கிராமத்து மண் மனம் வீசும் பிக் பாஸ் இல்லம் : தர்ஷனுக்கு அம்மாவான மீரா!

கிராமத்து மண் மனம் வீசும் பிக் பாஸ் இல்லம் : தர்ஷனுக்கு அம்மாவான மீரா!

பிக் பாஸ் ஆரம்ப நாட்களில் வனிதாவின் அட்டகாசங்களை காட்டி நிகழ்ச்சியை ஒளிபரப்பினார்கள். தற்பொழுது அவர் வெளியேறியுள்ளதால் கவினின் முக்கோண காதல் காதல் கதையை காட்டி வந்தார். ஒரு வழியாக இந்த பிரச்னை கடந்த வார இறுதியில் முடிவுக்கு வந்தது. இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து மோகன் வைத்தியா எலிமினேட் ஆனார். இதனை தொடர்ந்து சற்று சலிப்பாக போன நிகழ்ச்சியை குதூகலமாக்க புதிய டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதன்படி நேற்றைய டாஸ்க்கில் ஹவுஸ் மேட்ஸ் இரண்டாக பிரிந்து கிராமத்து மண் மனம் வீசும் வகையில் பாம்புப்பட்டி மற்றும் கீரிப்பட்டி என இரு ஊராக பிரிந்து அடித்த சேட்டைகள்  பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. 

மீராவால் ரணகளமான இல்லம்

அனைவரும் கிராமத்து மக்கள் போல் பாரம்பரிய உடையான சேலை, வேஷ்டி, சட்டை அணிந்திருந்தனர். அவர்களை நேற்று பிக் பாஸே இணைத்து வைத்தது தான் ஹைலைடான விஷயம். அதிலும் மீராவை பழிவாங்க தர்ஷனுக்கு அம்மாவாக போட்டதும், இது தான் சாக்கு என மீரா போட்ட ஆட்டம் கொஞ்ச நஞ்சம் இல்லை. குறிப்பாக தர்ஷனை ஊட்டி விடுமாறு கூறியதும், அவருக்கு மீரா ஊட்டி விடுவதும் கொஞ்சம் ஓவராக தான் செல்கின்றாரோ என என்ன வைக்கிறது. இதற்கு இடையே செரினை உரசிய சாண்டியை தர்ஷன் வறுத்து எடுத்தார்.

மீராவை இழுத்து அருகே அமர்த்திய சரவணன்.. கொதிக்கும் சேரன்.. இன்றைய Bigg Boss !

மீராவிற்க்காக குரல் கொடுப்பதும், மீராவை ஆயா என சாண்டி கலாய்ப்பதும் என உற்சாகமாக டாஸ்க் சென்றது. மேலும் லாஸ்லியாவை ஒன்றை காலி நடக்க வைத்தனர். மீரா, சரவணன் உடன் கூட்டணி கூட்டணி சேர்ந்து கல்யாணம் செய்து கொள்வதும், கையை பிடித்து இழுத்த சாண்டியை கல்யாணம் செய்து கொள்ள மீரா கேட்டது போன்ற செயல்களால் பார்வையாளர்கள் எரிச்சல் அடைந்தனர். வழக்கம் போல் மீரா மற்றும் சேரன் இடையே பிரச்சனை ஏற்பட்டது. 

ஷெரின் நிறம் குறித்து காமெடியாக பேசிய சேரனை அவர் தப்பாகத்தான் பேசினார் என்று பிரளயத்தை கிளப்ப பார்த்தார் மீரா. இதனால் கோபமடைந்த சேரன், உங்களிடம் நான் பேசவில்லை என் பேச்சுக்கு வராதீர்கள் என்று சத்தமாக கூறினார். அப்போது பதிலுக்கு பதில் பேசிய மீரா, கத்தாதீங்க டீசென்ட்டா பேசுங்க என்றார். இவர்களின் சண்டை ஒரு புறம் இருக்க, மற்றொரு பக்கம் சாண்டியின் செய்த வேடிக்கையான செயல்கள் என்று நேற்றைய ஏபிசோட்டை கலகலப்பாகவே கொண்டு சென்றது.

லாஸ்லியாவை வறுத்தெடுகும் நெட்டிசன்கள்

இதனிடையே பிக் பாஸ் போட்டியாளர்கள் லாஸ்லியாவை வறுத்தெடுத்து வருகின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் நாளில் இருந்தே ரசிகர்களை மிகவும் கவர்ந்தவர் லாஸ்லியா. ரசிகர்களையும் தாண்டி சக போட்டியாளர்களுக்கும் இவர் செல்லப்பிள்ளையாக இருந்து வருகிறார். பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 24 மணி நேரத்திற்கு உள்ளாகவே சமூக வலைதளத்தில் இவருக்கு பல்வேறு ஆர்மிக்களை ரசிகர்கள் ஆரம்பித்துவிட்டனர். 

கவின் - சாக்ஷி காதல் முறிவு, அபிராமியை எச்சரித்த முகென்... பிக் பாஸ் சுவாரஸ்யங்கள்!

ஆனால் கடந்த சில நாட்களாகவே லாஸ்லியாவிற்கு பல்வேறு எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் முகேன், லாஸ்லியவை வடிவேலுவுடன் ஒப்பிட்டு பேசியது லாஸ்லியாவிற்கு பிடிக்கவில்லை. இதனால் லாஸ்லியா மற்றவர்களிடம் எல்லாம் தன்னை ஒப்பிட்டு மட்டம் தட்ட வேண்டாம் என்று குறிப்பிட்டிருந்தார். இதனால் வடிவேலுவின் ரசிகர்கள் பலரும் லாஸ்லியாவை கழுவி ஊற்றி வருன்றனர். 

லாஸ்லியாவை எல்லாம் வடிவேலுடன் ஒப்பிட்டு பேச வேண்டாம் என்றும், முகென், உன்னை சாய் பல்லவி போல இருக்கிறாய் என்று சொல்லும் பல்லவி ஏற்றுக்கொண்ட நீ வடிவேலுவுடன் ஒப்பிட்டு பேசும் போது மட்டும் ஏன் மட்டம் தட்டுவதாக கூறுகிறாய் என்றெல்லாம் லாஸ்லியாவை ரசிகர்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். இந்த நிலையில் இன்றைக்கான புரோமோ வெளியாகியுள்ளது. அதில் வழக்கம் போல் மீரா தனது வேலை ஆரம்பித்துவிட்டார்.

இந்த முறை மதுமிதாவிடம் வம்பு வளர்த்துள்ளார். இன்று வெளியாகியுள்ள ப்ரோமோவில் மீரா, மைனர் சரவணனிடம் சென்று 'இந்த ஊர் தலைவியிடம் சொல்வது ஒரு உபயோகமும் இல்ல. நீங்க எல்லாம் எப்படி சோறு சாப்பிடுறீங்க' னு பார்க்கிறேன் . சோறுக்கு இங்க தானே வரணும்' என்று கூறுகிறார். இவரின் இந்த பேச்சிற்கு பதிலடிக்கும் கொடுக்கும் விதத்தில் பேசும் மதுமிதா, 'உனக்கே இவ்ளோ ஆணவம் இருக்கும் போது எனக்கு எவளோ இருக்கணும். ஊர மதிக்காத உனக்கே இவளோ திமிர்னா எனக்கு எவ்ளோ இருக்கும் என்று அவருக்கு சரிசமாக பேசுகிறார். எனவே இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் சுவாரஸ்யத்திற்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கலாம். 

மாடர்ன் உடையில் மனதை கரைய வைக்கும் ப்ரியா பவானி சங்கர் : லேட்டஸ்ட் புகைப்பட தொகுப்பு!

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.