logo
ADVERTISEMENT
home / Celebrity Life
கவர்ச்சி உடையில் ஹாட் புகைப்படங்களை வெளியிட்ட நடிகை ராசி கண்ணா: ரசிகர்கள் விமர்சனம்!

கவர்ச்சி உடையில் ஹாட் புகைப்படங்களை வெளியிட்ட நடிகை ராசி கண்ணா: ரசிகர்கள் விமர்சனம்!

தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டுமல்லாமல் இந்திய சினிமாவின் ரசிகர்கள் அனைவரையும் கவரும் தன்மையுள்ள நடிகையாக வலம் வருகிறார் நடிகை ராசி கண்ணா (rasi khanna). பிரபல இந்திய நடிகையான இவர், 2013 ம் ஆண்டு இந்தியில் வெளியான மெட்ராஸ் கஃபே திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். பின்னர் 2014 ம் ஆண்டு மனம் திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து தெலுங்கில் அறிமுகமானார். இதனை தொடர்ந்து கதாநாயகியாக ஊஹாலு குடகுசலதே என்னும் தெலுங்கு திரைப்படத்தில் நடித்து பிரபலமானார். 

twitter

இத்திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சிறந்த அறிமுக நடிகைக்கான சைமா விருதை ராசி கண்ணா பெற்றது குறிப்பிடத்தக்கது. 2017 ம் ஆண்டு வில்லன் திரைப்படத்தின் மூலம் மலையாளத் திரையிலும் நடித்துள்ளார். இமைக்கா நொடிகள் திரைப்படத்தில் நடிகர் அதர்வாவிற்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இந்த படம் ஹிட் ஆனது. 

ADVERTISEMENT

நுனி முடி பிளவு பிரச்னையை தவிர்க்க பின்பற்ற வேண்டிய எளிய வழிமுறைகள்!

இதனை தொடர்ந்து அடங்க மறு, அயோக்யா ஆகிய வெற்றிப்படங்களில் நடித்தார். தற்போது விஜய் சந்தர் இயக்கும் சங்கத்தமிழன் படத்தில் விஜய்சேதுபதி ஜோடியாக நடித்து வருகிறார். இதேபோல் நடிகர் நாக சைதன்யா ஜோடியாக வெங்கி மாமா என்கிற தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார். மேலும் விஜய் தேவரகொண்டா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தற்போது உள்ள சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு மட்டுமே அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன. வளர்ந்து வரும் புது நடிகைகளுக்கு அவ்வளவாக வாய்ப்பு வருவதில்லை. அப்படியே வந்தாலும் அது ஒரு சில படங்களோடு நின்றுவிடுகின்றன. அதுபோலத்தான் தெலுங்கில் சில படங்களில் நடித்திருக்கும் நடிகை ராசி கண்ணா (rasi khanna) தற்போது தமிழ் பட வாய்ப்புகளுக்கு வலை வீசியிருக்கிறார். அதற்கு பலனாக அவர் பல்வேறு திரைப்படங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ADVERTISEMENT

twitter

இதுகுறித்து சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நடிகை ராசி கண்ணா, தமிழில் நான் இரண்டு படங்களில் நடித்து வருகிறேன். இதைத்தவிர தெலுங்கு மற்றும் பிற மொழிகளிலும் பிஸியாக நடித்து வருகிறேன். நான் பிஸியாக இருப்பதால் எனது நண்பர்கள். குடும்பத்தினருடன் கூட நேரம் செலவிட முடியவில்லை என்றார். இடையில் சில காலம் ஓய்வில் இருந்தேன். தற்போது முழுவேகத்தில் நடிக்க வந்துவிட்டேன் என தெரிவித்தார். மேலும் பிரபல நடிகைகள் மட்டுமே அடுத்தடுத்து பட வாய்ப்பு பெறுகின்றனர்.

உலக அறிவியலையே தனது கால் பெருவிரலில் கட்டி வைத்த நடராஜர்- சிதம்பரம் கோயில் ரகசியம் அறிவோம்

வளர்ந்து வரும் நடிகைளுக்கு வாய்ப்பு வருவது கஷ்டம்தான். பிற மொழிகளில் நடிப்பது கடினம், இருப்பினும் அனைத்தையும் சவாலாக எடுத்துக்கொண்டு நடிக்கிறேன் என அவர் சந்தோசமாக கூறினார். படப்பிடிப்பு தளத்தில் நான் தமிழில் பேச முயற்சித்துவருகிறேன். விரைவில் தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும். மொழி தெரிந்தால் மட்டுமே என் வசனங்களை நான் முழுமையாக புரிந்து பேசமுடியும். இதில் நான் மிகுந்த தீவிரம் காட்டிவருகிறேன். ஏனென்றால் என் பணியை நான் மிகவும் மதிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

twitter

மேலும் திருமணம் ஆன நடிகர்களில் யாருக்கு திருமணம் ஆகாமல் இருந்தால் திருமணம் செய்து கொள்வீர்கள் என கேள்வி கேட்கப்பட்டது இதற்கு பதிலளித்த ராசி கண்ணா நடிகர் சூரியா என குறிப்பிட்டார் ஜோதிகா மேடத்தை சூர்யா பார்த்து கொள்ளும் விதத்தை விரும்புவதாகவும் இவை அனைத்தையும் வைத்து பார்க்கும் போது சூர்யாவை தான் திருமணம் செய்து கொள்வேன் என கூறினார்.

 

ADVERTISEMENT

இந்நிலையில் ராசி கண்ணா சில ஹாட்டான போட்டோஷூட் புகைப்படங்களை அவரது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் வைரல் ஆகிவருகின்றது. அதில் ராசி கண்ணா (rasi khanna) அணிந்திருந்த உடையை பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.  உடை அணிவது அவரவர் விருப்பம் என அவருக்கு ஆதரவாகவும் சில ரசிகர்கள் பேசி வருகின்றனர். முன்னதாக அயோக்கியா படத்தின் ப்ரோமோஷனில் நடத்திய புகைப்படங்களை அவர் ஷேர் செய்திருந்தார். அந்த படங்களும் ரசிகர்களிடையே வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது.

சமயலறையில் கவனம் தேவை! சுகாதார மற்றும் ஆரோக்கிய கிச்சனுக்கான டிப்ஸ்கள்…….

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.

ADVERTISEMENT
01 Jul 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT