திருமணத்தில் விரும்பம் இல்லை, சுதந்திரமாக இருக்கவே விரும்புகிறேன் : நடிகை ஓவியா அதிரடி!

திருமணத்தில் விரும்பம் இல்லை, சுதந்திரமாக இருக்கவே விரும்புகிறேன் : நடிகை ஓவியா அதிரடி!

களவாணி திரைப்படத்தில் அறிமுகமான நடிகை ஓவியா (oviya) ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றார். இதனை தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வந்த ஓவியா, பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் உண்மையாக இருந்ததன் மூலம் மக்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றார். இதனால் உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் ஓவியாவுக்கு ரசிகர்களானார்கள். அவரின் குணத்தை பார்த்து வியந்த ரசிகர்கள் அவருக்கு என தனி ஆர்மியை உருவாக்கினார்கள். நடிகைகளுக்கு முதன் முதலில் ஆர்மி என ரசிகர்கள் உருவாக்கியது ஓவியாவுக்குதான் என்பது குறிப்பிடத்தக்கது.  

twitter

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்தபோது ஆரவ்வை தீவிரமாக காதலித்தார் நடிகை ஓவியா. ஆனால் அவர் காதலை ஏற்க மறுத்ததால், தீவிர மனஉளைச்சலுக்கு ஆளான ஓவியா, பாதியிலேயே நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். அந்த போட்டியின் வெற்றியாளராக ஆரவ் தேர்வு செய்யப்பட்டார். எனினும் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய போதும் ஓவியாவுக்கு சென்ற இடங்களில் எல்லாம் அவரது ரசிகர்கள் பாச மழை பொழிந்தனர். இதையடுத்து இருவரும் நல்ல நண்பர்களா தொடர்வது என முடிவு செய்து அறிவித்தனர். 

மேலும் படிக்க - தயாரிப்பாளராக புதிய அவதாரம் எடுக்கும் நடிகை சமந்தா : திருமலையில் சாமி தரிசனம்!


தங்களுக்குள் வேறு எந்த உறவும் இல்லை என அவர்கள் தெரிவித்தனர். இதனிடையே ஓவியாவும் (oviya) , ஆரவ்வும் தாய்லாந்தின் பேங்காக் நகரில் கைக்கோர்த்தப்படி சுற்றித்திரியும் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த புகைப்படங்கள் முன்னதாக எடுக்கப்பட்டவை என்று விளக்கம் அளிக்கப்பட்டது. இதனை தொடந்து இருவரும் நண்பர்களாக இருந்து வருகின்றனர் சமீபத்தில் நடிகை ஓவியா நடிப்பில் வெளியான 90 எம்.எல்., திரைப்படம் சர்ச்சையை உண்டாக்கியது. ஏ தணிக்கை சான்றிதழுடன் வெளியான இந்த படத்தில் ஓவியாவுக்கு எதிராக பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. இதனை ஓவியா பெரிதாக கண்டுகொள்ளவில்லை ஜாலியாக சுற்றி வந்தார். 

twitter

சமீபத்தில் வித்தியாசமான உடையில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டிருந்தார் நடிகை ஓவியா. களவாணி திரைப்படம் வெளியாகி சுமார் பத்தாண்டுகளுக்குப் பிறகு, அப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயராகியுள்ளது. நடிகை ஓவியா நடித்துள்ள களவாணி 2 திரைப்படம் ஜூலை 5ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தின் பிரஸ் மீட்டில் கலந்து கொண்டு பேசிய நடிகை ஓவியா, தாம் அறிமுகமான களவாணி திரைப்படம் எனது சினிமா வாழ்க்கையில் மிகவும் முக்கியமான படம் என தெரிவித்துள்ளார். ஹெலன் நெல்சன் என்ற பெயருடன் சினிமாவுக்கு வந்த அவருக்கு ஓவியா என பெயர் சூட்டியது இயக்குநர் சற்குணம்தான் என கூறினார். 

மேலும் படிக்க - கவர்ச்சி உடையில் ஹாட் புகைப்படங்களை வெளியிட்ட நடிகை ராசி கண்ணா: ரசிகர்கள் விமர்சனம்!

twitter

அதேபோல், எனக்கு தமிழ் கற்றுக் கொத்தவர் நடிகர் விமல். இந்த படப்பிடிப்பில் ஒரு குடும்பம் போல் வேலை செய்துள்ளோம். படத்தில் விமலுக்கும் எனக்குமான கெமிஸ்ட்ரியை விட இளவரசு - சரண்யா அவர்களுக்கு கெமிஸ்ட்ரி நன்றாக வந்துள்ளது. எல்லோரும் ஒரு குடும்பம் போல் பணியாற்றியுள்ளார் என்றார் மகிழ்சியாக. 90 எம்.எல்., படத்திற்கு பிறகு நிறைய ஏ பட வாய்ப்புகள் எனக்கு வந்தது. ஆனால் நான் மறுத்துவிட்டேன். நிறைய படங்கள் பண்ண வேண்டும், நம்பர் 1 இடத்தை பிடிக்க வேண்டும் என்ற ஆசைகள் எல்லாம் இல்லை. சின்ன படமாக இருந்தாலும் நிம்மதி தந்தாலே போதுமானது என்று கூறியுள்ளார். 

பின்னர் ஓவியாவிடம் (oviya) திருமணம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு நான் திருமணம் செய்யப்போவதில்லை. ஆண் துணை தேவையில்லை. இப்படி இருப்பதே நன்றாக உள்ளது என பதில் அளித்துள்ளார். தற்போது மற்றொரு தமிழ் மற்றும் தெலுங்கு படத்தில் நடித்து வருவதாக கூறினார். இந்நிலையில் தனது டிவிட்டர் பக்கத்தில் புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் வெள்ளைக்கல் மூக்குத்தியுடனும் சிம்பிளான சிரிப்புடன் அழகாக இருக்கிறார். ஓவியாவின் இந்த புதிய புகைப்படத்திற்கு ஏராளமான ரசிகர்கள் லைக் செய்துள்ளனர். மேலும் பலர் ரீட்விட் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

       மேலும் படிக்க - காத்திருந்து பழி வாங்கிய சரவணன்.. வச்சு செய்த தர்ஷன்.. காதலில் விழுந்த கவின்.. bigg boss

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.