவித்து கொண்டதாக நடிகை மதுமிதா வெளியேற்றப்பட்டார்.

கையை அறுத்துக் கொள்ளும் அளவிற்கு மதுமிதாவுக்கு அப்படி என்ன நடந்தது? முகநூலில் விளக்கம்..!

twitter

மதுமிதா மீது விஜய் டிவி நிர்வாகம் புகார்

ஆனால் பிக் பாஸ் (biggboss) வீட்டில் நடந்த நிகழ்வுகளை ஒளிபரப்பாமல் மதுமிதாவை வெளியேற்றிய பிக்பாஸ், “டாஸ்க்குக்கு பின் நடந்த விவாதத்தில் தன்னுடைய கருத்தை நிரூபிக்க வேண்டும் என்பதற்காக மதுமிதா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இது பிக் பாஸ் விதியை மீறிய செயல் என்பதால் அவர் உடனடியாக நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்படுள்ளார் என அறிவிக்கப்பட்டது. போட்டியின் 50வது நாளில் நடந்த இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் பிக்பாஸ் மதுமிதா மீது கிண்டி காவல் நிலையத்தில் விஜய் டிவி நிர்வாகத்தின் சட்டப்பிரிவு மேலாளர் பிரசாத் என்பவர் புகார் அளித்துள்ளார். 

பிக்பாஸ் ஸ்கூல்... பள்ளிக் குழந்தைகளாக மாறிய போட்டியாளர்கள் : ஆசிரியர்களாக கஸ்தூரி, சேரன்!

ஒப்பந்தத்தின்படி, நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மதுமிதா 11.5 லட்சம் ரூபாய் பணம் பெற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார். போட்டியில் இருந்து அவர் வெளியேற்றப்பட்ட நிலையில், நாள் ஒன்றுக்கு 80 ஆயிரம் ரூபாய் வீதம் எஞ்சிய தொகையை விரைவில் தருவதாக அவருக்கு தொலைக்காட்சி நிர்வாகம் உறுதியளித்துள்ளது. முதலில் அதை ஏற்றுக்கொண்ட அவர், கடந்த 19ம் தேதி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளருக்கு வாட்ஸ் அப்பில் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியதாக கூறப்பட்டுள்ளது. 

அதில் நீங்கள் பணம் தரும் வரை எல்லாம் காத்திருக்க முடியாது, 2 நாட்களுக்குள் சம்பள பாக்கியை தராவிட்டால் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மதுமிதா மிரட்டல் விடுத்திருப்பதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. ‘தன்மீது இவ்வாறான புகார் பதிவாகியுள்ளது தெரியாது என்று தெரிவித்தார்மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக போடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே தான் நடந்து கொண்டதாகவும் கூடுதலாக நிகழ்ச்சி குழுவிடம் பணம் கேட்கவில்லை என்றும் தெரிவித்தார்.புகாரை சட்டரீதியாக எதிர்கொள்ளப்போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

twitter

கஸ்தூரியால் சோகத்தில் மூழ்கிய போட்டியாளர்கள்

பிக் பாஸ் (biggboss) நிகழ்ச்சியில் தொடர்ந்து சர்ச்சைகள் எழுந்து வரும் நிலையிலும் தொடர்ந்து நிகழ்ச்சியை விஜய் டிவி நிர்வாகம் ஒளிப்பரப்பி வருகிறது. நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியிலும் தொடந்து பிக் பாஸ் ஸ்கூல் டாஸ்க் நடைபெற்றது. மாணவர்கள் அனைவருக்கும் தமிழ் பாடம் எடுக்கத் தொடங்கினார் சேரன். ஔவையார் எழுதிய ஆத்திச்சூடி பாடம் எடுத்தார். அதை தொடர்ந்து அனைவருக்கும் வாக்கியம் அளித்து ஒப்புவிக்கச் சொன்னார். அதில் லாஸ்லியா, கவின், தர்ஷன் உள்ளிட்டோர் அழகாக ஒப்புவித்த வாக்கியங்கள் பலரையும் கவர்ந்தன. 

லாஸ்லியாவிற்கு போட்டியாக வருகிறார் ஆல்யா ?எதிர்பாராததை எதிர்பாருங்கள்!

இதனை தொடர்ந்து போட்டியாளர்கள் தங்களின் விருப்பத்திற்குரிய ஆசிரியர்கள் குறித்து வீட்டு முற்றத்தில் ஒவ்வொருவரும் தனித்தனியாக வந்து பேசினர். அதில் கஸ்தூரி பேசியது அனைவரது மனதையும் கலங்கடித்தது. புற்றுநோயுடன் போராடி அதில் வெற்றி கண்ட தனது மகள் தான் தன்னுடைய ஆசான் என கஸ்தூரி கூறிய போது பிக்பாஸ் வீடே சோகத்தில் மூழ்கியது. அவரால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை. இதையடுத்து கஸ்தூரிக்கு மற்ற போட்டியாளர்கள் ஆறுதல் தெரிவித்தனர். 

கவின் - லாஸ்லியா மீண்டும் காதலா?

இதனிடையே கவின், லாஸ்லியாவிடம் பேசுவதை குறைத்து கொள்ள சொல் என்று தர்ஷனிடம், சேரன் கூறினார். கவின் மற்றும் லாஸ்லியா இடையே காதல் இருக்கிறதா என்ற சந்தேகம் அனைவருக்குமே உள்ளது. ஏனெனில் முக்கோண காதல் பிரச்சனை எழுந்த போது கூட கவினிடம் கதைக்க எனக்கு பிடிக்கும், அவனிடம் கதைக்காமல் என்னால் இருக்க இயலாது என்று லாஸ்லியா கூறி வந்தார். தற்போது சாக்ஷி வெளியேறிய பின்னர் இவர்களுக்கான நெருக்கம் மேலும் அதிகரித்தது. ஆனால் இந்த காதல் லாஸ்லியாவின் பிக் பாஸ் அப்பாவாக உள்ள சேரனுக்கு ஆரம்பத்திலிருந்தே பிடிக்கவில்லை. 

இதனால் லாஸ்லியாவிடம் இருந்து கவினை பிரிக்க அவ்வப்போது முயற்சி செய்து வந்தார். இந்நிலையில் நேற்று அதனை தர்ஷனிடம் நேரிடையாகவே கூறினார். அதற்கு பதிலளித்த தர்ஷன் அது அவர்களது தனிப்பட்ட பிரச்சனை நாம் தலையிட முடியாது என பொட்டில் அறைந்தவாறு கூறிவிட்டார். இந்த ஒரு புறம் நடைபெற்று கொண்டிருக்க மற்றொரு புறமோ, லாஸ்லியா மற்றும் கவின் இருவரும் தனியாக அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது கவின் இங்கே இருக்கவே பிடிக்கவில்லை என்றதும் ஏன் என்று கேட்டார் லாஸ்லியா.

twitter

நெனச்சத பண்ணவும் முடியால செய்யவும் முடியல, ஒரு வேலை அப்படி ஆகிடுச்சு என்றால் எல்லாம் சரியாகிவிடும். அது இல்லாம ஒரு மாதிரி போய்ட்டு இருக்கு. அதற்கு ஏற்றது  போல நீயும் ஒரு மாதரி பண்ற என்று கூறினார். கவின் சொல்வதைக் கேட்டு லாஸ்லியா கைகளால் கண்களை மூடிக்கொண்டு வெட்கப்பட்டார். இந்த காட்சிகளை கவின் மற்றும் லாஸ்லியா ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர். 

இந்நிலையில் இன்று காலை வெளியாகியுள்ள முதல் புரோமோவில் கவின் குறித்து சேரன் மற்றும் லாஸ்லியா பேசுகின்றனர். அப்போது பேசிய சேரன், உன்னை புரிந்து கொள்ள எனக்கு ஒரு கிராப் தேவைப்படுகிறது, அந்த கிராப்பில் நீ தற்போது மேலே தான் இருக்கிறாய். உன்னிடம் பிடித்தது நீ நண்பர்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவம். ஏனெனில் நண்பர்களை சம்பாதித்தால் போதும் நாம் முன்னேறி செல்லலாம்.  தெரியாமல் சில தவறுகள் வருகிறது, ஆனால் நீ கெட்டவன் அல்ல நல்லவன் என்று கவின் குறித்து பேசினார்.

பின்னர் பேசிய லாஸ்லியா, கவினை முதலில் பிடிக்கும் இப்போது ரொம்ப பிடிக்கும், அது அவனுக்கே தெரியும். தனக்கு பக்கத்தில் இருப்பவர்களை தட்டி கொடுத்து விட்டு தான் வெளியே போனாலும் பரவாயில்லை என நினைக்கும் பெருந்தன்மையான மனது கவினிடம் உள்ளது என்று கூறி கைதட்டுகிறார். இதனை கேட்கும் கவின் சிரித்தபடி மகிழ்ச்சியாக அமர்ந்திருக்கிறார். 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.