புதிய மாற்றங்கள், எதிர்பாரா பணவரவு - இந்த 2 ராசிக்காரர்களுக்குதானாம்! உங்க ராசிதானா அது ?!

புதிய மாற்றங்கள், எதிர்பாரா பணவரவு - இந்த 2 ராசிக்காரர்களுக்குதானாம்! உங்க ராசிதானா அது ?!

இன்று செவ்வாய்க்கிழமை சித்திரை நட்சத்திரம் சஷ்டி திதி. ஆடி மாதம் 21ம் நாள். இன்றைய நாளில் உங்கள் ராசிபலனை சரிபாருங்கள்.

மேஷம்

சில விஷயங்கள் உங்கள் விருப்பம்போல நடக்கவில்லை என்று வருத்தம் வரும். உங்கள் செய்கைகளையும் உணர்வுகளையும் மற்றவர்கள் கேள்வி கேட்பார்கள்.எதையும் உள்ளார்ந்து எடுத்துக் கொள்ள வேண்டாம். மோதலைத் தவிர்ப்பது நல்லது. குடும்ப உறுப்பினர்கள் உங்கள் செய்கையால் மனம் வருந்தாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

ரிஷபம்

நீண்ட வேலை நேரம் கொண்ட நாளாக இந்த நாள் இருக்கும். நீங்கள் இப்போது செய்து கொண்டிருக்கும் வேலையை விட அதிகமான வேலை செய்ய வேண்டும் என்கிற எதிர்பார்ப்புகள் இருக்கும். டெட்லைன் பிரஷர்கள் உங்களுக்கு அதிகமாக இருக்கும். நாளின் இறுதியில் எல்லாம் உங்கள் வசப்படும். கோபங்களைத் தள்ளி வைத்து குடும்ப உறுப்பினர்களோடு மனம் விட்டுப் பேசுங்கள்.

மிதுனம்

நீங்கள் தெளிவாக இல்லாததால் உங்களை பின் தொடரும் சகபணியாளர்கள் எந்தப் பக்கம் செல்வது என்று யோசிப்பார்கள். நீங்கள்தான் பொறுப்புகளை எடுத்துக் கொண்டு மற்றவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். நேரத்திற்கு சாப்பிடுங்கள். மற்றவர்களிடம் இருந்து விலகி இருக்க நீங்கள் முடிவெடுப்பீர்கள்.

கடகம்

உங்கள் மனதின் வேகத்தைக் கட்டுப்படுத்துங்கள். முடிவுகளை பற்றியே யோசிப்பதால் உங்கள் கிரியேட்டிவிட்டி தடைபடுகிறது என்பதை உணருங்கள். உங்களால் முடிந்தவற்றை செய்து விட்டு பலனை இறைவனிடம் விட்டு விடுங்கள். தூக்கம் இல்லாததால் உடல் நலன் பாதிக்கப்படும். கவனம்.

சிம்மம்

கடைசி நிமிட தாமதங்களால் உங்கள் பணியில் பல குழப்பங்கள் நடக்கலாம். குடும்ப உறவுகளும் உங்கள் கவனம் வேண்டி நிற்பார்கள். ஆத்திரத்தில் பேசும் எந்த ஒரு வார்த்தையும் மீண்டும் உங்களையே வந்து தாக்கும் என்பதை நினைவில் கொண்டு நடக்கவும். குடும்பத்தாருடன் ஒத்துப் போவது நல்லது.

கன்னி

மற்றவர்களின் நலன்களையும் கருத்தில் கொண்டு நீங்கள் வேலைகள் செய்வது நல்லது. நிறைய பொறுப்புகள் இருப்பதால் தன்னம்பிக்கை மேலோங்கும். ஆனாலும் மற்றவர் நலனை யோசித்தே முடிவெடுங்கள். குடும்ப உறவுகள் உறுதுணையாக இருப்பார்கள்.

 

 

Youtube

துலாம்

உங்களுக்கு இன்று முதல் புதிய மாற்றங்கள் நிகழப் போகிறது. புதிய பதவி அல்லது ப்ராஜெக்ட்கள் உங்களை வந்து சேரும். எதுவும் உறுதியாகும் வரைக்கும் புத்திக்கூர்மையோடு நடந்து கொள்ள வேண்டும். உணவில் கவனம் செலுத்துங்கள். குடும்ப உறுப்பினர்களுடன் மனம் விட்டுப் பேசுங்கள்.

விருச்சிகம்

உங்கள் எண்ணங்களையும் செயல்களையும் ஒரே நேர்கோட்டில் கொண்டு செல்வது உங்களுக்கு நன்மை தரும். உங்கள் முடிவுகளை சகபணியாளர்கள் சந்தேகிக்கலாம். உங்கள் தன்னம்பிக்கையை அவர்கள் சோதித்துப் பார்க்கிறார்கள் என்று நினையுங்கள். உங்கள் அடிமனதில் இருக்கும் கசப்பினை வெளிக்கொணர குடும்ப உறுப்பினர்கள் முயலுவார்கள்.

தனுசு

காலையில் அவசர அவசரமாக எல்லாம் நடக்கும். மதியத்திற்கு மேல் சோர்வாக மாறிவிடும். உங்கள் குடும்பத்தினருடன் நீங்கள் போடும் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதால் மகிழ்வீர்கள். ப்ரியத்துக்குரியவர்களுடன் இருக்கும்போது அவர்களோடு மனம் ஒன்றி இருங்கள். மசாலா உணவுகளைத் தவிருங்கள்.

மகரம்

இன்று உங்கள் விற்பனைத் திறமை பளிச்சிடும் நாள். மற்றவர்களுக்கு புரியும்படி பேச வேண்டியது உங்கள் பொறுப்பு. . பணிபுரிபவர்களுடன் நெருக்கமான தொடர்பில் இருங்கள். நிறைய வேலைகள் இருப்பதால் குடும்ப உறவுகளை கவனிக்க முடியாது.

கும்பம்

காகித வேலைகளில் கவனமாக இருங்கள். புதிய குழுவுடன் சேருவீர்கள். எதிர்பார்த்த பணம் உங்களுக்கு வந்து சேரும். அதிகமான வேலைப்பளுவால் குடும்ப உறுப்பினர்களின் ஒட்டுதல் உங்களுக்கு இருக்காது.. உணவில் கவனம் வேண்டும்.

மீனம்

வேலை தாமதமாக ஆரம்பித்தாலும் ஒரு கட்டத்திற்கு பின்னர் வேகம் எடுக்க ஆரம்பிக்கும். மக்கள் வேலை செய்யும் விதத்தை மாற்ற நினைப்பீர்கள். இதைப் பற்றி அவர்களிடம் பகிர்வது நன்மை தரும். கடந்த கால கசப்புகளை நினைவு வைத்திருப்பதால் குடும்ப உறவுகள் கசக்கும். மன்னிப்பது எல்லாவிதத்திலும் உங்களுக்கு நன்மை தரும்.

predicted by astro asha shah.

கண்மணி அன்போட திருடன் நான்.. எழுதும் லட்டர்-மளிகைக்கடையில் திருட வந்த திருடனின் கடுதாசி !

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.