logo
ADVERTISEMENT
home / Health
எண்ணிலடங்கா ஆரோக்கியம் மற்றும் அழகு நன்மைகள் நிறைந்த ப்ரோக்கோலியின் பலன்கள்!

எண்ணிலடங்கா ஆரோக்கியம் மற்றும் அழகு நன்மைகள் நிறைந்த ப்ரோக்கோலியின் பலன்கள்!

அனைவரும் அறிந்திராத ப்ரோக்கோலியில் (broccoli) ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது. பச்சைப் பூக்கோசு என்று அழைக்கப்படும் ப்ராக்கோலி, முட்டைக்கோஸ் வகையை சேர்ந்த ஒரு காய்கறியாகும். உலகிலேயே அதிகமான சத்துள்ள காய்கறிகளில் ஒன்றாக ப்ரோக்கோலி கருதப்படுகிறது. பெரும்பாலான டயட் உணவுகளில் முக்கிய பங்காற்றுகிறது. 

 

ப்ராக்கோலி ஆரோக்கிய பலன்கள்

  • ப்ரோக்கோலியில் அதிகளவிலான நார்ச்சத்துகள் நிறைந்துள்ளது. அவை எளிதில் கரையக் கூடியவையாக இருப்பதால், நமது உடலில் உள்ள கொலஸ்ட்ரால்களை குறைக்க உதவுகிறது. மேலும் உணவு செரிமானத்தை துரிதப்படுத்துகிறது.

pexels, pixabay

ADVERTISEMENT
  • ஆண்டி ஆக்சிடன்ட் பண்புகள் ப்ரோக்கோலியில் (broccoli) நிறைந்துள்ளது. ஃப்ளேவோனாய்டுகள், கரோட்டீனாய்டுகள், லூட்டின், பீட்டா-கரோட்டீன் மற்றும் ஸியாஸாந்த்தின் ஆகிய பொருட்கள் நிறைந்துள்ளதால் ப்ரோக்கோலி சாப்பிடுவது நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. 

மருத்துவ குணங்கள் நிறைந்த ஆவாரம் பூவின் அற்புத பலன்கள் மற்றும் அழகு குறிப்புகள்!

  • ப்ரோக்கோலியில் அதிகளவு கால்சியம் சத்து உள்ளது. ப்ரோக்கோலியை நாம் பச்சையாக கூட உட்கொள்ளலாம். பழங்கள் மற்றும் காய்கறிகளுடன் சேர்த்து சாலெட்டாக செய்து சாப்பிட்டால் அவற்றில் உள்ள முழு சத்துக்களும் நமக்கு கிடைக்கும். இதனை தொடந்து சாப்பிட்டு வர எலும்புகள் பலமடைந்து தேய்மானம் போன்ற பிரச்சனைகளில் இருந்து நம்மை பாதுகாக்கும். 
  • ப்ரோக்கோலியில் மிகவும் முக்கியமாக காணப்படுவது யாதெனில், மினரல்கள். இதனையடுத்து மினரல்கள் அடங்கிய ப்ரோக்கோலியை நாம் சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் நம்மை அண்டாமல் விரட்டி அடிக்கலாம். குறிப்பாக பெண்களை தாக்கும் பெருங்குடல் புற்றுநோய் மற்றும் நுரையீரல் புற்றுநோய் பதிப்புகளை தடுக்கும் சக்தி ப்ராக்கோலிக்கு இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. மேலும் ஆரம்ப கால மார்பகப் புற்றுநோயை அழிக்கும் சக்தி ப்ரோக்கோலிக்கு உண்டு.

pexels, pixabay

  • பொட்டாசியமும், மக்னீசியமும் ப்ரோக்கோலியில் நிறைந்து காணப்படுகின்றன. 100கி ப்ரோகோலியில் மக்னீசியம் 21 மிகி, பொட்டாசியம் 316 மிகி காணப்படுகிறது. மத்திய நரம்பு மண்டலம் ஆரோக்கியமாக இருக்க இவைகள் இரண்டும் மிகவும் உதவுகிறது. 
  • ப்ரோக்கோலியில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் கே போன்ற சத்துக்கள் உள்ளன. இதிலிருக்கும் சல்ஃபோரபேன் மனஅழுத்தத்தைக் குறைக்க பயன்படுகிறது. மனஅழுத்தத்தின் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக சல்ஃபோரபேன் நிறைந்த இளசான புரோக்கோலியை உணவில் சேர்த்து கொள்ளுங்கள். 

அத்திபழத்தின் நன்மைகள் – சரும மற்றும் உடல் ஆரோக்கியம் பெற அத்திப்பழம்!

ADVERTISEMENT
  • கர்ப்பிணிகளுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் ப்ரோக்கோலியில் நிறைந்துள்ளது. குறிப்பாக வைட்டமின் – C, வைட்டமின் – K, வைட்டமின் – A, கால்சியம், இரும்புச்சத்து, போலேட் மற்றும் பொட்டாசியம்  உள்ளிட்ட பல்வேறு சத்துக்கள் காணப்படுகிறது. கர்பிணிப் பெண்கள் தொடந்து இதனை சாப்பிட்டு வந்தால், அவர்களுக்கு தேவையான சத்துக்கள் கிடைப்பது மட்டுமின்றி, சோர்வு, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். 

pexels, pixabay

  • கலோரிகள் குறைந்த உணவான புரோக்கோலியை (broccoli) நம் உணவுப் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம். அரை கப் புரோக்கோலியில் 25மிகி கலோரிகளே இருக்கின்றன. அதே நேரத்தில் மற்ற சத்துகள் நிறைவாக இருக்கின்றன. 

அழகு நன்மைகள்

  • சிலருக்கு உடலில் எரிச்சல் மற்றும் அலர்ஜிகள் காணப்படும். இவை சில தொற்றுகளால் ஏற்படுகிறது. இவற்றை தவிர்க்க ப்ரோக்கோலியை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இதில் உள்ள  ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மற்றும் கெம்ப்பெரால் ஆகியவை அலர்ஜிக்கு எதிராக வேலை செய்கிறது.  
  • சரும பொழிவை மேம்படுத்த ப்ரோக்கோலி உதவி புரிகிறது. ப்ராக்கோலியில் காணப்படும் குளூக்கோராஃபானின் பாதிக்கப்பட்ட சருமங்களை சரி செய்கிறது. எனவே ப்ராக்கோலியை சாப்பிடுவதால் சரும நோய்கள் விலகும். தோல் பளபளப்பாக காணப்படும். 

pexels, pixabay

ADVERTISEMENT
  • புரோக்கோலியில் இருக்கும் வைட்டமின் சி சிறந்த ஆன்டிஆக்ஸிடன்ட் என்பதால், சருமத்துக்குப் பாதுகாப்பைத் தருகிறது. இளசான ப்ரோக்கோலியின் சாற்றை எடுத்து சருமத்தில் தடவி வந்தால், சூரியனின் புற ஊதாக்கதிர்களிலிருந்து உடலுக்கு தேய்வையான பாதுகாப்பு கிடைக்கும். இந்தக் கதிர்களால் ஏற்படும் பாதிப்புக்கும் இது மருந்தாக அமையும். இதனால் தோல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு குறைக்கும் தன்மை ப்ரோகோலிக்கு உள்ளது.

அதிசய நன்மைகள் கொண்ட வெள்ளை சோளம்! இப்படியும் சாப்பிடலாமா?

  • கொழுப்பை குறைக்கும் சக்தி ப்ரோகோலிக்கு இருப்பதால் உடல் எடையை குறைக்க பயன்படுத்தப்படுகிறது. மேலும் தொப்பை இருப்பவர்கள் ப்ரோக்கோலியை தினமும் சாப்பிட்டு கொஞ்சம் கொஞ்சமாக தொப்பை குறைந்து உடல் கட்டுகோப்பாகும்.

ப்ரோக்கோலி பெப்பர் பிரை

பல்வேறு ஆரோக்கியம் நிறைந்த ப்ரோக்கோலியை எப்படி சமைப்பது என பலருக்கு தெரியாது. இன்று ஈஸியாக ப்ரோக்கோலி பெப்பர் பிரை செய்வது எப்படி என்று பார்க்கலாம். 

என்னென்ன தேவை?

ப்ரோக்கோலி – 1 

ADVERTISEMENT

உப்பு – தேவையான அளவு

மஞ்சள் தூள், மிளகு தூள் – சிறிதளவு 

எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

பூண்டு – 4 துண்டு 

ADVERTISEMENT

வெங்காயம் – 1 

பச்சை மிளகாய் – 1

pexels, pixabay

ADVERTISEMENT

எப்படி செய்வது?

ப்ரோக்கோலியை  நன்றாக சுத்தம் செய்து வெட்டி வைத்து கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் கொஞ்சம்  நீரை எடுத்து உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, அதனுடன் வெட்டி வைத்துள்ள ப்ரோக்கோலியை சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க விடவும். பின்னர் இறக்கி நீரை வடித்து விட்டு வேக வாய்த்த ப்ரோக்கொலியை எடுத்து கொள்ளவும். வாணலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியவுடன் அதில் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி வேக வைத்துள்ள ப்ரோக்கொலியை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பின்னர் மிளகு தூள் சேர்த்து கிளறி இறக்கவும். சுவையான ப்ரோக்கோலி பெப்பர் பிரை ரேடி. 

தற்போது மார்க்கெட்டுகளில் ப்ரோக்கோலி குறைந்து விலைக்கே கிடைக்கின்றது. அவரை வாங்கி சாலடாகவோ, சமைத்தோ சாப்பிடுங்கள். ப்ரோக்கோலியை சமைத்து சாப்பிடுவதை விட பச்சையாகவோ அல்லது பாதி வெந்த நிலையிலோ  நன்மை தரும்.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

ADVERTISEMENT

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.

01 Jul 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT