logo
ADVERTISEMENT
home / Budget Trips
ஆன்மீகத் தேடல் கொண்டவர்களின் வாழ்நாள் கனவாக காசி இருப்பது ஏன் ?  அறிவோம் வாரணாசி

ஆன்மீகத் தேடல் கொண்டவர்களின் வாழ்நாள் கனவாக காசி இருப்பது ஏன் ? அறிவோம் வாரணாசி

வாரணாசி எனும் காசியின் மகத்துவங்கள் பற்றி அறிந்து கொள்ளலாம் வாருங்கள். ஆன்மிகத் தேடல் கொண்டவர்களுக்கான வாழ்நாள் கனவென்பது ஒருமுறையாவது காசிக்கு செல்ல வேண்டும் என்பதுதான்.

எதனால் காசி நகரம் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இடமாக மாறியது என்பதை அறிந்து கொள்வோமா.

வாரணாசி (varanasi)  என்று அழைக்கப்படும் இந்த இடம் பழங்காலத்தில் காசி மாநகரம் என்கிற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது. வருணா – அசி எனும் இரு நதிகள் சங்கமிக்கும் இடம் என்பதால் வாரணாசி என்கிற கூடுதல் பெயர் பெற்றது.

முக்தி தரும் ஏழு நகரகங்களில் காசியும் ஒரு முக்கியமான முதன்மையான தலமாக ஆக்கப்பட்டுள்ளது. இமயத்தில் உற்பத்தி ஆகும் கங்கை நதி இங்கே பாய்கிறது. இதில் 84 படித்துறைகள் இருக்கின்றன. அவற்றில் 5 படித்துறைகள் முக்கியமாகக் கருதப்படுகிறது. அசிசங்கம காட், 2. தசாசுவமேத காட், 3. மணிகர்ணிகா காட், 4. பஞ்சகங்கா காட், 5. வருணா சங்கம காட் அதிலும் மணிகர்ணிகா காட் மற்றும் அரிச்சந்திரா காட் எனும் இரண்டு இடங்கள் மிக முக்கியமானவை.

ADVERTISEMENT

சித்தர்கள் வாழும் திருவண்ணாமலை – அதிசயமும் அற்புதமும்

pinterest

வாழ்வின் இறுதிக்காலத்தில் இங்கு வந்து இறந்தால் முக்தி என்பது சாஸ்திரம். அதனால் பலர் தங்கள் இறுதி நாட்களை இங்கே கழித்து இறக்கின்றனர். இதற்காகவே பலர் இந்த இடத்திற்கு வந்து தங்குகின்றனர்.

ADVERTISEMENT

காசி என்பது இவ்வுலகிற்கும் மேலுலகிற்கும் இடையேயான ஒரு பாலம் என்பது சத்குருவின் வாக்கு. மிகப்பெரிய வெளிச்சத்தூண் போல முன்பு காசி காணப்பட்டதாகவும் இடைப்பட்ட கால படையெடுப்புகளின் போது காசியின் சக்திநிலைகள் சிதைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இருப்பினும் சிதைக்கப்பட்ட போதிலும் காசிக்கு இவ்வளவு சக்தி இருக்கும்போது அது சிதையாமல் இருக்கும்போது இந்த பூமியில் எப்படிப்பட்ட சக்தி ஸ்வரூபமாக அந்த இடம் இருந்திருக்கும் என்பதை நினைத்துப் பார்க்கையில் வியப்பாக இருக்கிறது.

நாம் எத்தனையோ ஜென்மங்களாகப் பிறப்பு எடுத்த பின்னரே மனித ஜென்மமாக பிறக்கிறோம் என்றொரு நம்பிக்கை இந்தியாவில் உள்ள இந்துக்களிடம் நிலவுகிறது. நமது ஒவ்வொரு ஜென்மத்திலும் செய்த பாவங்களை நாம் நினைவு வைத்துக் கொள்ள முடியாத ஒரு சாபம் இருப்பதால் நமது அறிவிற்கு எட்டாத பாவகணக்குகளை முடித்துக் கொள்ள காசியில் உள்ள கங்கை நதியில் முழுக வேண்டும் என்பது கட்டாயமாக கூறப்படுகிறது.

இந்த தலத்தில் முக்கிய ஸ்வாமி காசி விஸ்வநாதர். விஸ்வநாதர் என்றால் அகிலத்தை ஆள்பவர் என்று அர்த்தம். பழங்காலத்தில் பாரத தேசம் பிரிவினைகள் அற்று இன்றைய எல்லைகள் தாண்டி பரந்து கிடந்தது. அந்த சமயம் அன்றைய ஆன்மிக குருக்களால் இந்த இடம் சக்தி ஊட்டப்பட்டு பல அதிசயங்களை நிகழ்த்தியபடி இருந்தது. புறநா கதைப்படி சிவபெருமானும் பார்வதியும் இந்த புண்ணிய தலத்தில் வாழ்ந்ததாக குறிப்பிடுகின்றனர்.

ADVERTISEMENT

உலக அறிவியலையே தனது கால் பெருவிரலில் கட்டி வைத்த நடராஜர்- சிதம்பரம் கோயில் ரகசியம் அறிவோம்

pinterest

இங்குள்ள விஸ்வநாதருக்கு நமது கைகளாலேயே அபிஷேகம் செய்யலாம் என்பது விசேஷம். விஸ்வநாதருக்கு அடுத்தது விசாலாக்ஷி சந்நிதி. அம்பாளுக்கு எல்லாவித பூஜைகளையும் நகரத்தார் எனும் மக்கள் செய்து வருகின்றனர்.

ADVERTISEMENT

இங்கே அமர்ந்து சிவன் முதல் அனைவருக்கும் அன்னம் பாலிக்கும் தெய்வமாக அன்னபூரணி அருள்கிறாள். ஒரு கையில் தங்கக்கிண்ணமும் மறுகையில் தங்க அகப்பையும் ஏந்தி இருக்கும் அன்னபூரணி அம்பாள் அருகில் பிக்ஷாடனர் ரூபத்தில் இறைவன் பிச்சைப் பாத்திரம் ஏந்தியவாறு இருக்கிறார்,

காசியில் நீங்கள் தவறவிடக் கூடாத இன்னொரு முக்கிய விஷயம் தினமும் இரவு 7.30மணிக்கு விஸ்வநாதர் கோயிலில் செய்யப்படும் சப்தரிஷி பூஜை. அதன் பின்னர் நீங்கள் தவற விடக்கூடாது இன்னொரு பூஜை கங்கை ஆரத்தி.

இங்கே மிக முக்கியமான தெய்வமாக பார்க்கப்படுபவர் காலபைரவர் ஆவார். காசிக்கு சென்று காலபைரவரை வணங்குவது மரணம் பற்றிய நமது பயத்தை நீக்குவதாக கூறப்படுகிறது.

ஏலியன்கள் வந்து போகும் இமயமலை.. அதிர வைக்கும் மர்மங்கள்.. கைலாஷ் – மானசரோவர் ஒரு தேடல் !

ADVERTISEMENT

Youtube

சிவனும் பார்வதியும் இமயமலையில் இருந்து இறங்கி வந்து வாழ்ந்த தலமான காசி எனும் வாரணாசி உத்தரபிரதேச மாநிலத்தில் அமைந்திருக்கிறது. இங்கிருந்து வெகு அருகே சாரநாத் எனும் ஊரில்தான் புத்தர் தனது முதல் போதனையான தர்மம் என்பதை போதித்தார்.

காசிக்கு சென்னையில் இருந்து செல்ல பல சுற்றுலா நிறுவனங்கள் உதவி செய்கின்றன. ரயில் வழி மார்க்கம் விமான மார்க்கம் என இருவழிகளில் உங்கள் சௌகர்யத்துக்கு ஏற்ப நீங்கள் செல்லலாம்.

ADVERTISEMENT

காசியைத் தனியான முறையில் தரிசிக்க விரும்புவர்கள் சென்னையில் இருந்து டெல்லி வழியாக வாரணாசி செல்லலாம். வாரணாசி சென்ற உடன் தங்க விரும்புபவர்கள் அங்கிருக்கும் காசி நகரத்தார் விடுதிக்கு செல்லலாம். மிகக் குறைந்த விலையில் தங்கி கொள்ள முடியும். உணவும் உண்டு.

விழாக்காலங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். தங்குவதற்கு இடம் கிடைக்காமல் போகலாம். ஆனால் சாதாரண நாட்களில் சென்றால் சௌகர்யமாகத் தங்கி வரலாம். இதற்காக சிபாரிசு கடிதம் போன்ற எதுவும் தேவை இல்லை. தமிழில் பேசினாலே போதுமானது.

முகவரி

Sri Kasi Nattukkottai Nagara Satram
Godowlia,
Varanasi 221001 (U.P)
Phone No:
0542 – 2451804,
Fax: 0542 – 2452404

ADVERTISEMENT

Naat Koat Satram
Location Godowlia, Tanga Stand
Behind Sushil Cinema
Varanasi

டீலக்ஸ் அறைகள் 300 ரூபாய்க்கு கிடைக்கின்றன. இரண்டு பெட் அறைகள் 100 ரூபாய்க்கு கிடைக்கின்றன. அதிர்ஷ்டம் இருப்பின் உணவு இலவசமாக கிடைக்கும். தமிழ்நாட்டு உணவான இட்லி தோசை சாம்பார் சாதம் என எல்லாம் கிடைக்கிறது.

ஆகவே உங்கள் வாழ்நாளில் ஒருமுறை சென்று காசியின் புனிதத்தை அனுபவித்து வாருங்கள். உங்களால் முடிந்தவரை அந்த நகரத்தை அசுத்தப்படுத்தாமல் திரும்பி வாருங்கள். அதுவே பல கோடி புண்ணியங்களை உங்களுக்கு நல்கும்.

ADVERTISEMENT

pinterest

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.

25 Jul 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT