பிக் பாஸ் இல்லத்தில் நடக்கும் குழப்பங்கள் : வனிதா மற்றும் மீரா தொடர்வதில் சந்தேகம்?

பிக் பாஸ் இல்லத்தில் நடக்கும் குழப்பங்கள் : வனிதா மற்றும் மீரா தொடர்வதில் சந்தேகம்?

பிக் பாஸ் (biggboss) நிகழ்ச்சி மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. கடந்த வாரம் போட்டியாளர்களின் வாழ்க்கையில் நடந்த கசப்பான அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.  இதனை தொடர்ந்து தினமும் மகிழ்ச்சி, ஆரவாரம், சண்டை, சமாதானம் என செல்கிறது. முதலில் மீராவிற்கு, அபிராமிக்கு தொடங்கிய சண்டை தற்போது வனிதாவிற்கும், மதுமிதாவிற்கும் வந்து நிற்கிறது. இருவரும் ஒருவரை ஒருவர் ஷட் அப் என்று திட்டி கொண்டனர்.

youtube

அபிராமியின் கோபம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள அபிராமி, முதல் நாளில் இருந்தே ஓவராக சீன் போட்டு வருகிறார். அவரது நடவடிக்கை கொஞ்சமும் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. இந்நிலையில் திடீரென முகெனை பக்கத்தில் நிற்க வைத்துக் கொண்டு, நான் யாருக்கும் விளக்கம் கொடுக்கனும்ன்னு அவசியம் இல்ல. ஹி இஸ் மை பட்டி, ஹி இஸ் மை ஃபிரெண்ட், எவளுக்காவது பிராப்ளம் இருந்தா உங்களோட வச்சிக்கோங்க.

youtube

ஓகே வா, நான் லவ் பண்ணுனா, நான் லவ் பண்றேன்னு அவன் மூஞ்சிய பாத்து சொல்லுவேன் நான். எங்களுக்குள்ள பிரச்னை வந்தா, அத நாங்க பாத்துக்குறோம். அத சால்வ் பண்ண யாரும் வர வேண்டாம். அதுல உங்களுக்கு எதாச்சும் பிராப்ளம்ன்னா குளோஸ் யுவர் ஐஸ் அண்ட் வாக் என்றார் அபிராமி கோபமாக. இதனை பார்த்த பிக் பாஸ் ரசிகர்கள் அபிராமியை திட்டி வருகின்றனர். அபிராமி நீங்க வந்ததுலேருந்து செஞ்ச ரெண்டு வேலை காதல் மற்றும் சண்டை என்று விமர்சனம் செய்து வருகின்றனர்.

காதலில் சொதப்புவது எப்படி?

இதனை தொடர்ந்து மற்றொரு தரப்பினரான கவின், சேரன், வனிதா, முகென், ஷெரின், பாத்திமா உள்ளிட்ட அனைவரும் குழுவாக அமர்ந்து பேசி கொண்டிருந்தனர். அப்போது காதலில் சொதப்புவது எப்படி என்ற டாஸ்க் கவினுக்கு கொடுக்கப்பட்டது. அது குறித்து பேசிய கவின், இப்போ நீங்க லவ்வெல்லாம் பண்ணிட்டீங்க. ஆனா இப்போ நீங்க எஸ்கேப் ஆகனும்ன்னு ட்ரை பண்றீங்கன்னா, அவங்க உங்க மேல பழி போடுறதுக்கு முன்னாடி, நீங்க அவங்க மேல பழி போட்டுடனும் என்கிறார். 

மேலும் படிக்க - லாஸ்லியா மற்றும் திவ்யா - ஆறு வித்யாசங்கள் !

அதற்கு ரெண்டு மூணு பேர லவ் பண்ணும்போது என்ன பண்றது எட்ன்று சேரன் கேள்வி எழுப்பினார். மூணு பேரையும் ஒரே இடத்துல வச்சி லவ் பண்ணக் கூடாது என் கவின் கூற, அதற்கு மாட்டிக்கிட்டியா எங்கயாவது என்று சேரன் புன்னகைத்தார். அநேகமா இந்த வீட்ல எதாச்சும் மாட்டும்ன்னு நினைக்கிறேன் என்று கவின் சொல்ல அனைவரும் சிரித்தனர்.

youtube

வெளியேறுகிறாரா வனிதா?

இதனிடையே பிக் பாஸ் (biggboss) வீட்டில் முக்கியமான பிரச்சனை அரங்கேறியது. இந்த நிகழ்ச்சியில் விஜயகுமாரின் மகள் வனிதா போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். இவர் மீது அவரது முன்னாள் கணவர், தனது மகளை திருடியதாக புகார் அளித்துள்ளார். மகள் யாரிடம் இருக்கு விரும்புகிறாரோ அவரிடம் தான் குழந்தை ஒப்படைக்கப்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வனிதாவின் மகள், அம்மாவுடன் இருப்பதற்கு தான் விருப்பம் என்று கூறியதால், குழந்தையை கவனிக்க வேண்டிய பொறுப்பு வனிதாவுக்கு ஏற்பட்டுள்ளது. 

மேலும் படிக்க -  வெறும் ரூ.250 செலவில் மழை நீர் சேகரிப்பு மையம் : சென்னை கிருஷ்ணாவின் அசத்தல் ஐடியா!

பிக்பாஸ் (biggboss) வீட்டில் இருந்து மகளை யார் கவனிப்பது என்று ராஜன் கேள்வி எழுப்ப. தான் வீட்டை விட்டு வெளியே வர தயார் என்று வனிதா கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பிக்பாஸ் வீட்டிற்குள் வனிதா தொடரமாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஏற்கனவே வெளியில் பிரச்சினைகளோடு பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த மீரா, அழகிப் போட்டி நடத்தி மோசடி செய்ததாக புகார் உள்ளது. தற்போது அவருக்கு சம்மனும் அளிக்கப்பட்டுள்ளது. வரும் 19ம் தேதி அவர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் மீரா வீட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் வனிதா மற்றும் மீரா பிக் பாஸ் இல்லத்தில் தொடர்வார்களா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.

youtube

இன்றைய ப்ரோமோ

பிக் பாஸ் (biggboss) இல்லத்தில் இவ்வளவு பிரச்சனைகள் இருந்து வரும் நிலையில், இன்று காலை கலகலப்பான ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் ஆண்கள் பெண் போட்டியாளர்கள் போன்று உடை அணிந்து நடிக்கின்றனர். கவின் உள்ளிட்ட பிக் பாஸ் வீட்டில் உள்ள ஆண் போட்டியாளர்கள் அனைவரும் பெண் போட்டியாளர்கள் போன்று உடை அணிந்து அவர்கள் போன்று காச்சு மூச்சென்று சண்டை போடுகின்றனர். 

கவின் இது தான் சான்ஸ் என்று குட்டியாக ஒரு கவுன் அணிந்து கொண்டு நான் தமிழ் பொண்ணு என்று சேட்டை செய்கிறார். சாண்டி பெண் வேடத்தில் மோகன் வைத்யாவும், சாண்டி மாஸ்டரும் செம காமெடியாக உள்ளனர். நம்ம சித்தப்பு சரவணனோ எதற்கு வம்பு என்று ஒரு துண்டை மட்டும் எடுத்து மாராப்பு போன்று போட்டு கெட்டப்பை மாற்றியுள்ளார். முகென் ராவை பார்த்தாலே சிரிப்பு வருகிறது. இந்த வார இறுதியில் எந்த பஞ்சாயத்தும் இல்லாமல் இருக்க பிரச்சனைகளை காமெடியாக்கிவிட்டார் பிக் பாஸ் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

          மேலும் படிக்க - பிக் பாஸின் முதல் நாமினேஷன் அறிவிப்பு வெளியானது : வெளியேறப்போகும் போட்டியாளர்கள் யார்?

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.