சமயலறையில் கவனம் தேவை! சுகாதார மற்றும் ஆரோக்கிய கிச்சனுக்கான டிப்ஸ்கள்.......

சமயலறையில் கவனம் தேவை! சுகாதார மற்றும் ஆரோக்கிய கிச்சனுக்கான டிப்ஸ்கள்.......

பெண்கள் பெரும்பாலான நேரத்தை சமயலறையில் செலவழித்து வருகின்றனர். நமது குடும்பத்தின் சுத்தம் சமயலறையில் இருந்து தொடங்குகிறது. சமயலறை (kitchen) சுத்தமாக இல்லையென்றால் பல்வேறு தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. தற்போது வீடு கட்டுமான பணியின்போதே மாடுலர் கிச்சன் கட்டப்படுகின்றன. சமையல் மேடை, பிளேவுட் அலமாரிகள் உள்ளிட்ட வசதிகள் வீடு கட்டும் போதே ஏற்படுத்தப்படுகிறது. கிச்சனை சுகாதாரமாக வைத்துக் கொள்வதற்கான சிறந்த ஆலோசனைகளை காணலாம்.....

pexels, pixabay

 • சமையல் செய்து முடித்தவுடன் சமையலறையை (kitchen) சுத்தமாக்குவதை வழக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும். 

அம்மாவாக, பெண்ணாக, நடிகையாக தற்போது திருப்தியாக இருக்கிறேன் : ஜோதிகா உருக்கம்!

 • சமையல் செய்யும் போது காட்டன்(cotton dress) ஆடைகளை உடுத்த வேண்டும். மேலும் முடியை கிளிப் போட்டு கொண்டு சமைப்பதால் சாப்பாட்டில் முடி உதிர்வதை தவிர்க்கலாம் .
 • வாரம் ஒரு முறையேனும் அலமாரிகளில் வைத்துள்ள பொருட்களை எடுத்து சுத்தம் செய்து வைக்க வேண்டும்.
 • சமயலை எண்ணெய் பிசுக்குடன் இருப்பதை தவிர்க்க, அதெற்கென உள்ள சலவை தூள்கள் பயன்படுத்தி சுத்தம் செய்ய வேண்டும். தேவையற்ற சாமான்கள் சமயலறையில்  இருந்தால் அவற்றை அப்பறப்படுத்த வேண்டும்.
pexels, pixabay

 • கண்ணாடி  பொருட்களை பெரும்பாலும் தவிர்ப்பது நல்லது. கை தவறி விழும் போது அசம்பாவிதங்கள்  ஏற்பட வாய்ப்புள்ளதால் தினசரி பயன்பாட்டிற்கு கண்ணாடி பொருட்களை தவிர்க்கலாம். 
 • பிரிட்ஜை சமயலைறையில் வைக்க வேண்டாம். அதிலிருந்து கம்ப்ரசர் கேஸ் வெளி வருவதால் தீ விபத்து ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. வாரம் இரண்டு முறையாவது பிரிட்ஜை சுத்தம் செய்வது நல்லது. 
 • சமயலறையில் டப்பாக்களில் வைக்கப்படும் பருப்பு உள்ளிட்ட பொருட்களை வெயிலில் காய வைத்து வைக்க வேண்டும். இதனால் விரைவில் பூச்சி வருவதை தடுக்கலாம். 
 • சமயலறையில் எக்ஸாஸ்ட் ஃபேன் (Exhaust fan) பொருத்துவது அவசியமாகும். சமைக்கும் போது எக்ஸாஸ்ட் ஃபேனை ஆன் செய்வதால் அறையின் வெப்பம் சீராக வைத்துக் கொள்ளப்படும். 

மீராவை சமாதானப்படுத்திய அபிராமி : அழுகை, மகிழ்ச்சி, சண்டை என களைகட்டும் பிக் பாஸ் வீடு!

 • அதிகமான காய்கறிகளை ஒரே நேரத்தில் வாங்கி வைக்க கூடாது. தினசரி காய்கறிகளை பார்த்து அதில் வீணாகியுள்ளவற்றை எடுத்து விட வேண்டும், இல்லையென்றால் மற்ற காய்களும் அழுகும் நிலை ஏற்படும் 
 • சமையல் முடிந்த பிறகு எடுத்த பொருட்களை மீண்டும் அதே இடத்தில் வைக்க பழக வேண்டும். அப்போது தான் எதையும் தேட வேண்டிய அவசியம் ஏற்படாது. 
 • தரமான மின்சாதன பொருட்களை வாங்கி பயன்படுத்த வேண்டும். மழைக்காலங்களில் மின் இணைப்புகளை துண்டித்து வைக்க வேண்டும். 
 • சமையலறை (kitchen) எப்போதும் காற்றோட்டமாக இருக்க வேண்டும். சமைக்கும் முன்னர் அனைத்து ஜன்னல்களையும் திறந்து வைக்க வேண்டும்.  சமயலறையில் உள்ள ஜன்னல்களுக்கு திரைச்சீலைகள் பயன்படுத்துவதை தவிர்க்கலாம். 
 • அழை பேசியில் பேசிக்கொண்டே சமைக்க கூடாது. இதனால் கவனக்குறைவாக விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
pexels, pixabay

 • சமயலறையில் சிம்னி (chimney)  வைப்பது சிறந்த முறையாகும். சமைக்கும் போது ஏற்படும் நெடிகளையும், எண்ணெய் பிசிக்குகளையும் ஈர்த்து வைத்து கொள்ளும் தன்மை சிம்னிக்கு உள்ளது. சிம்னியில் உள்ள பில்டர்களை வாரம் ஒரு முறை வெந்நீரில் சுத்தம் செய்வது நல்லது. இரவில் பில்டர்களை வெந்நீரில் போட்டு விட்டு காலையில் சோப் கொண்டு கழுவ வேண்டும். 
 • மடித்து வைக்க கூடிய டைனிங் டேபிள் பயன்படுத்துவது நல்லது. தேவை இல்லாத போது மடித்து வைத்து கொள்ளலலாம் என்பதால் இடவசதி கிடைக்கும். 
 • கூர்மையான பொருட்களை குழந்தைகளுக்கு எட்டாத உயர்த்தில் வைக்க வேண்டும். கத்தி உள்ளிட்ட பொருட்களை ஒரே இடத்தில் வைப்பதால் கவனமாக எடுக்க முடியும்.
pexels, pixabay

 • 6 மாதங்களுக்கு ஒரு முறை சமயலறையில் (kitchen) உள்ள மின் இணைப்புகளை சரி பார்க்க வேண்டும். ஏதேனும் சிறிய அளவில் துண்டிப்பு இருந்தால் கூட அவற்றை அப்போதே சரி செய்ய வேண்டும். 

ஜென்மாஷ்டமி – கிருஷ்ண ஜெயந்தியை பற்றி தெரிந்து கொள்ள சில சுவாரசியமான தகவல்கள்!

 • சமயலறையில் எரிவாயு கசிவை கண்டறிந்து எச்சரிக்கை எழுப்பும் கருவி  (Gas Leak Detectors) பொருத்த வேண்டும். இரண்டு சிலிண்டர்கள் இருந்தால் அவற்றை அருகருகே வைப்பதை தவிர்க்க வேண்டும். எத்தகைய சமையலறையாக இருந்தாலும் அவற்றை நாம் வைத்து கொள்ளும் விதத்தில் தான் உள்ளது. தினசரி இல்லையென்றாலும் வாரம் ஒரு முறையாவது சமையலறையை சுத்தம் செய்து ஆரோக்கியமான வாழ்விற்கு வழி செய்வோம்.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.