தயாரிப்பாளராக புதிய அவதாரம் எடுக்கும் நடிகை சமந்தா : திருமலையில் சாமி தரிசனம்!

தயாரிப்பாளராக புதிய அவதாரம் எடுக்கும் நடிகை சமந்தா : திருமலையில் சாமி தரிசனம்!

தமிழ் சினிமாவில் அதிகப்படியான ரசிகர்களை கொண்டுள்ள நடிகைகளில் ஒருவர் சமந்தா (samantha). அதர்வாவிற்கு ஜோடியாக பானா காத்தாடி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வந்தார். விஜய் சேதுபதியுடன் நடித்த சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 

twitter

இதனிடையே தெலுங்கு நடிகரான நாகர்ஜுனா மகன் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து வந்தார். பின்னர் இருவீட்டாரின் சம்மதத்துடன் இவர்களது திருமணம் விமர்சையாக நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகும் அவர் திரைப்படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் கணவர் நாக சைதன்யா உடன் இணைந்து நடித்த மஜிலி படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து, இயக்குனர் நந்தினி ரெட்டி இயக்கத்தில் உருவான ஓ பேபி என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார். 

மேலும் தகவலுக்கு - கவர்ச்சி உடையில் ஹாட் புகைப்படங்களை வெளியிட்ட நடிகை ராசி கண்ணா: ரசிகர்கள் விமர்சனம்!

இந்த படம் வரும் 5ம் தேதி திரைக்கு வர உள்ளது. அண்மையில் ஓ பேபி படத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சமந்தா சிகப்பு நிற ஆடையில் கிளாமராக வந்திருந்தார். இந்த ஆடை படு மோசமாகவும், ஆபாசமாகவும் இருந்ததாக மிகப்பெரிய சர்ச்சை கிளம்பியது. ஹாலிவுட் நாயகி போல ஏன் உடை அணிந்து வருகிறீர் என்ற கமெண்டுகள் வைரல் ஆகின. ஆனால் அதுகுறித்து அசராத சமந்தா (samantha), தொடர்ந்து கிளாமரான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்து வந்தார். 

twitter

இந்நிலையில் சமந்தா நடித்த ஓ பேபி திரைப்படம் வரும் 5ம் தேதி திரைக்கு வர உள்ளது. தமிழில் மிகவும் பிரபலமான நடிகை லட்சுமி இப்படத்தில் நடித்துள்ளார். ஓ பேபி படம் குறித்து சமந்தா கூறுகையில் சினிமாவில் வெற்றி தோல்வியை சந்தித்து இருக்கிறேன். இப்போது தரமான கதைகளை தேர்வு செய்ய வேண்டும் என்ற அக்கறை வந்துள்ளது. சினிமாவுக்கு வந்த புதிதில் கமர்ஷியல் படங்களில் நடித்தேன். 10 வருடங்கள் தாண்டிய பிறகும் ஆடல், பாடல், காதல் என்று நடித்துக்கொண்டு இருக்க முடியாது. 

மேலும் தகவலுக்கு - அம்மாவாக, பெண்ணாக, நடிகையாக தற்போது திருப்தியாக இருக்கிறேன் : ஜோதிகா உருக்கம்!

 
 
 
View this post on Instagram
 
 

🍅 @Silviatcherassi Styled @jukalker M&H @sadhnasingh1 @chakrapu.madhu 📷 @eshaangirri

A post shared by Samantha Akkineni (@samantharuthprabhuoffl) on

கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களைதான் தேர்வு செய்ய வேண்டும். சினிமாவில் கதை மிகவும் முக்கியம். எல்லா தரப்பு மக்களுக்கும் பிடித்த கதைகளில் நடிக்க வேண்டும். நான் தற்போது நடித்து வரும் 'ஓ பேபி' கதை அதுமாதிரி இருக்கும். விரைவில் படம் தயாரிக்கும் முடிவில் இருக்கிறேன் என சமந்தா (samantha) தெரிவித்துள்ளார். சமூகத்தில் பெண்கள் சமத்துவமாக வாழவேண்டும். வேலைக்கு செல்வதும், வீட்டில் இருப்பதும் அவர்கள் முடிவாக இருக்க வேண்டும். சில கணவன்மார்கள் குழந்தைகளை வளர்ப்பதிலும், சமையல் செய்வதிலும் ஈடுபடுகிறார்கள். இது வரவேற்கத்தக்க மாற்றம் என்று சமந்தா கூறினார். சமீபத்தில் கதாநாயகியை மையமாக கொண்ட யூடர்ன் திரைப்படத்தில் சமந்தா அனைவரது பாராட்டுகளையும் பெற்றார். 

twitter

இதனிடையே இப்படம் வெற்றி பெற வேண்டும்  என்பதற்காக திருப்பதி கோயிலுக்கு நடந்தே சென்று சமந்தா சாமி தரிசனம் செய்துள்ளார். சமந்தாவுடன் விஜே ரம்யாவும் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அங்கு சமந்தா மற்றும் விஜே ரம்யா இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அலிபிரியில் இருந்து திருமலை வரை நடிகை சமந்தா நடந்தே சென்றார். சமந்தா வருவதை அறிந்த அவரது ரசிகர்கள் அலிபிரியில் இருந்து அவருடன் திருமலைக்கு பாத யாத்திரையாக நடந்து சென்றனர். இரவு திருமலையில் தங்கிய சமந்தா, இன்று அதிகாலை சுப்ரபாத சேவையில் மலையப்பரை தரிசனம் செய்தார். கோயில் வளாகத்தில் இருந்த ரசிகர்கள் ஒரு சிலர், சமந்தாவோடு செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். திருப்பதி பயணம் குறித்து விஜே ரம்யா அவரது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஓ பேபி திரைப்படம் வெற்றி பெற அவர் வாழ்த்துக்கள் கூறியுள்ளார். 

மேலும் தகவலுக்கு - மும்பை வீடு.. BMW கார் .. திரையுலகை கலக்கும் வெள்ளாவி பொண்ணு.. டாப்ஸீ பன்னு !

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.