புற்றுநோய் செல்களை அழித்து உடல் நலத்தை காக்கும் அற்புத உணவுகள்!

புற்றுநோய் செல்களை அழித்து உடல் நலத்தை காக்கும் அற்புத உணவுகள்!

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் யாரோ ஒரு சிலருக்கு புற்றுநோய் (cancer) இருப்பதாக கேள்வி பட்டிருப்போம். ஆனால் தற்போது புற்றுநோயின் தாக்கம் அதிகரித்துள்ளது. உணவுகளில் செயற்கை ரசாயனத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதனாலும், மறுபட்ட வாழ்க்கை முறை, சுற்றுச்சூழல் சீர்கேடு, மரபணு மாற்றப்பட்ட உணவுகள் என பல காரணங்களைப் புற்று நோய்க்கு அடிப்படையாகக் கூறலாம். புற்றுநோய் ஒழிப்பில் பல்வேறு ஆராய்ச்சிகள் உலகெங்கும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நாம் அன்றாட சாப்பிடும் உணவுகளின் மூலம் புற்றுநோய் வராமல் பாதுகாப்பது எப்படி என்பதை இங்கு காணலாம். 

pixabay

பூண்டு

பூண்டு சாப்பிடுவதால் குடல், கணையம் என வயிற்றில் ஏற்படும் புற்று நோய் தடுக்கப்படும் என்று ஆய்வில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. நோய் எதிர்ப்பு சக்திகள் அதிகம் நிறைந்துள்ள பூண்டு, மற்ற நோய்களுக்கும் அரணாக இருக்கிறது, புற்றுநோயை ஏற்படுத்தும் செல்களையும் அழிக்கும் வல்லமை பெற்றுள்ளது. எனவே நாள்தோறும் பூண்டினை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

சென்னையில் உங்கள் டேஸ்ட் பட்களுக்கு சவால் விடும் சில ஸ்ட்ரீட் ஃபுட் கடைகள் !

ப்ராக்கோலி

ப்ராக்கோலியில் இன்டோல் 3-கார்பினோல் என்னும் வேதிப்பொருள் உள்ளது. இது பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் வரமால் தடுக்கிறது. ஆண்டி ஆக்சிடன்ட் பண்புகள் நிறைந்துள்ள ப்ராக்கோலியில், ஃப்ளேவோனாய்டுகள், கரோட்டீனாய்டுகள், லூட்டின், பீட்டா-கரோட்டீன் மற்றும் ஸியாஸாந்த்தின் ஆகிய சத்துக்களும் நிறைந்துள்ளதால் ப்ராக்கோலி சாப்பிடுவது நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

pixabay

மஞ்சள்

கலப்படமில்லா மஞ்சள் நேரடி புற்றுநோய் எதிர்ப்பாளராக உள்ளது. இதில் உள்ள பாலிபீனால் குர்குமின் என்ற வேதிப்பொருள் கேன்சர் செல்களின் வளர்ச்சியை தாமதப்படுத்துகிறது என ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. தோல் நோய்களைப் போக்கும் தன்மையைப் பெற்றது. அடிபட்ட வலிகளுக்கும், பல்வேறு நோய்களுக்கும் தேமலைப் போக்கவும் மஞ்சள் பயன்படுகிறது. 

திராட்சை

திராட்சையில் உள்ள ஆன்டி-ஆக்சிடன்ட்டும் புற்றுநோய் (cancer) ஏற்படாமல் தடுக்கிறது. திராட்சையில் உள்ள வைட்டமின் சி, வைட்டமின் இ உடல்நல பாதுகாப்பில் மிகப் பெரிய பங்கு வகிக்கிறது. திராட்சையின் விதையில் புற்றுநோய் செல்களை அழித்து, புதிய ஆரோக்கியமான செல்கள் அதிக அளவில் உற்பத்தி செய்யும் சக்தி உள்ளது. திராட்சைப் பழத்துடன் விதைகளை சேர்த்து உண்பது நல்ல பலனை தரும். 

pixabay

கீரை வகைகள்

பச்சை இலை கீரை வகைகளில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது. காய்கறிகளில். ஃபோலியேட் மற்றும் வைட்டமின் பி ஆகியவை உள்ளன. கீரைகளில் கால்சியம், நார்ச் சத்து, பீட்டா கரோட்டின், வைட்டமின் சி அதிக அளவு இருக்கின்றன. இந்த உணவுகள் புற்றுநோய் உண்டாக்கும் விளைவுகளை எதிர்த்து போராடுகிறது. சுண்ணாம்புச் சத்து அதிகம் உள்ள இவை எலும்பு மற்றும் தசைகளில் உள்ள பிரச்சனைகளை குணமாக்க முடியும்.

மகத்துவம் நிறைந்த தேனின் ஆரோக்கிய மற்றும் அழகு பலன்கள்!

முட்டைகோஸ்

முட்டைகோஸில் இருக்கும் நியூட்ரியன்ஸ் புற்றுநோய் செல்களின் வளர்ச்சிதை மாற்றத்தை தடுக்கிறது. முட்டைகோஸில் இருக்கும் இன்டோஸ் 3 கார்பினோல் மார்பக புற்றுநோய் (cancer) வராமல் தடுக்கிறது. மேலும் வைட்டமின் சி, சோடியம், இரும்பு, பாஸ்பரஸ், கால்சியம், வைட்டமின் ஏ, இ சத்துக்கள் உள்ளன. இது மலச்சிக்கலைப் போக்கி இளமையை தக்கவைக்கும். கணையப்புற்று, மார்பகப்புற்று, வயிற்றுப்புற்று, குடல்புற்று நோய் வராமல் தடுக்கிறது. 

pixabay

காலிஃபிளவர்

காலிஃபிளவர் நார்ச் சத்து நிறைந்துள்ளதால் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் வல்லமை படைத்தவை. காலிபிளவரை பயன்படுத்தி புற்றுநோய் செல்கள் வளர்ச்சியை கட்டுப்படுத்தும் மருந்துகளும் தயாரிக்கப்படுகிறது. ஒரு ஸ்பூன் காலிஃபிளவர் பசை, கால் ஸ்பூன் மஞ்சள் பொடி, அரை ஸ்பூன் சீரகம் சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். வடிகட்டி 50 முதல் 100 மில்லி அளவுக்கு தினமும் புற்றுநோயாளிகள் எடுத்துக்கொள்ளும்போது புற்றுநோய் செல்கள் வளர்வது தடுக்கப்படும்.

இஞ்சி

நீண்ட காலமாக புற்றுநோய் மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் இஞ்சியில் உள்ள ஜின்ஜெரால், ஷோகள் போன்ற பொருட்கள் புற்றுநோய்க்கு எதிராக செயல்படக்கூடியது. ஹீமோதெரபி செய்வதற்கு முன் இஞ்சி சாப்பிட்டால் குமட்டல் உணர்வு குறைவாக இருக்கும். கொழுப்பை குறைப்பதிலும், உடல் செயல்பாட்டிற்கு ஊக்கம் அளிப்பதிலும், கேன்சர் கிருமிகளை அழிப்பதிலும் இஞ்சி வல்லமை வாய்ந்தது.

தக்காளி

தக்காளியில் உள்ள விட்டமின் சி ஆன்டி-ஆக்ஸிடன்ட், காராடெனாய்ட்ஸ் மற்றும் லைகோபீன்  புற்றுநோய் பாதிப்பு ஏற்படாமல் உடலைப் பாதுகாக்கிறது. அதுமட்டுமின்றி தக்காளியில் உள்ள ‘லைகோபைன்’ வாய்ப்புற்றுநோயை உண்டாக்கும் செல்களை அழிக்கவல்லது என்றும் ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. கணையம் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோயை எதிர்க்கும் சக்தி தக்காளிக்கு உள்ளது. ஒரு வாரத்துக்கு 7 முதல் 10 தக்காளி வரை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். 

தாய்மை சுரக்கும் உயிர் உணவு தாய்ப்பால் - நீங்கள் அறியாததை அறிந்து கொள்ளுங்கள் !

pixabay

காளான்

காளானிலிருந்து வெளியாகும் என்சைம் மூலம் ஈஸ்ட்ரோஜன் உருவாகிறது. இது தேவையற்ற கொழுப்பு சத்தை கரைத்து மார்பகப் புற்றுநோயைத் தடுத்து விடும். மேலும் காளானில் உள்ள புரோட்டீனான லெக்டின் புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடி அவை பரவாமலும் தடுக்கும். உள்ளன. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து புற்றுநோய் கட்டியின் வளர்ச்சியையும், அதன் செல்கள் உருவாவதையும் தடுக்கிறது.

ஃபோலேட் நிறைந்த உணவுகள்

அவகேடோ, ஆப்ரிகோட், பூசணி மற்றும் பச்சை இலை காய்கறிகள், கோழியின் கல்லீரல், ஆரஞ்சு, அவகோடா, பருப்பு வகைகள் போன்றவை ஃபோலேட் நிறைந்த உணவுகளாகும். இயற்கை முறையில் ஃபோலேட் உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது புற்றுநோயை அது தடுக்கும். கர்ப்பிணிப் பெண்கள் ஃபோலேட் நிறைந்த உணவுகள் மிகவும் அவசியம்.

அவகோடோ

அவகோடோவை தொடர்ந்து சாப்பிடுவதால் புற்றுநோய் வருவது முற்றிலும் தடுக்கப்படும். அதில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளானது உடலில் உள்ள புற்றுநோய்க்கு வழிவகுக்கும் தேவையற்ற கொழுப்பு செல்களை உறிஞ்சி வெளியேற்றிவிடும். அவகோடோவில் வாழைப்பழத்தை விட அதிகமான அளவில் பொட்டாசியம் உள்ளதாகவும் ஆய்வில் உறுதிப்படுத்தப்படுள்ளது.

pixabay

பெர்ரி

பிளாக் பெர்ரி, ப்ளூபெர்ரி, கிரான்பெர்ரி போன்ற அனைத்து வகை பெர்ரிகளிலும், பிடோநியூட்ரியன்ட்ஸ் மற்றும் எலாஜிக் அமிலம் உள்ளது. இது புற்றுநோய் கட்டிகள் வளர்வதை தடுத்து நிறுத்துகிறது. புற்றுநோய் செல்கள் அதிகரிப்பதையும் தாமதிக்கிறது. பெர்ரி பழங்களை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் நுரையீரல், வயிறு மற்றும் வாய் புற்றுநோய் ஆகியவை ஏற்படும் பாதிப்பை பெரும்பாலும் குறைக்கும்.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.