வெளிநாடுகளில் பரவலாக இருந்து வரும் 'லிவிங் டுகெதர்' (living together) கலாச்சாரம் இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது. குழந்தைப் பருவத்தைத் தாண்டிய இருவர் திருமணம் செய்துகொள்ளாமலே சேர்ந்து வாழும் முறையே லிவிங் டுகெதர் வாழ்க்கை முறையாகும். தற்போது கலப்புத் திருமணம் போன்றவற்றிற்கு ஆதரவு பெருகும் நிலையில், இன்றைய நாள் வரை லிவிங் டுகெதர் வாழ்க்கைக்கு எதிர்ப்புகள் உள்ளது என்பதே உண்மை. அனைத்து சமூகத்திலும் பெற்றோர்கள் பார்த்து திருமணம் செய்வது அல்லது அவரவர்களுக்கு பிடித்த ஆண்/ பெண்ணை வீட்டில் சொல்லி திருமணம் செய்து கொள்வது தற்போது வரை நடைமுறையில் உள்ளது.
இவர்களோடு ஒப்பிட்டால் இவ்வாறு மணமுடிக்காமல் சேர்ந்து வாழ்கிறவர்கள் எண்ணிக்கை மிக மிகச் சொற்பமானது. இவர்கள் அனைவரையும் மணமுடிக்காமல் இணைந்து வாழுங்கள் என்று கூறவில்லை. அவர்களை நிம்மதியாக வாழ விட்டால் போதும் என்றே வலியுறுத்துகிறார்கள். மற்றவர்கள் விமர்சனங்களுக்கு பயந்து பலர் தங்களது லிவிங் டூ கெதர் வாழ்க்கை முறை குறித்து வெளியில் கூறவே பயப்படுகின்றனர். ஏனெனில் இவ்வாறு வாழ்பவர்களை தவறான உறவில் இருப்பவர்கள் போல சித்தரித்து சமுகத்தில் மரியாதை கிடைக்காத வகையில் செய்கிறார்கள்.
மேலும் படிக்க - வீட்டுக்குத் தெரியாமல் லிவிங் டு கெதர்.. நம்பிச் சென்ற கல்லூரி மாணவியின் மர்ம மரணம்..
லிவிங் டூ கெதர் முறையில் வாழ்பவர்களுக்கு பிறக்கும் குழந்தையின் நிலைமை குறித்து பெரும்பாலும் கேள்வி எழும். நாள் நட்சத்திரம் பார்த்து, மேள தாளங்கள் முழங்க நடத்தி வைக்கிற திருமணங்களில் முறிவு ஏற்படும் போது அந்த குடும்பங்களில் பிறந்த குழந்தைகளுக்கு என்ன நிலைமை ஏற்படுமோ அதே நிலைமைதான் இந்த குழந்தைகளுக்கும் ஏற்படும். குழந்தை பெற்றுக்கொண்டோ, அல்லது அதனை தவிர்த்தோ ஆயுளுக்கும் சேர்ந்திருக்கிற லிவிங் டுகெதர் தம்பதிகளும் உள்ளனர். ஒரு வேலை அவர்ளுக்கு குழந்தை பிறந்தாலும் கூட அந்த குழந்தைக்கு நல்ல பெற்றோர்களாக இருக்கின்றனர்.
இவர்களில் பலர் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு முறைப்படி திருமணம் செய்துகொள்ள முடிவெடுக்கிறார்கள். அவ்வாறு முடிவெடுப்பதில் ஒருவரையொருவர் நன்கு புரிந்து கொண்ட பின்னரும் இருக்கலாம் அல்லது சமூகத்தின் வெறுப்பு காரணமாகவும் இருக்கலாம். தமிழில் லிவிங் டுகெதர் (living together) வாழ்க்கை குறித்து சமீபத்தில் ஒரு திரைப்படம் வந்தது. மணிரத்தினம் இயக்கிய ஓ காதல் கண்மணி படத்தின் லிவிங் டுகெதர் வாழ்க்கை முறை குறித்து காட்டியிருப்பார்கள்.
இந்த படத்தில் கூட சமூகத்தை இவர்கள்தான் புரிந்துகொள்ள வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. சமூகம் இவர்களைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று சொல்லவில்லை. லிவிங் டுகெதர் வாழ்க்கை வாழ்க்கை வாழ்பவர்கள் சிலர் சில வருடங்களுக்கு பிறகு பிரிந்து சென்று விடுகின்றனர். திருமணம் ஆன பிறகு பல்வேறு சிக்கல் எழுவதால் விவாகரத்து ஆவது தற்போதைய காலத்தில் இயல்பான ஒரு விஷயமாக நடைபெற்று வருகிறது. அதே போல தான் இதுவும். பிடிக்காத உறவில் இருக்காமல் பிரிந்து சென்று விடுகின்றனர்.
மேலும் படிக்க - பாய் ஃபிரண்டை அன்போடு அழைக்க உங்களுக்கான சில அழகிய செல்லப் பெயர்கள்!
உலக அளவில் இவ்வாறு வாழ்கிறவர்கள் அதிகரிப்பது 70 சதவீதமாகியுள்ளதாக ஒரு தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் கடந்த 50 ஆண்டுகளில் லிவிங் டு கெதர் முறையில் வாழ்பவர்கள் எண்ணிக்கை 900 சதவீதம் அதிகரித்திருக்கிறதாம். அதாவது கிட்டத்தட்ட 75 லட்சம் தம்பதிகள் இந்த வாழ்க்கையை தேர்ந்தெடுத்தவர்கள்.
அந்த நாட்டின் மக்கள்தொகையில் இது 4.2 சதவீதமாகும். அங்கு லிவிங் டுகெதர் (living together) வாழ்க்கைக்கு யாரும் எதிர்ப்பு தெரிவிப்பது இல்லை. பெரும்பாலானோர் அதற்கு ஆதரவாகவே இருக்கின்றனர். இந்தியாவில் இப்படிப்பட்ட கணக்கெடுப்பு இதுவரை நடைபெறவில்லை. அப்படியே நடத்தினாலும் யாரும் துணிச்சலாக அதனை சில முன் வர மாட்டார்கள் என்பதே மறுக்க முடியாத உண்மை.
மேலும் படிக்க - மாடர்ன் உடையில் மனதை கரைய வைக்கும் ப்ரியா பவானி சங்கர் : லேட்டஸ்ட் புகைப்பட தொகுப்பு!
வேறு வேறு பெற்றோர்களுக்கு பிறந்தவர்கள் சகோதர, சகோதரிகளாக வாழ்வது ஏற்கப்படுகிறது. நண்பர்களின் குடும்பத்தாரை அம்மா, அப்பா, அண்ணா, அக்கா, தங்கச்சி, அண்ணி என்று உரிமையோடு அழைக்க முடிகிறது. இவ்வாறு குடும்ப உறவல்லாத இவர்களோடு பல மடங்கு பாசத்துடன் பழகுவது ஏற்கப்படுகிறது. இதே போல மண உறவல்லாத (living together) சேர்ந்து வாழ்கின்றவர்களை சமூகம் ஏற்க வேண்டும் என்பதே இன்றிய நியதி.