முக்கோண காதலால் சிக்கி தவிக்கும் பிக் பாஸ் இல்லம் : வைல்ட் கார்டில் நுழைகிறார் ஜான்சன்!

முக்கோண காதலால் சிக்கி தவிக்கும் பிக் பாஸ் இல்லம் : வைல்ட் கார்டில் நுழைகிறார் ஜான்சன்!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் (biggboss) சீசன் 3 நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடிலும் மொட்டை கடுதாசி டாஸ்க் தொடர்ந்தது. கவின், லாஸ்லியா, சாக்ஷி இடையேயான பிரச்னை தான் பெரும்பாலான இடத்தை பிடித்தது. சாக்ஷியின் உணர்வுகளுக்கு கவின் மதிப்பு கொடுக்காததாக கூறி சாக்ஷி அழுதார். முடிந்து போன பிரச்னையை ஹவுஸ்மேட்ஸ் மீண்டும் கிளறுவதாக அபிராமி ஒருபக்கம் அழுதார். தொடர்ந்து நேற்றைய நிகழ்ச்சியிலிருந்து விடுபட்ட போட்டியாளர்களுக்கான கேள்விகள் வாசிக்கப்பட்டன. அதில் நடுநிலைத் தன்மையுடன் நடந்து கொள்வதால் ரேஷ்மா எலிமினேஷனுக்கு வந்தாரா? என்ற கேள்வி இருந்தது.

அபியிடம் ரகசியத்தை உடைத்த முகென்..லாஸ்லியா ஊமை குசும்பு, தர்ஷன் பச்சோந்தி : மீரா விளக்கம்

அதற்கு பதிலளித்த ரேஷ்மா பிக் பாஸ் வீட்டு பிரச்சனைகளின் போது ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக கூறினார். அதற்கு பிறகு லாஸ்லியாவுக்கான கேள்வியில், சாக்‌ஷியிடம் ஏன் சமரசத்தில் ஈடுபடவில்லை என்ற கேள்வியில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதற்கு பதிலளித்து பேசிய லாஸ்லியா, கவினுக்கும் எனக்குமான நட்பு குறித்து சாக்‌ஷிக்கு எதுவும் தெரியாது. அவர் எங்களுடைய நட்பை தவறாக பார்க்கிறார் என்றார். உங்களுக்கும், கவினுக்கும் இடையான நட்பில் எனக்கு எவ்வித ஆட்சேபனமும் இல்லை என்று சாக்ஷி சொல்லியிருப்பதாக குறிப்பிட்டார். 

இதனால் லோஸ்லியாவுக்கும், சாக்‌ஷிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. முடிவில் அந்த பிரச்னை கவினிடம் வந்தது. உடனே லோஸ்லியா வெளியேறிவிட்டார். கவினையும், சாக்‌ஷியையும் சரவணன் சமாதானம் செய்தார். இருந்தாலும் இந்த பிரச்னை பிக் பாஸ் வீட்டுக்குள் எறிந்துக் கொண்டே இருந்தது. அதை தொடர்ந்து சாண்டிக்கான கேள்வி கேட்கப்பட்டது. சாண்டிக்கு ஆட்டம் ஆடுவதை தவிர, வேறு எதுவும் கிடையாதா? அன்பு, பாசம், அக்கறை இதெல்லாம் தெரியாதா என்று கேள்வியில் கேட்கப்பட்டிருந்தது. அதற்கு பதிலளித்த சாண்டி நான் வாழ்க்கையில் மிகவும் நேசிப்பது என் மனைவி மற்றும் மகளை தான் என்று உணர்வு பூர்வமாக கூறினார். 

யார் கவினின் காதலி.. லாஸ்லியாவா சாக்ஷியா..? லாஸ்லியாவின் கேள்வியால் தடுமாறும் கவின்..!

அவரால் தான் பிக் பாஸ் (biggboss) வீட்டுக்குள் வந்தேன். தனியாக இருப்பது தான் எனக்கு பிடிக்கும். ஆனால் இங்கு வந்து தான் அனைவரையும் அனுசரிக்கக் கற்றுக்கொண்டேன் என கண்ணீர் மல்க சாண்டி கூறினார். இதனை தொடர்ந்து போட்டியாளர்கள் முன்னிலையில் பேசிய கவின், இந்த வாரம் முடிந்தவரை அனைவரும் தன்னை நாமினேட் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். 7 வாரங்கள் இருக்க வேண்டும் என்ற முடிவில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்தேன். அதன்படி ஆறு வாரம் முடிந்துவிட்டது. இதனால் என் கடன்கள் அனைத்தும் அடைந்துவிடும். அதனால் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற எனக்கு உதவுங்கள் என்று கோரிக்கை விடுத்தார். 

அப்போது குறுக்கிட்ட லாஸ்லியா, சாக்‌ஷிக்கு ஏற்பட்ட அநீதிக்கு காரணம் நான் தான். அதனால் அபிராமியை தவிர மற்ற யாரும் என்னிடம் பேச வேண்டாம். நடந்த தவறுக்கு நான் தான் காரணம் என்று கூறி மன்னிப்பு கேட்டு விட்டு சென்று விட்டார். பிறகு சாக்‌ஷி, கவினிடம் பேச முயற்சித்தார். அப்போது கவின் பேச முடியாது என்பதை தன்மையாக கூறிவிட்டார். சாக்‌ஷியை ஷெரீன், கவினை மதுமிதா, லாஸ்லியாவை சேரனும் சமாதானம் செய்தனர். மேலும் லாஸ்லியா பேசியது தவறு. மிகவும் தவறான ஆட்டியூட் காட்டுகிறார் என ஹவுஸ்மேட்ஸ் ஒவ்வொரும் தங்களுக்குள் பேசி கொண்டனர். 

கவினுக்கு காதலி இருக்கிறார்... மதுமிதாவை வறுத்தெடுத்த பிரபலம் : பிக் பாஸ் ரகசியங்கள்!

இதனிடையே இந்த நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் எண்ட்ரீயாக நடிகைகள் கஸ்தூரி, சனம் ஷெட்டி, ஆல்யா மானசா போன்றோர் நுழைய இருப்பதாக செய்திகள் வெளியானது. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகாத போதும் அடிக்கடி இந்த மாதிரியான செய்திகள் வந்த வண்ணம் இருந்தது. இந்நிலையில் வெளிநாட்டில் நடிகர், பாடகர், நடன ஆசிரியர் என எல்லா துறையிலும் கலக்கி வரும் ஜான்சன் பிலிக்சன் தான் பிக்பாஸில் நுழைய இருப்பதாக கூறப்படுகிறது. அதனபடி ஜான்சன் பிலிக்சன் இரண்டு நாட்களுக்கு முன் மலேசியாவில் இருந்து கிளம்பியுள்ள புகைப்படம் ஆதராத்துடன் வெளியாகியுள்ளது.

 
 
 
View this post on Instagram
 
 

Bye bye 👋 Malaysia

A post shared by jhonson filixson @ Rj vikraa (@jhonvikraa) on

இந்த நிலையில் இன்று காலை வெளியான புரோமோவில் தற்போது சரவணனுக்கும், சேரனுக்கும் இடையே பெரும் மோதல் ஏற்பட்டுவதாக காட்டப்பட்டுள்ளது. சினிமா பிரபலங்கள் டாஸ்க்கில் சேரன் காளி ரஜினி போலவும், சரவணண் கேப்டன் விஜயகாந்த் போலவும் டாஸ்க் செய்தார்கள். அதுகுறித்து விமர்ச்சித்த சேரன் சரவணன் டான்ஸ் ஆடியது குறித்து எந்த கருத்துக்களையும் நான் முன் வைக்க வில்லை. ஆனால் மற்ற எந்த இடத்திலும் அவர் விஜயகாந்த் போல் அக்டிவேட் செய்யவில்லை என்று கூறினார்.

அதற்கு நீங்கள் ரஜினி காந்த் உடையில் காமெடியாக இருந்தீர்கள் என்று கூறிய சரவணன் மரியாதையை குறைவாக பேசினார். இதனை சேரன் கண்டிக்க அதற்கு வாடா போடான்னு கூட சொல்வேன் உங்களது வேலையை பாருங்கள் என்று சரவணன் எழுந்து சேரனிடம் சண்டைக்கு போகிறார். இதனை கண்டு மற்ற போட்டியாளர்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.