logo
ADVERTISEMENT
home / Home & Garden
உங்கள் வாழ்க்கை சிறக்க வாஸ்துவின் முக்கியத்துவம் மற்றும் குறிப்புகள்

உங்கள் வாழ்க்கை சிறக்க வாஸ்துவின் முக்கியத்துவம் மற்றும் குறிப்புகள்

வீடோ அல்லது தொழில் கூடமோ, வாஸ்து (Vastu) அங்கு வசிக்கும் நபர்களுக்கு நன்மைகளையும், வெற்றியையும் பெற ஒரு முக்கிய காரணமாக உள்ளது. இடை பட்ட காலங்களில், வாஸ்துவிற்கு(Vastu) மக்கள் முக்கியத்துவம் கொடுக்காமல், வீடுகளையும், தொழில் கூடங்களையும் கட்டினாலும், காலப் போக்கில், அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, தற்போது புதிதாக வாஸ்து அடிப்படையிலும், பழைய வீடுகளையும், அலுவலக கட்டிடங்களையும், வாஸ்து சாச்திரத்திர்க்கேர்ப்ப மாற்றி அமைத்துக் கொள்கின்றனர். இதனால் அவர்கள் நல்ல பலன் பெறுவதையும் உணருகின்றனர். இந்த வாஸ்து (Vastu) பற்றின தெளிவை பெற்ற பின், மக்கள் மதம், மொழி, வசிக்கும் மாநிலம் அல்லது நாடு என்று எந்த பாகுபாடுகளும் பார்க்காமல், தங்கள் வீட்டையும், அலுவலக கட்டிடங்களையும் வாஸ்து சாதிரத்திர்க்கேர்ப்ப வடிவமைத்து கட்டுகின்றனர்.

ஆதி காலம் முதல் வாஸ்துவிற்கு (Vastu) முக்கியத்துவம் கொடுக்கப் பட்டு வருகின்றது. இதன் அடிப்படையில் அமையும் வீடுகளும், அலுவலகங்களும், நிச்சயம் நேர்மறை பலன்களை தருகின்றது. மேலும் இது ஆரோக்கியமான மற்றும் செல்வம் நிறைந்த மகிழ்ச்சியான வாழ்க்கையையும் வாழ உதவுகின்றது. வாஸ்து சாஸ்திரத்தை பற்றி தெரிந்து கொள்ள மேலும், படியுங்கள்!

நேர்மறை சக்திகளை எப்படி அதிகப்படுத்துவது? (How To Increase Positive Forces)

வாஸ்து(Vastu) சாஸ்திரம் என்றாலே, நேர்மறை சக்திகளை அதிகப் படுத்தத் தான் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், எப்படி அதனை சரியான விதத்தில் திட்டமிடுவது என்பது முக்கியம். ஒரு நல்ல நிபுணரின் ஆலோசனை பெற்று, அதன் படி நீங்கள் உங்கள் வீட்டை வடிவமைக்கும் போது அதிகபட்ச நேர்மறை சக்திகளை உங்கள் வீட்டினுள் ஈர்க்க முடியும். இந்த வகையில், நேர்மறை சக்திகளை அதிகப் படுத்த, நீங்கள் தெரிந்து கொள்ள, உங்களுக்காக இங்கே சில குறிப்புகள்.

ADVERTISEMENT

1. தூய்மையான காற்று மற்றும் சூரிய ஒளி உங்கள் வீட்டினுள் வருவது முக்கியம். அதனால் வீட்டில் வாயிற் கதவு மற்றும் ஜன்னல்கள் காற்றையும், சூரிய ஒளியையும் வரவேற்கும் வகையில் வைக்கப் பட வேண்டும்

2. உங்கள் வீட்டின் தலை வாசலை மறைக்கும் வகையில், அல்லது உள்ளே வரவோ அல்லது வெளியே போகும் போதோ தடுப்பாக இருக்கும் வகையில் மரங்களை வளர்க்கக் கூடாது. உங்கள் தலை வாசல் முகப்பு தெளிவாக இருக்க வேண்டும்

3. உங்கள் வீட்டின் வாசலுக்கு முன் கனமாக பொருட்கள், குறிப்பாக, பாறை கற்கள், அல்லது தெருவிற்கும், வாசலுக்கும் இடையே தடையை ஏற்படுத்தும் வேறு எந்த விதமான பொருள் இருந்தாலும் அகற்றி விட வேண்டும்

4. வீட்டின் உள்ளே, கிழக்கு திசை, வடக்கு திசை மற்றும் வாட கிழக்கு திசைகளில் எந்த விதமான கனமான பொருட்களும் வைக்கக் கூடாது. குறிப்பாக வீடு கட்டும் போது பொருட்களை வைக்கும் அலமாரிகள் இந்த திசைகளில் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்

ADVERTISEMENT

5. வடகிழக்கு, மற்றும் வடமேற்கு திசைகளில் வீட்டின் தலை வாசலை அமைக்கலாம். எனினும், பிற திசைகளும், அவரவர் ராசிக்கேர்ப்ப, நிபுணரின் ஆலோசனைப் படி வைத்துக் கொள்ளலாம்  

6. விலை குறைவாக கிடைகின்றதே என்பதற்காக பழைய கட்டுமான பொருட்கள், குறிப்பாக, வீட்டின் உயரத்தை ஏற்ற பழைய இடிக்கப் பட்ட வீட்டின் செங்கல் மற்றும் மணல் உதிரிகள், பழைய கட்டுமான கம்பிகள், மின் பொருள் சாதனங்கள் என்று பயன் படுத்தக் கூடாது. அனைத்தும் புதிதாக இருப்பது மிக முக்கியம்

7. வீட்டின் முகப்பில் முட்டும் வெளியில் செல்லும் போது எதிரோ அல்லது முட்டும் வகையிலோ தூண்கள் அமைக்கக் கூடாது

8. படிக்கட்டுகளுக்கு கீழே பூஜை அறையை அமைக்கக் கூடாது. கிழக்கு திசை அல்லது வடகிழக்கு திசை பூஜை அறை அமைக்க ஏற்றதாகும்

ADVERTISEMENT

9. தலை வாசலுக்கு நேர் எதிராக சமையல் அறை இருக்கக் கூடாது

10. வீட்டின் வரவேற்ப்பறை / லிவிங் ரூம் விசாலமாகவும், அதிக நபர்கள் சௌகரியமாக அமரும் வகையிலும் அமைக்கப் பட வேண்டும்

இங்கே குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களுக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுத்து உங்கள் வீட்டை வடிவமைத்துக் கட்டினால் நிச்சயம் நேர்மறை சக்திகளை ஈர்க்க முடியும். இதனால் உங்கள் வாழ்க்கையிலும், குடும்பத்திலும் மகிழ்ச்சி மற்றும் ஒற்றுமை நிலைத்திருக்கும். மேலும் இது ஆரோக்கியமாக மற்றும் நீண்ட ஆயுளோடு வாழும் சூழலையும் உங்களுக்கு அமைத்துக் கொடுக்கும்.

வேப்பை இலையின் மருத்துவ மற்றும் அழகு குறிப்புகள்

ADVERTISEMENT

அடிப்படை வாஸ்து சாத்திரம் (Basic Vastu Shastra)

வாஸ்துவை பற்றிய சில அடிப்படை தகவல்களை தெரிந்து கொள்வது மிக முக்கியம். இது உங்களால் பெரிய அளவு மாற்றங்களை உங்கள் வீடுகளில் அல்லது தொழில் செய்யும் இடங்களில் செய்ய முடியவில்லை என்றாலும், அடிப்படை மற்றும் சில எளிமையான மாற்றங்களை செய்து, ஓரளவிர்க்காயினும் பலனை பெற உதவுகின்றது. இந்த அடிப்படையில், உங்களுக்காக சில வாஸ்து(Vastu) சாத்திரம் பற்றின தகவல்கள் இங்கே


• உங்கள் வீடு அமைந்திருக்கும் திசை மற்றும் அறைகள் அமைந்திருக்கும் திசை நல்ல சக்த்திகளை வீட்டினுள் கொண்டு வர உதவும்.

• உங்கள் கட்டிடத்தை கட்ட திட்டமிடும் போது அது விசாலமாகவும், இயற்க்கை வெளிச்சம் வீட்டினுள், குறிப்பாக அனைத்து அறைகளுக்குள்ளும் வரும் வகையில் வடிவமைக்க வேண்டும்.

• ஒரு அறை மற்றும் மொத்த வீட்டின் அளவு வாஸ்து(Vastu) சாத்திரத்தில் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றது. ஒரு அறையின் நீளம், அகலம் மற்றும் உயரம், நல்ல சக்த்திகளை ஈர்க்க உதவுகின்றது.

ADVERTISEMENT

• ஒரு வீட்டின் அஸ்திவாரம், காலம், மேல் தலம், கூரை மற்றும் பிற பாகங்கள் சரியான வகையில் வடிவமைக்கப் பட்டிருக்க வேண்டும்.

• இவை மட்டுமல்லாமல் வீட்டின் வெளிப்புற தோற்றம் அழகாகவும், லட்சணம் பொருந்தியதாகவும் இருக்க வேண்டும்.

• அது போன்றே, வீட்டின் உள் புறம், விசாலமாகவும், உள்ளே வரும் போது ரம்மியமான ஒரு உணர்வைத் தர வேண்டும்.

ADVERTISEMENT

எப்படி வாஸ்து சாஸ்திரத்தை எளிமை படுத்தி உங்கள் வீட்டை அமைப்பது? (How To Simplify Vastu Shastra And Build Your House)

நாம் எண்ணுவது போல அனைத்து வீடுகளிலும் வாஸ்து(Vastu) சாஸ்திரப் படி மாற்றி அமைத்து விட முடியாது. மேலும் இனி புதிதாக கட்டப் போகும் கட்டிடமாக இருந்தாலும், நூறு சதவிதம் வாஸ்துவை பின்பற்றி கட்ட முடியும் என்றால், அதுவும், கேள்விக் குறிதான். அப்படியே நீங்கள் செய்ய எண்ணினாலும், அதற்கு பல விடயங்கள் சாதகமாக இருக்க வேண்டும். ஒரு சில சமயங்களில், நீங்கள் எண்ணிய வாஸ்துவை கடைபிடிப்பது கடினமாகி விடலாம். எனினும், ஒரு சில எளிய வாஸ்து(Vastu) சாஸ்திரங்களை பின் பற்றி உங்கள் வீட்டை நீங்கள் சிறப்பாக அமைத்துக் கொள்ள முடியும். அப்படி உங்களுக்கு உதவ, இங்கே சில குறிப்புகள்

1. அறையை வடிவமைத்தல் (Designing The Room)

ஒரு அறையை நீங்கள் எப்படி வடிவமைகின்றீர்கள் என்பதற்கு ஏற்ற வாறு உங்களுக்கு கிடைக்கும் பலன்களும் இருக்கும். பொதுவாக, அனைத்து அறைகளும், விசாலமாகவும், உங்களுக்கு பயன் படுத்த சௌகரியமாகவும் இருக்க வேண்டும். போதுமான எண்ணிக்கைகளில் ஜன்னல்கள் வைத்து கட்டுவது முக்கியம். மேலும் அது அறையினுள் போதுமான இயற்க்கை வெளிச்சமும், காற்றும் வருமாறு இருக்க வேண்டும்.  

2. வீட்டின் தலை வாசல் இருக்க வேண்டிய திசை (Direction Of The Head Of The House)

ஒரு வீட்டின் தலை வாசல் இருக்க வேண்டிய திசை, அந்த வீட்டில் வசிப்பவர்களுக்கு வெற்றியையும், செல்வத்தையும் பெற்றுத் தர உதவும். பொதுவாக வீட்டின் தலை வாசல் கிழக்கு, வடக்கு, வடகிழக்கு, மற்றும் வடமேற்கில் அமைக்க வேண்டும். அப்படி அமைக்கும் போது நேர்மறை சக்திகள் அதிகம் ஈர்க்கப் படுகின்றது.

ADVERTISEMENT

3. சுவற்றின் வண்ணம் (Color Of The Wall)

ஒரு வீட்டிற்கு நீங்கள் பூசும் வண்ணம் வாஸ்து(Vastu) சாஸ்திரத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றது. அதன் அடிப்படையில், நீங்கள் சரியான வண்ணத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். வெளிச்சத்தை அதிகப் படுத்தக் கூடிய வெளிர் நிற வண்ணங்களை அதிகம் பயன் படுத்துவது நல்லது. அது ஒரு நல்ல தோற்றத்தை தருவதோடு, உள்ளே ஊடுருவும் சூரிய வெளிச்சத்தை இரட்டிப்பாக்கி உள்ளே பிரகாசமாக வைத்துக் கொள்ள உதவும். வெள்ளை ஒரு குறிப்பிடத்தக்க வண்ணமாக வாஸ்து(Vastu) சாஸ்திரத்தில் சுவருகளுக்கு பூச கருதப் படுகின்றது.

4. செவ்வக அல்லது சதுர அறைகள் (Rectangular 0r Square Rooms)

வீட்டின் அறைகள், செவ்வகமாக இருக்க வேண்டுமா அல்லது சதுரமாக இருக்க வேண்டுமா என்று பல கேள்விகள் இருக்கலாம். வாஸ்து(Vastu) அடிப்படையில், இவ்விரண்டு வடிவங்களும் பரிந்துரைக்கப் படுகின்றது. இந்த வடிவங்கள் பாதுகாப்பானதாகவும், நிலையானதாகவும் இருக்கும் என்று கருதப் படுகின்றது. எனினும், அதே சமயம் வட்ட வடிவிலான அறைகள் அதிக இடத்தை பிடித்துக் கொள்வதோடு, பயன் பாட்டையும் குறைகின்றது.

5. எங்கு நீர் தேக்கம் அமைக்கப் பட வேண்டும் (Where To Store Water)

அனைத்து வீடுகளிலும், கிணறு, ஆழ்துளைக் கிணறு என்று ஏதாவது ஒரு வகையில் நீர் தேக்கங்கள் இருக்கும். அப்படி உங்கள் வீட்டில் நீங்கள் திட்டமிடும் நீர் தேக்கம் வடகிழக்கு திசையில் இருக்க வேண்டும். குறிப்பாக தண்ணீர் தொட்டி, ஆழ்துளை கிணறு என்று வடகிழக்கு திசையில் அமைக்க வேண்டும்.

6. காற்று வரும் திசை (Wind Direction)

உங்கள் வீட்டை வடிவமைக்கும் போது காற்று உள்ளே வரும் திசைக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அப்படி செய்தால், சுத்தமான காற்றின் சுழற்சி தொடர்ந்து இருக்கும். இதனால் வீட்டில் வசிப்பவர்களுக்கு நல்ல ஆரோக்கியம் கிடைக்கும், ஆயுளும் நீளும். காற்றின் சுழற்சியை அதிகப் படுத்த உயரமான மேல் கூரை அமைக்க வேண்டும், அனைத்து சுவருகளிலும், முடிந்த வரை ஜன்னல்கள் நல்ல காற்று வரும் படி வடிவமைக்க பட வேண்டும், இதனால் வீட்டினுள் எப்போது குளிர்ச்சியாகவும் இருக்கும்.

ADVERTISEMENT

அமைதியான வாழ்க்கை வாழ வாஸ்துவின் முக்கியத்துவம் (Importance Of Vastu)

வாஸ்துவின்(Vastu) முக்கியத்துவத்தை யாராலும் மறுக்க முடியாது. தொழில்நுட்பத்தில் வளர்ந்து நிற்கும் பல முன்னணி நாடுகளும், இன்று நம் வாஸ்து(Vastu) கலாசாரத்தை கண்டு வியகின்றனர். மேலும் அதனை பின் பற்றி தங்களது வீடுகள் மற்றும் அலுவலகங்களை அமைக்க முயற்சி செய்கின்றனர். இப்படி இருக்கும் போது, வாஸ்து(Vastu) சாஸ்திரம் நிச்சயம் உங்கள் வாழ்க்கையில் சில நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. நீங்கள் அமைதியான வாழ்க்கை வாழ வாஸ்து எவ்வளவு முக்கியம் என்பதை இங்கே காணலாம். மேலும் படியுங்கள்.

1. செல்வங்களை ஈர்க்க (Attract Wealth)

செல்வம் இன்றைய பொருள்சார்ந்த உலகத்தில் வாழ மிக முக்கியமான ஒன்று. அதனை ஒவ்வொரு மனிதரும் ஈட்ட மிகக் கடினமாக உழைகின்றனர். எனினும், அனைவருடனும் அந்த செல்வம் தங்கி விடும் என்று சொல்ல முடியாது. இதற்கு வாஸ்துவும் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றது. உங்கள் பண வாரத்தில் அதீத முன்னேற்றம் ஏற்பட, வாஸ்து(Vastu) சாஸ்திர அடிப்படையில் உங்கள் வீட்டை வடிவமைத்துக் கட்ட வேண்டும்

2. பாதுகாப்பான நிதி நிலை (Secure Financial Position)

என்னதான் ஒருவர் பணத்தை ஈட்டினாலும், அதனை பாதுகாத்து வைத்தால் மட்டுமே தான் விரும்பிய நல்ல வாழ்க்கையை வாழ்வதோடு, இறுதி வரையிலும் ஒரு பாதுகாப்பான சூழலை அமைத்துக் கொள்ள முடியும். இந்த வகையில், உங்கள் வீட்டின் வாஸ்துவும் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றது. வாஸ்து சாஸ்திரப் படி நீங்கள் வீட்டில் சரியான திசையில் உங்கள் பணத்தை சேமித்து வைக்கும் போது அது பாதுகாப்பாக இருக்கும்.

ADVERTISEMENT

3. புது வாய்ப்புகளை உருவாக்கும் (Create New Opportunities)

வாஸ்து(Vastu) நல்ல வாய்ப்புகளையும் சூழல்களையும் ஈர்க்கும் சக்தி கொண்டது. நீங்கள் சரியான வாஸ்து(Vastu) சாஸ்திரங்களை கடை பிடிக்கும் போது, நிச்சயம் பல நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். இதனால் உங்கள் வாழ்க்கையிலும் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

4. உறவுகளை பலப்படுத்தும் (Strengthening Relationships)

இது மிக முக்கியமான ஒன்று. ஒரு வீடு என்று வந்துவிட்டாலே அங்கு பல உறவுகள் ஒன்று கூடி வாழும். அப்படி பலர் ஒன்றாக ஒரு குடும்பமாக வாழும் போது சில கருத்துவேறுபாடுகள் ஏற்படுவது இயல்பு. எனினும், அது ஏற்படாமல் இருக்க வாஸ்து உங்களுக்கு உதவி செய்யும். சரியான வாஸ்து சாஸ்திரத்தை கடைபிடிக்கும் போது உங்கள் குடும்பத்தில் ஒற்றுமை மற்றும் மகிழ்ச்சி எப்போதும் நிலவும்.

5. மகிழ்ச்சியும் ஆனந்தமும் அதிகரிக்கும் (Happiness Will Increase)

வெளி தோற்றத்திற்கு மட்டும் மகிழ்ச்சியாக இருந்தால் போதாது. உங்கள் மனமும், ஆன்மாவும் உண்மையான மகிழ்ச்சியை பெற வேண்டும். அப்படி ஒரு நல்ல சூழலில் வாழ இந்த வாஸ்து சாஸ்திரம் உங்களுக்கு உறுதுணையாக் ஐருக்கும்.

6. ஆரோக்கியம் மற்றும் ஆயுளை அதிகரிக்கும் (Increase Health And Longevity)

ஒருவரின் வாழ்க்கையில் ஆரோக்கியமும், நீண்ட ஆயுளும் மிக முக்கியமான ஒன்று. வாஸ்து சாஸ்திர அடிப்படையில் நீங்கள் உங்கள் வீட்டை அமைக்கும் போது, நல்ல ஆரோக்கியமாக வாழ்வதற்கான சூழ தானாகவே உருவாகின்றது. இதனால் உங்கள் ஆயுளும் நீளுகின்றது.

ADVERTISEMENT

வாஸ்து சாச்திராவின் நற்பலன்கள் (Benefits Of Vastu Shastra)

ஒரு சில விதிமுறைகளை பின்பற்றி உங்கள் வீட்டை நீங்கள் வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படையில் அமைக்கும் போது உங்களைத் தேடி பல நல்ல விடயங்கள் வரத் தொடங்கும். இது உங்கள் வீட்டில் மட்டுமல்லாது உங்கள் வாழ்க்கையிலும், ஏன், கூறப்போனால் அந்த வீட்டில் இருக்கும் ஒவ்வொரு தனி நபரின் வாழ்க்கையிலும் நேர்மறை சக்திகளை அதிகரிக்கும். இதனால் அனைவரும் வெற்றி, மகிழ்ச்சி, செல்வம் மற்றும் ஆரோக்கியம் நிறைந்த வாழ்க்கையை வாழ்வார்கள்.


வாஸ்துவால் உங்களுக்கு கிடைக்கும் நல்ல பலன்களை பற்றி தெரிந்து கொண்டால், நிச்சயம் உங்கள் வீட்டை அதற்கு ஏற்றார் போல உடனே மாற்றி விடுவீர்கள். உங்களுக்காக, வாஸ்துவால் கிடைக்கும் சில நற்பலன்கள்.

ADVERTISEMENT

மழை விழும் போதெல்லாம் என்னை வந்து சேர்வாயா.. .. மழைக்கால ரொமான்ஸ் குறிப்புகள் !

1. சௌகரியம் (Comfortable)

வாஸ்துவின் ஒரு முக்கிய நோக்கம் உங்கள் வாழ்க்கையை சௌகரியமாக ஆக்குவது தான். வலி, இழப்பு என்று எதுவும் இல்லாமல், நீங்கள் ஒரு சௌகரியமான வாழ்க்கையை வாழ வாஸ்து சாஸ்திரம் உதவும்.

2. பலம் (Strength)

உங்கள் மனதையும் உடலையும் பலப்படுத்துவதே வாஸ்துவின் குறிக்கோள். அதனால் வாஸ்துவின் அடிப்படையில் உங்கள் வீட்டை அமைக்கும் போது, உங்களைத் தேடி நல்ல விடயங்கள் வரும்.

3. எளிமையாக பயன் படுத்தும் வகையில் வீடு (House Is Simple To Use)

வாஸ்து உங்களுக்குத் தேவையான நேர்மறை பலன்களைத் தருவதோடு, நீங்கள் உங்கள் குடும்பத்தினர்களுடன் சௌகரியமாகவும் வாழ உதவும். அதனால், வாஸ்து சாஸ்திர அடிப்படையில் உங்கள் வீட்டை நீங்கள் வடிவமைத்தால், நீங்கள் எளிமையாகவும் பயன் படுத்தலாம்.

ADVERTISEMENT

4. உங்கள் எண்ணம் மற்றும் மனதை பக்குவப்படுத்தும் (Refresh Your Mind)

வாஸ்து அடிப்படையில் வீட்டை அமைக்கும் போது, தானாகவே இயற்கையான காற்றும் வெளிச்சமும் உள்ளே வரும். இது உங்கள் மனம் மற்றும் உடலில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும். இதனால் உங்கள் எண்ணங்களிலும் நல்ல மாற்றங்கள் உண்டாகும். இது உங்கள் மனதை ஒரு பக்குவ நிலைக்கு கொண்டு செல்ல உதவும்.

5. அதிகப்படியான இடத்தை பயன் படுத்த உதவும் (Utilize The Excess Space)

வாஸ்துவின் மற்றுமொரு முக்கிய குறிக்கோள், உங்கள் வீட்டில் இருக்கும் இடத்தை வீணாக்காமல் அதிகப்படியாகவும் நல்ல முறையிலும் பயன் படுத்திக் கொள்ள உதவும்.

6. அழகான வடிவம் (Beautiful Space)

வாஸ்து உங்கள் வீட்டிற்கு அழகான வடிவத்தைப் பெற உதவும். இதனால் நீங்கள் சௌகரியமாக வாழ்வதோடு, அழகான வீட்டின் கட்டமைப்பையும் பெறுவீர்கள்.

7. உங்கள் திறனை அதிகரிக்கும் (Increase Your Ability)

வாஸ்து நல்ல சூழலை உங்கள் வீட்டினுள் உண்டாக்குவதால், காலப்போக்குள் அது உங்கள் மனம், ஆரோக்கியம், எண்ணங்கள் மற்றும் சிந்தனையில் நல்ல மாற்றங்களை உண்டாக்குகின்றது. இதனால் உங்கள் திறன் மற்றும் தனிநபர் ஒழுக்கமும் அதிகரிகின்றது.

ADVERTISEMENT

8. ஆன்மீக மற்றும் மனோ பலத்தை அதிகரிக்கும் (Increase The Spiritual And Mental Strength)

சரியான வாஸ்து வீட்டினுள் நல்ல சக்திகளை ஈர்க்கும். இதனால் நாளடைவில் உங்கள் மனதில் நல்ல எண்ணங்கள் உண்டாவதோடு பலமும் அதிகரிக்கும். மேலும் உங்களுக்கு ஆன்மீகத்திலும் நாட்டம் உண்டாகும். இது இயல்பாகவே நடக்கத் தொடங்கும்.

9. மன அமைதியை உண்டாக்கும் (Makes Peace Of Mind)

வாஸ்து அடிப்படையில் உங்கள் வீட்டை வடிவமைக்கும் போது, நல்ல இயற்கையான வெளிச்சம் மற்றும் காற்று உள்ளே வரும். இதனால் உங்கள் மனதில் அது நல்ல மாற்றங்களை உண்டாக்கும்.

இதனால் குடும்பத்தில் இருக்கும் அனைவரும் ஒரு நல்ல சூழலில் வாழத் தொடங்குவார்கள். இது நிச்சயம் உங்கள் மனதிற்கு அமைதியை உண்டாக்கும்.

10. குடும்பத்தினர்களுகிடையே நல்ல உறவை ஏற்படுத்தும் (Families Can Have A Good Relationship)

வாஸ்துவின் மற்றுமொரு முக்கிய குறிக்கோள், உங்கள் குடும்பத்தினர்களுக்கிடையே இருக்கும் ஒற்றுமை. சரியான விதத்தில் வாஸ்து சாஸ்திரத்தை பார்த்து உங்கள் வீட்டை அமைக்கும் போது, உங்கள் உறவுகளுக்குள்ளும் அது நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும். இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவும்.

ADVERTISEMENT

வாஸ்த்துவில் திசைகளின் முக்கியத்துவம் (Importance Of Directions In Vastu)

வாஸ்த்து என்று வந்து விட்டாலே, திசைகளுக்குத்தான் முதல் முக்கியத்துவம். இதை யாராலும் மறுக்க முடியாது. அப்படி இருக்கும் போது, சில திசைகளை பற்றின விடயங்களை பற்றி நீங்கள் தெரிந்து கொண்டால், உங்கள் வீட்டை அதற்கு ஏற்றார் போல நல்ல நிலையில் அமைத்துக் கொள்ள முடியும்.

உங்களுக்காக இங்கே திசைகளை பற்றி சில தகவல்கள்

1. கிழக்கு (East)

இது இந்திரனின் திசையாக கருதப் படுகின்றது. இந்திரன் கடவுள்களுக்கெல்லாம் அரசனாக கருதப் படுகின்றார். அவள் செல்வங்களையும், மகிழ்ச்சியையும் உங்கள் வாழ்க்கையில் கொண்டுவருவார்.

ADVERTISEMENT

2. மேற்கு (West)

இந்த திசை வருண பகவானுடைய திசையாக கருதப் படுகின்றது. அவர் மழை பொழிய அருள் புரிவார். அவர் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் நல்ல செல்வங்களையும் கொண்டுவருவார் என்று நம்பப்படுகின்றது.

3. தெற்கு (South)

இது எமனின் திசையாக கருதப் படுகின்றது. அவர் தர்மத்தை காக்கும் கடவலாகவும், கேட்ட சக்திகளை அளிப்பவராகவும் கருதப் படுகின்றார். அவர் செல்வம் மற்றும் மகிழ்ச்சியை உங்களுக்கு கொண்டுவருவார்.

4. வடக்கு (Northen)

இது குபேரனின் திசை. அவர் நல்ல செல்வங்களை உங்களுக்கு கொண்டு வருவார்.

5. தென்கிழக்கு (SouthEast)

இந்த திசை அக்னி பகவானுடையது. அவர் உங்களுக்கு நல்ல ஆரோக்கியம் மற்றும் பல நன்மைகளை கொண்டு வருவார் என்று நம்பப் படுகின்றது. நீங்கள் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ அவர் உதவி செய்வார்.

ADVERTISEMENT

6. தென்மேற்கு (Southwest)

இந்தஸ் திசை நிருதி பகவானுடையது. அவர் கெட்ட சக்திகளிடம் இருந்து உங்களை காப்பார். மேலும் நீண்ட ஆயுளோடு வாழவும் உதவி செய்வார்.

7. வடகிழக்கு (Northeast)

இது ஈசனின் திசை. இது நல்ல ஆரோக்கியம் மற்றும் வெற்றிக்கான திசையாக கருதப் படுகின்றது. அவர் உங்களுக்கு நல்ல அறிவையும், திறமைகளையும் தருவார். மேலும் உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் இன்னல்களை போக்குவார்.

8. வடமேற்கு (Northwest)

இது வாயு பகவானுடைய திசை. அவர் உங்களுக்கு நல்ல ஆரோக்கியம், பலம் மற்றும் நீண்ட ஆயுளைத் தருவார். மேலும் நல்ல நட்பு, தொழிலில் வெற்றி போன்ற நல்ல முன்னேற்றத்தை தருவார். எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பார்.

ADVERTISEMENT

புது வீடு வாங்கும் போது கவனிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்

நீங்கள் புது வீடு வாங்க அல்லது புதிதாக கட்ட முயற்சி செய்து கொண்டிருகின்றீர்கள் என்றால், நிச்சயம் வாஸ்து சாஸ்திரத்தை பற்றி சில தகவல்களை நீங்கள் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டியது முக்கியம். இது உங்கள் வீட்டை நீங்கள் விரும்பும் வகையில் வடிவமைக்க உதவுவதோடு, நேர்மறை சக்திகளையும் வீட்டினுள் அதிகம் உண்டாக்கி, அமைதியான வாழ்க்கையை வாழ உதவும். ஒரு சில விடயங்களை நீங்களே தெரிந்து கொண்டு உங்கள் வீட்டை வடிவக்கலாம். எனினும், சில முக்கிய வாஸ்து அமைப்புகளை பற்றி நீங்கள் நன்கு தெரிந்து வைத்துக் கொள்வது அவசியம். அதற்கு ஒரு நல்ல நிபுணரை நீங்கள் அணுகலாம். அழகான மற்றும் சரியான விதத்தில் உங்கள் புது வீட்டை கட்ட, இங்கே சில வாஸ்து சாஸ்திரங்கள்.


1. படுக்கை அறை வாஸ்த்து
• படுக்கை அறை எப்போதும் வீட்டின் தென்மேற்கு திசையில் இருக்க வேண்டும்
• நீங்கள் எப்போதும் தெற்கில் தலை வைத்து படுக்க வேண்டும்
• படுக்கை அறை எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். குப்பை அடைந்தார் போல இருக்கக் கூடாது


2. குழந்தைகள் அறை வாஸ்த்து
• குழந்தைகளின் அறை எப்போது வடமேற்கு திசையில் அமைக்கப் பட வேண்டும்
• சுவறுகளில் மேசை மற்றும் அலமாரிகளை ஒட்டி வைப்பது போல வடிவமைக்கக் கூடாது
• அடர்த்தியான வண்ணங்களை சுவற்றிற்கு பூசுவதை தவிர்க்க வேண்டும்
• குழந்தைகள் படிக்கும் மேசை எப்போதும் கிழக்கு திசை, வடக்கு திசை மற்றும் வடகிழக்கு திசையில் அமைக்க வேண்டும்
• கணிணி தென்மேற்கு மூலையில் இருக்க வேண்டும்


3. வரவேற்பறை வாஸ்து
• வடக்கு திசை வரவேற்ப்பறை அமைப்பதற்கு ஏற்றது
• குளிர்சாதன பெட்டி மேற்கு திசை அல்லது தென்கிழக்கு திசையில் வைக்கப் பட வேண்டும்
• சமமான அளவு நாற்காலிகள் வரவேற்ப்பறையில் இருக்க வேண்டும். சமமற்ற எண்ணிக்கையில் நாற்காலிகள் இருக்கக் கூடாது
• தெற்கு மற்றும் மேற்கு மூளைகள் நாற்காலி மற்றும் பிற உபயோக பொருட்களை வைக்க ஏற்ற திசை

ADVERTISEMENT


4. சமையலறை வாஸ்த்து
• தென்கிழக்கு அல்லது வடமேற்கு திசை சமையலறை அமைக்க ஏற்றது
• சமைக்கும் போது கிழக்கு பாரதது நின்று சமைக்க வேண்டும்
• குறுக்கு பாதை காற்றோற்றம் இருக்க வேண்டும்


5. குளியலறை வாஸ்த்து
• வடமேற்கு திசை குளியலறை அமைக்க ஏற்ற திசையாகும்
• குளியலறையில் போதுமான வெளிச்சம் மற்றும் காற்றோட்டம் இருக்க வேண்டும்
• ஏதாவது உபகரணங்கள் மற்றும் தரையில் அல்லது சுவற்றில் இருக்கும் டைல்ஸ் உடைந்திருந்தால், உடனடியாக மாற்றி விட வேண்டும்
• எப்போதும் குளியலறையை சுத்தமாகவும், தெளிவாகவும் வைத்திர்க்க வேண்டும்.

மேலும் சில குறிப்புகள்

• ஒரு வீட்டின் முகப்பு, அதாவது தலை வாசல் மிகவும் முக்கியமான ஒன்று. அதை எப்போதும் கிழக்கு பார்த்தபடி வைப்பது அதிர்ஷ்டத்தை அதிகப் படுத்தும்
• உங்கள் வீட்டின் வடக்கு திசை அடைப்புகள் கொண்டு இருக்கக் கூடாது. இந்த திசையில் விசாலமாக திறந்த வெளி இருந்தால், உங்கள் அதிர்ஷ்டத்தை அது அதிகப் படுத்தும்
• இறக்கும் எப்போதும் தெற்கில் இருந்து வடக்கு நோக்கி இருக்க வேண்டும்
• எந்த விதமான முள் செடிகளும் வீட்டில் வைக்கக் கூடாது. மேலும் கதவுகளில் இருந்து மூடும் போதோ அலல்து திறக்கும் போதோ எந்த விதமான சத்தமும் வரக்கூடாது.

உங்கள் புடவையின் தோற்றத்தை மாற்றி அமைக்க 40 சிறந்த சேலை குஞ்சங்கள் !

ADVERTISEMENT

கேள்வி பதில்கள்

1. பூஜை அறையை அமைக்க ஏற்ற திசை எது?
பூஜை அறையை அமைக்க ஏற்ற திசை வடகிழக்கு. வடக்கு அல்லது கிழக்கு திசை பார்த்து நீங்கள் கடவுளை வணங்க வேண்டும்.


2. அதிர்ஷ்டத்தை பெற என்ன செய்ய வேண்டும்?
அதிர்ஷ்டத்தை அதிகப் படுத்த தண்ணீர் தொட்டி அல்லது தண்ணீர் குடம் வைத்திருக்கும் இடத்தில் ஒரு அகல் விளக்கை ஏற்றி வைக்கலாம்.


3. படுக்கை அறையில் சாப்பிடலாமா?
பொதுவாக அப்படி செய்வது சரியல்ல. அப்படி நீங்கள் செய்ய முயற்சித்தால், அது உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும்.

ADVERTISEMENT


4. அச்சுறுத்தும் கிராபிக் படங்களை சுவற்றில் மாட்டலாமா?
அதை தவிர்ப்பது நல்லது. முடிந்த வரை அழகான, மனதிற்கு அமைதியைத் தரக் கூடிய படங்களை சுவற்றில் மாட்டுவது நல்லது.


5. எந்த வகையான செடிகளை வீட்டில் வளர்க்கலாம்?
காய் வகைகள், பூக்கள் மற்றும் ஆரோக்கியம் தரக்கூடிய செடிகளை வீட்டில் வளர்க்கலாம். குறிப்பாக துளசி, மல்லி, கற்பூரவள்ளி, வெண்டைக்காய், கத்திரிக்காய் போன்ற காய் வகைகள் என்று தேர்ந்தெடுத்து வளர்க்கலாம். எனினும் முற்கள் கொண்ட செடிகளை தவிர்ப்பது நல்லது. குறிப்பாக கற்றாளை போன்ற முற்கள் இருக்கும் செடிகளை தவிர்த்து விடலாம்.

24 Jun 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT