உலக அறிவியலை தனது கால் பெருவிரலில் கட்டி வைத்த நடராஜர்- சிதம்பரம் கோயில் ரகசியம் அறிவோம்

உலக அறிவியலை தனது கால் பெருவிரலில் கட்டி வைத்த நடராஜர்- சிதம்பரம் கோயில் ரகசியம் அறிவோம்

வரலாற்றில் அதிக ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட முக்கால் சதவிகித கோயில்கள் எல்லாமே சிவன் கோயில்கள் தான்.அதிலும் கோயில்கள் என்றாலே அது தில்லைதான் என்று பல பாடல்களில் பார்க்க முடிகிறது

சைவ திருத்தலங்களில் முதல் தலம் தில்லை நடராஜர் தலம் தான். இறைவனே மாணிக்கவாசகர் பாடல்களை எழுதிய வரலாறு கொண்டது இந்த திருத்தலம்.

மாணிக்கவாசகர் எனும் சிவபக்தனின் பாடல்களை மாணிக்க வாசகர் பாடப்பாட இறைவனே வந்து எழுதிக் கொடுத்த மிக முக்கியமான தலம் சிதம்பரம். மாணிக்கவாசகரின் இடைவிடாத பக்தி இறைவனை அசைக்க அவரே வேதியர் வடிவில் வந்து மாணிக்கவாசகரின் திருவாசகத்தை தனது இறைவிரல்களால் எழுதிக் கொடுத்து திருவாதவூரார் கூற திருச்சிற்றம்பலமுடையான் எழுதியது என்று கையெழுத்திட்டு விட்டு மறைந்து விட்டார். அதன் பின்னர்தான் வந்து எழுதியவர் இறைவன் என்பதையே மாணிக்கவாசகர் உணர்ந்தார்.

மாணிக்கவாசகரின் வரிகள் இறைவன் இதயத்தை தொட்டதாலோ என்னவோ அவர் கைப்பட எழுதிய திருவாசகம் நம் அத்தனை நெஞ்சங்களையும் அவரைப் போலவே அன்பிற்கு உருக செய்கிறது .

அறிவியலின் படி இந்த கோயில் 1000 முதல் 2000 வருடங்கள் பழமையானது என்று கூறப்படுகிறது. ஆனால் ஐயாயிரம் வருடங்களுக்கு முந்தைய திருமூலரின் பாடல்களில் இந்த தில்லை கோயில் இருக்கிறது என்றால் அது ஆய்வுகளை பற்றிய நமது பார்வைகளை கேள்விக்குறியாக்குகிறது என்றால் மிகையில்லை.

பொதுவாக சிதம்பரம் கோயில் (chidambaram temple) அதிசயமாக அறியப்படுவது.. மனித உடலை குறிப்பிடும்படி இந்த கோயில் கட்டமைக்கப்பட்டிருக்கும் விதம்தான். ஒன்பது வாயில்கள் ஒன்பது துவாரங்களை குறிப்பிடுகின்றன. ஒரு மனிதனின் சராசரி சுவாசக் கணக்கு 21600முறை. இதனை குறிப்பிடும் வகையில் சிதம்பரம் பொற்கூரையில் 21600 ஓடுகள் பொருத்தப்பட்டுள்ளன. மனித உடலின் மொத்த நாடிகள் 72000. இவை ஆணிகளாக அந்தக் கூரையில் அடிக்கப்பட்டிருக்கின்றன.

நம் உடலில் இதயம் இடப்பக்கம் இருக்கிறது. இறைவிக்கு தனது இடபாகம் தந்த இறைவனின் கருவறையும் கோயிலின் இடப்புறம் இருக்கிறது. நமசிவய எனும் ஐந்து படிகள் ஏறினால் பொன்னம்பலம் கொண்ட சிதம்பரத்தாரை தரிசிக்கலாம். இதயத்தின் நான்கு சுவர்களை போலவே அங்கே நான்கு தூண்கள் அமைக்கப்பட்டிருக்கிறது.

இப்போது இரண்டு விதமாக நாம் இங்கே யோசிக்கலாம். வரலாற்று படியே பார்த்தாலும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எந்த தொழில்நுட்பங்களும் செயல்படாத ஒரு காலத்தில் ஒரு மனிதனின் உடல் இப்படித்தான் இருக்கிறது என்பதை எப்படி கண்டறிந்தார்கள்.. இதயத்தின் நான்கு சுவர்கள் வரை detailing செய்து எப்படி இந்த கோயிலை வடிவமைத்தார்கள்.. இது எப்படி சாத்தியமானது? இப்படி யோசித்தால் இந்த கோயிலே உலக அதிசயங்களில் முதலாவதான கோயிலாக இருக்க முடியும்.

இரண்டாவது முறையாக இந்த கோயிலின் அமைப்பிலேயே நமக்கு வழிகாட்டி இருக்கிறார்கள். நமது உடலை கோயிலுடன் ஒப்பிடுங்கள் .. கோயிலை போலவே சற்று இடது புறம் இருக்கும் இதயமும் அதன் சுவர்களையும் கவனியுங்கள். நமசிவய எனும் ஐந்தெழுத்து படி ஏறினால் பொன்னம்பலத்தானை தரிசிக்கலாம் என்பது போல.. நமது ஐம்புலன்களின் உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வந்து காலடியில் படிகளாக மாற்றிக் கொண்டால் சதாஷிவம் எனும் அந்த இறைவன் நம் இதயத்துக்குள்ளே ஆனந்த நடனம் ஆடியபடி இருப்பதை அவரது தாளங்களே இதயத்தின் துடிப்பாக மாறி இருப்பதை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும் என்றால்.. இனி நம் வாழ்வை அந்த சதாஷிவன் சந்தோஷமாக பார்த்துக் கொள்வார் என்பதுதான் உண்மை.

சரி. கோயிலின் வரலாற்றிற்கு வருவோம்.. உலகெங்கும் ஒரு சாதாரண வழக்கு சொல் ஒன்று உண்டு.. அப்படி என்ன சிதம்பர ரகசியம் (secrets of chidambaram) பேசுகிறாய் என்று யாரையாவது யாராவது கேட்பதை நாம் கவனித்திருப்போம். அப்படி அந்த சிதம்பரத்தில் என்ன ரகசியம் இருக்கிறது...

பெரியவர்கள் சித்தர்கள் முனிவர்கள் இறைவன் எல்லோரும் சில விஷயங்களை ரகசியமாகவே வைத்திருக்க விரும்புவார்கள். ரகசியமாக இருக்கும்வரைதான் அதிசயமாக இருக்கும் என்பதாலும் ரகசியம் அறிந்தவர்கள் அதனை தவறாக பயன்படுத்தி ஆன்மிகத்தை வியாபாரம் செய்வார்கள் என்பதாலும் அவர்கள் அதற்கு தகுதியான ஆட்கள் அறிந்து கொள்ளும் வகையில் இதனை மறைபொருளாகவே வைத்திருப்பார்கள்.

அந்த ரகசியங்கள் எல்லாம் தகுதியான யுகத்தில் தகுதியான காலத்தில் அதனை அறிய வேண்டியவர்கள் அறியும் வண்ணம் தாமாகவே வெளிப்படும் ஒருவிதமான டைமர் (timer) செட்  செய்யப்பட்டவை என்பது நிச்சயமான உண்மை. இந்த காலம் இந்த நேரம் இவை வெளிப்பட வேண்டும் என்பது இறை சித்தமாக இருப்பதால் இப்போது இதனை வெளிப்படுத்துவதில் மனம் நிறைகிறது.

பொதுவான ரகசியம் என்பது திருச்சிற்றம்பலம் எனும் கருவறையில் நடராஜர் சிவகாமி அம்மனுக்கு ஆரத்தி காட்டியபின்னர் எந்த உருவமும் இல்லாத இடத்தில் தங்க ஆபரணங்கள் சாற்றப்பட்டிருக்கும். அங்கும் ஆரத்தி காட்டுவார்கள். இதன் தாத்பர்யம் இறைவன் வெட்டவெளியான ஆகாயவடிவிலும் இருக்கிறான் என்பதுதான்.

ஆனால் மிக ரகசியமாக பாதுகாக்கப்பட்ட விஷயம் என்பது இறைவன் நடராஜர் இடது காலை தூக்கி ஆடுகிறார். அவரது வலது கால் முயலகன் எனும் அசுரனை எழும்ப விடாமல் அழுத்தி இருக்கிறது. வலது கால் கட்டை விரல் முயலகனை அழுத்தும் அதே இடத்தில்தான் பூமியின் மிக சரியான மையம் அமைந்திருக்கிறது. ஒட்டுமொத்த உலகின் மிக சரியான மையப்புள்ளி சிதம்பரத்தில் ஆடிக் கொண்டிருக்கும் நடராஜரின் வலது பெருவிரலுக்கு நேர் கீழே அமைந்திருக்கிறது.

துல்லியமான தொழில்நுட்பங்கள் இல்லாத ஒரு காலத்தில் இப்படி இடத்தை எப்படி கோயிலாக்க முடிந்தது.. எப்படி மிக சரியாக இறைவனின் வலது பெருவிரல் பாதம் பூமியின் மையத்தில் இருக்கிறது என்பதை அறிந்தவர்கள் பாக்கியவான்கள். இதனை பல கோடி டாலர்கள் செலவழித்த பின்னர் உலக ஆன்மிக மையம் இந்த அதிசயத்தை கண்டுபிடித்து அதைப்பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கிறது!

அறிவியல் என்பதே ஏற்கனவே இருக்கும் ஒன்றில் இருந்து எதையாவது கண்டுபிடிக்கும் வரையில்தான் அதன் வேலை நடந்து கொண்டிருக்கிறது எனும்போது உலக அறிவியலாளர்கள் வியக்கும் வண்ணம் அமையப்பெற்ற சதாஷிவம் தனது ஆனந்த நடனத்தை எப்போதும் ஆட்டியபடியே இருக்கிறது. இதனை உலக அறிவியலாளர்கள் காஸ்மிக் நடனம் பிரபஞ்ச நடனம் என்கின்றனர்.

இப்படிப்பட்ட அதிசய தலமான சிதம்பரத்திற்கு நீங்கள் சென்னையில் இருந்து செல்ல வேண்டிய வழிகள் மற்றும் கோயில் நேரங்கள் இப்போது தெரிந்து கொள்ளுங்கள்

சென்னையில் இருந்து சிதம்பரம் 216கிமீ தொலைவில் இருக்கிறது. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து குறிப்பிட்ட கால இடைவெளிகளில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ecr சாலை வழி மற்றும் NH 45 வழியாகவும் இங்கே செல்லலாம்.

சிதம்பரம் நடராஜர் கோயில் பக்தர்கள் தரிசனத்திற்காக காலை ஆறு மணியில் இருந்து 12 மணி வரையிலும் மாலை 5 மணியில் இருந்து 10 மணி வரையிலும் திறந்திருக்கும். இங்கே இறைவன் இறைவிக்கு ஆறுகால பூஜை அபிஷேகம் நடப்பது சிறப்பு. மரகத லிங்க அபிஷேகமும் தினமும் செய்யப்படும் அன்னாபிஷேகமும் பார்ப்பது மிகவும் விசேஷம்.

இங்கே மற்ற எல்லா சிவன் கோயிலில் உள்ள சிவனுக்கும் பள்ளியறை பூஜை முடிந்த பிறகுதான் இறைவன் இறைவிக்கு ஆரம்பிக்கும். காணக்கண்கொள்ளா காட்சி. உலகில் உள்ள சிவமெல்லாம் இங்கே வந்துதான் இறுதியாய் ஒடுங்கும். பள்ளியறை பூஜை சிறப்பானது

 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.