வீகென்ட் ஸ்பெஷல் : ஏற்காட்டில் நீங்கள் செய்ய வேண்டிய சில சுவாரசியமான விஷயங்கள்!!

வீகென்ட் ஸ்பெஷல் :  ஏற்காட்டில் நீங்கள் செய்ய வேண்டிய சில சுவாரசியமான விஷயங்கள்!!

மலைவாசஸ்தலங்கள் என்று வரும்போது   ஊட்டி மற்றும் கொடைக்கானல் சுவாரசியமாக  இருக்கும் என்று நீங்கள் நினைத்தால், இங்கே கிழக்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள சேர்வராயன் மலை என்று அழைக்கப்படும் மற்றொரு மலை உள்ளது. அது தான் ஏற்காடு (Yercaud). 

பசுமை  நிறைந்த காடுகள், அழகான தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள், அழகிய பருவமழைக்கால பூக்கள், பரந்த காட்சிகள் என்று இத்தகைய மலைகளை ஆராய மழைக்காலம் சிறந்த பருவமாகும்! உங்கள் சருமத்தை தாக்கும் குளிர்ச்சியான காற்றுடன், மழை சாரல்களுடன் ,  போகும் பாதைகளில் உங்களுக்கு பிடித்த சூடான டீ - பகோடா உடன், இந்த அற்புதமான மலைப்பாதையை ஆராயுங்கள் ! 

ஏற்காட்டில் பார்க்க வேண்டிய இடங்கள்

1. ஏற்காட்டில் ட்ரெக்கிங்

Instagram

மலைகளில் (hills)  ட்ரெக்கிங் என்பது மிகவும் சுவாரஸ்யமான ஒன்று. நீங்கள் மலையேற்றத்தை விரும்பினால், இந்த விஷயத்தில் ஏற்காடு மலை உங்களை ஏமாற்றப் போவதில்லை!! கீழே குறிப்பிட்டுள்ளபடி சுற்றுலாப் பயணிகளுக்கு இது சில நல்ல மலையேற்ற இடங்களைக் கொண்டுள்ளது. 

  • கரடி குகை - இந்த குகை நார்டன் பங்களாவுக்கு அருகில் அமைந்துள்ளது. இந்த குகையை ஆராய்வதற்கு நிறைய உள்ளது மற்றும் இது பகவான் முருகரின் இல்லமாக கருதப்படுகிறது.
  • லேடீஸ் சீட் - மலையேற்றத்திற்கு (trekking) மற்றொரு அழகிய  இடம்தான் இந்த லேடீஸ் சீட் என கூறப்படும் பெண்கள் இருக்கை. இந்த இடம் சிறப்பான கண்ணோட்டங்களுடன் நிரப்பப்பட்டிருக்கிறது. கீழே சேலம் நகரத்தின் அற்புதமான காட்சியுடன்,  புகைப்படங்கள் எடுப்பதற்கு ஏற்றதாகவும் இது அமைந்துள்ளது.   
  • பகோடா பாயிண்ட்  - ஏற்காடு  மலைகளின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது இந்த இடம். சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனம், சேலம் நகரத்தின் மற்றொரு அசத்தலான  காட்சி மற்றும் சில அழகான இயற்கை காட்சிகளைக் காண அனுபவிக்க ஏற்றது.
  • கிளியூர் நீர்வீழ்ச்சிகள் - ஏற்காட்டில் இந்த நீர்வீழ்ச்சி ஒரு முக்கியமான சுற்றுலா அம்சமாகும். ஏற்காடு ஏரியிலிருந்து வரும் நீர் இந்த பள்ளத்தாக்கை அடைந்து 300 அடியிலிருந்து இறங்கி அற்புதமான காட்சியைத் தருகிறது. இதன் இறுதி நீர்வீழ்ச்சி இடத்தை அடைய நீங்கள் 250 படிகள் நடந்து செல்ல வேண்டும். மேலும் இங்கு படகு மற்றும் நீச்சல் செயல்பாடுகளைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது

 

2. நடந்து சென்று ஆராய

Instagram

ரோஸ் கார்டன்

இந்த ரோஜா தோட்டத்தை பார்வையிடுவதன் மூலம் சுற்றியுள்ள இயற்கையுடன் ஈடுபடுங்கள். இது ஜென்ட்ஸ் சீட்  மற்றும் லேடீஸ் சீட்டிற்கு செல்லும் வழியில் உள்ளது. இங்குள்ள மரங்கள், ரோஜாக்கள், மற்றும் பல்வேறு வகையான பூக்களுடன் இணைந்து மகிழுங்கள். 

கொட்டச்செடு தேக்கு காடு

இயற்கையோடு இணைவதற்கு இது மற்றொரு அற்புதமான இடம். தேக்கு வனப்பகுதியில் நடந்து செல்லுங்கள், இயற்கையையும் அதன் படைப்புகளையும் ரசித்து ஈடுபட்டு உங்கள் மன அழுத்தத்தையும் சோர்வான வாழ்க்கை முறையையும் விட்டு வெளியேறுங்கள்!

3. 32 கி.மீ லூப் சாலை டிரைவ்

Instagram

இந்த 32 கி.மீ லூப் சாலை ஏற்காடு  ஏரியில் தொடங்கி மீண்டும் அங்கு வந்து  முடிவடைகிறது. நீங்கள் மலை பகுதிகளில் குளிர் காற்று வீச சைக்ளிங்  செய்ய விரும்பினால், இந்த சாலையானது ஒரு அற்புதமான அனுபவத்தை உங்களுக்கு அளிக்க உள்ளது.  இங்கு அழகான சாலைகள், கிராமங்கள், காபி தோட்டங்கள் மற்றும் சுற்றியுள்ள பசுமைகள் அனைத்தையும் பார்க்கலாம். காபி தோட்டத் தளங்களில் ஒன்றில் நிறுத்தி, காபியின் சுவை மற்றும் நறுமணத்தை ஆராயுங்கள்! உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் இங்கே ஒரு நினைவூட்டும் சுற்றுலாவையும் ஏற்பாடு செய்யலாம்.

மேலும் படிக்க  - பயணத்தில் பொது / திறந்த கழிப்பறைகளைப் பயன்படுத்தும் பெண்களுக்கு விரைவான உதவிக்குறிப்புகள்

4. வேடிக்கையான விளையாட்டுகள் மற்றும் செயல்பாடுகள்

Instagram

பெயிண்ட்பால்

நீங்கள்  உங்கள் பயணத்தில் சில வேடிக்கைகளைச் சேர்க்க விரும்பினால், ஏற்காட்டில்  உள்ள பெயிண்ட்பால்லை பார்வையிடவும். இந்த இடம் உங்களுக்கு பயிற்சி பெற்ற ஊழியர்களுடன் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட விளையாட்டு மண்டலத்தைக் கொண்டுள்ளது.  துப்பாக்கிகள், போர்க்களம், முழுமையான பாதுகாப்போடு ஜாக்கெட்டுகள் ஆகியவற்றைக் கொண்ட இந்த இடம் ஏற்காட்டில் கட்டாயம் பார்க்க வேண்டிய ஒன்றாகும். 

முகவரி :  ஏரிக்கு எதிரே, பாப்பி ஹில்ஸ் அட்வென்ச்சர் பார்க் பின்னால், யெர்காட் 636601, இந்தியா

தொலைபேசி  : +91 99403 08696

ஜிப் லைன் மற்றும் ட்ரீ டாப்  சாகசம்

நீங்கள் சாகசங்களை விரும்பினால், இங்கே  ஜிப் கயிறு, உயர் கயிற்றில் கரடுமுரடான விளையாட்டுகள் , மற்றும் பல சுவாரசியமான விளையாட்டுகள் உள்ளன. பரபரப்பான அனுபவத்திற்கு  உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் இந்த இடத்திற்கு செல்லுங்கள்.

முகவரி : காக் பர்ன் சாலை, ஐந்து சாலைகள்,யெர்காட் - 636 602, சேலம் (மாவட்டம்) , தமிழ்நாடு, இந்தியா.  

தொலைபேசி : +91 9366622611, +91 94432 22611

பாப்பி ஹில்ஸ்

குழந்தைகளுடன் சென்று கொண்டாட இது மற்றொரு அற்புதமான இடம். அனைத்து வகையான வேடிக்கை நிறைந்த பொழுதுபோக்கு விளையாட்டுகளையும் சவாரிகளையும் இங்கே காணலாம்.

முகவரி : கிலியூர் நீர்வீழ்ச்சி சாலை | ஏரிக்கு எதிரே, யெர்காட் 636601, இந்தியா 

தொலைபேசி :  099403 08696

5. கோவில்களுக்கு செல்லுங்கள் 

Instagram

  • ஸ்ரீ சக்ரா மகாமேரு கோயில்  - நீங்கள் நடைபயணம், ட்ரெக்கிங்  மற்றும் ஏர்க்காடை ஆராய்வதை அனைத்தையும் முடித்துவிட்டால், 32 கி.மீ லூப் ரூட் உடன் இருக்கும் ஸ்ரீ சக்ரா மகாமேரு கோயிலுக்குச் செல்லுங்கள். இங்குள்ள பிரதான தெய்வம் திருபுரசுந்தரி தேவி. முழுமையான அமைதிக்காகவும் தெய்வீகத்தோடு இணைவதற்கும் இந்த கோயிலுக்குச் நிச்சயம் சென்று வாருங்கள். 
  • சேர்வராயன் கோயில்  - ஏற்காட்டில்  உள்ள கோயில்களில் தவறாமல் நீங்கள் பார்க்க வேண்டிய மற்றொரு அழகிய கோயில் இதுவே!  இங்குள்ள பிரதான தெய்வம் செர்வராயன் கடவுள் பெருமாள் மற்றும் காவேரி தெய்வம் . கோயிலை அடைய சுமார் 500 மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டும். நடைப்பயணத்திற்குப் பிறகு, மேலே உள்ள அழகிய மேகமூட்டத்துடன்  இருக்கும் காட்சி உங்களை வியக்க வைக்கும் என்பது உறுதி.

ஏற்காட்டில் சுற்றுப்பயணம் செய்யும் போது பசித்தால் , ஸ்வீட்  ராஸ்கல் உணவகம்,க்ரீன் பார்க் உணவகம் அல்லது ஹோட்டல் செல்வம்  சென்றால் காரமான சுவையான அசைவ உணவு கிடைக்கும். அல்லது பியர் ட்ரீ கஃபே  மற்றும் ஆரஞ்சு உணவகம் சென்றால் கான்டினென்டல் உணவு வகைகளை ருசிக்கலாம்.

 

மேலும் படிக்க - பயணத்தால் ஏற்படும் உடல் உபாதைகளை எப்படி சரி செய்வது?

பட ஆதாரம் - Instagram, Pinterest

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.