தொடர்ந்து வெந்தயக் கீரை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!

தொடர்ந்து வெந்தயக் கீரை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!

வெந்தயக் கீரையில்(methi leaves) வைட்டமின்களும், தாது உப்புகளும் அதிக அளவில் இருக்கின்றன. வெந்தயக் கீரையை பல முறைகளில் சமைத்து உண்ணலாம். வெந்தயக் கீரை சீரண சக்தியைச் செம்மைப்படுத்துகிறது. சொறி, சிரங்கை நீக்குகிறது. பார்வைக்கோளாறுகளைச் சரி செய்கின்றது.

வெந்தயக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டால் காசநோயும் குணமாவதாகக் கூறுகின்றனர். இந்தக் கீரை வயிற்று நோய்களையும் குணப்படுத்துகின்றது. வெந்தயக் கீரையை வேக வைத்து அதனுடன் தேன் கலந்து கடைந்து உண்டால் மலம் சுத்தமாகும். உடல் சுத்தமாகும். குடல் புண்களும் குணமாகின்றன. மலம் கழிக்கும்போது ஏற்படும் உளைச்சலையும் எரிச்சலையும் வெந்தயக்கீரை குணப்படுத்துகின்றது.

மழைக்கால வரண்ட சருமத்தை மாற்றும் பல்வேறு பேஷியல் முறைகள்!

வெந்தயக்கீரையை வெண்ணெயிட்டு வதக்கி உண்டால் பித்தக் கிறுகிறுப்பு, தலை சுற்றல், வயிற்று உப்பிசம், பசியின்மை, ருசியின்மை ஆகியவை குணமாகும். உட்சூடும் வறட்டு இருமலும் கட்டுப்படும். நீண்ட நேரம் அமர்ந்திருந்து வேலை செய்ய முடியாமல் இடுப்பு வலிப்பவர்கள் வெந்தயக் கீரையுடன் கோழி முட்டை மற்றும் தேங்காய்ப்பால் சேர்த்து நெய்யில் வேக வைத்து உணவுடன் சேர்த்து வந்தால் இடுப்பு வலி நீங்கும்.

வெந்தயக் கீரை ஒரு சிறந்த பத்திய உணவாகும். இதை அரைத்து நெய் சேர்த்து சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால் தொண்டைப்புண், வாய்ப்புண் ஆகியவை ஆறும். இந்தக் கீரையைத் தொடர்ந்து 40 நாட்களுக்குச் சாப்பிட்டு வந்தால் நீரிழிவு கட்டுப்படும். எனவே, நீரிழிவு உள்ளவர்கள் வெந்தயக் கீரையைத் தொடர்ந்து சாப்பிடுவது நல்லது.
கண்களுக்கு காஜல்களைப் பயன்படுத்தும்போது நாம் மிகக் கவனமாக இருக்க வேண்டியவைகள்

 

pixabay

மாதவிடாய் கோளாறுகள்
வெந்தயக் கீரையை தொடர்ந்து உங்கள் உணவுப் பழக்கத்தில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கால பிரச்சனைகள் குறையும்.
இடுப்பு வலு நீங்கும்
வெந்தயக் கீரையோடு(methi leaves), நாட்டுக் கோழி முட்டையில் வெள்ளை கரு, தேங்காய் பால், கசகசா, சீரகம், மிளகு, பூண்டு போன்றவற்றை சேர்த்து சிறிதளவு நெய் கலந்து சமைத்து சாப்பிட்டால் இடுப்பு வலி குணமாகும்.
கபம், சளி குணமாகும்
கபம் சளி உள்ளவர்கள் வெந்தயக் கீரை சாப்பிட்டால் விரைவாக குணமடையலாம்.
சுறுசுறுப்பிற்கு உதவும்
மந்தமாக உணர்பவர்கள், அல்லது உடல் சோர்வாக உணர்பவர்கள் வெந்தயக் கீரை சாப்பிடலாம். இது உடலின் செயலாற்றலை அதிகரித்து சுறுசுறுப்பாக உதவும்.
நரம்பு தளர்ச்சி
நரம்பு தளர்ச்சி உள்ளவர்களுக்கு வெந்தயக் கீரை ஓர் சிறந்த மருந்தாகும், இது நரம்பு தளர்ச்சியில் இருந்து மீண்டுவர சீரிய முறையில் உதவும்.

வெந்தயக் கீரை குழம்பு செய்யும் முறை
தேவையான பொருட்கள்
வெந்தயக் கீரை - 1 கட்டு.
புளி - தேவைக்கு.
சாம்பார் பொடி - 2 ஸ்பூன்.
வேக வைத்த துவரம் பருப்பு - அரை கப்.
கடுகு, சீரகம், வெல்லத்தூள் - 1 ஸ்பூன்.
உப்பு, எண்ணெய் - தேவைக்கு.
செய்முறை:
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம் தாளித்து வெந்தயக் கீரையை நன்கு வதக்கி புளியைக் கரைத்து ஊற்றி உப்பு, சாம்பார் பொடி, வெந்த துவரம் பருப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். இறக்கும் போது 1 ஸ்பூன் வெல்லம் சேர்க்கவும்.

வெந்தயக் கீரை பொரியல் செய்யும் முறை

  • வெந்தயக்கீரை வேரினை எடுத்துவிட்டு மிக சிறிய துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் நன்றாக கழுவி தனியாக ஒரு பாத்திரத்தில் வைத்துக்கொள்ளவும்.
  • வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், பூண்டு, மல்லி இலை இவைகளை சிறிய துண்டுகளாக நறுக்கி தனியாக வைத்துக் கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய்யை ஊற்றி மிதமான தீயில் வைக்கவும். எண்ணெய் நன்றாக காய்ந்தவுடன் கடுகு உளுத்தம்பருப்பு போடவும்.
  • உடனே பெருங்கயப்பொடியை போடவும் பிறகு கருவேப்பிலையை போட்டு உடன் நறுக்கி வைத்துள்ள பூண்டு துண்டுகளை போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
  • பிறகு நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி மற்றும் பச்சை மிளகாய் இவைகளை போட்டு நன்றாக வதக்கவும். பிறகு வெந்தயக்கீரையை போட்டு நன்றாக கிளறவும்.
  • பின் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு போட்டு நன்றாக கிளறவும். நன்றாக வேக வைத்து தண்ணீர் சுண்டும் வரை மிதமான தீயில் வைக்கவும்.
  • பிறகு தேங்காய் துருவலை போட்டு நன்றாக கிளறி விட்டு நறுக்கி வைத்துள்ள மல்லி இலையை போட்டு இறக்கவும். இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இதனை சாதம் மற்றும் தயிர் சாதத்துடன் சாப்பிட நன்றாக இருக்கும்
    நாவூரும் மில்க் ஸ்வீட்ஸ் இனி வீட்டிலேயே செய்து அசத்தலாம்!

POPxoஇப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது!ஆங்கிலம்இந்திதமிழ்தெலுங்குமராத்தி மற்றும் பெங்காலி!

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.