கதைக்கு தேவையெனில் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பேன் : விமர்சனங்களுக்கு ரகுல் பதிலடி!

கதைக்கு தேவையெனில் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பேன் : விமர்சனங்களுக்கு ரகுல் பதிலடி!

தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று, சூர்யாவின் என்கேஜி உள்ளிட்ட படங்களில் நடித்த ரகுல் ப்ரீத் சிங் (rakul) தெலுங்கில் தற்போது பிசியாக வலம் வருகிறார். சமீபத்தில் அவர் நாகார்ஜுனாவுடன் இணைத்து நடித்துள்ள ‘மன்மதடு 2’ படத்தில் தம் அடிக்கும் காட்சிகளில் நடித்துள்ளார். இப்படத்தின் டீஸர் சில தினங்களுக்கு முன் வெளியான நிலையில் அதில் ரகுல் புகைப்பிடிக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. இதனை பார்த்த அவரது ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் தம் அடித்த காட்சி குறித்து பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். 

twitter

சமீப காலமாக சினிமாவில் நடிகைகள் புகைப்பது, குடிப்பது போன்ற காட்சிகளில் சர்வ சாதாரணமாக நடித்து வருகின்றனர். அமலா பால் நடித்துள்ள ஆடை படத்தின் ட்ரெயிலர் சமீபத்தில் வெளியான நிலையில், அந்த படத்தில் அமலா பால் தம், தண்ணி என சுற்றும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து ரகுல் ப்ரீத் சிங் புகைப்பிடிக்கும் காட்சியை பார்த்த ரசிகர்கள் கடுப்பாகி அவரை சமூக வலைதளங்களில் விமர்சித்தனர். மேலும் உண்மையாகவே இப்படி ஒரு பழக்கம் இல்லாமலா ரகுல் இவ்வளவு ஸ்மார்ட்டா தம் அடிக்குது என்று விமரிசித்தனர். 

மேலும் படிக்க - காதல் மனைவியைப் பிரிந்து சீரியல் மனைவியுடன் வாழ விரும்பும் தொலைக்காட்சி பிரபலம் !

இந்நிலையில் அந்த கமெண்டுகளைப் பார்த்து கடுப்பான ரகுல் பிரீத் சிங், என்னுடைய பெர்சனல் பற்றி உங்களுக்கு ஏன் தேவையில்லாத அக்கறை எதற்கு என கேள்வி எழுப்பியுள்ளார். மன்மதடு 2 படத்தில் நான் மாடர்ன் பெண்ணாக நடிக்கிறேன். அந்த படத்தின் நாயகி கேரக்டர் தம் அடிக்கும் இயல்பு கொண்டவள் என்பதால் இயக்குநர் சொன்னதை கேட்டே நான் புகை பிடித்தேன். அது குறித்து கமெண்ட் அடிப்பவர்கள் தங்கள் வேலைகளில் கவனம் செலுத்தலாம் என்று பொங்கியுள்ளார்.

twitter

கதைக்கு என்ன தேவைப்படுகிறதோ அதனை கண்டிப்பாக செய்வேன் என்று அதிரடியாக கூறியுள்ளார். மேலும் இதுபோல் பேசுபவர்கள் எப்போதும் பேசிக்கொண்டுதான் இருப்பார்கள். ஏனென்றால் அவர்களுக்கு பேசுவது மட்டும்தான் வேலை என அவர் விமர்சனம் செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். மன்மதுடு 2 படத்தில் புகைப்பிடிக்கும் காட்சியில் நடித்தற்காக அவரை பலரும் விளாசிக் கொண்டிருக்கும் நிலையில், அப்பா வயது ஹீரோக்களுடன் தொடர்ந்து ஜோடி சேர்கிறார். 

twitter

அவர் வயதுக்கு ஏற்ற ஹீரோக்களுடன் நடிக்க வேண்டியது தானே என்றும் விமர்சிக்கப்படுகிறது. எத்தனையோ இளம் நடிகைகள் அப்பா வயது ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடிக்கிறார்கள். ஆனால் ரகுல் ப்ரீத் மட்டும் தான் அடிக்கடி கேலி, கிண்டலுக்கு ஆளாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையர் ரகுல் ப்ரீத் சிங்கின் (rakul) வீடியோ ஒன்றை நெட்டிசன்கள் ஷேர் செய்து கொண்டிருக்கிறார்கள். அஜய் தேவ்கன், தபு உள்ளிட்டோருடன் சேர்ந்து ரகுல் ப்ரீத் சிங் நடித்த பாலிவுட் படம் தே தே பியார் தே. இந்நிலையில் தற்போது அந்த படத்தில் வந்த ஒரு காட்சியை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்கிறார்கள். 

மேலும் படிக்க - அமலா பாலின் புதிய காதலர் இவர்தானா ? இணையத்தில் வைரலாகும் புகைப்படம் !

தே தே பியார் தே படத்தில் ரகுல் ப்ரீத் சிங் தனது ஆடையை அவிழ்த்து கவர்ச்சியாக வருவதுடன் நடிகருடன் நெருக்கமாக இருக்கும் காட்சியை தான் நெட்டிசன்கள் ஷேர் செய்கிறார்கள். திறமை இருக்கும்போது அதை பயன்படுத்தாமல் இந்த மாதிரியான காட்சிகளில் எல்லாம் நடிப்பதா என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். தெலுங்கு படங்களுக்கு ஒரு அளவு கவர்ச்சி, தமிழ் படங்கள் என்றால் ஹோம்லி லுக், பாலிவுட் என்றால் படுகவர்ச்சி என்று கவர்ச்சிக்கு அளவுகோல் வைத்திருக்கிறார் ரகுல் ப்ரீத் சிங் என்று விமர்சனம் எழுந்துள்ளது.

twitter

பாலிவுட்டில் ஹீரோயின்கள் ஆடையை அவிழ்த்துவிட்டு நடிப்பது எல்லாம் சாதாரண விஷயம். இதற்கு போய் இந்த தென்னிந்திய ரசிகர்கள் கூப்பாடு போடுவது ஏன் என்று இந்தி ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். பல நடிகைகள் அப்படி இருக்கும்போது ரகுலை (rakul) மட்டும் குறை சொல்வது தவறு என்று அவரின் ஒரு சில ரசிகர்கள் ஆதரவாக பேசியுள்ளனர். ஆனால் இந்த விமர்சனங்களை எல்லாம் ரகுல் காதில் வாங்கிக்கொள்வதாக தெரியவில்லை. 

     மேலும் படிக்க - கவின் - சாக்ஷி காதல் முறிவு, அபிராமியை எச்சரித்த முகென்... பிக் பாஸ் சுவாரஸ்யங்கள்!

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.