கவினுக்கு காதலி இருக்கிறார்... மதுமிதாவை வறுத்தெடுத்த பிரபலம் : பிக் பாஸ் ரகசியங்கள்!

கவினுக்கு காதலி இருக்கிறார்... மதுமிதாவை வறுத்தெடுத்த பிரபலம் : பிக் பாஸ் ரகசியங்கள்!

விஜய் டிவியில் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் (bigg boss) சீசன் 3 விறுவிறுப்பாக காரசாரமாக சென்று கொண்டிருக்கிறது. கடந்த வாரம் மீரா மிதுன் வெளியேற்றப்பட்டார். பிக் பாஸ் ஆரம்ப நாட்களில் வனிதாவின் அட்டகாசங்களை காட்டி நிகழ்ச்சியை ஒளிபரப்பினார்கள். அவர் வெளியேறிய பின்னர் கவினின் முக்கோண காதல் காதல் கதையை காட்டி வந்தார். ஒரு வழியாக இந்த பிரச்சனையை கமல்ஹாசன் பேசி முடித்து வைத்தார். எனினும் இந்த பிரச்சனை முடித்த பாடில்லை. இருவரும் சண்டை போடுவதும் பின்னர் கைகோர்த்து திரிவதுமாக உள்ளனர்.

twitter

இந்த வாரம் ஓபன் நாமினேஷன் வைக்கப்பட்டது. அதாவது தான் யாரை நாமினேஷன் செய்கிறீர்கள் என்பதை காரணத்துடன் கூற வேண்டும் என கூறப்பட்டது. இதனையடுத்து இந்த வாரம் மதுமிதா, கவின், ரேஷ்மா, சாக்க்ஷி மற்றும் அபிராமி நாமினேட் ஆகியுள்ளனர். இதனால் போட்டியாளர்களிடையே மனஸ்தாபங்கள் ஏற்பட்டது. எனவே நிகழ்ச்சியானது அழுகாச்சியாக சென்றது. இதனையடுத்து அவர்களை உற்சாகப்படுத்த சாண்டி மாஸ்டர் மாறுவேடம் அணிந்து அனைவரையும் குதூகலப்படுத்தினார்.

தலயான கவின், த்ரிஷாவான லாஸ்லியா!

கொஞ்சம் வித்தியாசமாக எம்ஜிஆர் கெட்டப் போட்டு அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பிக் பாஸ் இல்லத்தில் இயல்பு வாழ்க்கை திரும்பியது. இந்நிலையில் நேற்று போடு ஆட்டம் போடு டாஸ்க் கொடுக்கப்பட்டது. ஒவ்வொரு போட்டியாளாரும் கொடுக்கப்படும் கதாபாத்திரத்தின் படி அவர்களுக்கு வரும் பாடலுக்கு நடனம் ஆடி அசத்தும் விதமாக அமைந்தது. இந்த டாஸ்க்கில் சரவணன் – விஜயகாந்த், கவின் – தல அஜித், சாண்டி – சிம்பு, லோஸ்லியா – த்ரிஷா, முகென் – விஜய், சேரனுக்கு – ரஜினி என்று ஒவ்வொரு போட்டியாளருக்கும் ஒவ்வொரு வேடம் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி அவர்கள் நடனம் ஆடி அசத்தினர்.

twitter

கவினுக்கு வெளியே ஆள் இருக்கா?

இந்நிலையில் பிக் பாஸ் (bigg boss) கவினுக்கு வெளியே காதலி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சி தொங்கிய போதே ஐந்து பெண்களை காதலிப்பதாக கூறி சர்ச்சை ஏற்படுத்தினார். அதன் பிறகு சாக்ஷியை காதலிப்பதாக கூறப்பட்டது. இருவரும் ஒன்றாக சுற்றி வந்தனர். இதனிடையே கவின், லாஸ்லியாவுடன் பேசுவது சாக்ஷிக்கு பிடிக்காததால் இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டது. பின்னர் கவினும், லாஸ்லியாவும் காதலிப்பதாக கூறப்பட்டது. 

மேலும் படிக்க - யார் கவினின் காதலி.. லாஸ்லியாவா சாக்ஷியா..? லாஸ்லியாவின் கேள்வியால் தடுமாறும் கவின்..!

இந்தவாரம் நடைபெற்ற ஓபன் நாமினேஷனில் சாக்ஷி அதிரடியாக கவினை நாமினேட் செய்தார். அதற்கு முன்னர் நடைபெற்ற நாமினேஷனில் கவின், ஷாக்ஷியை நாமினேட் செய்திருந்தார். இதனால் இருவருக்குமான பிரச்னை உச்சச்சகட்டத்தை எட்டியுள்ளது தெரிந்தது. இந்த நிலையில் கவின் ஹீரோவாக நடித்து சமீபத்தில் வெளியான 'நட்புன்னா என்னனு தெரியுமா' படத்தின் தயாரிப்பாளர் லிப்ரா புரடக்‌ஷன்ஸ் ரவிந்தர் அளித்துள்ள பேட்டியில் கவினுக்கு வெளியில் காதலி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

twitter

ஷூட்டிங் நடைபெற்று கொண்டிருக்கும் போது கவின், அவரது காதலியுடன் பேசுவதை நானே பலமுறை கேட்டிருக்கிறேன். அவர் நடிப்பு திறமையை பார்த்து அவரை வைத்து படம் இயக்கவேண்டும் என முடிவெடுத்து நான் ஏமாந்தது போல, தற்போது தமிழ்நாடு மக்களும் கவினை பிக்பாஸில் பார்த்து ஏமாந்துகொண்டிருகிறார்கள் என அவர் கூறியுள்ளார். ஆனால் அவரது காதலி யார் என்பது பெயரை குறிப்பிடவில்லை. இதனால் பிக் பாஸ் பார்வையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மதுமிதா மீது பொங்கிய பிரபலம்!

இதனிடையே முன்னதாக கிராமத்து டாஸ்க் கொடுக்கப்பட்டிருந்தது. அப்போது மதுமிதாவை, சாண்டி கலாய்த்ததால் பிரச்னை எழுந்தது. அதாவது மதுமிதாவின் உயரத்தை வைத்து சாண்டி கிண்டல் செய்ததால் மதுமிதா மிகவும் கோபமடைந்தார். ஆனால் அப்போதே சாண்டி, இந்த சம்பதவித்திற்க்கு வருந்தி மன்னிப்பும் கேட்டார். எனினும் மதுமிதா இந்த பிரச்சனையை விட்ட பாடில்லை. தொடர்ந்து சாந்தி மீது குற்றம் சாட்டிவந்தார். 

twitter

நீயெல்லாம் ஆம்பளையா என சாண்டியை கேட்டதோடு கமல்ஹாசனிடம் புகார் அளித்தார். இந்நிலையில் இதுகுறித்து தற்போது பேசிய காஜல், சாண்டி மன்னிப்பும் கேட்ட நிலையில் மதுமிதா செய்தது தவறு என கூறியுள்ளார். இதே போல கவின், தர்ஷன், சாக்‌ஷி, முகேன் ஆகியோரிடம் மதுமிதா இப்படி நடந்துகொண்டால் பிக்பாஸ் வீட்டில் இருந்திருக்க முடியாது. நான் நாரடிச்சிருப்பேன். சாண்டிக்காக மட்டுமில்லை மற்ற யாருக்கு இப்படி பிரச்சனை என்றாலும் நான் தட்டிகேட்பேன். வனிதா இருந்திருந்தால் இந்த மாதிரி நடந்திருக்காது என காஜல் கூறியுள்ளார். 

மேலும் படிக்க - கிராமத்து மண் மனம் வீசும் பிக் பாஸ் இல்லம் : தர்ஷனுக்கு அம்மாவான மீரா!

இன்று மொட்டக் கடுதாசி டாஸ்க்!

இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள புரோமோவில், இன்றைய டாஸ்க்கில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் சக போட்டியாளரிடம் கேட்க நினைக்கும் கேள்விகளை கடிதமாக எழுதி பாக்ஸில் போட வேண்டும். பெயர் குறிப்பிடாமல் மொட்டை கடிதமாக எழுதலாம் என்று பிக்பாஸ் அறிவிக்கின்றார்.இதனையடுத்து போட்டியாளர்கள் கேள்விகளை எழுதி பாக்ஸில் போட பல கேள்விகள் சாக்சியுடன் கவின் கொண்டுள்ள உறவு குறித்த கேள்வியே கேட்கப்பட்டுள்ளது. இந்த கேள்விக்கு பதிலளித்த கவின், இப்போ சாக்ஷி மேலே இருப்பது என்ன என்று எனக்கு தெரியவில்லை என்று தழும்பிய குரலுடன் வருத்தமாக சொல்கிறார்.

இதனை கேட்ட சாக்சி தனியே சென்று அழ ஆரம்பிக்க அவருக்கு ஷெரின் ஆறுதல் கூறுகின்றார். மேலும் ஒரு சிலர் லாஸ்லியாவிடம் உண்மையில் உங்கள் சுயரூபம் என்ன என்பது உள்ளிட்ட கேள்விக்கு அவர் பதில் அளிக்கின்றார். 'நான் எப்போதுமே அன்பாகத்தான் இருப்பேன், பின்னால் நின்று பேசும் அவசியம் எனக்கு இல்லை' என்று கூறுகின்றார். இதேபோல் ஒவ்வொரு போட்டியாளரும் தங்களுக்கான விளக்கத்தை கூறும் இந்த டாஸ்க்கில் ஒருசில மன வருத்தங்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும் படிக்க - கவின் - சாக்ஷி காதல் முறிவு, அபிராமியை எச்சரித்த முகென்... பிக் பாஸ் சுவாரஸ்யங்கள்! 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.