கல்லூரிக்கு செல்லும் ஒவ்வொரு மாணவியும், மாணவனும் (students) தன்னுடைய வாழ்க்கையின் அடுத்த நிலைக்கு முன்னேறுகின்றார்கள். நீங்கள் கல்லூரியில் சேர்ந்து விட்டீர்கள் என்றால், அதிலும் குறிப்பாக தங்கும் விடுதியில் இருந்து உங்கள் கல்லூரி படிப்பை படிக்க போகின்றீர்கள் என்றால், உங்களுடன் சில பொருட்களை மறக்காமல் எடுத்துக் கொள்ள வேண்டும்.
தங்கள் வீட்டை விட்டு வெகு தொலைவிற்கு பயணம் செய்து கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், சில அசௌகரியங்களை சந்திக்க நேரிடலாம். ஆனால், உங்களுக்கு எப்படி உங்களை தயார்ப் படுத்திக் கொள்வது என்று தெரிந்து விட்டால், இது மிக எளிதாகி விடும். அப்படி நீங்கள் முதலாம் ஆண்டு கல்லூரிக்கு செல்லும் மாணவராக இருந்தால், இங்கே உங்களுக்காக, நீங்கள் உங்களுடன் எடுத்து செல்ல வேண்டிய சில குறிப்பிடத்தக்க பொருட்கள்;
pixabay
1. படுக்கை விரிப்பு: உங்களுக்காக தனி அரையோ அல்லது பிற மாணவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வகையில் ஒரு அரையோ கொடுக்கப்பட்டால், நீங்கள் முதலில் கவனிக்க வேண்டியது உங்கள் படுக்கை தேவைகளை. ஒவ்வொருவரும் தனக்கென படுக்கை விரிப்புகளை வைத்திருப்பார்கள். அது போன்று நீங்களும், உங்கள் சௌகரியத்திற்கு ஏற்றவாறு ஒரு நல்ல மற்றும் எளிதாக பராமரிக்கக் கூடிய படுக்கை விரிப்பை உங்களுடன் எடுத்து செல்ல வேண்டும். போதுமான தலையணை, போர்வை, படுக்கை விரிப்பு மற்றும் மெத்தை அல்லது பாய் எடுத்து செல்ல வேண்டும்.
2. அறையின் வசதி: உங்களுக்கு கொடுக்கப்படும் அரை காற்றோட்டமாக உள்ளதா, வெளிச்சம் உள்ளதா, மேலும் அலமாரிகள், மேஜைகள் போன்ற வசதிகள் உள்ளதா என்பதை முன்னரே தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு ஏற்றவாறு, உங்களுக்கு தேவைப்படும் மேஜை விளக்கு, மின் விசிறி, ஜன்னல் திரை, கடிகாரம், கால் மிதி, கொசுவலை, போன்ற மேலும் பயன்படக் கூடிய பொருட்களை எடுத்துக் கொள்ளுங்கள்.
காலேஜ் டேஸ் : கல்லூரிக்கு செல்வோருக்கு தேவையான 6 சிறந்த ட்ரெண்டி பைகள்
3. துணி சலவை: பெரும்பாலான கல்லூரிகளில் தங்கும் விடுதியில் மாணவர்கள் (students) அவர்களது துணிகளை அவர்களே துவைத்துக் கொள்ள வேண்டும். ஆனால் சில கல்லூரிகளில் சலவை இயந்திரம் இருக்கும். எனினும், நீங்கள் உங்கள் துணிகளை துவைக்க தேவையான வாலி, சோப்பு தூள், இஸ்திரி பெட்டி, போன்ற பொருட்களை எடுத்து செல்ல வேண்டும்.
4. உணவு: சில தங்கும் விடுதிகளில் உணவு வழங்கப்பட்டாலும், ஒரு சில கல்லூரிகளில் மாணவர்கள் அவர்களாகவே சமைத்து சாப்பிடவும் அனுமதி தருகின்றனர். அப்படி உங்களுக்கு அனுமதி இருந்தால், நீங்கள் சமைக்கத் தேவையான அடுப்பு, பாத்திரம், மற்றும் உணவு பொருட்களை உங்களுடன் எடுத்து செல்ல வேண்டும்.
pixabay
5. படிக்கத் தேவையான பொருட்கள்: இது குறிப்பாக எழுத்தாணி, புத்தகம், எழுதுகோல், புத்தகங்கள் மற்றும் இதர பொருட்களை உங்களுடன் மறக்காமல் எடுத்து செல்ல வேண்டும். இந்த பொருட்கள் பாடங்கள் படிக்கும் போதும், கல்லூரி வகுப்புகளிலும் உங்களுக்கு உதவியாக இருக்கும்.
6. தொழில்நுட்ப கருவிகள்: இன்றைய மாணவர்கள் அனைவரும் மடி கணிணி, ஸ்மார்ட் போன், ஜிபிஎஸ் என்று மேலும் பல தொழில்நுட்ப கருவிகளை பயன் படுத்துகின்றனர். இவை அவர்களுக்கு படிப்பிலும் பெரிதாக உதவியாக உள்ளது. அப்படி உங்களுக்குத் தேவைப்படும் கருவிகள் மற்றும் பொருட்களை உங்களுடன் எடுத்து செல்ல மறந்து விடாதீர்கள்.
பயணத்திற்கு தயாரா? எளிமையாக உங்கள் சூட்கேஸை பேக்கிங் செய்வதற்கான டிப்ஸ்கள்!
7. குளியலறை பொருட்கள்: குளியல் சோப், ஷாம்பூ, துண்டு, போன்ற குளியலறை பொருட்கள் உங்களுக்கு அதிகம் தேவைப் படும். அதனால், மறக்காமல் இந்த பொருட்களை உங்கள் பெட்டியில் எடுத்து வைத்துக்கொள்ள மறந்து விடாதீர்கள்.
pixabay
8. அழகு சாதனா பொருட்கள்: இன்று பெண்கள் மட்டுமல்லாது, ஆண்களும் பல விதமான அழகு சாதனா பொருட்களை பயன்படுத்துகின்றனர், அந்த வகையில் நீங்கள் ஏதாவது பயன் படுத்துகின்றீர்கள் என்றால், உங்களுக்குத் தேவையான பொருட்ளை எடுத்து வைக்க மறந்து விடாதீர்கள்.
9. ஆடைகள்: நீங்கள் கல்லூரிக்கு தங்கி படிக்க செல்கின்றீர்கள் என்றால், குறைந்தது 6 மாதமோ அல்லது ஒரு வருடமோ கழித்தே உங்கள் வீட்டிற்கு திரும்ப முடியும். அந்த வகையில், உங்களுக்குத் அந்த ஒரு வருட காலத்திற்குத் தேவையான ஆடைகளை எடுத்துக் கொள்வது நல்லது. உங்கள் தேவைக்கு அதிகமாக ஒன்று இரண்டு ஆடைகள் மற்றும் உள்ளாடைகளை எடுத்துக்கொள்வது, உங்களுக்கு உதவியாக இருக்கலாம்.
10. மருந்துகள்: அனைவருக்கும் ஏதாவது ஒரு வகையில் சில உடல் உபாதைகள் ஏற்படுவது இயல்பு. இதை எப்போதும் எதிர் பார்த்து இருக்க முடியாது. ஆனால் நீங்கள் முன்னெச்சரிக்கையாக இருப்பது மிகவும் நல்லது. அந்த வகையில், சில அடிப்படை மருந்துகள் மற்றும் மூலிகைகளை உங்களுடன் எடுத்து செல்வது நல்லது. இது உங்களுக்கு மட்டுமல்லாது, உங்களுடன் தங்கி இருக்கும் பிற மாணவர்களுக்கும் (students) ஒரு சமயத்தில் உதவலாம்.
pixabay
12. விளையாட்டு பொருட்கள்: உங்களுக்கு விளையாட்டில் அதிகம் ஆர்வம் உள்ளது என்றால், மறக்காமல் நீங்கள் விரும்பும் விளையாட்டிற்குத் தேவையான பொருட்கள் மற்றும் கருவிகளை உடன் எடுத்து செல்லுங்கள். இது நீங்கள் ஓய்வில் இருக்கும் நேரத்திலும், விளையாட்டு நேரத்திலும் பயன்படுத்த உதவியாக இருக்கும். மேலும் இந்த விளையாட்டு கருவிகள் உங்களுக்கு உற்சாகம் தரும் வகையிலும் பயன்படும்.
முகத்தின் சுருக்கத்தை விரட்டும் முல்தானி மெட்டி!.. எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் தெரியுமா?
13. இதர பொருட்கள்: மேலே குறிப்பிடப்பட்டுள்ள பொருட்கள் மட்டுமல்லாது, உங்களுக்கு மேலும் சில பொருட்கள் பயனுள்ளதாக இருக்கும். அவை:
- குடை
- பை
- பூட்டு சாவி
- வானொலி பெட்டி – ரேடியோ
- கதை புத்தகங்கள்
- டிஸ்யு பேபர்கள் மேலும் பல
இந்த அனைத்து பொருட்களும், பொதுவாக ஒருவர் கல்லூரிக்கு முதன் முதலில் செல்லும் போது தன்னுடன் எடுத்து செல்ல வேண்டிய பொருட்கள். ஆனால், இவை மட்டுமல்லாது, ஒவ்வொரு தனி நபருக்கென்றே சில குறிப்பிடத்தக்க பொருட்களின் தேவைகள் இருக்கும். அந்த வகையில், நீங்கள் உங்களுக்குத் தேவைப்படும் சில பொருட்களை உங்களுடன் மறக்காமல் எடுத்து செல்லுங்கள். இது உங்கள் சௌகரியத்தை மேலும் தங்கும் விடுதியில் அதிகரிக்க உதவும்.
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.